shyaam se nain mila aayi
ராஜ நர்த்தகி என்னும் இந்த படம் 1941 ல் வெளியானது.
வங்காள, ஹிந்தி, ஆங்கில மொழிகளிலே திரை உலக முன்னோடிகளான வாடியா மூவி டோன்ஸ் தயாரித்தது ஆகும்
ஆங்கில மொழியில் இந்தியர் தயாரித்த இந்தியர்கள் நடித்த முதல் படமும் இதுவே
ஆங்கிலத்தில் வசனம் இருந்தாலும் பாடல்கள் மட்டும் இந்தியில் இருந்தன என்பதும் சுவையான தகவல்
இந்த படத்தின் தயாரிப்பாளர் மது போஸ் . டைரக்டரின் மனைவி சாதனா போஸ் அவர்கள் தர்பாரில் நடனம் ஆடும் பெண் இந்திராணி ஆக நடித்து உள்ளார் ப்ரித்வி ராஜ் கபூர் இந்த அளவுக்கு ஒல்லியாக இருந்தாரா என்ற அதிசயத்துடன் இதை பார்க்கலாம்
பாடலைப் பாடியது சுப்ரபா பண்டிட் . இயற்றியது பண்டிட் இந்த்ரா சந்த்ரா. இசை அமைத்தது திமிர் பாரன்.
இந்தப் பாடல் மொழி பிரிஜ் பாஷா .மேற்கு உத்தர பிரதேசத்தில் அக்காலத்தில் பேசப்பட்ட மொழி.
பாடும் விதமோ மெட்டோ வங்காளி.
உடையோ மணிபுரி.
பாடும் விதமோ மெட்டோ வங்காளி.
உடையோ மணிபுரி.
இந்த பாடல் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும்
யுத்த காலத்தில் வந்த இந்த படத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள் குவிந்தனர். 1960லே பிரசித்தமான நடிகை சாதனா இந்தப் படத்தின் ஹீரோயின் பெயரை கொண்டார்
( ஒரு உபரி தகவல். அந்தக்காலத்திலே சினிமா படங்களில் வரும் நாயகியின் பெயரைத் தான் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு வைத்தனர் எனது சஹ தர்மிணியும் இதற்கு விதி விலக்கு அல்ல. 1942 ல் மேனகா படம் வந்தது. தமிழ் நாட்டில். அப்போது பிறந்து பெயர் மேனகா என செல்லமாக அழைக்கப்பட்ட பெண் மகவுகளில் எங்க ஊட்டுக்கிளவியும் ஒன்னாம். )
ஷ்யாம் சே நைன் மிலாயி. ..
வருவது பின்னே பாடலின் தமிழாக்கம்( நாட் லிடரல் )
நீல நிறக்கண்ணன் அவன் சியாம வர்ணன்
அவன் கண்ணோடு நான் கண்ணிமைக்க காரிருளில் வந்தேனடி தோழி.
உன் சித்தத்தை நான் அறிவேன்.
உன் சிந்தனையையும் அறிவேன்.
உன் சமத்தையும் அறிவேன்.... நானோ
ச்யாமுடன் கண் கலக்க வந்தேனடி தோழி.
யமுனை கரையினிலே
அமர்ந்தேன் அவன் நினைவினிலே
மாலை நேரத்திலே தென்றல் காற்றினிலே
மண் பானை .ஒன்றெடுத்தேன்
நீரினிலே மொண்டெடுத்தேன் - அதில்
நீலவண்ணன் வந்தானடி, என்
கண்ணன் அவன் புரிந்தேனடி, என்
கண்களுடன் கலந்தானடி.
அந்த மண்பானையுள்ளெ
அவன் செய்யும் அற்புதங்கள்
சொல்லி மாளாதடி, எனை
கொஞ்சி மகிழ்ந்தானடி.
அவன் குழலை எடுத்தேன் நான்.
என் வாயில் வைத்தேன் நான்.
ராதே ராதே என அவன் குழலும்
என் பெயர் சொல்லுதடி.
கண்ணன் குரலே அது நான் அறிவேன்.
ராதே ராதே பெயர் சொல்வதும் அவனே.
அந்தக் கண்ணனுடன் கண் சேர்க்க
கருமை நிற வண்ணனின் குரல் கேட்க,
அக் குழலில் நானுமென்
இதழ்களை இணைத்திடவே
காரிருளில் வந்தேனடி. தோழி...
அவன் என் கண்ணன்
கண்களோடு கண் சேர்க்க
கார் இருளில் வந்தேனடி. தோழி.
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
उसी घड़े से
उसी डगरिया
उसी घड़े से
उसी डगरिया
हेराफेरी करत साँवरिया
साँवरिया
राधा राधा राधा बोले बांसुरिया
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी
मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी
श्याम बसे मोरे मन में
अपनी अटारी बैठी सुनूँ मैं
बंसी की मीठी तान
सखी
बंसी की मीठी तान
चाँद सूरज दोनों नैन बना के
श्याम छबी सखी मैं निहारूँ
नाहीं जिया भरे
कारे बसिवारे
नाहीं जिया भरे
तन मन प्राण पियासे
सखी
तन मन प्राण पियासे
வருவது பின்னே பாடலின் தமிழாக்கம்( நாட் லிடரல் )
நீல நிறக்கண்ணன் அவன் சியாம வர்ணன்
அவன் கண்ணோடு நான் கண்ணிமைக்க காரிருளில் வந்தேனடி தோழி.
உன் சித்தத்தை நான் அறிவேன்.
உன் சிந்தனையையும் அறிவேன்.
உன் சமத்தையும் அறிவேன்.... நானோ
ச்யாமுடன் கண் கலக்க வந்தேனடி தோழி.
யமுனை கரையினிலே
அமர்ந்தேன் அவன் நினைவினிலே
மாலை நேரத்திலே தென்றல் காற்றினிலே
மண் பானை .ஒன்றெடுத்தேன்
நீரினிலே மொண்டெடுத்தேன் - அதில்
நீலவண்ணன் வந்தானடி, என்
கண்ணன் அவன் புரிந்தேனடி, என்
கண்களுடன் கலந்தானடி.
அந்த மண்பானையுள்ளெ
அவன் செய்யும் அற்புதங்கள்
சொல்லி மாளாதடி, எனை
கொஞ்சி மகிழ்ந்தானடி.
அவன் குழலை எடுத்தேன் நான்.
என் வாயில் வைத்தேன் நான்.
ராதே ராதே என அவன் குழலும்
என் பெயர் சொல்லுதடி.
கண்ணன் குரலே அது நான் அறிவேன்.
ராதே ராதே பெயர் சொல்வதும் அவனே.
அந்தக் கண்ணனுடன் கண் சேர்க்க
கருமை நிற வண்ணனின் குரல் கேட்க,
அக் குழலில் நானுமென்
இதழ்களை இணைத்திடவே
காரிருளில் வந்தேனடி. தோழி...
அவன் என் கண்ணன்
கண்களோடு கண் சேர்க்க
கார் இருளில் வந்தேனடி. தோழி.
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
उसी घड़े से
उसी डगरिया
उसी घड़े से
उसी डगरिया
हेराफेरी करत साँवरिया
साँवरिया
राधा राधा राधा बोले बांसुरिया
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी
मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी
श्याम बसे मोरे मन में
अपनी अटारी बैठी सुनूँ मैं
बंसी की मीठी तान
सखी
बंसी की मीठी तान
चाँद सूरज दोनों नैन बना के
श्याम छबी सखी मैं निहारूँ
नाहीं जिया भरे
कारे बसिवारे
नाहीं जिया भरे
तन मन प्राण पियासे
सखी
तन मन प्राण पियासे
தகவல்கள் அறிந்த இடம்.
http://atulsongaday.me/2013/04/13/shyaam-se-nain-milaayi/
அப்போ நான் நாலாம் வகுப்பு!
ReplyDeleteஇ
Deleteவாவ் !!
சுப்பு தாத்தா.
வியக்கவைக்கும் தகவல்கள்.
ReplyDeleteசுவாரஸ்யம் + வியப்பு...
ReplyDeleteவரிகளுக்கு நன்றி ஐயா...
எப்படி ஆரம்பித்த சினிமா எப்படி ஆகியிருக்கிறது பார்த்தீர்களா தனபாலன் !!
Deleteஇதே பாடல் கருத்துக்கள் கொண்ட ஒரு சினிமா பாடல் இப்பொழுது படமாக்கப்பட்டதென்றால்
காட்சி எப்படி இருக்கும்?
என்னோட ஃபேவரிட்: சிம்பு அன்ட் நயனதாரா. கண்ணன் அன்ட் ராதா ஆக.
சுப்பு தாத்தா.
சூப்பர் ஐயா கண்ணொளியை கண்டேன் அதில் வரும் கிருஷ்ணனுடைய ஆக்ஷன் பார்த்தபோது என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை மன்னிக்கவும் கிண்டல் செய்கிறேன் நினைக்காதீங்க ஆனால் இந்த மாதிரி பழைய விஷயங்கள் தேடி கண்டு பிடித்து அந்த பாடல்களுக்கு தமிழக்கமும் கொடுத்து பெரிய விஷயம் முயர்ச்சி ஐயா மிக்க நன்றி
ReplyDeleteஒரு காலகட்டத்தில் இருக்கும் மரபுகள் பொறுத்து தான் அப்பொழுது எடுக்கப்படும்
Deleteபடத்தின் காட்சிகளும் அமைந்திருக்கும்.
1941 ல் இந்தப் படமும் பாடலும் எடுக்கப்பட்டதாக செய்தி.
அதற்குப் பின் நாம் தமிழ்த்திரை உலகில் வந்த எவ்வளவோ திரைப்படங்கள் பாடல்கள் அதற்கான
காட்சிகள் ஏன் 1960 வரை திரைப்பட காட்சிகளை இன்றைய தலை முறை ரசிக்கமுடியுமோ என்பது
சந்தேகமே.
சதி லீலாவதி, குலேபகாவலி, அம்பிகாபதி போன்ற படங்கள், தியாகராஜ பாகவதர் இசையுடன் கூடிய
நடிப்பு இவையெல்லாமே சரித்திரமே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சுப்பு தாத்தா.
பாடல்களைத் தேடி மொழிமாற்றமும் செய்து அழகாகப் படைக்கிறீர்கள் சுப்பு தாத்தா. இப்பொழுது அப்படி எல்லாம் படி,ஆடி,நடித்து ..வாய்ப்பே இல்லை..
ReplyDeleteஎனக்கு அந்த காலத்துப் படங்கள் மிகவும் பிடிக்கும்...தமிழை ரசிப்பேன்...நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி.
Deleteநீங்கள் இருக்கும் நாட்டில் என்ன மொழி பேசுகிறார்கள் ?
ஆங்கிலம் பேசுபவர்களும் உண்டல்லவா ?
சுப்பு தாத்தா.
நல்ல முயற்சி. அயராமல் தேடி எடுத்து முத்துகளைத் தருகிறீர்கள்.
ReplyDeleteதியாகபூமி பேபி சரோஜா பெயரை எல்லோரும் குழந்தைகளுக்கு வைத்தார்கள் என்றி அம்மா சொல்லுவார். எனக்கும் சந்திரலேகா (1948)படம் வெளியான அன்று பிறந்ததால் சந்திரலேகா என்று பெயரும் வைத்து அதை மறந்தும் விட்டார்கள்:)
நான் மிகவும் ரசித்தேன் பாடலை.
Deleteஅமெரிக்காவுக்கு ஃபோன் போட்டு அந்த மாமிகிட்டெ சொல்லணும். அந்தப்படம் பெயர்.
என்னோட ஃப்ரன்டோட பெட்டர் ஹாஃப். தனக்கு சரோஜான்னு பெயர் அந்தக்காலத்துலே
ஒரு படம் வந்தது. அதுலே வர பொண்ணு பெயர் தான் எனக்கு வைத்தார் எங்க மாமனார். அப்படின்னு எங்க அம்மா
சொல்வா. என்றாள்.
ஏன் ! உங்க அம்மாவுக்கு கூட என்ன படம் என்று தெரியாதா அப்படின்னு ஒரு தரம்
கேட்டேன்.
எங்க அம்மாகிட்டெ கேட்டேனே...
நான் எங்க படம் பாத்தேன்.. ! இன்னிக்கு நாளைக்கோ அப்படின்னு இருக்கற பொண்ணு கொட்டகைக்கு எல்லாம் வரக்கூடாதுன்னு எங்க மாமியார் சொல்லிட்டு, அவரும் மாமனாரும் தான் பார்த்தார்களாம்.
பாத்துட்டு வந்தன்னிக்கே நான் பிறந்ததுனாலே அந்த பெயர் தான் வைக்கணும் அப்படின்னாளாம்.
அதுவும் தாயார் பெயர் தான்.அப்படின்னு சொன்னாளாம்.
புக்காத்துலெ இருந்தா வாய எல்லாம் திறக்கவே முடியாதாமே !!
பத்மாவதி ஆ இருந்தா என்ன சரோஜா ஆ இருந்தா என்ன? எல்லாமே தாயார் தானே....
அப்படின்னு இவா அம்மா சொல்லிவிட்டாளாம்.
பெயரா முக்கியம் ! ரோஜாவை வேற பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா ரோஜா தானே
இல்லயா..
சுப்பு தாத்தா.
நல்ல நல்ல பாட்டுக்களாய் தேர்ந்தெடுத்து அதற்கு மொழிபெயர்ப்பு வேறு தந்து அசத்துகிறீர்கள் ஐயா.
ReplyDeleteசத்துள்ள படம்.
Deleteஆனா இந்தக்காலத்துக்கு எல்லாம் எடுபடாது.
எடுபடுவதெல்லாம் நேத்திக்கு விஜய் டிவிலே ஒரு கோடிலே பாத்தோமே அந்த மாதிரி சீன்ஸ் தான்.
சுப்பு தாத்தா.
நடன choreo பார்த்து இன்றைய கலைஞர்கள் கொஞ்சம் கற்கலாம். Graceful and inviting.
ReplyDeleteமிகவும் ரசித்தேன். Thanks.
இந்தக் காட்சியில் ப்ரித்வி இருக்கிறாரா?
நேரம் கிடைக்கும் பொழுது படத்தைப் பார்க்க வேண்டும். கடிசியில் வரும் his majesty ஆங்கில voice ஆர்வத்தைக் கிளப்பிவிட்டது.
இந்த மாதிரி க்ளாசிகல் நடனங்கள் இருக்கும் படங்கள் பல துவக்க காலத்தில் வந்திருக்கின்றன.
கமலா, லலிதாபத்மினிராகினி, வைஜயந்திமாலா ஏன் ஹேம மாலினி கூட க்ளாசிகல் டான்ஸர் தானே..
ஆனா, அந்தந்த காலத்துக்கு தகுந்தபடி ஆடவேண்டியது இருக்கில்லையா.
சுப்பு தாத்தா.