Pages

Saturday, April 13, 2013

வல்லிம்மா !! நீங்க தான் வந்து இத செட்டில் பண்ணணும்.


From chithrabanu 1942 to Vijaya 2013 A journey.

வல்லிம்மா !! நீங்க தான் வந்து இத செட்டில் பண்ணணும்.
நீங்க போட்ட படத்துலே இருந்து தான்  
ஆரம்பிச்சது இது.

    வருசம் முழுக்கவே சண்டை தான். சித்திரை 1 முதல் பங்குனி 31 வரை 24 * 7

    எல்லாமே ஒரு ஈகோ ஃபைட்.   நீயா நானா...  ( இந்த ஈ என்ன மருந்து அடிச்சாலும் போவாது )

    இந்த கோபி நாத்தை பார்த்தபின்னே எல்லா வூட்டுலேயும் இன்னும் பலமா இந்த ஃபைட் நடக்குது.

சம் என்ஜாய். 
சம் அதர்ஸ் ஹாவ் நோ சாய்ஸ்.

உமன் எம்பவர்மென்ட் .

 என்னடா விசயம் அப்படின்னு நீங்க கேட்கறீக..
 கேட்குது.
வாழ்வே மாயம் அப்படின்னு ஆரம்பிச்சேன்

என்னங்க இது... இன்னும் அனுபவிக்க வேண்டியது இன்ப துன்பங்கள்  எத்தனையோ இருக்கே அப்படின்னு ...
என்னோட சம்சாரம்...

 சம்சாரம் அப்படின்னாலே அதுலே some  தான் சாரம். மிச்சமெல்லாம் காரம்.

 ஒத்துண்டு போனா சாரம்.
 இல்லைன்னா ...நம்ம நேரம். 
 நான் சொல்லணுமா என்ன ?  

 என்ன இது ... பொழுது விடிஞ்சதும் விடியாததுமா இந்த கிழவனும் கிழவியும் ஆரம்பிச்சுட்டாங்களா.?  இன்னிக்கு சண்டைய ?  கோவாலு  கேட்கறாரு எனக்கு கேட்குது

சண்டை அப்படின்னு சொல்ல முடியாது ...
சும்மா.. சும்மா .   ( வடிவேலு சொல்றப்போல நினைச்சுக்குங்க.)
இது ஒரு இண்டலக்சுவல் டிஸ்கசன்.
அம்புடுதேன்

சண்டை லே மட்டும் உங்களுக்கு இண்டரஸ்ட் அப்படின்னா பதிவின் கடைசிக்கு செல்லவும்   

 சனிக்கிழமை இன்று.
 இந்த வருசத்தின் கடைசி நாள். நந்தன வருசம்.
 நாளைக்கு விஜய வருசம்.
 
எல்லாமே ஒரு கடைசிக்கு வரும் அது பஞ்சாங்கத்துக்கும் அதாவது நந்தன வருச பஞ்சாங்கத்துக்கும   கடைசி நாள்.  வாக்கியமா இருந்தாலும் த்ருகணிதமா இருந்தாலும் திருநெல்வேலியா இருந்தாலும் ஸ்ரீரங்கம்
ஆனாலும் ஒரு வருஷம் முடியும்போது புது பஞ்சாங்கம் வாங்கணும்  வருஷம் துவங்கற அன்னிக்கு பஞ்சாங்க படனம் .

(என்னைப்போல் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் நித்யம் படனம் ஒரே வித்யாசம். வூட்டு அம்மா daily படிப்பாக )

விசயத்துக்கு வாய்யா அப்படின்னு  சொல்றீக.

       இன்னிக்கு ஒரு நல்லா பாடல் கன்னட மொழிலேந்து போடுவோம்னு நினைச்சுகிட்டு இருக்கும்போத   பார்த்தேன்.

   அந்த வேளைலே நான் படிச்ச ஸ்கூலூ இ.ரெ.உயர்னிலைப்பள்ளிலே எனக்கு 12 வருசம் முன்னாடி   படிச்ச திரு கல்பட்டா நடராசன் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த பாடலை பார்த்தேன்.  போடோ கலைஞர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் .  அவர் எனக்கு ஒரு இ மெயில் போட்டு இருந்தார் அவருடன் தொலை பேசியில் பேசும் பாக்கியம் கிடைத்தது.
அப்பொழுது அவரது வலையில் இட்டு இருந்த ஒரு கவிதையை எனக்கு காண்பித்தார்

   இது கவிதை இல்லை  காலம் காலமாய் பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வரை சொன்ன வேத வாக்கியம்.

   வார்த்தைக்கு வார்த்தை இந்த அன்னமாச்சார்ய கீர்த்தனையை அக்ஷர சுத்தமா மொழிபெயர்த்து    அன்னமாச்சாரியா அவர்களுடைய மன நிலை யை அப்படியே எடுத்துக்கொண்டு வந்து மூஞ்சி    முன்னாடி வச்சு,

 டேய்..  சுப்பு தாத்தா..  இதாண்டா உலகம்
அப்படின்னு பளார்னு அறைஞ்சா மாதிரி சொல்றாரு.

  மனுச வாழ்க்கையின் மாயையை வள்ளுவன் சொல்லாததா என்ன ? அதை இவரு எப்படி சொல்றாரு
  பாருங்க...

முதல்லே அன்னமாச்சார்யா பாடிய பாடலை விசாகா ஹரி பாட, பின்னே வருவது கல்பட்டு நடராஜன் அவர்களின் பாடல் மொழி பெயர்ப்பு.  அக்ஷரத்துக்கு அக்ஷரம் ஆயிரம் பொன் பெறும் .இனி வருவது திரு நடராஜன் சொற்கள்: 


தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப் படுபவர்.  அவர் பல ஆயிரம் பாடல்கள் இயற்றினார்.  எல்லாமே பக்திப் பாடல்கள்.  அவற்றில் அழகான ஒன்று ரேவதி ராகத்தில் அமைந்த  நாநாடி ப்ரதுகு நாடகமு” என்ற பாடல்.  அதனைத் தழுவி தமிழில் ஒரு பாடல் இதோ:

பல்லவி

நாம் வாழும் வாழ்க்கை யோர் நாடகம் தான்
என்றுமே வேண்டும் இன்பமாம் முக்தி   

                                                (நாம்.....)
 அனுபல்லவி

பிறப்பதும் நிஜமே இறப்பதும் நிஜமே
இடையில் வாழ் வாழ்க்கையோர் நாடகமே
வாழ்க்கையே மாயந்தான்
முக்தியே உண்மை காண்
                                               (நாம்.....)
சரணம் - 1

உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
வந்திடா துன்கூட சென்றிடும் வேளையில்
வந்திடும் நிச்சயம் நீ செய் நன்மைகள்
தீமைகள் இவற்றின் பலன்கள் தான்
                                              (நாம்.....)

சரணம்  2

கெட்டதின் பலன் தான் விட்டிடா துன்னையே
நல்லதின் பலனோ கைவிடா துன்னையே 
எங்கும் நிறை ஆண்டவன் தாள் பணி
என்றும் நீ அடைவாய் நிச்சயம் 
இன்பந்தரும் முக்தியே
                                              (நாம்.....)

04-02-2010                                 நடராஜன் கல்பட்டு

  8888**********************************************************************8888

இதுலே இந்த பாட்டிலே ஆண்டவன் அப்படின்னு ஒரு வார்த்தை வருது. 
அது யாரு ? 

எங்கும் நிறை ஆண்டவன் அப்படின்னா பிருஹத் ஆரண்யகத்திலே வர நிர்குண நிராகார பிரும்மன் அப்படின்னு என் கட்சி.

புரியராபோலே நீங்க பேசி ரொம்ப நாளாச்சு. அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச ஆண்டவன் பெருமாள் தான். 
பாற்கடல் லே பள்ளி கொண்டானே
அந்த பெருமாள். .
சாட்சாத் பெருமாள் 
அப்படின்னு 
இது என் சஹ தர்மினி 
அதாகப்பட்டது எங்க வூட்டு கிழவி கட்சி. 

எது ரைட்டு?? எது தப்பு ????
நீயா நானா ?
வல்லி அம்மா எங்கே இருக்கீக....!!!

31 comments:

 1. சண்டை போடுங்க போடுங்க போட்டுகிட்டே இருங்க!:-)))))
  புது வருட நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. விலாவாரியா உங்ககிட்டே ஒரு நாள் பூரா உட்கார்ந்து நீங்க சொல்றதுல்லாம்
   கேட்டுக்கிட்டெ இருக்கணும் போலே இருக்கிறது.

   கர்மா தியரி எல்லாத்துக்கும் பொருந்தும்.

   சுப்பு ரத்ன சர்மா அஸ்மிபோ

   Delete
 2. ஆஹா ஆஹா..... நாங்கெல்லாம் நாளுக்கு மூணு சண்டை போடறவங்க!

  http://thulasidhalam.blogspot.co.nz/2005/06/blog-post_08.html

  விஜய வருசம் முழுசும் சண்டைகளோடும் சமாதானங்களோடும் கலகலப்பாக இருக்கவேணுமுன்னு பெருமாளிடம் உங்களுக்காக அப்பீல் பண்ணியாச்சு:-))))

  கடைசிக்கேள்விக்கு பதில் நானும் சொல்லவா?

  த வின்னர் ஈஸ் ........... மீனாட்சி அக்கா!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. த வின்னர் இஸ்...

   அது என்ன இஸ் ?

   இஸ், வாஸ், வில் பி...

   எல்லாமே உங்க அக்கா தான்.

   சுப்பு தாத்தா.

   Delete
 3. டோண்ட் ஒர்ரிக்கா. வெற்றி(எப்போதும்) நமதே:-)))))

  ReplyDelete
  Replies
  1. இத சொன்னதுக்காகவே
   அடுத்த தடவை நீங்க வரும்பொழுது
   ஏர்போர்ட்டுக்கே வந்து
   உங்களுக்காகவே ஒரு அண்டா
   சேமியா பாயசம்
   நானே செய்து கொண்டுவந்து தருவேன்.

   மீனாட்சி அக்கா.

   Delete
 4. விஜய --புது வருட நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. சண்டையை ரசித்தேன் ஐயா... ஹிஹி...

  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   சுப்பு தாத்தா.

   Delete
 6. புகைப்படம் நேச்சுரலா நிஜ சண்டை போலவே இருக்கு. மீனாட்சி அம்மா முகத்தில் அப்படி ஒரு bhaaவம்.

  புது வருடத்தில் எல்லா நலன்களும் விஜயம் செய்யட்டும்.

  ReplyDelete
  Replies

  1. அபிராமி தான் ஆனா
   அப்பப்ப
   ப்ர்த்யங்கரா தேவி.

   இப்ப நீங்க பார்க்கறது ஆனா
   சாந்த ஸ்வரூபிணி.

   சுப்பு தாத்தா.

   Delete
 7. விஜய வருட நல்வாழ்த்துக்கள் சுப்பு ஐயா.

  ReplyDelete
 8. ஐயா...வணக்கம்!

  இதென்னதிது... நிஜமாகிலும் சண்டையொன்னு பயந்துட்டேன்...:)
  அப்புறம் படிச்சுத்தெளிந்துகொண்டேன்.

  இல்வாழ்க்கையில் இதெல்லாம் இனிமைதானே
  இல்லாவிடின் இல்வாழ்க்கை இல்...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 9. காரசாரமான சண்டை அதன் பின் ஹல்வா போல ஓர் சமாதானம். அருமையான பதிவு. மண்டை உடையாமல் சண்டை நீடிப்பதில் ஓர் த்ரில்லிங் + சுவாரஸ்யம் உண்டு தான். வாழ்க நலமுடன் + வளமுடன்.

  இனிய ”விஜய” புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நானும் எல்லாரையும் போலத்தான்.

   வருசத்திலே 364 நாள் 23 மணி 59 நிமிசம் 59 வினாடி
   வம்பெதுக்கு அப்படின்னு தான் போயிடுவேன்.

   இருந்தாலும் அடிப்படையே ஆட்டம் கண்டதுன்னா
   விட முடியுமா....

   , நம்ம ஆண்டவன் அப்படின்னு எதைச் சொல்றோமோ
   அது நிர்குணம் நிராகாரம் இல்லயோ...

   எனிவே,
   ஒரு ப்ராக்டிகல் பொஸிஷனை அனுபூதிலே சொல்லிருக்கு.


   உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
   மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
   கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
   குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

   சுப்பு தாத்தா.

   Delete
 10. வணக்கம், சுப்பு ஐயாவுக்கும், மீனாட்சி அம்மாவுக்கும்.
  சண்டை இல்லாமல் ஒரு சம்சாரமா?
  இப்படியே சண்டை சச்சரவுடன் இந்தப் புது விஜய வருடத்திலும் உங்கள் சம்சாரம் நீடிக்க, இனிக்க வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. எங்கேயும் எப்போதும் ...

   இதே தான்.

   பொதுவாக அவ மனசு தங்கம்.
   ஒரு போட்டின்னு வந்து விட்டா சிங்கம்.

   வருகைக்கு நன்றி.

   சுப்பு தாத்தா.

   Delete
 11. விஜய வருட வாழ்த்துகள். இந்த வருடமாவது சண்டையில் நீங்கள் ஜெயிக்கவும் வாழ்த்துகள். நீங்கள் கேட்டுக் கொண்டபடி விலாவரியாகப்புத்தாண்டு சமையலைப் பற்றிய பதிவு போட்டாச்சு. சுட்டி கீழே.
  http://sivamgss.blogspot.in/2013/04/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. super super.

   vandhen vandhen.

   subbu thatha.

   Delete
 12. ஆமாங்க நல்ல சாரத்தின் உதவியாலே கூவிகிட்டுஅருமையா பதிவு போட்டுபிட்டு சாரம் காரமா ..........
  பாடல்கள் பகிர்வுக்கு விளக்கதிற்க்கும் நன்றி

  ReplyDelete
 13. Replies
  1. All Credit go to that Natarajan Sir.
   speaks like a statesman.

   subbu thatha.


   Delete
 14. ஐயா, புது வருஷமும் அதுவுமா இது என்ன வம்பாயிருக்கு:-)னு பார்த்தேன். நல்ல விஷயம் தானே. சண்டையைச் சொல்லலை, அம்மா தானே ஜெயிச்சிருக்காங்க அதுக்காகச் சொன்னேன்;-))) ஸ்ரீவேங்கடேஸ்வருனு வேற பெருமாளைச் சொல்லிட்டாரே இந்தப் பாட்டுல அன்னமையா [தெலுகு வெர்ஷன்ல].

  விஜய வருஷத்துக்கான புது வருட வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies

  1. இந்த அன்னமாசார்யா பாடல் என் மருமகளுக்கு மிகவும் பிடிக்கும்.

   இந்த தமிழ் பாடலைப் பார்த்த உடன் அதைப் பாடவேண்டும் என முனைந்து விட்டாள்.

   அன்னமாசார்யாவின் பாடல்களை பாடல்களின் பொருள் அறிந்து பாடும்பொழுது
   ஒரு மன நிம்மதியும் தெளிவும் ஏற்படும் என்பது உண்மை.
   Thank U for your kind visit and views.
   சுப்பு தாத்தா.

   Delete
 15. அன்பு சுப்பு சார். நீங்க பதிவு போட்ட விஷயமே இப்பதான் தெரியும்:)
  அடடா இப்படின்னா இருக்கணும் தம்பதிகள். சுப்பு சார் ,அம்மா அளவுக்கு ஆர்க்யுமெண்ட் போறாது. சாரி.:)பாட்டு கூட ரேவதி ராகமா. ஹ்ம்ம்.
  இந்தப் பாடல் எம் எஸ் அம்மா பாட நானும் மாமியாரும் கண் மூடித் தியானிப்போம்.தமிழ் மொழிபெயர்ப்பு வெகு இனிமை.கல்பட்டாருக்கு நன்றிகள்.
  அச்சோ நீங்க சண்டை போடறது கூட வெகு அழகா இருக்கு. தாயாரும் பெருமாளும் மட்டையடின்னு நேத்திக்கு கீதா எழுதி இருந்தார்கள். இதுவும் பிரணயகலஹம் மாதிரிதான் இருக்கு!!!
  எந்தப் பெருமாளா இருந்தால் என்ன....நம்மைக் கடைசி வரைக் கைவிடாம அழைச்சுண்டு போனால் போதும். என்ன நான் சொல்றது:)

  ஊடலும் கூடலுமான சம்சாரத்திற்கு ஜே ஜே.

  ReplyDelete
  Replies
  1. இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
   க்ருபயா பாரே பாஹி முராரே

   அப்படின்னு ஆதி சங்கரர் சொல்லி இருக்கார் இல்லயா..

   சுப்பு தாத்தா.

   Delete
 16. படம் அருமை சுப்பு தாத்தா! மீனாட்சியம்மாவையும் பார்த்தாயிற்று..நன்றி!

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!