இந்த +Geetha Sambasivam கீதா மேடம் அது இது எது அப்படின்னு VIJAYA வருஷ பிறப்புக்கு வித விதமா செஞ்சு அப்படியே அசத்தறதைப் பாத்தப்பறம் ....
இன்னிக்கு காலைலே எங்க ஊட்டுக்கிழத்தைக் கிழவி...கிழவி... எனக் கூவினேன் ( KOOVI AZHAITHAAL KURAL KODUPAAN )
" பெரிய குமரன் இவரு... என்னைக் கிழவின்னு நாலு வூடு கேட்கறாமாதிரிலே கூப்பிடராரு.." என்று
முணுமுணுத்தவாறெ அந்தக்காலத்து என்னோட் கனவுக்கன்னி, மத்யம காலத்துலே பார்யாள் , இப்ப கிழவி..
என்முன்னே ப்ரசன்னமானாள்.
அடியே... என்றேன்.
என்ன அடியே......
ரசத்திலே எத்தனை தினுசு இருக்கு தெரியுமா ?
தெரியும் ஆனா தெரியாது.
அது என்ன அப்படி சொல்றே ?
தெரியும் அப்படின்னு சொன்னா என்ன தெரியும் அப்படின்னு கேட்பீங்க..
தெரியாது அப்படின்னு சொன்னா ஏதோ உங்களுக்குத் தெரியும்னு
நினைச்சுண்டு தெரியாததெல்லாம் தெரிஞ்சது போல பில்ட் அப் விடுவீங்க...
அப்ப உனக்குத் தெரியும்னு சொல்லு...
என்ன சொல்லணும்..?
ரசத்திலே எத்தனை தினுசு இருக்கு ?
நீங்களே சொல்லுங்க... இத்தனை வருசமா சாப்பிட்டது நினைவு இல்லையா என்ன ?
இருக்கே... அதானே உபத்திரவமே...
என்ன நான் செஞ்சது உபத்திரவமா போயிடுத்தா...
அதுக்கில்லடி... நீ செஞ்சது நினைவுக்கு வந்து திரும்பவும் திரும்பவும்
அந்த ரசத்தை தா தா தா அப்படின்னு கெஞ்சறது
என்ன ரசம் அப்படி கெஞ்சறது...
ஒண்ணா ரண்டா...
சொல்ல ஆரம்பிங்க...
மிளகு ரசம்,
ஜீரக ரசம்.
பருப்பு ரசம்.
ஓம வல்லி ரசம்.
தக்காளி ரசம்.
எலுமிச்சை ரசம்.
இஞ்சி பூண்டு ரசம்.
பன்னீர் ரசம், பதனீர் ரசம், இப்படி பல விதமா இருக்கே...
இன்னிக்கு ஒரே ரசம் தான்...
நம்ம வூட்டிலே மட்டுமல்ல. எல்லா வீட்டுலேயும்..
அது என்ன விசேஷம் இன்னிக்கு அப்படி ஒரே ரசம் ஆல் வீட்டுலேயேயும்....
பிபரே ராம ரசம்...... Drink Rama Rasam.....
இந்த ரசத்தை முதல்லே மனசுலே நினைச்சுக்கங்க...
லலிதா மேடம் இரண்டு நாள் முன்னாடியே பிபரே ராம ரசத்தை மொழி பெயர்த்து உங்களை பாடச் சொன்னாங்களே நினைவில்லையா !!
ஆஹா.. இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி ஆச்செ....
ராமா என்ற வார்த்தைக்கு உண்டான மகிமையே என்ன என்ன என்ன....
( கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ..பாடலாமே)
www.mykolam.blogspot.in Courtesy: |
அத ஒரு தரம் ராமா அப்படின்னு சொன்னா நூறு தரம் சொன்னா மாதிரி
pibere rama rasam
http://youtu.be/OPKaQcvCM1o?t=26s
சதாசிவ பிருமேந்திரர்.இயற்றிய இந்தக்கவிதையை ஒரு சிறுவன் என்ன அழகாக பாடுகிறான் கேளுங்கள் . ராகம் ஆஹிர் பைரவி.
pallavi
pibarE rAmarasam rasanE pibrE rAmarasam
caraNam 1
dUrIkrta pAtaka samsargam pUrita nAnAvidha phalavargam
caraNam 2
janana maraNa bhaya shOka vidUram sakala shAstra nigamAgama sAram
caraam 3
paripAlita sarasija garbhANDam parama pavitri krta pASANDam
caraNam 4
shuddha paramahamsAshrama gItam shuka shaunaka kaushika mukha pItam
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்
தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்
பூரித நானாவித பல வர்க்கம்
புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
ஜனனமரணபய சோக விதூரம்
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்
பிறவிமரணபயம் மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம்
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்
நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம்.
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் .
சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம்
சுக சௌனக கெளசிக முக பீதம்
யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் .
Ramaaya Rama bhadraaya Rama chandraaya Vedase.
Raghunaathaaya Nathaaya Seethaaya Pathaye namaha...
TODAY IS RAMA NAVAMI.
EVERYONE OF MY READERS ARE ADVISED TO CLICK RAMA NAMA ABOVE
POSITIVELY , I SAY POSITIVELY,
AND LISTEN TO
LORD RAMA'S STORY.
AS TOLD BY MADAM +Shylaja Narayan
RAMA RAKSHA STOTRAM BY S.P.BALASUBRAMANIAN.
ஸ்ரீ ராமரை தரிசனம் செயதவர்கள் அனைவருக்கும் பிரசாதம்
பாயசம் கிடைக்கும் இடம்
மேலே க்ளிகினால் ஆஞ்சநேயர் வந்து உங்களை அழைச்சுண்டு போவார்
ரசத்தை ரசித்தேன் ஐயா... நன்றி...
ReplyDeleteசிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள் பல...
நன்றி..
Deletesubbu thatha.
ரசமோ ரசம் சார்.. மிக அருமையான பகிர்வு. நன்றி. ராம ரசம் அருந்தி ஜென்ம சாபல்யமடைந்தேன். :)
ReplyDeleteஉங்களது வலையில் ஒவ்வொரு பதிவுமே தெளிவாகவும்
Deleteபொருட்செறிவு மிக்கதாகவும் உள்ளது.
வருகைக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
sir,
ReplyDeletewhat about MORE RASAM?
jokes apart ,
eyes filled with tears on hearing GOD GIFTED kid's raamarasam !
THANKS A MILLION !
அது என்ன மோர் ரசம் ?
Deleteஒரு வேளை மோர் என்றால் இந்தியில் மயில்.
ஆட்டுக்கால் சூப் என்பது போல் நீங்க எதுனாச்சும் மயில் சமாசாரம் எதாவது...
அதெல்லாம் நான் வெஜிடேரியன் இல்லையா..
நான் ...விஜிடேரியன்.
கீதா சாம்பசிவம் மேடம் இதற்கு பதில் சொல்வார்கள்.
சுப்பு தாத்தா.
1) 'பிபரே ராமரசம்' எனக்கும் மிகவும் பிடித்த பாடல். குறிப்பாக பாலமுரளி குரலில்.
ReplyDelete2) எஸ் பி பி பாடிய பத்ராச்சால ராமதாச கீர்த்தனைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். 'சீதாராம ஸ்வாமி, ஏமிரா ராமா, ஸ்ரீராமா நீ ராமா ஏமி ருசிரா போன்ற பாடல்கள் கொண்ட அந்த கேசெட் என்னிடம் இருந்தது. அதை யூ டியூபில் தேடினால் ஒன்றிரண்டு பாடல்கள்தான் கிடைத்தன மிகவும் பிடித்த 'ஏமிரா ராமா' பாடல் கிடைக்கவே இல்லை! அதே போல சம்பந்தமில்லாமல் இன்னொரு பாடலும் தேடிக் கொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு தெலுங்கு படத்தில் - சுஹாசினி நடித்தது - தெலுங்கு பாரம்பர்யப் பாடலான 'மா தெலுகு தல்லிகி' பாடல் அதே எஸ் பி பி பாடியது, அதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் பாடல் தனிப்பாடலாகவும் வேறு குழுவினர் பாடியதும் கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தெலுங்குப் படத்தில் வரும் இந்த எஸ் பி பி பாடல் சரியான டெம்போவில் இருக்கும். படம் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை!
3) உங்கள் தளம் திறக்க நெடு நேரம் ஆவது என் கணினிக் கோளாறா, தெரியவில்லை!
Early morning BSNL server down for a pretty long time.
DeleteNo other problem to my knowledge. But, with
So many rambhakthas everywhere. So every site posting Rama Janma din takes a long time. all Ram Temples are crowded. All web blogs posting Ram Janma Din are also crowded.
Lord Rama always allows all people to have
His Dharsan.
emira rama is a wonderful song. I think I have it. I sh post it soon. If I remember right, I have heard BMK sing it so nicely.
subbu thatha
ராம ரசம் பருகினேன் .நாவு மட்டுமல்ல உள்ளமெல்லாம் தித்திக்க தித்திக்க பருகினேன் .
ReplyDeleteநன்றி.
வேளுக்குடியும் முரளிதரஸ்வாமிகளும்
Deleteராமரசம் நன்றாகவே பரிமாறுகிறார்கள்.
மனசுக்கு இதமாக இருக்கிறது அவர்களது காசட்.
ஆனா, ரொம்ப காஸ்ட்லியாக இருக்கிறது என்னைப்போன்ற மிடில் க்ளாசுக்கு.
இப்ப எல்லாம் அந்த காஸெட்டு சர்வீஸ் டாக்ஸ் வேரயாம்.
சுப்பு தாத்தா.
ராமா ராமா ராமா ............
ReplyDeleteராம ரசம் அருமை உங்கள் ரச பட்டியலும்
வாழ்த்துகள்
Deleteபட்டியல் என்று நீங்கள் சொன்ன உடன் தான் எனக்கு என் பாட்டி நினைவு வந்தது.
வேப்பம்பூ ரசம் என்று ஒரு ரசம்.
சூப்பரா இருக்கும். கசப்பு, திதிப்பு, கொஞ்சம் புளிப்பு..
ஒரே சமயத்துலே அத்தனை சுவையையும் சாப்பிடறவங்க முகத்துலே பார்க்கலாம்.
என்னோட பட்டியல்லே அது விட்டுப்போச்சு.
தங்கள் வருகைக்கு நன்றி.
சுப்பு தாத்தா.