Pages

Thursday, April 11, 2013

இத்தன சோகமா !! தாங்கமுடியல்லப்பா...


**************************************************** 
An absolute Delight.  Singer: Kishore Kumar. Film: SHARMEELI
FREE TRANSLATION BY SUBBU THATHA.

என்னுடைய முக உரை பாடலுக்கு பின்னாடி.

என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் என்னுடன்
ஆடிய ஆடல்களை .
விளையாடல்களை.....

எனையே பார்த்து நான்
 தலை குனிந்தேனே
 உனக்கென்ன வெட்கம்
  விதியே...சொல் சொல்.... .

உலகம் மரியும் மரணத்தில் .= என்
உயிரோ அழிந்தது காதலில் .
பயணம் முடியுமுன்னே
என் வழியும் தொலைந்து போச்சே

என்ன சொல்ல நான் என்ன சொல்ல

காற்றின் வேகத்திலே
    காணாது மறையும் சோலைகள் பல பல‌ 
    கண்டு உள்ளேன்.
    காதலை என் காதலையோ
    வசந்தத்தின் வழியிலே 
    நான் தொலைத்துவிட்டேன். 
    வழியும் மறந்துவிட்டேன் . 

உனக்கென்ன தெரியும்
என்ன விரும்பினேன்.என்ன எடுத்து வந்தேன்
கனவுகள் சிதற , என் கானங்கள் சிதைய,
தீப்பொறி இடையே  பனித்துளி சில பட
சிரிப்புகள் சிலதையும் சிதறிய கதைகளை

உறங்கவும் முடியவில்லை...ஒப்பாரி இசை வீட்டில்
உடலும் வருந்தியதே...அழவும் முடியலையே .
உன்னிடம் ஒன்றே  வரம்  வேண்டும் .
உணரும் நிலை என்றே  இருந்தால்
என்றுமே என்னை நெருங்கிட வேண்டா.
********************************************************************8


       இந்த இந்திப்பாடல் ஷர்மீலி படத்திலே கிஷோர் குமார் பாடியது.  



       நாலஞ்சு நாட்கள் முன்னே பார்க்கிறேன்.  கூகிள்லே இந்தப்படம் ஓடிக்கினு இருக்குது.  இன்னாடா, நமக்குப்புடிச்ச‌

       பாட்டு யாருக்கு புடிச்சிருக்கு அதப்போட்டு இருக்காக அப்படின்னு பார்த்தா...



       நம்ப வெப் ஃப்ரன்டு +Kayalvizhi Muthuletchumi கயல்விழி முத்துலக்ஷ்மி அவர்கள் தான்.  



       இந்தக் கவிதை ஒரு தினுசான சோகம்.  அந்த சோகத்திலே சங்கீதம். 

       அந்த சங்கீதம் ஒரு ஸ்வர்க்கம்.  



       செவன் த் ஹெவன் ஆஃப் ஜாய் அப்படின்னு சொல்வாக இல்லையா...

       இந்த கிஷோர் குமார் பாடுகையிலெ அப்படி ஒரு மெஸ்மெரைஸிங் எஃபக்ட் இருக்குது.
        
        அந்தக் காலத்துலே இந்தப்பாட்டுக்காக உருகு உருகு என 
        ஊத்துக்குடி வெண்ணையாய் நான் உருகியிருக்கேன் என்பது உண்மை.



        இந்த ஜெனரேஷனும் இதை ரசித்துப் பார்க்கும்போது எனக்கு இதயத்திலே ஒரு இனிய வலி.

         வாயிலே பாதி  நைட்ரோ க்ளிசெரின் மாத்திரை போட்டுண்டு நாக்குக்கு கீழே வச்சுண்டா மத்த எல்லா 
         கார்டியாக் வெசல் பைனும் ஓடிப்போயிடும்.     



         ஆனா, ஒருவருக்கு காதல் வந்து அம்பேல் ஆயிடுச்சுன்னா .... 

         பேசாம மேல சொல்லு.



          பாடலுக்கு ஒரு பின்னூட்டம் தர பார்த்தபோது கூகிள் மாட்டேன் மாட்டவே மாட்டேன் அப்படின்னு பிடிவாதம் 

         பிடிக்குது. .    ஏதோ பாவம் கிழமாச்சே , இரண்டு வரி  எழுத விடாதோ...



         இவனுக்கு சுரு சுருவுன்னு வந்துடுச்சு ....  இன்னா நம்ம பாட்டுக்கு பின் பாட்டு நான் பாடல்லைனா...யாரு பாடுவாக 

         இதோ வந்துட்டேன் அப்படின்னு சொல்லிட்டு....



         முதல்லே இதுக்கு தமிழ் ட்ரான்ஸ்லேசன் போடுவோம். அப்படின்னு எழுதினேன். 



         நான் முடிக்கறதுக்குள்ளேயே மேடம் முத்துலக்ஷ்மி அவர்கள் எப்படியோ தெரிஞ்சு போய் என்னையும்

         அவங்க வட்டத்துக்குள்ளே அனுமதிச்சாங்க..



         இருந்தாலும் நான் விடேன்  என்று எடுத்த தொட்ட காரியத்த தொடர்ந்து எழுதுகிறேன். 



         முதலில்  தமிழ். பிறகு அசல்  உருது கலந்த இந்தி. கவிதை.

இது ஒரு  லிடரல்   மொழி பெயர்ப்பு அல்ல .பாடலோட உயிரை வெளிக்கொணர ஒரு முயற்சி 

          ருசியுங்கள். ரசியுங்கள்.   
****************************************************************8*

कैसे कहे हम  प्यार ने हम को, क्या क्या खेल दिखाए
यूँ शरमाई किस्मत हम से, खुद से हम शरमाये

बागों को तो पतझड़ लुटे, लूटा हमे बहार ने
दुनियाँ मरती मौत से लेकिन  मारा हम को प्यार ने
अपना वो हाल है, बीच सफ़र में, जैसे कोई लूट जाए

तुम क्या जानो, क्या चाहा था, क्या लेकर आये हम
टूटे सपने, घायल नग्में, कुछ शोले कुछ शबनम
कितना कुछ हैं पाया हम ने, कहे तो कहा ना जाए

ऐसी बजी शहनाई घरमे, अब तक सो ना सके हम
अपनों ने हम को इतना सताया, रोये तो रोना सके हम
अब तो करो कुछ ऐसा यारो, होश ना हम को आये


13 comments:

  1. அருமை...

    மேலும் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்கள் வருகைக்கு.

      சுப்பு தாத்தா.

      Delete
  2. Replies
    1. இது என்ன பாஷை அப்படின்னு புரியல்ல.சம்ஸ்க்ருதம்,
      பாலி, ப்ராக்ருதம் வ்ரஜபாஷா, கடி போலி, ஹிந்துஸ்தானி, உருது

      எதுவுமே தீக் ஹே என்ன அப்படின்னு சொல்லாது போல இருக்கு.

      வந்ததற்கு ஒரு நமஸ்காரம்.

      உங்க பதிவெல்லாம் தினசரி படிச்சுண்டே தான் இருக்கேன்.
      தினப்படி கர்மாவிலே அதுவும் ஒண்ணாயிடுத்து.

      சுப்பு தாத்தா.

      Delete
  3. Replies
    1. தாங்க்ஸு

      சுப்பு தாத்தா.

      Delete
  4. Replies
    1. தொடர்ந்து எதையுமே என்னால செய்ய முடியாது. மோஸ்ட் ஆஃப் வாட் ஐ டு இஸ் ஜஸ்ட்
      மன்கீயிங்.

      இந்த எழுபது வயசிலே எழுபத்தி எட்டு சப்ஜெக்ட்டைப்படிச்சிருந்தாலும்
      ஒண்ணு கூட உருப்படியா நம்ம வாசுதேவன் திருமூர்த்தி சார் மாதிரி
      படிச்சிருப்பேனா என்று நீங்க கேட்டா

      நோ அப்படின்னு இங்லீஷிலே ஆத்துக்காரியே சொல்றா.

      கர்னாடிக் ம்யூசிக், ஹிந்துஸ்தானி அப்படின்னு ஒரு நாளைக்கு
      தமிழ் அந்த காலத்து திருமந்திரம் தேவாரம் அப்படின்னு ஒரு நாளைக்கு
      நடு நடுவிலே நேசர், லான்செட், இதுலே எதாவது லேடஸ்ட் ரிஸர்ச் வந்திருந்தது அப்படின்னா
      அதுலேயும் கவனம்.
      அஸ்ட்ராலஜி இருக்க்வே இருக்கு, குடும்ப கௌரவத்தை காப்பாத்தணும் இல்லயா.. தினப்படி யாராவது
      இரண்டு பேர் வந்திருப்பா அவாளோட ஒரு ஒரு மணி நேரம்.

      ஏதோ எல்லாமே டைம் பாஸ்
      அவன் கூட்டிண்டு போற வரைக்கும் அமைதியா மனசு இருக்கணும்னா ஒரே வழி
      இந்த வலை உலகத்துலே போய் மாட்டிக்க்றது தான்.

      எல்லாத்துக்கும் மேலே என்னோட வலையிலே எழுதறதே இரண்டாம் பட்சம்.
      ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்திலேந்து முப்பது பின்னூட்டம் ஆவது போட்டாத்தான்
      தயிர் சாதம் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.

      அது இருக்கட்டும். நீங்க ஸ்ரீ ரங்கத்திலேயே செட்டில் ஆகியாச்சா ?

      ரொம்ப போர் அடிச்சுட்டேனா...
      நல்ல வேளை... பாடல்லையே அப்படின்னு நீங்க சந்தோஷப்பட்டுக்கணும்.

      சித்திரை முதல் நாள் தமிழ் வருஷப்பிறப்பு இல்லையா. என்ன சமையல் விசேஷம்
      அதை விலா வாரியா எழுதுங்கோ.

      சுப்பு தாத்தா.

      Delete
  5. கருப்பு வெள்ளை ஷர்மிலி? சஷி கபூர் ஷர்மிலியில் இல்லை இந்தப் பாடல். ரொம்பச் சோகம். அதில் கிலதே ஹாய் குள் யஹான் பாடல் நல்ல பாடல். + டைட்டில் சாங். அப்புறம் ஆஜ் மத் ஹோஷ் ஹுவா இவைதான் கிஷோர் பாடல்கள்!

    இந்தப் பாடலும் கேட்டிருக்கிறேன். நான் பயங்கர கிஷோர் Fan.

    ReplyDelete
    Replies
    1. இது ஷர்மீலி படம் தான் கலர் படம் தான். 1971லே வந்தது.
      சசி கபூர் ராகி நடித்தது

      http://www.youtube.com/watch?v=9iB3q2XbJuA&list=PLA42905043138D9F2


      இசை எஸ்.டி.பர்மன்.
      பாடுபவர்: கிஷோர் குமார் தான்.

      நோ டௌட் இன் மை மைன்ட்.


      சுப்பு தாத்த.

      http://www.youtube.com/watch?v=9iB3q2XbJuA&list=PLA42905043138D9F2

      Delete
  6. Replies
    1. கிஷோர் குமார் வாய்ஸுக்கு ஒரு மெஸ்மெரைசிங்க் எஃபக்ட் உண்டு.

      போதாக்குறைக்கு எஸ்.டி.பர்மன் இசை வேற.

      கிஷோர் குமார் விசிறியா 1970 80 ல் நான் தியேட்டர் தியேட்டரா சுத்தி இருக்கிறேன்.

      தமிழ் சினிமா உலகத்துலே கண்டசாலா அப்படின்னு ஒருவர் பின்னணி பாடகர் கேள்விப்பட்டு
      இருப்பீர்கள். இல்லயா...

      அது மாதிரி அப்படின்னு ஒரு உதாரணத்துக்கு ...



      சுப்பு தாத்தா.

      Delete
  7. ஐயா,

    An enchanting song. மயக்கியது குரல் .
    ரசித்துக் கொண்டே பிளாக் எழுத சுகமாக இருக்கிறது.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!