Pages

Sunday, April 21, 2013

எல்லாமே க்ருஷண மயம்.

இது ஒரு சீரியஸ் பதிவு.
இந்த பெரிசு என்ன இதெல்லாம் எழுதுது என்ன நினைக்க வேண்டா

இது அந்த கோபிகா ஸ்த்ரீகள் க்ருஷ்ணனின் மேல் கொண்ட காதல்.


இது மீரா அந்தக் கன்னையன்
கான்ஹா விடம் கொண்ட ப்ரேம்
பிரேமை.
இது     உண்மையிலே ஆண்டாள் புவியிலே மனுஷ்ய ஜன்மம் எடுத்து அரங்கனை அடைந்த  புனிதம்.


இந்த மூன்றுமே அமானுஷ்யம்.   தைவீகம்.

அப்படித்தான் அதை மனசுலே வாங்கிக்கணும்.

கோபியருக்கு கிருஷ்ண  கான்ஹா மேல் ,மீராவுக்கு  க்ருஷ்ணன் மேல், ஆண்டாளுக்கு  அரங்கன் மேல் ஏற்பட்ட பந்தத்தை, பாசத்தை, ப்ரேமையை    மனசிலே படம் பிடிக்கணும்.

    நமது தற்கால நெறிகள், சமூக வரம்புகள், தனிப்பட்ட மன நிலைகளுக்கு ஏற்ப இவர்களை நாம் ஒப்பிட்டு     எடை போடுவது சரியாகாது

    கோபிகைகள் எல்லோருமே தன்னை மறந்து நந்தகோபன் வனத்திலே கண்ணனின் குழலிசையில    மயங்கிக் கிடக்கின்றனர்.   ஒருவர் மேல் ஒருவருக்கு பொறாமை இல்லை.  எல்லோருமே கண்ணனுக்கு
 சொந்தம்.  கண்ணன் எல்லோருக்குமே காந்தன். கண்ணானவன். அதனால் கண்ணன்.

    அந்தக் கண்ணன் கண்முன்னே இல்லை.மறைந்திடுனும் அவன் குரல் என் மனதிலே ஒலித்துக்கொண்டே தானே இருக்கிறது என்கிறாள் கோபி ஒருவள்.  இன்னொருவளோ  எந்தக்குழலை எடுத்து ஊதத் துவங்கினாலும் அதில்
கண்ணன் குரல் தானே கேட்கிறது.. என்பாள்.       இல்லைடி, அவன் என்னைத் தான் ராதே ராதே என்று   அல்லும் பகலுமா சொல்லுகிறான்.  அவன் சொல்வதைத் தான் இந்த நந்தவனமும் இதில் பரவசமாகிப்   பாடும் குயில்களெல்லாம் சொல்லுகின்றன.   மாடுகளும் நாலு குடம் கூட பால் தருகின்றன என்பார் கண்ணதாசன்

   கண்ணனைத் தவிர வேறு எங்கிலும் எம் மனம் நாடவில்லை.  நாடாது.  என்கிறார்கள் கோபியர்கள். ஒன்றல்ல.    இரண்டல்ல. கோகுலத்தைச் சார்ந்த எல்லா கோபிகைகளுமே.

   அந்த மாயக்கண்ணன் அப்படி எல்லாரையுமே மயக்கிவிட்டான்.  இந்த மயக்கம் என்ன ?

  அன்பா, வாத்ஸல்யமா, நட்பா, காதலா, ப்ரேமையா, அந்த ப்ரேமையிலே உதிக்கும் மயக்கமா  மயக்கம் தெளியாத நிலையில் மனதில் உருவாகும் காமமா இல்லை காமம் அவிந்த நிலையில்    மனதில் உருவாகும் தெய்வீகமா, ......

    கண்கள் உருகும் நிலை.  நெஞ்சு விம்மும் நிலை.  குரல் படபடக்கும் நிலை.

    எல்லாமே அவர்களுக்கு கண்ணன் கண்ணன் கண்ணன்.

    கண்ணனைத் தவிர வேறு எதுவுமே கண்ணில் படவில்லை. இதயத்தைத் தொடவில்லை.     நெஞ்சிலும் வேறு ஏதும் இல்லை.

    எங்கும் எதிலும் எப்பொழுதும் கண்ணன், கண்ணன்.

    இது மானிடக்காதல் அல்ல..அல்ல... அல்ல... என்று ஒரு குரல் நினைவுக்கு வருகிறதா....

    இதில் ஒரு அமானுஷ்யம். தெய்வீகம்.  அந்த அன்பு ஆத்மார்த்தம்  தான் எனும் நிலையை துறந்து தானே கண்ணனாக பாவிக்கும் நிலை ஒன்று . கண்ணனோடு கண்ணனாக இணையும் நிலை இன்னொன்று

   சாதாரண மனிதர்களுக்கு இது புரியாது.  புரிந்தால் அவர்கள் தேவர்கள் ஆகிவிடுவர்.

   இது ஆண் பெண் உடல் உறவு சம்பந்தப்பட்டதல்ல.  சொல்லப்போனால் அவர்களது ஆத்மா.   இது உறவு என்று சொன்னால் அது  உடலை  மறந்த உறவு..

   கண்ணனும் லட்சோப லட்சம் ராதை (களும்) ஐக்கியம். கோபிகாதீ ஸ்மரணம் ஜே ஜே பாண்டு ரங்கா என்று பண்டரிபுரத்தில்அபங்கம் பாடும் பெண்டிர் , ராதே ராதே என்று ராதா கல்யாண நிகழ்ச்சியிலே நடனங்கள் ...
சர்வம் கிருஷ்ண மயம்   ஆகவே மாயம்.
கண்ணன் காதலன் கண்ணன் என் தோழன் கண்ணன் என் குரு

அண்மையில்  நடந்த ராதா கல்யாண நிகழ்ச்சியில் ஒரு நடனம் .SRI DEVI NRITHYALAYA...RADHA KALYANAM 2013...
CONCEPT: KANNAN EN KAADHALAN.
(really amazing. Transports us all to the Seventh Heaven of Joy and Immortal Bliss.)

ராதே ராதே என கண்ணனும் ஏங்குகிறான். இழைகிறான் .

   இந்த உறவினை நாம் போற்றத்தானே செய்கிறோம்.    காலம் காலமாக பாடுகிறோம். தெய்வீக அவைகளிலே மனமுருகப்பாடி ஆடி மன மகிழ்கிறோம்.    

   கிருஷ்ண பிரேமைக்கு ஒரு எல்லை உண்டோ?
***********************************************************************

((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(
     ,

    எல்லாமே க்ருஷண மயம். 

((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(


   ,
பின் குறிப்பு 

   அன்று விஜய் டி.வி. பார்த்தபொழுதும்  இது தான் தோன்றியது.  ஒரு தனி நபர் இத்தனை உள்ளங்களை    தன் பால் இழுத்து நிறுத்தி வைக்க இயலும் என்றால்.....

    காந்தம் கவர்ச்சி திறன் சக்தி ஆற்றல் சொல்வன்மை பொருட்சுவை எல்லாவற்றையும   இணைத்து எல்லாவற்றையும் கடந்து ஒரு திறன் உங்களிடமிருக்கிறது.  இது உண்மை.


   யூ ஆர் ரியலி க்ரேட். 
((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(

   
     ,

   

3 comments:

 1. சர்வம் கிருஷ்ண மயம் ஜகத் ...

  ReplyDelete
 2. ஐயா...

  அருமை. அழகிய படங்களும் உங்கள் பதிவும் அற்புதம்!

  சொல்ல வார்த்தைகளில்லை. மனதுக்குள் நிறைவு சந்தோஷம்!

  என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

  ReplyDelete
 3. சாதாரண மனிதர்களுக்கு இது புரியாது. புரிந்தால் அவர்கள் தேவர்கள் ஆகிவிடுவர்.

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!