Pages

Monday, April 22, 2013

இது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு உளவியல் பரீட்சை.



அண்மையிலே நான் எழுதிய ஒரு பதிவுக்கு பின்னூட்டம் அளித்த ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற ஜே.கே.யை நினைவுபடுத்தி இருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் புதிதென பிறந்தோம் என்ற நினைப்பில் எல்லாவற்றையும் பழைய சிந்தனைகள், பழைய அனுபவங்கள் அடிப்படையில் அணுக வேண்டாம், புதிதாக பாருங்கள் என்பார் ஜே.கே.

நமது அன்றாட வாழ்வின் பிரச்னைகளுக்கெல்லாம் காரணமே நாம் நமக்கென ஒரு விதி முறைகளை அமைத்துக்கொண்டு அந்த விதி முறைகளை நமது சுற்றம் உற்றம் எல்லோருமே வழி நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த எதிர்பார்த்தல் சில சமயங்களில் நியாயமானதாக இருந்தாலும், இந்த விதி முறைகளை அவர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு நாம் இடுவதில்லை.

பல நேரங்களில் என்ன விதிகள் நாம் இட்டு இருக்கிறோம் என்றே அவர்களிடம் நாம் சொல்லி இருக்கமாட்டோம் .

இது ஒரு RED TRIANGLE ,  இதை முதலில் வர்ணித்தவர் பால் சின்றல் எனும் உளவியல் ஆராய்ச்சியாளர்.

நீங்கள் வழக்கமாக பார்த்த சிகப்பு முக்கோணம் அல்ல இது.

இங்கே

R STANDS FOR RULES.
E STANDS FOR EXPECTATIONS.
D STANDS FOR DEMANDS.

To read more on EXPECTANCY VIOLATIONS THEORY, CLICK HERE.)

இந்த முக்கோணத்துக்குள் தான் உங்களை சுற்றி உள்ளவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதால் தான் எல்லாத் தொல்லையுமே.
உங்கள் எதிர்பார்ப்பு வளையத்திற்குள் உங்களைச் சேர்ந்தவர் அல்லது சார்ந்தவர் இல்லை என்றால் நீங்கள் நிலை குலைந்து அமைதி இழந்து விடுகிறீர்கள்.

என்ன தீர்வு ?


நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஆட்சேபனை இல்லை.

ஆனால், உங்களது மனைவி ( அல்லது கணவன் ) மகன் மகள் எல்லோருமே நீங்கள் விதித்த வட்டத்துக்குள் வந்துவிடவேண்டும் என நினைப்பது எல்லா மன உளைச்சலுக்குமே அடிவாரம்.

அதனால் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.

ஒருவரிடம் ஒரு குறை இருப்பதாக நீங்கள் கண்டாலும் அந்தக்குறையுடன்
அவர்களிடம் நீங்கள் அன்பு செலுத்த இயலுமா ?

HUMAN RELATIONS எனும் பாடத்தில் முதல் அத்தியாயம் இதுவே

அடுத்து,  ஒரு விளையாட்டு.
LEARNING WHILE PLAYING.

உங்கள் மனதிலே உங்கள் மனைவியைப்பற்றி ஒரு இமேஜ் இருக்கக்கூடும்.
அந்த இமேஜ் என்ன ?  அதை ஒரு விலங்காகவோ அல்லது பறவையாகவோ
உங்களால் சித்தரிக்க இயலுமா >

உதாரணமாக எனது மதிப்புக்குரிய வலை நண்பர் ஒருவர் தமது கணவரை சிங்கம் எனச் சொல்லுகிறார் வர்ணிக்கிறார்

சிங்கம் என்று சொன்னால் நமக்கு என்ன தோன்றுகிறது ?  உங்களுக்கே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை.

இது போல நீங்களும் உங்கள் மனைவியைப் பற்றி அல்லது கணவரைப் பற்றி
ஒரு கணிப்பு மனதில் வைத்து இருப்பீர்கள்.

கணிப்பிலே ஒற்றுமை அல்லது தெளிவு.
( Unity or Clarity in our Assessment)

இப்பொழுது தேர்வில் முதல் படிக்கு செல்வோம்.

  உங்களைப்பற்றியே உங்கள் மனதில் ஒரு கணிப்பு இருக்கும்.

    அது என்ன ?

அதை எனக்கு சொல்லவேண்டாம் மனதிருக்குள்ளே கொண்டு வாருங்கள்.

அது எந்த மிருகமாகவும் இருக்கலாம் அல்லது எந்த பறவையாகவும் இருக்கலாம்.

அடுத்த ஸ்டெப்

உங்கள் கணவரிடமோ ( அல்லது மனைவியிடமோ) இதே கேள்வியைக் கேட்டால் அவர்கள் உங்களைப் பற்றி என்ன இமேஜ் கணிப்பு தருவார்கள்?

அதாவது அவர்களது உங்களைப்பற்றிய கணிப்பு என்ன?

அதையும் குறித்து கொள்ளுங்கள்.

இந்த இரண்டு கணிப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைகின்றனவா ?
என்று பாருங்கள்.

மூன்றாவது ஸ்டெப்

உங்கள் மனைவியிடமே (அல்லது கணவரிடமே) சென்று இதே கேள்வியைக்
கேளுங்கள்.

அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று.

இப்பொழுது மூன்றையும் பொறுமையாக பாருங்கள்.

இவை ஒன்றா ? வித்தியாசமா ?
வேறு படுகின்றது என்றால் ஏன் ?

இது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு பரீட்சை. 
பாஸ் பைல் என்று எதுவும் கிடையாது. 
ஆக தைரியமாக வினாவுக்கு விடை எழுதுங்கள். 
எனக்கு  விடை  தரவேண்டாம். 
உங்களுக்கே நீங்கள் தாருங்கள். 

BETTER HUMAN RELATIONS.க்கு முதல் படி இதுவே 

இப்போது துவங்குங்கள் உங்கள் ரங்கமணி ( தங்கமணி) உடன்  
இந்த விளையாட்டினை. 

*******************************************************************

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு
நான் நடத்திய வகுப்புகளில் தெளிவானது :LATER DOCUMENTED ALSO.

கணவன் மனைவி நாற்பது வயது வரை  வெவ்வேறு மன நிலைகளில் இருந்தாலும்

சிறிது சிறிதாக ,
கணவன்மார்  மனைவி போல் நினைக்கத் துவங்குகிறார்
மனைவிமார்  கணவன் போல் நினைக்கத் துவங்குகிறார்.


***********************************************************************

பின் குறிப்பு:

நான் என்னை ஆடு என நினைத்து இருந்தேன். 
என் மனைவியிடம் நான் என்ன ?.

எனகேட்டேன். 

அணில் என்றாள் 

***********************************************************************

இது PERCEPTIONS என்னும் வரிசையில் வரும் பாடம்.

What U feel about yourself ?  This is your perception of yourself.
What U feel your wife (or husband) feels about U ? This is what u feel his/her perception about U
What your wife ( or husband) feels about U ? ( This must be the his/her answer not yours)

How close are the answers to one another lies the route to your life at home.

If at home, U want to be at Home,
please do this exercise honestly.
One more thing to be borne in your mind.
You must request your wife (or husband) to answer the question spontaneously
without deliberating on the question for more than 15 seconds.

WHY IS IT OUR PERCEPTION OF OURSELVES DIFFER FROM 
OTHERS' PERCEPTION ABOUT US?
THIS PERCEPTION ABOUT U DOES NOT DIFFER IN SOCIAL CIRCLES ALONE,
IT DIFFERS IN DOMESTIC FRONT ALSO.
WHY AT ALL THIS HAPPENS?
LET US  DISCUSS IN OUR NEXT LESSON.
IN 
THE PRINCIPLE OF JOHARI WINDOW.

No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!