Pages

Thursday, April 25, 2013

The unknown YOU in you.

உங்களுக்குள்ளே உங்களுக்கு தெரியாமல் இருக்கும் நீங்களும் உண்டு.

நீங்களே அறியாத நீங்கள் ஒன்று உங்களுள் இருக்கிறது.

அதை நீங்கள் உணர வேண்டும் எனின், தொடர்ந்து படியுங்கள்.

எனது முதல் பதிவினை முதலில் படிக்கவும்.
இந்த உளவியல் பாடங்களில் ஒவ்வொரு படியாகத்தான் செல்லவேண்டும்.

நம்மைப் பற்றிய நமது கணிப்பு ஒரு மனசாட்சியுடன் தானே செய்தோம்.
இருந்தும் மனைவியிடம் ( அல்லது கணவனிடம் ) என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டபொழுது ஏன் நான் நினைத்தது சொல்லப்படவில்லை!!

ஒரு வேளை அவள் வேண்டும் எனவே சொல்லி இருப்பாளோ
இல்லை உண்மையிலேயே அவள் சொன்னது தான் சரியா ?

சொன்னது நீதானா சொல் சொல் என சண்டைக்குப் போகவேண்டாம்.

என்னதான் நாம் நம்மைப்பற்றியே அப்ஜெக்டிவ் ஆக மதிப்பு இட்டாலும் ஒவ்வொருவர் கண்ணோட்டம் சிறிதாயினும் மாறு படத்தான் செய்யும்.
 (மாடு மாதிரி உழைக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் பாஸ் நீங்கள் ஆடு போல‌    அசமஞ்சமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது அவர் தப்பாகத்தான் இருக்கும் என்று    சொல்லிவிட முடியாது.

   எந்த அளவிற்கு நீங்களும் அவரும் , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை, அது செய்யப்படும் விதம்   எடுத்துக்கொள்ப்படும் காலம், நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்கள், இது பற்றி விவாதிக்கிறீர்கள் அல்லது   கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளுகிறீர்கள் ?)


(இதற்கு காரணம் என்ன என உடன் கேட்ட ஒரு நண்பரிடம் நான் சொல்லி இருந்தேன்.
அடுத்த எனது பதிவில் ஜோஹரி விண்டோ என்னும் ஒரு கருத்துப் படத்தை நான் விளக்க உள்ளேன். என.)

அதை விளக்குமுன் சில வார்த்தைகள்.

இந்த பகிர்ந்துகொள்வது, பகிர்வு எல்லாம் தமிழ் வலை உலகுக்கு புதிய வார்த்தைகள் அல்ல.

பல வலைகளில் பல்வேறு விதமான செய்திகள், கருத்துக்கள், இருக்கின்றன
எல்லாமே எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் நாம் நமக்குத் தெரிந்ததை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுற்று அதைத் தர முன்வரும்பொழுது அந்த கருத்தை செய்தியை உள் வாங்கிக்கொள்ள ஒரு ஆவல் இருக்கவேண்டும்

ஒரு சமயம் திருமதி துளசி கோபால் என்னிடம் பேசும்பொழுது சொன்னார்கள். ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி வாசகர் கூட்டம் இருக்கிறது என. எத்துணை உண்மை. 

இருந்தாலும் ஒரு வலைப்பதிவர்  பக்கத்திலே 4000 தொடர்பவர்கள் இருந்தாலும் அவர்களில் ஒரு 40 முதல் 100 நபர்கள் தான் அவற்றினை படிக்கின்றனர் அவர்களில் ஒரு 10 நபர்கள் தான் முழுவதும் படித்துவிட்டு பின்னூட்டம் போடுகின்றனர்   ஆஜர் கொடுத்துவிட்டு செல்லும் வாசகர்களும் இல்லாமல் இல்லை.

இது ஏன் ?   இந்த சூழ்நிலை வலைகளில் மட்டும் அல்ல.

குடும்பங்களிலும் அலுவலகங்களிலும், சமூக சிந்தனை கூடங்களிலுமே
ஏற்படுகிறது    மிகச்சிறந்த கருத்தினை மிகவும் கஷ்டப்பட்டு தொகுத்து தயாரித்து தருகிறீர்கள்.  ஆனால் அதை உள்வாங்கிகொள்ள முன் வருபவர் மிகக்குறைவு.

காரணம். முதற்கண் நேரம் இல்லை என்பர்  இரண்டாவது எனக்கு இது இப்போது தேவை இல்லை என்பர்.  இதெல்லாம் விட முக்கியமானது, எனக்குத் தெரியாத எதை இங்கு நான் கற்றுக்கொள்ளபோகிறேன் என்ற மன நிலை தான்.

இந்த மன நிலை ஒழிந்து எவரிடமும் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறது என்ற எண்ணங்கள் நம் மனதிலே உண்டானால் அன்று முதல் நாம் கற்கும் சூழ்நிலைக்குச் செல்கிறோம்.

பல தடவைகள், குடும்பங்களிலே ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒன்றாக சத்தமாக பேசிக்கொண்டிருப்பார்  ஒருவர் பேசுவதை அடுத்தவர் கேளாமலே, இவர் என்ன கேட்பார் என்று ஊகித்து ( அனேகமாக தவறுதலாக ) அதற்கான பதிலை அவரும் இறைந்து சொல்லிக்கொண்டு இருப்பார்

விளைவு...குழப்பமே

வீடுகளில் சுமூகமான நிலை உருவாக விரும்பினால் இந்த குழப்பத்தில்  இருந்து விடுபடவேண்டும். எல்லா விஷயங்களையும் உங்களுடன் அன்றாடும் உறவாடுவருடன் உண்மையான  பகிர்தல் அவசியம்.
.
பகிர்தலில் முதல் செயல் ஆக்டிவ் லிசனிங்.  கவனிப்புடன் உன்னிப்புடன் கேட்டல். இரண்டு நபர்கள். ஒருவர் கணவர் மற்றவர் மனைவி. அல்லது இரண்டு சகோதரர்கள். அல்லது இரண்டு தோழர்கள். அல்லது இரண்டு அலுவலர்கள். ஒருவர் பேசுகையில் மற்றவர் அதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம்.

பதிவை படிக்காமலே இறுதியில் அருமை என்ற சொல்லை கட் அண்ட் பேஸ்ட் செய்வது போல் அல்ல இது. 

ஜோஹரி ஜன்னல் பற்றி சொல்வதற்கு முன்  நன்றாக புரிந்துகொள்தல் அவசியம்.  உங்களால் திறந்த மனதுடன்  உங்கள் சுற்றம் உற்றம் ஆகியவருடன் பேசுகிறீர்களா?  இல்லை உங்களிடம் எப்பவுமே ஒரு மறைத்து வைக்கப்பட்ட லிஸ்ட் இருக்கிறதா !!

இன்னொரு கோணத்தில்,
நம்மிடம் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் அவை யாரிடம் சொல்கிறோமோ அவருக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்தால் மட்டும் போதாது, அவரும் தனக்கும் பயன் அளிக்கும் என்று முன் வந்து நாம் பேசுவதை பகிர்வதை கவனித்து கேட்கவேண்டும்.

இது தான் உண்மையான பகிர்தல்.

ஒரு கதை. இல்லை உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு இருபது வருடத்திற்கு முன் என நினைக்கின்றேன்

     ஒரு முக்கியமான செய்தி என நான் நினைத்து என் குழந்தைகளிடம் சொல்ல என் மூத்த மகனைக் கூப்பிட்டேன்.

    ஒரு முக்கியமான செய்தி என சத்தமாக சொன்னேன் அவன் தூரத்தில் இருந்தபடியே , அப்பா, எனக்கு கல்லூரிக்கு நேரமாகி விட்டது. எதுவாக இருந்தாலும் தங்கச்சியிடம் சொல்லுங்கள் நான் மாலையில் வந்து அவளிடம் தெரிந்து கொள்கிறேன் என்று பணிவாக சொல்லிவிட்டு விரைந்தான்.

   சரி என நினைத்து என் மகளைக் கூப்பிட்டேன். அவளோ பிளஸ் டூ மார்ச் மாத ரிவிஷன் என்று பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள் .

   அவளோ, அப்பா, நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் , ஆனால் எனக்கு இப்பொழுது டயம் இல்லை.  ஒண்ணு செய். அம்மாவிடம் சொல்லிவிட்டு செல். நான் மாலை 4 மணிக்கு வந்து அம்மாவிடம் கேட்டு கொள்கிறேன் என்று என் பதிலையும் கேளாது செல்லும் நேரத்தில்....

    சமையலறை இருந்து ஒரு சத்தம் கேட்டது. ..

    " முப்பது வருசமா இவரு சொல்லாத சங்கதியா இப்ப சொல்லப்போறாரு.
நான் தான் கிடைச்சேனா.."

    LESSON OF THE STORY:
   EVEN IF YOU HAVE PRECIOUS THINGS TO OFFER, THERE SHOULD BE ENOUGH CURIOSITY AND INQUISITIVENESS ON THE PART OF THE PEOPLE TO RECEIVE THE SAME.
 AS OTHERWISE WHATEVER U HAVE IS JUST WASTEFUL.

இப்பொழுது ஜோஹரி ஜன்னல் என்றால் என்ன என்று
அடுத்த பதிவில்
பார்ப்போம்.

படத்தை மட்டும் பாருங்கள். விளக்கம் பின்னாடி தருகிறேன்.


அடுத்த பதிவில் இதன் விளக்கம்.


No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!