Pages

Sunday, April 14, 2013

புத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை பலா பலன்கள்

.
தமிழ் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும்    உலகத் தமிழர்  யாவருக்கும்

                         புத்தாண்டு வாழ்த்துக்கள்.     இன்று காலை கண் விழித்துப் பார்த்தேன்.      புதிய வானம் புதிய பூமி என்று புது மழை பொழிகிறது. 

      நான் வருகையிலே என்னை வரவேற்க..
      
       அந்த காலத்து எம்.ஜி. ஆர்.பாட்டு சுகமாக ஒலிக்க,


       என்ன விஷயம் என்று நன்றாக பார்த்தால்,        ஆமாம்.  இன்று முதல் புத்தாண்டு 

              புது வருஷம் விஜய வருஷம்.


        இந்த விஜய வருஷத்துகுள் இன்று செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன்

        தோரணங்கள் கட்டி துந்துபி நாதம் முழங்குமந்த வீட்டுக்கு வேக வேகமாக நடந்தேன்
        அந்த மண்டபம் கண்ணில் பட்டது. 


        விஜய மண்டபம்... என்று கொட்டை எழுத்துக்களில்.....         உள்ளே போகவேண்டும்..என்றேன் காவலாளியிடம்.          பாஸ் வேர்டு போட்டு நீங்களே திறந்து செல்லுங்கள்.          ஆமாம். தட்டுங்கள்..திறக்கப்படும்.கேளுங்கள் கொடுக்கப்படும்.

         நம்ம எதுனாச்சும் செஞ்சாத்தானே வேண்டியது வேண்டியபடி வேண்டி நிற்பவனுக்கு கிடைக்கும்.


          என்ன பாஸ் வேர்டு...  ஹா...  நினைவு வந்தது. 

              தி. த..     இன்னும் யோசித்து பார்த்தேன்    திண்தன
  
                                போட்டு உள்ளே சென்றேன். 


                                அங்கே ஒரு வரவேற்பு பலகை.             அதில்  நான் கண்ட வாசகம் இதோ. 
கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.           என்ன ஆச்சரியம்..!! திண்டுக்கல் தனபாலன் 
          திண்டுக்கல் தனபாலன் வருபவர் அனைவரையும் ரோசா பூ  தந்து வரவேற்கிறார்.         வாழ்க உமது பாரி உள்ளம் என வாழ்த்திக்கொண்டே விஜய மண்டபத்திற்குள் நுழைகிறேன்

இந்த ஆண்டு புத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை பலா பலன்கள் பின்வருமாறு.
.
மேஷம் ....                                        சிறப்பாக இருக்கும் 
ரிஷபம்.....                                        இனிமையாக இருக்கும். 
மிதுனம்;                                           மிருதுவாக இருக்கும். 
கடகம். .....                                        கற்கண்டு போல் இனிக்கும் .
சிம்மம்......                                      ..சீரிய செயல் புரிய சரியான நேரம் . 
கன்னி......                                         நிறைந்த செல்வம் கிடைக்கும்.
துலாம்......                                       செல்வம்  துரத்திக்கொண்டு வரும்.
விருச்சிகம்   வானம் நமக்கு எல்லை இல்லை என்ற துணிவு வரும்.
தனுசு.              தயங்காது தனி வழி போகவும் முயற்சி வரும். 
மகரம்............. மன்மதனுக்கு ரதி கிடைப்பாள். 
கும்பம்.            கனி இருக்கும்போது இவர்கள் காயை விரும்ப மாட்டார்கள். 
மீனம்.               முன்னுக்கு வரும் குழாமில் முன்னணியில் இருப்பார்கள். 


சும்மா கற்பனை  அப்படின்னு நினைக்காதீர்கள். எல்லாமே உண்மை. 

17 comments:

 1. கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. முதல் மரியாதை என்று சொல்வார்களே
   அது வெறும் சொல் அல்ல.
   உங்களுக்கு நன்றி சொல்லுமுகத்தான்
   நீங்கள் வரவேற்பது போன்ற காட்சி அமைத்தேன்.
   உளமார்ந்த நன்றி. இது இதயத்திலிருந்து வரும் குரல்..

   உங்களது வாழ்த்தொலி உலகமெலாம் இன்று ஒலிக்கிறது.
   என் இதயம் பனிக்கிறது.

   சுப்பு தாத்தா.

   Delete
 2. //மன்மதனுக்கு ரதி கிடைப்பாள்.
  அதனால மன்மதனுக்கும் ரதிக்கும் வேணும்னா லாபம். மத்தவங்களுக்கு?

  //கனி இருக்கும்போது இவர்கள் காயை விரும்ப மாட்டார்கள்.
  இது என்ன பலன்?

  ReplyDelete
  Replies
  1. /மன்மதனுக்கு ரதி கிடைப்பாள்/

   நான் ஒரு மன்மதனா இருக்கும்பொழுது எனக்கொரு ரதி கிடைக்காமலா இருப்பாள் !

   நமக்கு கிடைப்பதெல்லாம் நமக்கு என்ன விதித்திருக்கிறதோ .. என்ற பொருளில்.
   நமது உருவம் நமது கைகளிலா இருந்தது... வேண்டுமானா ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம்.

   இன்னொரு கோணத்தில்: உங்கள் உழைப்புக்குத் தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
   அடுத்தும் ஒரு கோணத்தில்: நெஞ்சம் அழகாக இருக்கும் யாருக்குமே முக அழகு தேவையா என்ன?
   அழகுடை நெஞ்சத்தார் வசம் அடங்குமே உலகம் எல்லாம். எனக்கு முக அழகு இல்லையெனினும்
   மன அழகை மேம்படுத்துங்கள். நீங்கள் வேண்டியவை கிடைக்கும்.

   இரண்டாவது: கனி இருக்கும்பொது காயை விரும்பமாட்டார்கள்.

   ஒரு காரியத்தை லகுவாக செய்யும் ப்ராஸஸ் இருக்கும்பொழுது அதில் தனது நேரத்தையும் சக்தியையும்
   வீணே செலவழிக்க மாட்டார்கள். தேவையில்லாத அதிக பலன் கிடைக்காத காரியங்களில் தனது நேரத்தை
   செலவிடமாட்டார்கள்.

   ஃபார் தீஸ் பீபிள் த என்ட் இன் தேர் மைன்ட் இஸ் மோர் இம்பார்டன்ட் தான் தேர் ஸ்டெப்ஸ்./.   சுப்பு தாத்தா.

   Delete
 3. happy tamil new year vijaya gtgs to all thank you

  ReplyDelete
  Replies
  1. happy happy happy new year to u and all your family members.
   vijayee bhava.
   sarva mangalaani bhavanthu.
   subbu thatha.
   u can also come and pray here.
   www.pureaanmeekam.blogspot.com

   Delete
 4. அன்பு நிறைந்த சுப்பு ஐயா அவர்களுக்கும், அவருடன் இனிதாக இல்லறம் நடத்தும் மீனாட்சி அம்மாவிற்கும், விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி. உங்கள் வலையில் ஃபோர்லேடீஸ்.காம் வேறு யாரோ அல்லவா இருக்கிறீர்கள்
   நீங்கள் எழுதும் பதிவுகள் எங்கே ?
   சுப்பு தாத்தா.

   Delete
 5. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி.

   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாரும்
   என்றும் சீரும் சிறப்பும் பெற்று
   வையத்து வாழ்வாங்கு வாழ்வு வாழ‌
   இறைவனை என்றென்றும் வேண்டுகிறேன்.

   சுப்பு தாத்தா.

   Delete
 6. PUTHTHAANDU VAAZTHTHUKKAL . VAAZGHA VALAMUDAN :) SUBBU SIR AND MEENAMMA.. :)

  ReplyDelete
  Replies
  1. It is indeed a pleasant surprise to see u here.

   I am confident that in the ensuing year VIJAYA you will achieve greater laurels in the fields u have so nicely chosen.

   Thank U for your visit here.

   All the Best.

   subbu thatha.

   Delete
 7. ஐயா...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 8. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் மற்றும் 'ரசித்தவை-நினைவில் நிற்பவை 'சக வாசக நண்பர்களுக்கும் எங்கள் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 11. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர்களுக்கும் என் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள். (காலம்தாழ்த்திய வாழ்த்துக்கள் மன்னிக்க.)

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!