Wednesday, April 17, 2013
என் உருவம் உனது கண்கள்
மேரி சூரத் தேரி ஆன்கேன்.
என் உருவம் உனது கண்கள்
என்ற சோக காவியம் ஒன்று திரை வானில் 1963 ல் வந்தது. . ஷைலேந்திரா பாடல்கள் எல்லாமே.. ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கும் எஸ்.டி. பர்மன் இசை
ஒரு பாடல் மன்னா டே பாடியது.
இந்த பாடல் ஹிந்துஸ்தானி க்ளாசிகல் ராகம் ஆஹிரி யின் அடிப்படையில் அமைந்திருந்தது.
அற்புதமாக பாடியிருந்தார் மன்னா டே அவர்கள்.
திருச்சி கெயிட்டி தியேட்டரில் நான் பார்த்த படம்.
நடு இரவு. நிசப்தம்.
மன்னா டே யின் குரல்.
நீங்களும் கேளுங்கள்.
இதன் தமிழாக்கம் தந்திருக்கிறேன்.
pocho na maine kaise rain bitaaye
poochho na kaise maine rain bitai
ik pal jaise, ik yug beeta
yug beete mohe neend na aai
poochho na kaise maine rain bitai…
எப்படி இரவெலாம் கழித்தாய் என்றே
இப்போதென்னை கேட்டுவிடாதே
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல்
ஓடியது யுகமே..உறங்கினேன் அல்லேன்.
a kaheen chanda na kaheen tare
jot ke pyase mere nain bichare
bhor bhee aas kee kiran na lai
poochho na kaise maine rain bitai…
நிலவும் இல்லை விண்மீனும் இல்லை
ஏங்கிய என் கண்களுக்கு
ஒளி ஏதும் வானில் இல்லை.
விடியல் வரும் ஓளியும் வருமென
காலை வரும் வரை உறங்காதிருந்தேன்.
கதிரவன் வந்தான் ஒளியிலாமலே
it jale deepak ut man mora
fir bhee na jaye mere ghar ka andhera
tadpat tarsat umar ganwai
poochho na kaise maine rain bitai…
இங்கு அகல் எரியும் என்னுள்ளே மனம் எரியும்.
இருந்தும் இருட்டே என்னுடன் இணைந்தே இருக்கும் .
ஏங்கியும் தவித்தும் என் பருவத்தைக் கழித்தேன்.
தூங்கினாயா என எனைக்கேட்டுவிடாதே...
(Song from Hindi film ‘Meri Surat Teri Aan
raag ahiri
manna dey
SD burman shailendra
meri surat teri aankein. 1963
poochho na kaise maine rain bitai
ik pal jaise, ik yug beeta
yug beete mohe neend na aai
poochho na kaise maine rain bitai…
(Song from Hindi film ‘Meri Surat Teri Aankhe’ ….
. Singer – Manna De ….
. Musice Director – S.D. Burman)
Subscribe to:
Post Comments (Atom)
ReplyDeleteகதிரவன் வந்தான் ஒளியிலாமலே//
அகல் எரியும் என்னுள்ளே மனம் எரியும்.
இருந்தும் இருட்டே என்னுடன் இணைந்தே இருக்கும் /
கருத்துரை வழங்க மறந்துபோகவைக்கும்
சோக வரிகள்.. .
ஆமாம் மேடம் ராஜேஸ்வரி. ( என்னோட தங்கை பேரும் அதுதான். மருமக பேரும் அதே தான்)
Delete// சோக வரிகள் //
சோகம் தான் வாழ்க்கையிலே சத்யம். ஆனால் அதில் ஒரு சுந்தரம் இருக்கிறது.
வாழ்வு என்ன என்று புரிகிறது.
சுப்பு தாத்தா.
/// ஏங்கியும் தவித்தும் என் பருவத்தைக் கழித்தேன்.
ReplyDeleteதூங்கினாயா என எனைக்கேட்டுவிடாதே... ///
நல்ல வரிகள்...
எக்ஸாக்ட்லி.
Deleteஎவரி மார்னிங் எழுந்த உடனே தி.த. ஃபோட்டோ ஒரு நல்ல சிரிப்புடன் கூடிய
உங்கள் முகத்தை ப்பார்த்து சந்தோஷமா,
அடடா !! இன்னிக்கு நல்ல பொழுது என்று சொல்லவைக்கிறது.
சுப்பு தாத்தா.
பி.கு.: ஒரு முப்பது இல்ல நாற்பது வருசம் முன்னாடி நானும் உங்க மாதிரி
ஒரு மீசை வச்சுக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன்.
உருக்கமான பாடல். ஆழ்ந்த கருத்து. நல்ல மொழியாக்காம்.
ReplyDeleteநன்றி
வாழ்த்துக்களுக்கு நன்றி.
Deleteஉங்ககிட்டே பேசுனதிலேந்து அந்த இன்னாம்பூருக்கு போகணும்னு
ஏதோ ஒண்ணு நெஞ்சுக்குள்ளே கின்டில் பண்ணிகிட்டெ இருக்கு.
சுப்பு தாத்தா.
நல்ல மொழி ஆக்கம் செய்கிறீர்கள் நல்ல பாடல்
ReplyDeleteநல்லவை நல்லவரால் நாடப்படுவதால்
Deleteநல்லவை நானிலமும் போற்றும்.
நானிலத்திலே நீங்க முதல்.
சுப்பு தாத்தா.
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல்
ReplyDeleteஓடியது யுகமே..உறங்கினேன் அல்லேன்.
வரிகளை ரசித்தேன்.
மொழி பெயர்ப்பினால் பாட்டை புரிந்து ரசிக்க முடிந்தது.
நன்றி பகிர்விற்கு
Deleteஎன்னதான் உருது வாத்தி இந்தி வாத்தி யா அந்தக்காலத்துலெ இருந்திருந்தாலும்
இந்த மொழி பெயர்ப்பு சமாசாரம் கொஞ்சம் இப்படி அப்படிதான் இருக்கும்.
பப்ளிஷ் பண்ணினப்பறம் தான் இப்படி எழுதியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமே
அப்படின்னு தோணும்.
என்ன இருந்தாலும் ஒரு கவிதையோ கதையோ ( கட்டுரை சமாசாரம் தனி) அது
இயற்றப்பட்ட மொழிலே படித்தால் தான்
சுகம் சுகம்.
வந்ததற்கு நன்றி.
நல்ல வார்த்தைகள்
தந்ததற்கு நன்றி.
சுப்பு தாத்தா.
மனதை உருக்கும் வரிகளும் இசையும் ஐயா...
ReplyDeleteமிகமிக அருமை. கேட்கும்போது மனது கனக்கின்றது.
அருமையான பாடல்களைத்தேடித்தேடி அழகாக மொழிபெயர்த்து இங்கு எமக்கும் ரசிக்கத் தரும் உங்களுக்கு நிறைந்த நன்றிகள்!
எனது வலைப்பூவில் வந்தது வசந்தமதை நீங்கள் பாடித்தந்த யூடியூப் தொடர்பினை வழமைபோல் அங்கேயே இணைத்துள்ளேன். அருமையாகப் பாடித்தந்துள்ளீர்கள். மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் பல!
தாத்தா உங்க வலைலே வலது பக்கத்துலெ
Deleteதாவி உட்கார்ந்து இருப்பதை
ஊட்டுக்காரியிடம் காண்பித்தேன்.
எனக்கு த்ருஷ்டி கழித்தாள்.
நிசமாங்க... வெளிலே சொல்லாதீக.
சுப்பு தாத்தா.
இருள்,அதைவிட கனத்த மனது,தேனாய் உருகும் இசை,
ReplyDeleteகனக்க வைக்கும் மன்னா டே யின் குரல்.அருமை.
நீங்கள் மொழி பெயர்த்துக் கொடுத்ததால் இன்னும் இனிமையானது.
உள்ளம் நிறைந்தது நன்றிகள்.
Deleteஇது மன்னா டே இல்லை.
மன்னா நைட் KNIGHT.
சுப்பு தாத்தா.