Pages

Sunday, April 7, 2013

மயிலே பாட ஆரம்பிச்சுடுத்து.



 இன்னிக்கு இளைய நிலா ப்ளாக் படிச்சேன். தமிழ் அப்படின்னு எழுதினா போதுமே.
    பார்த்தாலும் கவிதை
     கேட்டாலும் கவிதை

     போதாததுக்கு ஒரு கவிதை வேற எழுதியிருக்காக.
     உண்மையிலே சொல்றேன்.
     கேளுங்க.
     அது கவிதை இல்லை.
     கவிதையே இல்லை.
     என்னங்க..
     என்ன நல்லா எழுதியிருக்காக...  நீங்க இப்படி சொல்றீக...
     நிசமாத்தாங்க சொல்றேன். அது கவிதையே இல்லைங்க...
     அப்ப என்னங்க...

     தேனுங்க... கொம்புத்தேனுங்க..



 
   painting  ஒண்ணு தமிழ் அப்படின்னு சிம்பல்ஸ் மூலமாக செஞ்சுருக்காக.

   அவங்களுக்கு என்னோட பாராட்டுக்கள்.

    அவங்க கவிதைக்கு கூட மெட்டு போட்டு இருக்கேன்.  பொறுமையா இருங்க.
    நாளைக்கு பாடுறேன்.
னா

    இன்னிக்கு மயிலும் மானும் ஒண்ணு எங்கள் ப்ளாக்குக்கு முன்னாடி வந்து தவிச்சுக்கினு கீது.

 டான்ஸ் ஆடாத மயிலும் இஸ்ஸா ?

   அப்படின்னு கேட்கறாரு.

    தாகத்துக்கு தண்ணி இருக்கா உள்ளே அப்படின்னு கேட்குது.

    இத்தன பேரு இருக்காக ஒத்தரு கூட பதில் சொல்லலையே...

    அதனாலே மயிலே பாட ஆரம்பிச்சுடுத்து.

    கேளுங்க...


15 comments:

  1. அழகாக பாடி உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    தமிழை தங்களின் குரலில் ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
  2. நல்ல பொருள் பொதிந்த பாட்டு.
    உங்கள் குரல் பாட்டிற்கு மேலும் இனிமை சேர்க்கிறது.
    நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
    Replies
    1. //நல்ல பொருள் பொதிந்த பாட்டு.//

      அதனாலே தானே நான் பாடுறேன்.

      நீங்க வந்ததற்கு நன்றி.
      சுப்பு தாத்தா.

      Delete
  3. ஐயா வணக்கம்...

    மயில் கவிதை அருமையாக இருக்கு. அதை இத்தனை அழகா நீங்க பாடி இருக்குறீங்களே... அற்புதம் ஐயா!

    கவிதை எழுதுறவங்களை ரொம்பவே ஊக்குவிக்கும் ஒரு அரியபணியை நீங்கள் செய்கிறது மிகவும் மகிழ்சியாக இருக்கிறது.

    மிகவும் அனுபவித்துப் பாடி எம்மையும் அதிலே இணைந்து ஊறிட வைக்கும் அற்புதத் திறமையை உங்கள் குரலில் காண்கிறேன்.

    அதனுடன் நல்ல ஞானத்துடன் அழகுற மெட்டமைக்கும் திறமை சொல்லிலடங்காதது. எல்லோராலும் முடிவதில்லை.

    உங்கள் வயதைவிட நீங்கள் ஏனைய பதிவர்களை கவிஞர்களை ஊக்குவிக்கும் சேவை உயர்வாக இருக்கிறது.

    அற்புத கலைஞர் ஐயா நீங்கள்!

    என் பணிவான வணக்கங்களுடன் வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete
    Replies

    1. இளைய நிலா காணோமே ?
      இ மெயிலும் தெரியலையே !!
      இறைவா !! நீ எங்கிருந்தாலும்
      இளமதியை அழைத்து வா எனவே நான்
      கூகுள்ளே கூக்குரலிட்டென்.

      அடுத்த வினாடி உங்கள் மெயில்.

      பார்த்து வியந்தேன்.
      அது சரி. உங்க பாட்டையும் நான் பாடிவிட்டேனே..
      பாட்டு சத்தம் கேட்கலையா...
      இங்கன போங்க.

      https://www.youtube.com/watch?v=S4u7SHEXvgQ


      சுப்பு தாத்தா.






      Delete
  4. என்பதிவில் எழுதிய கவிதைகளையும் பாடிவருவது எனக்கும் மிக்க மகிழ்ச்சியே...
    இம்முறை எழுதிய நானுணர்ந்த இன்பமிதை கவிதையை பாட உள்ளதாக எழுதியிருப்பது ஆவலைத்தூண்டியுள்ளது ஐயா!

    காத்துக்கொண்டிருக்கின்றேன். பாடியதும் அறியத்தாருங்கள்.

    நீங்கள் பாடும் என் கவிதைகளை தனி லிங்காக என் வலைப்பூவில் இடலாமா? நீங்கள் உடன்பட்டால் அதை செய்வதற்கு முயல்கிறேன்.

    மிக்க நன்றி ஐயா! உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா... மிக்க நன்றி! இங்கு மேலே நீங்கள் தந்த இணைப்பில் சென்று ரசித்தேன்.

      ஆஹா... அருமையாக ரொம்ம்பவே ரசித்து, கவிதையை காதலித்துக் காதலித்துப் பாடிப் பரவசப்படுத்தியுள்ளீர்கள்.

      நான் இப்பதான் கவிதைகள் என்னும் பெயரில் கிறுக்க ஆரம்பித்துள்ளேன். அதை நீங்கள் இன்று இப்படி அழகாகப் பாடி என் எழுத்துக்களுக்கு வலையுலகில் ஒரு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது மிக மிக மகிழ்வாயிருக்கிறது.

      ரொம்ப ரொம்பச் சந்தோஷம்!
      உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!!!

      Delete
  5. தன்யர்களானோம். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  6. //நீங்கள் பாடும் என் கவிதைகளை தனி லிங்காக என் வலைப்பூவில் இடலாமா?//

    லாம்.லாம்.

    ஆனா ஒரு கன்டிசன்.
    எங்கிட்டெ பர்மிசன் எல்லாம் கேட்கக்கூடாது.

    பாட்டு உங்க சொந்தம்
    நான் பாடியதை ( ! ) உங்க பதிவிலே போடுவது
    உங்க விருப்பம், முடிவு எல்லாமே...

    பாட்டு படிச்சாச்சு.
    என்னோட வேலயும் முடிஞ்சாச்சு.

    அம்புட்டுத்தான்,.

    சுப்பு தாத்தா.




    ReplyDelete
  7. குயிலின் குரலை தத்தெடுத்த மயிலாய்
    கவிப்புலன் கொண்ட இளையநிலா வரிகளுக்கு
    செவிப்புலன் இனிக்க இனிக்க பாடுகின்றீர்
    இன்றுவந்து இன்புற்றேன் நானுமிங்கு...!

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன்.
      வருக வருக என வரவேற்கிறேன்.

      உங்கள் வெண்பா படித்தேன். என் மனதில்
      ஒரு வெண்புறா பறந்தது.
      உங்கள் வலைக்குச் சென்றேன்.
      நீங்கள் இமயமலை என்று புரிந்தது.

      சுப்பு தாத்தா.

      Delete
  8. ஐயா... மீண்டும் வணக்கம்!

    எனது வலைப்பூவில் என் கிறுக்கலுக்கு உங்கள் பாடல் பதிவுகளுக்கு இணைப்புக்கொடுத்துவிட்டேன்.

    இங்கும் என்னையும் வாழ்த்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையில் நாம் நடத்தும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
      யாவுமே இன்னொரு கண்ணோட்டத்தில் நிசத்தில் ஒரு கிறுக்கலே.

      கிறுக்கல் என்று நீங்கள் அதற்கு இப்பொழுது தலைப்பு சூட்டிடினும்
      எதிர்கால சந்ததிகள் அவற்றினைக் காணும்பொழுது
      நமது மூதாதையர் எவ்வளவு உயர்ந்த சிந்தனையர் என்று
      பூரிக்கவேண்டும், பெருமிதம் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட எழுத்துக்களை படைக்கிறீர்கள். தொடர்ந்து படைக்கவேண்டும். இது உங்களால் இயலும்.

      தமிழ் மக்கள் பெருமை கொள்ளும் அளவுக்கு நீங்கள் ஓங்கி நிற்க எனது ஆசிகள்.

      இவருக்கு மகனாக, மகளாக, பேரனாக, பேத்தியாக நாம் பிறந்திருக்கிறோம்,
      இவர்கள் அளவிற்கு நாமும் உயரவேண்டும் என்று உங்களது எதிர்கால சந்ததியரைச் சிந்திக்கச்செய்து, அவர்கள் மன வேகத்தைக் கிளரும் எந்த கிறுக்கலும்

      காவியமே. ஐயமில்லை.

      சுப்பு தாத்தா.

      Delete
  9. மயில் ஓடுதோ இல்லையோ நான் ஓடாமல் கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. Anything frightening,the immediate instinct is either to fight or to fly away.

      subbu thatha.

      Delete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!