Pages

Wednesday, June 26, 2013

2012 Tony Awards - Book of Mormon Musical Opening Number - Helloஅப்பாதுரை ஸ்பெஷல் அப்படின்னு ஏன் ஒரு லேபில் இதற்கு?

இந்த பர்டிகுலர் ம்யுசிலை திரு அப்பாதுரை அவர்கள் தான் போய் பாருங்க அப்படின்னு ரெகமன்ட் பண்ணினார்.  அதுனாலே இந்த போஸ்டிங் அவருக்கு டெடிகேட் செய்யறேன்.  பதிவின் தலைப்பை கிளிக்கினால் அவரது மூன்றாம் சுழி வலைக்கு ஒரு வழி .

டிக்கட் விலை யானை விலை. குதிரை விலை. ஆனா டிக்கட் சல்லிசா சில நாட்களிலே கிடைக்கும். அன்னிக்கு கொஞ்சம் கம்மியா அதாவது 100 டாலர் ரேஞ்சிலே வாங்கலாம் .
என்ன தான் அப்படி இது என்று கூகிள் லே தேடினா , அப்பாதுரை ஒரு விஷயத்தை சிபாரிசு செஞ்சா எப்படி இருக்கும் அப்படின்னு புரிஞ்சது.

ஏகத்துக்கும் அவார்ட் வாங்கின ம்யுசிகல் இது.  முதற்பாட்டே 2012 ம வருடத்திய டோனி ( இந்திய கிரிக்கட் காப்டன் தோனி அல்ல.) அவார்ட் வாங்கி இருக்கு.

ஒரு நாலு சாங் கேட்டேன். சூப்பரோ சூப்பர்


லேசா அந்த சவுண்ட் ஆப ம்யுசிக் பாட்டு மாதிரி இல்ல ?

ஒரு ஒபெனிங் சாங் மட்டும் நேயர் விருப்பம்

ஒரு சேஞ்சுக்கு நம்ம ஊரு விடல பசங்களுக்கு
கொஞ்சம் என்ஜாய் பண்ணனும் இல்லையா ...

நம்ம ஊரு ஒரு கோடி வருவாரு பாருங்க...
அட்டகாசம் தான் போங்க..

அம்புட்டு தானே அப்படின்னு நீங்க விட்டுட்டு போனீங்க அப்படின்னா நீங்க
லக்கி இல்ல..

ஏன்னா இரண்டாவது வீடியோ சூப்பருங்க...
Saturday, June 22, 2013

ARSHA VIDHYA MEDITATION CENTRE AT PENSYLVENIA.

Last Saturday, we started on a spiritual Tour .
மான் ஆட மயிலாட  மங்கை மீனாட்சியுடன் நானுமாட 

இன்னிக்கு சனிக்கிழமை. வாங்க.. ஒரு ஆன்மீக பயணம் போவோம் என்று சொன்னார் எனது மூத்த மாப்பிள்ளை. ஆஹா..ஆஹா என்று ஆரவாரம் செய்துகொண்டே கிளம்பினேன்.

 ரொம்ப தூரமா என்று ஸ்டார்டிங்கிலெயே ட்ரபிள் கொடுத்தாள்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய், நீ வாராய் என்று அவளை கெஞ்சாத குறையாய் ஒரு வகையாய் காரில் ஏற்றினேன். 
  
பூஜ்ய ஸ்ரீ தயானந்தா சரஸ்வதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட

 அர்ஷ வித்யா குருகுலம், சேலர்ஸ்பர்க், பென்சில்வேனியா  

 குரு தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியிலே அமர்ந்திருக்கும் காட்சி காணுவோம்.

அதன்பிறகு சிருங்கேரி சாரதாம்பா மந்திர் செல்லுவோம்.அதன் பின்னே நேரம் இருந்தால் சாயீ பாபா ( சீரடி) மந்திருக்கும் செல்லுவோம். என்றார்.
என்ன ஒரு பாக்கியம். உடனே கிளம்பிவிட்டேன். சகதர்மிணி யும் கூடவே.  . பேத்தி, மூத்த பெண், மாப்பிள்ளை அவர்களது காரில் உட்கார்ந்து புறப்பட்டோம். பெல்ட் போட்டுக்கோ என்றாள் என் பெண்
. நாப்பத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எனக்கு உங்க அம்மா பெல்ட் போட்டு விட்டாச்சு. என்றேன்.
பேத்தி ஹா ஹா ஹா .

 இந்த குருகுலத்திற்கு  போவதற்கு என்ன பாக்கியம்  செய்தேனோ 
 என நினைத்துகொண்டேன்.

பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி வழியில் தீக்ஷை தரப்பட்டவர் தான்  
சென்னையில் உள்ளவர் ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்கள்.

சென்னை தி. நகர், கேசரி வித்யாலயாவில் நடக்கும்அவர்களது வேத வகுப்புகளுக்கு  தொடர்ந்து 2007,2008, ஆண்டுகளில் சென்று கொண்டு இருந்தேன். பின்னால் பல காரணங்களால் தொடர இயலவில்லை.
அவரது துவக்க ஸ்லோகம் மனதில் உதித்தது.அர்ஷ வித்யா  குருகுலம் 
குரு தக்ஷிணா மூர்த்தி 
ஆலமர் கடவுள்

ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே 
அறிவை விட புனிதம் கண்முன் காண்பது ஒன்றும் இங்கில்லை.
na hi gnane na sadhrusam pavithram iha vidyathe.
There is nothing that is purer than Knowledge.
குரு பிரும்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேச்வரஹா
குரு சாக்ஷாத் பரபிரும்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.

   GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESWARAHA
                                ( கிளிக்கவும். )
   GURU SAAKSHAATH PARABRAHMA  THASMAISREE GURAVE NAMAHA.

   தாத்தா என்ன சொல்றார் என்று கேட்டாள் என் பேத்தி.
   அவருக்குத்  தெரிஞ்சதெல்லாம் சாமி கிட்ட சொல்வாரு 
    மூட் வந்திடுச்சுன்னா ஒரேடியா பாட ஆரம்பிச்சுடுவாரு .
    அதுவும் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தா மணிக்கணக்கில் .அப்படின்னு இவள் அதுக்கு பதில் சொல்றாள். .

இந்த குருகுலத்தை நிறுவியவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இந்து தர்மம் என்ன , என்ன இல்லை என்பதை சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
    


விபூதி, குங்குமம், சந்தனம் என்று பிரசாதங்கள் தட்டுகளில்

   சம்ஸ்க்ருதம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர் ஒருவர் கண் முன் வருகிறார்.
கோவையைச் சேர்ந்தவராம். சுப்பிரமணியம் என்று பெயராம்.  அவர் இந்த குருகுலத்தில் காலை முதல் மாலை வரை நடக்கும் எல்லாவற்றையும் பற்றி விளக்குகிறார்.
  எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும் என்று எனது மாப்பிள்ளை சொல்ல, இவரோ சம்ச்க்ருதத்திலே பேச ஆரம்பித்தார்.  நமது மொழி இருக்க ஆங்கிலம் எதற்கு என்று வடமொழியில் துவங்க, எனக்கு நன்றா புரிந்தாலும், அதற்கு, திக்கி திக்கி ஒவ்வொரு வார்த்தையாக சம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

  நீங்கள் தமிழ் நாடு தானே. தமிழிலே பேசுவோமே..என்றேன். ஆஹா. என்றார்.

  நமது பாரம்பரியங்களை பண்பாடுகளை மொழியை கலாசார நிகழ்ச்சிகளை இந்தக்காலத்து குழந்தைகளுக்கு போதிக்கும் ஆஸ்ரமம் இது.

கட்டணம் எதுவும் இல்லை. உணவு தங்கும் இடம் உட்பட.  வருபவர்கள் ஏதேனும் நன்கொடைகள் தந்தால் நன்கொடைகளை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் தருகிறார்கள்.

  இந்த குருகுலம் எல்லோருக்குமே உடல் நலம் குறித்த புது கலையை கற்று கொடுக்கிறது.

போடோபயடன் தெரபி என்று இதை சொல்கிறார்கள். 

உடம்பிலே ஏகப்பட்ட செல்கள் வெளிச்சத்தை அவ்வப்போது வெளிவிடுகின்றனவாம்.
உடம்பில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் உயிர் அணுக்கள் வெளியிடும் மின்சார சக்தி வெளிச்சத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்ட செல்களை குணப்படுத்த இயலும் என இவர்கள் சொல்கிறார்கள். கேன்சர், ஆஸ்துமா, போன்ற வியாதிகள் குணமாகும் என்று சொல்கிறார்கள். 

 

                                                          MORE ABOUT THIS HERE.
மேறகொண்டு என் மனைவி தொடருகிறாள்.

   அந்தப்பக்கம் என் பெண்ணும் மாப்பிள்ளையும் அர்ஷ வித்யா என்றால் என்ன என்று அந்த போர்டை உத்து பாக்கறாங்க.
இவரு, இந்த பக்க டைனிங் ஹாலிலே என்ன மெனு அப்படின்னு 
உத்து பார்த்துகிட்டு இருக்காரு. 

எனக்கு சிரிப்பு தான் வந்துகிச்சு.  சத்தமா சிரிக்க முடியுமா ?
இருந்தாலும் இவரு நான் சிரிக்கிறத பாத்துட்டாரு. பாயசம்,   
என்ன சிரிக்கிற ? என்றார். 

வயிறு முக்கியமில்லையா. என்றேன்.
ஆமாம். ஆமாம். எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம். பப்ளிக்கா ஆமாம் போட்டார். 

இன்னிக்கு என்ன அன்ன தானம் ? என்று பார்க்கு முன் ,

இரண்டு சப்பாத்தி,சாதம்,  ரவா கேசரி, சாம்பார் , பருப்பு,உருளை பொரியல் ,  
பாயசம், தயிர், இத்தனையும் இரண்டு பேப்பர் ப்ளேட், கப், இவற்றில் ரொப்பி, எங்க  முன் கொண்டு வைத்தார் .மாப்பிள்ளை.

அடுத்தது சொல்வது நான்.

அகண்ட மண்டலாகாரம் என்று ஆரம்பித்தேன்.
குரு க்ஷேத்திரத்திலே குரூ ஸ்தோத்ரம் கொஞ்சமாவது சொல்லணும் இல்லையா ?

அக்கம் பக்கத்திலே எல்லாமே உங்களை பாக்கிறாங்க.
முதல்லே சாதம் ஆரிப்போரதுக்கு முன்னாடி சாப்பிடுங்க. ஒன்னரை மணிக்கு ஹாலை மூடிடுவாங்க....

மாமா !! மெதுவா சாபிடுங்கோ. 
நல்ல ஹைஜீனிக் உணவு.  வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கு இல்ல. என்றார் மாப்பிள்ளை. 
ஆமாம்.ஆமாம். அந்த பாயசம் தீந்து போச்சா இன்னும் இருக்கா ?
என்ன விஷயம் ! ஏற்கனவே தான் இரண்டு கப் குடிச்சாசே !! இவள் இன்டர்ரப்ட் செய்தாள். 
இல்ல. ரொம்ப நன்னா இருக்கு. பார்செலா எடுத்துண்டு போனா போற வழியெல்லாம் குடிச்சுண்டு போலாம். 

போற வழிக்கு புண்ணியத்தைத் தேடணும்  அப்படின்னு சொல்லிட்டு வந்த மனுஷன் இங்கே என்ன தேடறாரு, பேசறார் பாத்தியா நீ ? 
என்று என் மகளைக் கெட்டாள் வீட்டு எசமானி.


என்ன நல்லா  வந்திருக்கா அப்படின்னு போடோ எடுத்த பின்னே கேட்டேன்.
ஆஹா. கோவில் மிக அழகா வந்திருக்கு...என்றார் இவர். 
நான் ?
என்று பாடறாரே. பொது இடம் அப்படின்னு தெரிய வேண்டாமோ ?

இந்த  ஆசரமத்திலே  ஒரு மெடிடேஷன் சென்டர் இருக்கிறது. அதைத் தவிர சின்மயானந்த ஆஸ்ரமம் வெளியிட்ட பல நூல்களும் இருக்கின்றன. எல்லாமே யானை விலை. டாலரில் 10, 15 என்று போட்டு இருக்கிறார்கள். ரூபாயில் மாற்றி கணக்கு போட்டால் மயக்கம் வந்துவிடும். 
வாங்க வேண்டிய தேவை இல்லை. எல்லா புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றது. 
என்ன அழகா இருக்கு பாருங்க..s
 
கோவில் இதுவுங்க. இந்த டூயட் எல்லாம் இங்கன பாட கூடாதுங்க..
அப்ப இத பாடுவோம்.

இந்த இடத்தை விட்டு நகரவே மனசில்லே. இருந்தாலும் சிருங்கேரி சாரதாம்பா கோவிலுக்கு சீக்கிரமே போகணும்.வாருங்கள். என்று 
எல்லோரையும் கூட்டிக்கொண்டு காருக்கு விரைந்தார் மாப்பிள்ளை.

Thursday, June 20, 2013

சகிக்க வில்லை இவங்க அடிக்கிற கூத்து ...

சகிக்க வில்லை இவங்க அடிக்கிற கூத்து ...
இருந்தாலும் என்ன செய்வது.?
சங்கீதம் ஆயிற்றே...

சுருதி சுத்தமா இருக்கு..?
எது அப்படின்னு கேட்க்க கூடாது.

அவங்க அவங்களுக்கு அவங்க அவங்க வயசுக்கு தகுந்தபடி
புரியும்.எதுக்கும் ஒரு பிராயச்சித்தம் அப்படின்னு ஒன்னு இருக்கும். அதுக்காவ
இதை போட்டு இருக்கேன். அதுவும் இதுவும் ஒண்ணேதான்.எதுலே ஸ்வாமி !!
ராகத்திலே!
வட நாட்டிலே இத மால்கௌன்ஸ்  அப்படின்னு சொல்றாக.

நம்ம ஹிந்தோளம் அப்படின்னு சொல்வோம்.

balama maane naa
bairee chup naa rahe, lagee mann kee kahe
paake akelee mujhe, moree bahiya dhare

jab jab palatu gagar bhar ke aa
lat rah jaaye mukh pe bikhar ke
baat kare aisee dilvaala, tadape aur tadapaaye
balama maane naa

ghunghat daaru nain churaau, ghabaraahat me raah naa paau
woh baanka rasiya matvaala, sune naa moree apanee hee kahe
balama maane naa

Monday, June 17, 2013

காதல் என்று வந்துவிட்டால்.....!!!!

காதல் கடிதம் எழுதுவது எவ்வளவோ தேவலை.
காதல் என்று வந்துவிட்டால் அதைச் சொல்வது தான் எப்படி

மொசார்ட் ஆபெரா விலே ஒரு காட்சி. 
ஒரு விடலை பையன் தன காதலை சொல்ல உருகும் கவிதை இது. 

காட்சியின் பின்னணியை முதலில் படித்துவிட்டு பிறகு வீடியோவை பாருங்கள்.
புகழ் பெற்ற ஆபெரா லே நொஸ்ஸா டி பிகரோ ,மொசார்ட் எழுதியது. 
இசை அமைத்தது. 

இந்த நாடகத்தின் முதல் காட்சி : 

அரச அவையில் வேலை பார்க்கும் கிருபினோ வை அரசன் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்து விடுகிறான். கிருபினோ செய்த குற்றம் :  அங்கே இருக்கும் எல்லா பெண்களையும் அவன் சைட் அடிக்கிறான் என்பதே.  ராணியைக்கூட அவன் விட்டு வைக்க வில்லை.  ராஜாவுக்கு அசாத்திய கோபம். இத்தனைக்கும் அந்த ராஜாவே தன் ராணிக்குத் தெரியாமல், சூசன்னாவை லவ்வுகிறான்.  

ஏற்கனவே தன உள்ளத்தில் இருக்கும் காதல் உணர்வினை யாரிடமாவது சொல்லிவிடவேண்டும் என்ற வெறியிலே வேகத்திலே இருக்கும் கிருபினோ வேலை இழந்ததால் இன்னமும் துயரத்தில் மூழ்குகிறான். அங்கு எதேச்சியாக வருகிறாள். சூசன்னா ராணியின் உடைகளை தெய்ப்பவள் . அங்கு வேலை செய்யும் சமையல்காரரின் காதலி. கிருபிநோவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள். அவளிடம் தன துயரைச் சொல்லி ஒரு ஆறுதல் காண கிருபினோ பாடுகிறான்.  
சூசன்னா,நான் என்ன செய்ய, பார்க்கும் பெண்கள் எல்லாரிடமும் எனக்கு காதல் ! இந்த ராணி ரோசினா மட்டுமா என்ன ? என் காதலை நான் யாரிடம் சொல்ல? எப்படி சொல்ல ?

கிருபிநோவுக்கு யாரேனும் கிருபை செய்யுங்களேன்.


முதலில் வருவது தமிழ் மொழி பெயர்ப்பு ( சுப்பு தாத்தா செய்தது )
அடுத்து வருவது அசல் கவிதை. இத்தாலி மொழியில்.
கடைசியில் ஆங்கில மொழி பெயர்ப்பு.

யாரென நான் அறியேன்
என் செய்கிறேன் எனவும் நான் அறியேன்.
நெருப்பினிலே ஒரு கணம் பனித் துளிகளிலே  அடுத்த கணம்.
இனியும் நான் என் செய்வேன் ? யானறியேன்.

நான் பார்த்திடும் ஒவ்வொரு பெண்ணும் என்
நிறத்தை மாற்றுகிறாள். என்னை நடுங்கவும் வைக்கிறாள்.

காதலெனும் சொல் இன்பம் தான் .இசைதானெனினும் 
கன்னி ஒருவள் அருகில் வரும்போதே
கணப் பொழுதில்  என் இதயம் துடித்துப்போய்  சிதறுகிறது.

இக் காதலைப் பற்றி பேசத்தான் ஆசை.
இக்காதலை யாரிடமோ சொல்லத்தான் ஆசை.

விழித்திருக்கும்போதும்  காதலை பேச ஆசை.
உறங்கும்போதும் என் கனவுகளில் \
காதலே வரவும் ஆசை.

  நீரிலும், நிழலிலும், மலையிலும், மடுவிலும்,

மலரிலும்  மண்ணில் இருந்து பொங்கி வரும்  நீர்க்குமிழ்களிலும்  
பூக்களிலே, புல்லரிக்கும் புற்க்களிலே
எதிரொலிக்கும் என் காதல்,
 யாருமே கேளாது போய்விடுமோ ?

வெட்டியான என  வார்த்தைகள்
வியர்த்தமாயச் சென்றிடுமோ ?

காற்றிலும், கடும் புயலினிலும்,
கண் கானா இடத்திற்கு கடுகியே சென்றிடுமோ?

உள்ளமே ! என் உள்ளமே !
உனைக்  கேட்பதற்கும் இங்கே ஆருமே இல்லையே !
காதலே ! என் காதலே !! உன்னை நான் உன்னிடமே சொல்லவா ?
இல்லை. என்னிடமே சொல்லவா ?


Italian Lyrics
Non so piu cosa son, cosa faccio,
Or di foco, ora sono di ghiaccio,
Ogni donna cangiar di colore,
Ogni donna mi fa palpitar.
Solo ai nomi d'amor, di diletto,
Mi si turba, mi s'altera il petto,
E a parlare mi sforza d'amore
Un desio ch'io non posso spiegar.
Non so piu cosa son, cosa faccio,
Or di foco, ora sono di ghiaccio,
Ogni donna cangiar di colore,
Ogni donna mi fa palpitar.
Parlo d'amore vegliando,
Parlo d'amor sognando,
All'acqua, all'ombra, ai monti,
Ai fiori, all'erbe, ai fonti,
All'eco, all'aria, ai venti,
Che il suon de'vani accenti
Portano via con se.
E se non ho chi m'oda,
Parlo d'amor con me!

ஆங்கில மொழி பெயர்ப்பு.


I do not know anymore what I am, what I do,

One moment I'm on fire, the next moment I am cold as ice,

Every woman changes my color,

Every woman makes me tremble.

At the very mention of love, of delight,

I am greatly troubled, my heart stirs within my chest,

It compels me to speak of love
A desire I can not explain.

I do not know anymore what I am, what I do,
One moment I'm on fire, the next moment I am cold as ice,
Every woman changes my color,
Every woman makes me tremble.
I speak of love while I'm awake,

I speak of love while I'm dreaming,
Water, shade, mountains,

Flowers, grass, fountains,

echo, air, and the winds,

The sound of my hopeless words

are taken away with them.
And if I do not have anyone near to hear me

I speak of love to myself!

சீனுவின் வலையில்
காதல் கடிதம் எழுதி போட்டியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும்
அந்த மூடுக்கு வர இந்த வீடியோவை அவசியம் பார்க்கவேண்டும்.

இது ஒரு கோனார் நொட்ஸ். காசீதல் கடிதம் எழுத.


************************************************************************


In the first act of Mozart's famous opera, Le Nozze di Figaro, after Cherubino is fired from his position as the Count's page, Cherubino sings this aria to Susanna telling her that every woman he sees, especially Countess Rosina, excites him and stirs passion within his heart. All he wants to do is love and be loved. Here's a fantastic YouTube video of Gabriele Sima singing this aria. Follow along with the lyrics and text translation below.
Italian Lyrics
Non so piu cosa son, cosa faccio,
Or di foco, ora sono di ghiaccio,
Ogni donna cangiar di colore,
Ogni donna mi fa palpitar.
Solo ai nomi d'amor, di diletto,
Mi si turba, mi s'altera il petto,
E a parlare mi sforza d'amore
Un desio ch'io non posso spiegar.
Non so piu cosa son, cosa faccio,
Or di foco, ora sono di ghiaccio,
Ogni donna cangiar di colore,
Ogni donna mi fa palpitar.
Parlo d'amore vegliando,
Parlo d'amor sognando,
All'acqua, all'ombra, ai monti,
Ai fiori, all'erbe, ai fonti,
All'eco, all'aria, ai venti,
Che il suon de'vani accenti
Portano via con se.
E se non ho chi m'oda,
Parlo d'amor con me!
English Translation
I do not know anymore what I am, what I do,
One moment I'm on fire, the next moment I am cold as ice,
Every woman changes my color,
Every woman makes me tremble.
At the very mention of love, of delight,
I am greatly troubled, my heart stirs within my chest,
It compels me to speak of love
A desire I can not explain.
I do not know anymore what I am, what I do,
One moment I'm on fire, the next moment I am cold as ice,
Every woman changes my color,
Every woman makes me tremble.
I speak of love while I'm awake,
I speak of love while I'm dreaming,
Water, shade, mountains,
Flowers, grass, fountains,
echo, air, and the winds,
The sound of my hopeless words
are taken away with them.
And if I do not have anyone near to hear me
I speak of love to myself!

COURTESY AND REFERENCES.

More Aria Translations from Mozart's Le Nozze di Figaro
"Non più andrai" Lyrics and Text Translation
"Voi che sapete che cosa e amor" Lyrics and Text Translation

Saturday, June 15, 2013

ஊரை தெரிஞ்சுகிட்டேன்.

  நேற்று நல்ல மழை . 
காலையில் துவரம்பருப்பு வாங்க வேண்டும் என்று  சொன்னார்கள் .  அதுக்கென்ன, போனை எடுத்து அம்பிகாவுக்கு சொன்னால் அதைக் கொண்டு வந்து தந்துவிடுவார்களே என்றேன்.
அதெல்லாம் இந்தியாவிலே .  இங்கே குறைந்த பட்சம் 100 டாலர் சாமான் வாங்க வேண்டும். டெலிவரி சார்ஜஸ் டாலர் 25.  அதுவும் அடுத்த நாள் தான் கிடைக்கும். இப்ப எனக்கு சாம்பார் பண்ண பருப்பு வேண்டுமே. என்றால்.
இன்றைக்கு மட்டும் சாம்பார் இல்லாத சாதம் சாப்பிட்டா என்ன? என்று கேட்பதற்குள் என்னையும் உள்ளே தூக்கி போட்டுகொண்டு காரை கிளப்பி விட்டாள் என் பெண்.

மேகங்கள் எங்கே பார்த்தாலும் இருட்டிண்டு வரது.
மேகமே மேகமே.. அப்படின்னு வாணி ஜெயராம் பாடியது இருக்கா அப்படின்னேன்.
அதெல்லாம் தெரியாது.

.மேகம் மே கம் ஆர் மே நாட்   கம்.
 But  துவbம்பருப்பு இல்லை அப்படின்னா சாம்பார் வில் நாட் கம்.

அதற்காகத்தான் போறோம் என்றாள்  பெண்.இந்தியன் என்று போர்டு போட்டு இருந்தது. அமெரிக்காவிலே இந்தியனா ? 
கொஞ்சம் தயங்கி தயங்கி உள்ளே போனேன்.
கமல் ஹாசன் இருப்பாரோ என்று பார்த்தேன்.அவரைக்காணோம்.

பேரு தான் இந்தியன். உள்ளே இந்திய சூழ் நிலை இல்லை.


  எல்லா மளிகை சாமான்களும் இருந்தன. தயிர்,பால், மோர் , , ப்ரெட், சப்பாத்தி ரெடி மேட, தோசை ரெடி மேட் , உப்புமா ரெடி மேட்   எல்லாமே இருந்தன. எல்லாமே Freezing point பிரீச்டு . வீட்டுக்கு போய் ஒரு 25 வினாடி ஓவனில் சூடு பண்ணினால் போதும் என்றாள் என் பெண்.

வாங்கிகொண்டு வீட்டுக்கு போகும்போது மழை இல்லை.

   இது spring season. ஸ்ப்ரிங்காம். வசந்த காலம்.

   இது மழையுடன் துவங்குமாம். ஆனால் திடீர் திடீர் என்று மழை வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் பளீர் என்று வெய்யில் அடிக்கிறது.  இதமான வெய்யில். 
இந்த அனுபவமே புதுமை.
அனுபவம் புதுமை. 

 ஆஹா... வாசலிலே சென்று பார்த்தேன்.
  
   புதிய வானம் புதிய பூமி.. 

   என்று பாடல் நினைவுக்கு வந்தது.

 கொஞ்ச  நேரம் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ரோடுகளில் உலாத்தினேன்.

மழை மறுபடியும்.

குடையுடன் ஒரு குட்டையான கரிய உருவம் இன்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. 
   
   மழை பெய்யறது.  உள்ளே வாங்க என்றது  ஒரு குரல்.
ஏதோ கேட்ட மாதிரி இருக்கே, அப்படின்னு நினைசுகிட்டு,
 நீங்க யாரு ?அப்படின்னேன்.

நான் யாரா ? அந்த அளவுக்கு போயிடுத்தா?
சத்தம் பலமானது
 தண்டர் ஸ்டார்ம் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களாம்.
 மிக அருகாமையில் கேட்டது.

   அடே !  நீயா ?  என்றேன்.
என்ன நீயா நானா ? என்று முரண்டாள்
. செகட்டு மேனிக்கு மழை கொட்டறது.
வீட்டுக்கு உள்ள போங்க என்று விரட்டினாள்.
..
   வானம் பொழிகிறது. பூமி நனைகிறது .

   நானும் நனைகிறேன். உனக்கென்ன கஷ்டம் என்று விளாசினேன்.

   அது சரி. உங்களுக்கு தும்மல், இருமல், காய்ச்சல் இன்று வந்தால்... ?
  என்று இழுத்தாள் இவள்.

   வந்தால்...... என்ன ? என்று கேட்பது போல் அவளை ஒரு நரசிம்ம அவதார பார்வை பார்த்தேன்.

   எனக்கு யார் காலைலே எழுந்துண்டு காஃபி போட்டுத் தருவாக... அப்படின்னாள்.

   அடி, தங்கமே...ஞானத் தங்கமே....
   உன்னோட புத்திசாலித்தனம் எனக்கு எழுபது வயசாகியும் வல்லையே....

   என நினைத்தேன். இவளையும் கொஞ்சம் மழையில் நனைத்தால் என்ன என்று தோன்றியது.

   வேண்டாம். இவளுக்கு ஆஸ்த்மா,கர் கர் என்று வந்துவிடும்.

   அப்பறம் , Doctorஅப்பாயின்ட்மென்ட்,insurance  என்று ஓடவேண்டியிருக்கும்.

   மாந்துறையானே...காப்பத்துப்பா...

   மேனகாவைக் காப்பாத்துப்பா
என்று மனசிலே ஒரு பிரார்த்தனை செய்துகொண்டேன்.

   அது யார் மேனகா என்கிறீர்களா ?
 
   மேனகா என்பது enga  ஊட்டு எசமானி மீனாட்சி பாட்டியின் செல்லப்பெயர் அவுக அப்பா வச்சது.

   அந்தக் காலத்துலே மேனகா என்று ஒரு படம் வந்ததாம். அதப்பார்த்து அவுக அப்பா அப்படியே    அந்த மேனகை character attracted him so much சொக்கிப்போய்விட்டாராம். அன்னிக்கு அவர் படம் பார்த்தன்னிக்கு இவ    புறந்த செய்தி வந்ததாம். அதனாலே மேனகா அப்படின்னு பேர் வச்சாராம்.
Someday she hopes her biography will be flashed in some of the text books of history !! Already she has written a treatise on "On me and my village where I was born " . 

    அப்ப மீனாட்சி என்னு எப்படி ?
    அவரு மதுரையிலே இருந்தாராம்.  அதுனாலே ...

      யார் அந்த மாமனார் ? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்காமல் இல்லை.  கொஞ்ச வருசத்துக்கு    முன்னாடி  அந்த deva  லோகத்துக்கு பர்மனன்டா விசா வாங்கிண்டு    போயிட்டார்.    News is that he has since become a citizen there renouncing citizenship here.

Siva Loga naatharai kandu, sevithivom vaareer.     I do not know how many classic lovers would have heard this song.  1942 Film: Nandhanar.  Singer: DHANDAPANI DESIKAR.

   A few years before his voyage, i mean the voyage of my father in law,

 இந்த மேனகையை,  நீ கையை புடிச்சுக்கோ அப்படின்னு என் கையிலே மாங்கல்யம் தந்து நா நே நா கொடுத்துட்டு போயிட்டார்.

   அப்படிப்பட்ட மேனகையை, 

   இன்னிக்கு ஒரு நாள் அந்த கந்தர்வ லோக இந்திரபுரியாம் world, I dont know when we will be able to visit, so, இந்த ஸ்வர்க புரியிலே சவாரி போலாம   அப்படின்னு கேட்டென்.

   எஸ் ஸுனு இங்கிலீஷிலே பதிலினிளாள்.

   நீங்களும் பாருங்க.

   குறிப்பாக, 1.30 முதல்.....

   வருண பகவான் இங்கேயும் இருக்கார்.Friday, June 14, 2013

எழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.

எழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.
கிட்டத்தட்ட ஒரு அம்பது வருசமா நாங்களும் போகணும் போகணும் அப்படின்னு இருந்த ஹனி மூனுக்கு ஒரு நேரமும் வந்தது.
வாழ்விலே எங்கே நிற்கிறோம் ? போய்க்கொண்டே இருக்கிறோம். திரும்பி பார்த்தால் அப்பா !! வாழ்வின் மாலைக்கு வந்துவிட்டோம் எனத் தெரிகிறது

ஒரு நாளைக்கு மாலையில் இப்படி கொஞ்ச தூரம் இந்த நியூ ஜெர்சி சௌத் ப்ரன்ஸ்விக் பகுதியில் இருக்கும் மன்மௌத் ஜங்க்ஷன் சபர்ப் அருகே நடப்போம்  ஹனி மூன் போனதே இல்லையே என்ற ஆதங்கத்தை தீர்ப்போம் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே இந்த கிழத்தை வா..வா வசந்தமே என்று அழைத்தேன்.
சும்மா  பாடிகொண்டே இந்த  மாலையிலே அழகு மிகு ச்வர்கத்திலே
எழுபது வயசிலே பார்க்காததை 
அடுத்த எழுபது நிமிசத்திலே பார்க்கலாம் என்றேன். 
PLEASE CLICK ON THE TITLE OF THE SONG.


 இப்ப நல்ல தூக்கம் வருதே .. என்றாள் . இவள்.  
அதெல்லாம் அப்பறம்
. இப்ப பாரு உன்னைத்தான் சொல்றேன். 
இது ஒரு பொன் மாலை பொழுது.

இப்படி ஒரு வாக் போவோம். போகும்போது ஒரு பாட்டு பாடேன்.என்றேன். 

கனவெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். இப்ப கொஞ்சம் அப்படியே காத்தாட வெளியே போவோம் அப்ப தான் பாட்டு உருப்படியா வரும். சரி.. வா  என்றேன். .காற்று வெளியிடை கண்ணம்மா உன் காதலை எண்ணி எண்ணி நான் உருகுகின்றேன்.
இவளோ..சீ ..ஆன வயசுக்கு அறிவே இல்லையே...   எனச் சீறுகிறாள். 
நான் என்ன பண்ணட்டும் ?வயசு என்னைக் கேட்டுண்டா கூடறது ?
நான் காத்து வாங்க போனேன்.
ஆனா கழுதை தான் வாங்கி வந்தேன்.என்று பாட துவங்கினேன்
என்னங்க.. காத்து வாங்கப்போனேன். கவிதை வாங்கி வந்தேன். அப்படின்னு தாங்க எம்.ஜி.ஆர். படத்து கவிதை.சொல்லி சிரிக்கிறாள். இவள். இரண்டாந்தரம் டென்சர் போட்டப்பறம் சிரிக்கிறதை ஒரளவுக்கு பார்க்க முடிகிறது.
அது அவங்க கவிதை நெசந்தான். நம்ப கதை வேற விதமா ஓடிப்போச்சே. அப்ப எல்லாம் காதலிக்க நேரமில்லை ங்க. கல்யாணமா, உடனே கையிலே ஒன்னு வயத்திலே ஒன்னு அப்படின்னு ஆயிபோச்சு இல்லையா...

இருந்தாலும், துவக்கத்திலே நாளாம் நாளாம் திருநாளாம்.அப்படின்னுள்ளே ஆரம்பிச்சபோது இருந்துச்சு.
இது போலத்தானே ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி காத்து வாங்க போன பொழு து தானே உன்னைப் புடிச்சேன். அது நினைவுக்கு வந்தது .  என்ன பாட்டு உன் நினைவுக்கு வருது. ?
நான் உன்னை நினைச்சேன். நீ என்னை நினைச்சேன்.
அந்த நினைவே ஒரு பறவை அப்படின்னு தோனுச்சு இல்ல..
அந்த காலம் எல்லாம் திரும்பி வராதுங்க. வந்தாலும் பேச முடியாதுங்க.
என்ன நினைச்சே..
நான் எங்கே என்ன பேசினேன் ?  அதுவும் அந்தக் காலத்துலே இப்ப மாதிரி எல்லாம் பேச முடியுமா என்ன ?  ஒரு பாட்டு நன்னா நினைவு இருக்குங்க...
நான் பேச நினைத்ததெல்லாம் நீ பேச வேண்டும்.
பேசுவதே அப்ப முடியாதுங்க.. என்ன பேசுவதா இருந்தாலும் ஒரு ஊமை ஜாடைலே தான் சொல்லியாவனும். அத நீங்களும் புரிஞ்சுப்பீக..
கண்ணாலேயே பேசிபேசி என்னை கொல்லாதே.  
 அப்படின்னு ஒரு நாளைக்கு நீங்க பாடித்தானே ....பெரிய ரகளை ஆச்சே..
ஹூம்..அதெல்லாம் அந்த காலம். இப்ப எல்லாம் நம்ம கண்ணுக்கு நேராவே கொஞ்சுறாங்க பாருங்க.. 
ஏன் பொறாமையா இருக்கா ?
எனக்கு எதுக்கு பொறாமை ? காசில்லாம சந்திரமுகி பார்க்கலாம் இல்லையா !!
கொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம்.  கொஞ்சி பேசலாமா.  . 
 வூடு வந்துடுச்சுங்க..    நாளைக்கு பேசலாங்க...
இன்னொரு தரம் திரும்பி போவோமா ?
ஒன்னும் வேண்டாம்.  கொஞ்சம் மௌனமா வாங்க..
 அப்படியே காரை ஓட்டிட்டு இன்னொரு தரம் வாரேன் .
சரி. 
மலரே மௌனமா...  என ஆரம்பித்தேன் 
அட கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க...  இது ரைட் ஹாண்ட் டிரைவ் வேற.
அப்படியே போயிட்டே இருக்கலாமா அப்படின்னு தோணுது இல்ல.
இன்னிக்குத் தாங்க ரொம்ப நாளா சொல்லனும்னு ஒன்னு இருந்துச்சு என்ன அது ..? என்ன இருந்தாலும்.....  அது என்ன " என்ன இருந்தாலும் " அது சும்மனாச்சும் ஒரு பேச்சுக்குங்க.. சரி சொல்லு. ஒரு பாட்டு பாடனும் போல இருக்குங்க. சரி. பாடு. மாசிலா உண்மை காதலே.
நீ பயப்படவேண்டிய தேவையே இருந்தது இல்லையா. செல்வம் எப்பவுமே வந்ததில்லை. ஆனா, குழந்தைங்க தான் நம்ம எல்லா செல்வமுமே. பாரு எப்படிப்பட்ட ஸ்வர்க்கத்தை நமக்கு அள்ளித் தந்து இருக்காங்க..
மங்கியதோர் நிலவினிலே....
அப்படின்னு மறுபடியும் ஆரம்பித்தேன். சித்த பேசாம இருங்க... இது மூன் இல்லை சன்    ....  அப்படின்னு சொல்றாள் பத்னி . இரவு எட்டு மணி ஆயிடுத்து.  இப்ப போயி சன் இருக்குமா என்ன ? இது கூட தெரியாத பைத்தியம். பைத்தியம்.  நான் சத்தம் போட்டேன். யார் பைத்தியம்.  நீங்க பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம். அது கிடக்கட்டும். நமக்கு ஊர் புதுசு. இல்லையா.  தெரிஞ்சவங்ககிட்ட கேட்போம். அப்படின்னு சமாதானம் பேசி அவளை சைலண்ட் ஆக்கினேன்.
வழிலே போற நம்ம ஊர்க்காரன் ஒருவனை மடக்கி சார் சார் என்றேன்.

 என்ன என்று முறைத்தான்.

 சார் எனக்கும் என்  மனைவிக்கும் சண்டை.

 எனக்கென்ன என்றான்.

 இல்லை சார் ..

 அப்ப என்ன ? 

இது சன்னா மூனா என்று ஆகாசத்தை காட்டினேன்

. சாரி.. நான் ஊருக்கு புதுசு. 
 என்று சொல்லி விட்டு 
அவன் 
அவன் வழி போனான்.