Pages

Saturday, April 27, 2013

1 + 1 = 1.5 ?



பல்லவி 

**********
இது ஒரு எலிமெண்டரி பள்ளி கணக்கு. 
இரண்டு பேர்  ஆறு  நாட்களில் முடிக்கும் வேலையை நான்கு பேர் சேர்ந்து எத்தனை நாட்களில்  முடிப்பார்கள். ? மூன்று என நீங்கள் சொன்னால் நீங்கள் 1940க்கு முன் பிறந்தவர் 

அடுத்த கணக்கு. 
ஒன்றும் ஒன்றும் இரண்டா ?
இரண்டு என்று நீங்கள் சொல்வது கணிதத்தில் சரி.
 காணும் வாழ்க்கையில் அல்ல

அனுபல்லவி.

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்று ஆவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளன 
Given the synergy, the whole is indeed greater than the sum of its parts. (read more here )

நடப்பிலே  ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் சில நேரங்களில் பூஜ்யமும் ஆகும்
முயன்றால், மூன்றும் ஆகும்.

உண்மையிலே ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் தொகை என்ன ?
அது பூஜ்யம் முதல் மூன்று வரை எங்கோ இருக்கிறது.

சரணம்.

1955 ம் வருடம் அமெரிக்க உளவியல் ஆராய்ச்சியாளர்கள் ஜோசப் லஃப்ட் , ஹாரி இங்காம் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் , ஒரு குழு செயல்படும் விதத்தை ஆராய்ந்தார்கள்.  இவர்கள் முடிவாக்கிய வரைபடமே இவர்களது முதற்பெயர் கொண்டு ஜோஹாரி ஜன்னல் எனப்பெயரிடப்பட்டது.

 துவக்கத்தில் இது குழுக்களின் செயல் திறனை திறம்படுத்த உதவும் என்றுதான் நினைத்தனர் என்றாலும், ஒரு சில  வருடங்களுக்குப்பின், இவர்களது ஆய்வு ஒரு சமூகச் சூழ்நிலை ஒரு குடும்பச் சூழ்நிலை இவற்றையும் மேம்படுத்த உதவும் என முடிவு செய்தனர்



   ஏன் ஜன்னல் என்று சொன்னார்கள்.?

  நமது வீட்டு  ஜன்னல் வழியே வெளிச்சம் வரும், காற்று வரும்.
  ஜோஹாரி ஜன்னல் வழியே தெளிவு வரும். சூழ் நிலை இதமாக அமையும்.

  ஆயினும் என் வீட்டுக்கு  ஜன்னல் வேண்டாம் என்று சொல்பவர்கள் உண்டு.
   ஏன் சொல்கிறார்கள் ?
 
   ஜன்னலைத் திறந்தால் எனக்கு வெளியிலிருந்து வெளிச்சம் கிடைக்கிறது, காற்றும் கிடைக்கிறது. 

   ஆனால், அதே சமயம் வெளியிலிருப்பவர் நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கவும் வாய்ப்பு இருக்கிறது.
   நான் என்ன செய்கிறேன் என்று பிறருக்கு ஏன் தெரியவேண்டும்..
   அவர்களுக்கு நான் செய்வது சம்பந்தமில்லை.
   அவர்கள் எனக்கு இடைஞ்சலாகத்தான் இருப்பார்கள்.
   எனக்கு தேவையான காற்றோ அல்லது ஒளிக்கோ நான் மின் விசிறி அல்லது ட்யூப் லைட் போட்டுக்கொள்கிறேன்.

    என்னை தனியாக  விடு.. ப்ளீஸ் என்கிறார்கள்.

  இவர்கள் சிந்தனை எப்படி இருக்கக்கூடும் ?

    எல்லாம் எனக்குத் தெரியும்.  ( அல்லது )
    நான் செய்கிற காரியத்துக்கு எனக்குத் தெரிந்தது போதும்.
    எனக்குத் தெரியாதது என்று ஒன்றுமில்லை.
    எப்படியும் எனக்குத் தெரியாதது இந்த வீட்டில் இன்னொருவருக்கு தெரிந்திருக்க போவதில்லை.
    நான் ஏதும் கெடுதல் யாருக்கும் செய்யவில்லையே.. 
    என் எண்ணங்கள் எனக்கு மட்டுமே சொந்தம்.
 

    இந்த கட்டத்தில் ஒன்று சொல்லட்டுமா ?

    இது போல  நம் குடும்பங்களிலேயே ஒருவர் இருவர் தம்மையே ஒரு அறையில் அடைத்துக்கொண்டு

    யாரிடமும் பேசாமல், தான் என்ன செய்கிறோம் என்ன நினைக்கிறோம் என்பதை அவர்களைச் சார்ந்தவரே   அறியாவண்ணம் செயல்படுகிறார்கள்.
மனக்கதவை பூட்டி வைத்து தாமே கற்பித்த ஒரு இருளிலே சஞ்சரிக்கிறார்கள்.

அறை எனபதை Literal  பொருள் கொள்ளவேண்டாம்.
  A few of us keep our minds closed OR at least away from others.
Others seldom know what we feel, how we feel and why we feel about the very same things that happen within the four walls of the house in which others also live.

    குடும்பத்தில் மற்றவர்கள் துவக்கத்தில் ஏன் இப்படி இவர் இருக்கிறார் ? என்று நினைக்கிறார்கள். மனம் நொந்து போகிறார்கள். இல்லை எனச் சொல்லமுடியாது.

    சில சமயங்களில்  கேட்கவும் செய்கிறார்கள்.: என்ன ஆச்சு உனக்கு ?

    உரிய பதில் அல்லது தன்னை திருப்திப்படுத்தும் பதில் அவர்களுக்குக் கிடைக்காதபோது

    சில நாட்களில் அல்லது மாதங்களில்,

    என்னவோ, அவர் தன்  போக்குலே  இருக்கிறார்.

    என்னை அவர் பொருட்படுத்தி பேசும் பதில் சொல்லும் நிலையில் இல்லை.

    நான் எத்தனை நாட்கள் மாதங்கள் தான் அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பது?

    என்னைப் பொறுத்த அளவில் என்னால் அவருக்கு தொந்தரவு இல்லை.
    அவராலும் எனக்குத் தொந்தரவு இல்லை.

    என்னை நான் சமாளித்துக் கொள்கிறேன்.
   அவரும் தன்னை சமாளித்துக் கொள்கிறார்.

   காலம் ஓடுகிறது.   அது நிற்குமா என்ன ?

   யாருக்கு நஷ்டம் ?

   ஒருவருக்கா ? இருவருக்குமா ?

  ஜோஹரி ஜன்னல் வழியாக பார்ப்போம்
  நீங்கள் பார்ப்பது முதல் படம்.

 இது ஒரு எளிய முதல் நிலை வரை படம்.

 
 இது என்ன 4 பெட் ரூம் அபார்ட் மெண்டா ?
 இல்லை அந்தக்காலத்து ஒன்டுக்குடுத்தனமா ?

  ஆம். இல்லை .

   இரண்டும் சொன்னால் என்ன அர்த்தம்.
   ஒரு வீடு நான்கு அறைகள்.
   நீங்களோ முதல் அறை போதுமென இருப்போம் என்று முடிவெடுத்து
   அதன் ஜன்னல் கதவுகளை பூட்டி வைத்துவிட்டால் வீட்டின் மற்றவர்கள்
   என்ன செய்வார்கள் ?
   அவர்களும் அவர்களுக்கென ஒரு அறை எடுத்து அங்கே சங்கமம் ஆகி விடுவர்

   நீங்கள் நினைத்தால் எல்லோரும் எல்லா இடத்திலும் புழங்கலாம்.
  விளையாடலாம்.

   அது எப்படி. ?

**Johari region 1 is also known as the 'area of free activity'. This is the information about the person - behaviour, attitude, feelings, emotion, knowledge, experience, skills, views, etc - known by the person ('the self') and known by the group ('others').

முதல் சதுரம் :

சுதந்திர பிரதேசம்
இது உங்கள் ராஜ்ஜியம் மட்டும் அல்ல.
இங்கு இருப்பது எல்லாமே உங்களுக்கும் தெரியும்
உங்களை சார்ந்தவருக்கும் தெரியும்.
*The open free area, or 'the arena', can be seen as the space where good communications and cooperation occur, free from distractions, mistrust, confusion, conflict and misunderstanding.


இதில்உள்ளவை  மட்டும்.
உள்ளவை  என்றால் ?
நீங்கள் எந்த அளவுக்கு மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்களோ
அந்த அளவுக்கே.
என்னென்ன அவை ?

 உங்கள்
அறிவு,
ஆக்கம்,
 அனுபவம்,
 செயல் திறன்,
உணர்வுகள்
வேண்டிய வேண்டாதவை பற்றிய எண்ணங்கள்,
உங்களது நம்பிக்கைகள், உங்கள் எதிர்பார்ப்புகள். ( எதுவாக இருந்தாலும் )
சுற்றம் உற்றம் பற்றிய உங்கள் கருத்துக்கள்,
உங்கள் வெற்றிகள், தோல்விகள்

நீங்கள் பார்க்கும் தொழில்,
உங்கள் நண்பர்கள்
உங்கள் சரித்திரம்

  ( உங்களது ஆஸ்தி, சொத்துக்கள் அசைவது அசையாதது இவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இல்லை )


அப்ப எல்லாமே என்று சொல்லுங்கள்.
அப்படி நான் சொல்லவில்லை.
உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு
 ( உங்கள் மனைவி மகன்,மகள் உட்பட )
 என்ன தெரியவேண்டும் என நீங்கள் நினைத்து சொல்லி இருக்கிறீர்களோ
அவை எல்லாம்.

இப்போது,   அடுத்த சதுரம் என்ன என நோக்குமுன்,
ஒரு கேள்வி.

படிப்பவர் யாவருக்கும்
எனக்கும் சேர்த்து

எத்தனை விஷயங்களை உள்ளது உள்ளபடி
அன்றாட வாழ்க்கையின்
தோல்விகள், வெற்றிகள், சிரிப்புகள், கசப்புகள், பொறாமைகள், ஏமாற்றங்கள்,

 நாம்  மனைவியிடம் (அல்லது கணவரிடம் ) ( குடும்ப சூழ்நிலையில் )
தோழர்களிடம் ( சமூக சூழ்நிலையில் )
சக அலுவலர்களிடம் ( (அலுவலக சூழ்நிலையில் )

பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் ?

 என்னிடம் சொல்லவேண்டாம்
 பின்னூட்டமாகவும்  போடவேண்டாம்
  நீங்களே உங்களுக்கு சொல்லிக்கொள்ளுங்கள்

இதெல்லாம் அவளுக்குத் தேவையில்லை (அல்லது அவருக்கு )
இதெல்லாம் அவளுக்குப் புரியாது
அவளுக்கு புரியும்போது நானே சொல்லுவேன்
அனாவசிய குழப்பம் வேண்டாம்
ஏதாவது எனக்கு நடந்து விட்டால் பகவான் பார்த்துப்பார்.

என நினைத்தது உண்டா ?

மங்களம் 

ஒரு இரண்டு நாட்கள் யோசியுங்கள்.
பின் அடுத்த சதுரத்திற்கு செல்லலாம்

ஏன் இன்றைக்கே செல்லலாமே ? 

வேண்டாம்.

அடுத்த கட்டம்
ஆபத்தான கட்டம்.
அடுத்த கட்டத்தில்
உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத
(அல்லது ஒப்புக்கொள்ளாத ) விஷயத்தைப் பற்றி பட்டியல் பட்டியலாக
படம் பிடித்து வைத்து இருக்கிறார்கள்
உங்களிடம் சொல்லவும் துணிவில்லை 
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. 

யார் அவர்கள் ?
நீங்களே சொல்லுங்கள்
அவசர டபேல்.


Courtesy:
 References
:http://www.businessballs.com/johariwindowmodel.htm
*


Thursday, April 25, 2013

The unknown YOU in you.

உங்களுக்குள்ளே உங்களுக்கு தெரியாமல் இருக்கும் நீங்களும் உண்டு.

நீங்களே அறியாத நீங்கள் ஒன்று உங்களுள் இருக்கிறது.

அதை நீங்கள் உணர வேண்டும் எனின், தொடர்ந்து படியுங்கள்.

எனது முதல் பதிவினை முதலில் படிக்கவும்.
இந்த உளவியல் பாடங்களில் ஒவ்வொரு படியாகத்தான் செல்லவேண்டும்.

நம்மைப் பற்றிய நமது கணிப்பு ஒரு மனசாட்சியுடன் தானே செய்தோம்.
இருந்தும் மனைவியிடம் ( அல்லது கணவனிடம் ) என்னைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டபொழுது ஏன் நான் நினைத்தது சொல்லப்படவில்லை!!

ஒரு வேளை அவள் வேண்டும் எனவே சொல்லி இருப்பாளோ
இல்லை உண்மையிலேயே அவள் சொன்னது தான் சரியா ?

சொன்னது நீதானா சொல் சொல் என சண்டைக்குப் போகவேண்டாம்.

என்னதான் நாம் நம்மைப்பற்றியே அப்ஜெக்டிவ் ஆக மதிப்பு இட்டாலும் ஒவ்வொருவர் கண்ணோட்டம் சிறிதாயினும் மாறு படத்தான் செய்யும்.
 (மாடு மாதிரி உழைக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் பாஸ் நீங்கள் ஆடு போல‌    அசமஞ்சமாக இருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது அவர் தப்பாகத்தான் இருக்கும் என்று    சொல்லிவிட முடியாது.

   எந்த அளவிற்கு நீங்களும் அவரும் , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை, அது செய்யப்படும் விதம்   எடுத்துக்கொள்ப்படும் காலம், நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர்கள், இது பற்றி விவாதிக்கிறீர்கள் அல்லது   கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளுகிறீர்கள் ?)


(இதற்கு காரணம் என்ன என உடன் கேட்ட ஒரு நண்பரிடம் நான் சொல்லி இருந்தேன்.
அடுத்த எனது பதிவில் ஜோஹரி விண்டோ என்னும் ஒரு கருத்துப் படத்தை நான் விளக்க உள்ளேன். என.)

அதை விளக்குமுன் சில வார்த்தைகள்.

இந்த பகிர்ந்துகொள்வது, பகிர்வு எல்லாம் தமிழ் வலை உலகுக்கு புதிய வார்த்தைகள் அல்ல.

பல வலைகளில் பல்வேறு விதமான செய்திகள், கருத்துக்கள், இருக்கின்றன
எல்லாமே எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் நாம் நமக்குத் தெரிந்ததை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுற்று அதைத் தர முன்வரும்பொழுது அந்த கருத்தை செய்தியை உள் வாங்கிக்கொள்ள ஒரு ஆவல் இருக்கவேண்டும்

ஒரு சமயம் திருமதி துளசி கோபால் என்னிடம் பேசும்பொழுது சொன்னார்கள். ஒவ்வொரு பதிவருக்கும் ஒரு தனி வாசகர் கூட்டம் இருக்கிறது என. எத்துணை உண்மை. 

இருந்தாலும் ஒரு வலைப்பதிவர்  பக்கத்திலே 4000 தொடர்பவர்கள் இருந்தாலும் அவர்களில் ஒரு 40 முதல் 100 நபர்கள் தான் அவற்றினை படிக்கின்றனர் அவர்களில் ஒரு 10 நபர்கள் தான் முழுவதும் படித்துவிட்டு பின்னூட்டம் போடுகின்றனர்   ஆஜர் கொடுத்துவிட்டு செல்லும் வாசகர்களும் இல்லாமல் இல்லை.

இது ஏன் ?   இந்த சூழ்நிலை வலைகளில் மட்டும் அல்ல.

குடும்பங்களிலும் அலுவலகங்களிலும், சமூக சிந்தனை கூடங்களிலுமே
ஏற்படுகிறது    மிகச்சிறந்த கருத்தினை மிகவும் கஷ்டப்பட்டு தொகுத்து தயாரித்து தருகிறீர்கள்.  ஆனால் அதை உள்வாங்கிகொள்ள முன் வருபவர் மிகக்குறைவு.

காரணம். முதற்கண் நேரம் இல்லை என்பர்  இரண்டாவது எனக்கு இது இப்போது தேவை இல்லை என்பர்.  இதெல்லாம் விட முக்கியமானது, எனக்குத் தெரியாத எதை இங்கு நான் கற்றுக்கொள்ளபோகிறேன் என்ற மன நிலை தான்.

இந்த மன நிலை ஒழிந்து எவரிடமும் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறது என்ற எண்ணங்கள் நம் மனதிலே உண்டானால் அன்று முதல் நாம் கற்கும் சூழ்நிலைக்குச் செல்கிறோம்.

பல தடவைகள், குடும்பங்களிலே ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒன்றாக சத்தமாக பேசிக்கொண்டிருப்பார்  ஒருவர் பேசுவதை அடுத்தவர் கேளாமலே, இவர் என்ன கேட்பார் என்று ஊகித்து ( அனேகமாக தவறுதலாக ) அதற்கான பதிலை அவரும் இறைந்து சொல்லிக்கொண்டு இருப்பார்

விளைவு...குழப்பமே

வீடுகளில் சுமூகமான நிலை உருவாக விரும்பினால் இந்த குழப்பத்தில்  இருந்து விடுபடவேண்டும். எல்லா விஷயங்களையும் உங்களுடன் அன்றாடும் உறவாடுவருடன் உண்மையான  பகிர்தல் அவசியம்.
.
பகிர்தலில் முதல் செயல் ஆக்டிவ் லிசனிங்.  கவனிப்புடன் உன்னிப்புடன் கேட்டல். இரண்டு நபர்கள். ஒருவர் கணவர் மற்றவர் மனைவி. அல்லது இரண்டு சகோதரர்கள். அல்லது இரண்டு தோழர்கள். அல்லது இரண்டு அலுவலர்கள். ஒருவர் பேசுகையில் மற்றவர் அதைக் கூர்ந்து கவனித்தல் அவசியம்.

பதிவை படிக்காமலே இறுதியில் அருமை என்ற சொல்லை கட் அண்ட் பேஸ்ட் செய்வது போல் அல்ல இது. 

ஜோஹரி ஜன்னல் பற்றி சொல்வதற்கு முன்  நன்றாக புரிந்துகொள்தல் அவசியம்.  உங்களால் திறந்த மனதுடன்  உங்கள் சுற்றம் உற்றம் ஆகியவருடன் பேசுகிறீர்களா?  இல்லை உங்களிடம் எப்பவுமே ஒரு மறைத்து வைக்கப்பட்ட லிஸ்ட் இருக்கிறதா !!

இன்னொரு கோணத்தில்,
நம்மிடம் எத்தனையோ விஷயங்கள் இருந்தாலும் அவை யாரிடம் சொல்கிறோமோ அவருக்கு பயன் அளிக்கும் வகையில் இருந்தால் மட்டும் போதாது, அவரும் தனக்கும் பயன் அளிக்கும் என்று முன் வந்து நாம் பேசுவதை பகிர்வதை கவனித்து கேட்கவேண்டும்.

இது தான் உண்மையான பகிர்தல்.

ஒரு கதை. இல்லை உண்மையில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு இருபது வருடத்திற்கு முன் என நினைக்கின்றேன்

     ஒரு முக்கியமான செய்தி என நான் நினைத்து என் குழந்தைகளிடம் சொல்ல என் மூத்த மகனைக் கூப்பிட்டேன்.

    ஒரு முக்கியமான செய்தி என சத்தமாக சொன்னேன் அவன் தூரத்தில் இருந்தபடியே , அப்பா, எனக்கு கல்லூரிக்கு நேரமாகி விட்டது. எதுவாக இருந்தாலும் தங்கச்சியிடம் சொல்லுங்கள் நான் மாலையில் வந்து அவளிடம் தெரிந்து கொள்கிறேன் என்று பணிவாக சொல்லிவிட்டு விரைந்தான்.

   சரி என நினைத்து என் மகளைக் கூப்பிட்டேன். அவளோ பிளஸ் டூ மார்ச் மாத ரிவிஷன் என்று பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருந்தாள் .

   அவளோ, அப்பா, நீ சொல்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் , ஆனால் எனக்கு இப்பொழுது டயம் இல்லை.  ஒண்ணு செய். அம்மாவிடம் சொல்லிவிட்டு செல். நான் மாலை 4 மணிக்கு வந்து அம்மாவிடம் கேட்டு கொள்கிறேன் என்று என் பதிலையும் கேளாது செல்லும் நேரத்தில்....

    சமையலறை இருந்து ஒரு சத்தம் கேட்டது. ..

    " முப்பது வருசமா இவரு சொல்லாத சங்கதியா இப்ப சொல்லப்போறாரு.
நான் தான் கிடைச்சேனா.."

    LESSON OF THE STORY:
   EVEN IF YOU HAVE PRECIOUS THINGS TO OFFER, THERE SHOULD BE ENOUGH CURIOSITY AND INQUISITIVENESS ON THE PART OF THE PEOPLE TO RECEIVE THE SAME.
 AS OTHERWISE WHATEVER U HAVE IS JUST WASTEFUL.

இப்பொழுது ஜோஹரி ஜன்னல் என்றால் என்ன என்று
அடுத்த பதிவில்
பார்ப்போம்.

படத்தை மட்டும் பாருங்கள். விளக்கம் பின்னாடி தருகிறேன்.


அடுத்த பதிவில் இதன் விளக்கம்.


















Monday, April 22, 2013

இது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு உளவியல் பரீட்சை.



அண்மையிலே நான் எழுதிய ஒரு பதிவுக்கு பின்னூட்டம் அளித்த ஒருவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற ஜே.கே.யை நினைவுபடுத்தி இருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் புதிதென பிறந்தோம் என்ற நினைப்பில் எல்லாவற்றையும் பழைய சிந்தனைகள், பழைய அனுபவங்கள் அடிப்படையில் அணுக வேண்டாம், புதிதாக பாருங்கள் என்பார் ஜே.கே.

நமது அன்றாட வாழ்வின் பிரச்னைகளுக்கெல்லாம் காரணமே நாம் நமக்கென ஒரு விதி முறைகளை அமைத்துக்கொண்டு அந்த விதி முறைகளை நமது சுற்றம் உற்றம் எல்லோருமே வழி நடக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த எதிர்பார்த்தல் சில சமயங்களில் நியாயமானதாக இருந்தாலும், இந்த விதி முறைகளை அவர்களைக் கேட்டுக்கொண்டு அவர்கள் ஒப்புதல் பெற்ற பிறகு நாம் இடுவதில்லை.

பல நேரங்களில் என்ன விதிகள் நாம் இட்டு இருக்கிறோம் என்றே அவர்களிடம் நாம் சொல்லி இருக்கமாட்டோம் .

இது ஒரு RED TRIANGLE ,  இதை முதலில் வர்ணித்தவர் பால் சின்றல் எனும் உளவியல் ஆராய்ச்சியாளர்.

நீங்கள் வழக்கமாக பார்த்த சிகப்பு முக்கோணம் அல்ல இது.

இங்கே

R STANDS FOR RULES.
E STANDS FOR EXPECTATIONS.
D STANDS FOR DEMANDS.

To read more on EXPECTANCY VIOLATIONS THEORY, CLICK HERE.)

இந்த முக்கோணத்துக்குள் தான் உங்களை சுற்றி உள்ளவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பதால் தான் எல்லாத் தொல்லையுமே.
உங்கள் எதிர்பார்ப்பு வளையத்திற்குள் உங்களைச் சேர்ந்தவர் அல்லது சார்ந்தவர் இல்லை என்றால் நீங்கள் நிலை குலைந்து அமைதி இழந்து விடுகிறீர்கள்.

என்ன தீர்வு ?


நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஆட்சேபனை இல்லை.

ஆனால், உங்களது மனைவி ( அல்லது கணவன் ) மகன் மகள் எல்லோருமே நீங்கள் விதித்த வட்டத்துக்குள் வந்துவிடவேண்டும் என நினைப்பது எல்லா மன உளைச்சலுக்குமே அடிவாரம்.

அதனால் அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.

ஒருவரிடம் ஒரு குறை இருப்பதாக நீங்கள் கண்டாலும் அந்தக்குறையுடன்
அவர்களிடம் நீங்கள் அன்பு செலுத்த இயலுமா ?

HUMAN RELATIONS எனும் பாடத்தில் முதல் அத்தியாயம் இதுவே

அடுத்து,  ஒரு விளையாட்டு.
LEARNING WHILE PLAYING.

உங்கள் மனதிலே உங்கள் மனைவியைப்பற்றி ஒரு இமேஜ் இருக்கக்கூடும்.
அந்த இமேஜ் என்ன ?  அதை ஒரு விலங்காகவோ அல்லது பறவையாகவோ
உங்களால் சித்தரிக்க இயலுமா >

உதாரணமாக எனது மதிப்புக்குரிய வலை நண்பர் ஒருவர் தமது கணவரை சிங்கம் எனச் சொல்லுகிறார் வர்ணிக்கிறார்

சிங்கம் என்று சொன்னால் நமக்கு என்ன தோன்றுகிறது ?  உங்களுக்கே தெரியும். நான் சொல்லத் தேவையில்லை.

இது போல நீங்களும் உங்கள் மனைவியைப் பற்றி அல்லது கணவரைப் பற்றி
ஒரு கணிப்பு மனதில் வைத்து இருப்பீர்கள்.

கணிப்பிலே ஒற்றுமை அல்லது தெளிவு.
( Unity or Clarity in our Assessment)

இப்பொழுது தேர்வில் முதல் படிக்கு செல்வோம்.

  உங்களைப்பற்றியே உங்கள் மனதில் ஒரு கணிப்பு இருக்கும்.

    அது என்ன ?

அதை எனக்கு சொல்லவேண்டாம் மனதிருக்குள்ளே கொண்டு வாருங்கள்.

அது எந்த மிருகமாகவும் இருக்கலாம் அல்லது எந்த பறவையாகவும் இருக்கலாம்.

அடுத்த ஸ்டெப்

உங்கள் கணவரிடமோ ( அல்லது மனைவியிடமோ) இதே கேள்வியைக் கேட்டால் அவர்கள் உங்களைப் பற்றி என்ன இமேஜ் கணிப்பு தருவார்கள்?

அதாவது அவர்களது உங்களைப்பற்றிய கணிப்பு என்ன?

அதையும் குறித்து கொள்ளுங்கள்.

இந்த இரண்டு கணிப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைகின்றனவா ?
என்று பாருங்கள்.

மூன்றாவது ஸ்டெப்

உங்கள் மனைவியிடமே (அல்லது கணவரிடமே) சென்று இதே கேள்வியைக்
கேளுங்கள்.

அவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று.

இப்பொழுது மூன்றையும் பொறுமையாக பாருங்கள்.

இவை ஒன்றா ? வித்தியாசமா ?
வேறு படுகின்றது என்றால் ஏன் ?

இது நீங்கள் உங்களுக்காகவே நடத்தும் ஒரு பரீட்சை. 
பாஸ் பைல் என்று எதுவும் கிடையாது. 
ஆக தைரியமாக வினாவுக்கு விடை எழுதுங்கள். 
எனக்கு  விடை  தரவேண்டாம். 
உங்களுக்கே நீங்கள் தாருங்கள். 

BETTER HUMAN RELATIONS.க்கு முதல் படி இதுவே 

இப்போது துவங்குங்கள் உங்கள் ரங்கமணி ( தங்கமணி) உடன்  
இந்த விளையாட்டினை. 

*******************************************************************

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு
நான் நடத்திய வகுப்புகளில் தெளிவானது :LATER DOCUMENTED ALSO.

கணவன் மனைவி நாற்பது வயது வரை  வெவ்வேறு மன நிலைகளில் இருந்தாலும்

சிறிது சிறிதாக ,
கணவன்மார்  மனைவி போல் நினைக்கத் துவங்குகிறார்
மனைவிமார்  கணவன் போல் நினைக்கத் துவங்குகிறார்.


***********************************************************************

பின் குறிப்பு:

நான் என்னை ஆடு என நினைத்து இருந்தேன். 
என் மனைவியிடம் நான் என்ன ?.

எனகேட்டேன். 

அணில் என்றாள் 

***********************************************************************

இது PERCEPTIONS என்னும் வரிசையில் வரும் பாடம்.

What U feel about yourself ?  This is your perception of yourself.
What U feel your wife (or husband) feels about U ? This is what u feel his/her perception about U
What your wife ( or husband) feels about U ? ( This must be the his/her answer not yours)

How close are the answers to one another lies the route to your life at home.

If at home, U want to be at Home,
please do this exercise honestly.
One more thing to be borne in your mind.
You must request your wife (or husband) to answer the question spontaneously
without deliberating on the question for more than 15 seconds.

WHY IS IT OUR PERCEPTION OF OURSELVES DIFFER FROM 
OTHERS' PERCEPTION ABOUT US?
THIS PERCEPTION ABOUT U DOES NOT DIFFER IN SOCIAL CIRCLES ALONE,
IT DIFFERS IN DOMESTIC FRONT ALSO.
WHY AT ALL THIS HAPPENS?
LET US  DISCUSS IN OUR NEXT LESSON.
IN 
THE PRINCIPLE OF JOHARI WINDOW.

Sunday, April 21, 2013

எல்லாமே க்ருஷண மயம்.

இது ஒரு சீரியஸ் பதிவு.
இந்த பெரிசு என்ன இதெல்லாம் எழுதுது என்ன நினைக்க வேண்டா





இது அந்த கோபிகா ஸ்த்ரீகள் க்ருஷ்ணனின் மேல் கொண்ட காதல்.










இது மீரா அந்தக் கன்னையன்
கான்ஹா விடம் கொண்ட ப்ரேம்
பிரேமை.








இது     உண்மையிலே ஆண்டாள் புவியிலே மனுஷ்ய ஜன்மம் எடுத்து அரங்கனை அடைந்த  புனிதம்.










இந்த மூன்றுமே அமானுஷ்யம்.   தைவீகம்.

அப்படித்தான் அதை மனசுலே வாங்கிக்கணும்.

கோபியருக்கு கிருஷ்ண  கான்ஹா மேல் ,மீராவுக்கு  க்ருஷ்ணன் மேல், ஆண்டாளுக்கு  அரங்கன் மேல் ஏற்பட்ட பந்தத்தை, பாசத்தை, ப்ரேமையை    மனசிலே படம் பிடிக்கணும்.

    நமது தற்கால நெறிகள், சமூக வரம்புகள், தனிப்பட்ட மன நிலைகளுக்கு ஏற்ப இவர்களை நாம் ஒப்பிட்டு     எடை போடுவது சரியாகாது

    கோபிகைகள் எல்லோருமே தன்னை மறந்து நந்தகோபன் வனத்திலே கண்ணனின் குழலிசையில    மயங்கிக் கிடக்கின்றனர்.   ஒருவர் மேல் ஒருவருக்கு பொறாமை இல்லை.  எல்லோருமே கண்ணனுக்கு
 சொந்தம்.  கண்ணன் எல்லோருக்குமே காந்தன். கண்ணானவன். அதனால் கண்ணன்.

    அந்தக் கண்ணன் கண்முன்னே இல்லை.மறைந்திடுனும் அவன் குரல் என் மனதிலே ஒலித்துக்கொண்டே தானே இருக்கிறது என்கிறாள் கோபி ஒருவள்.  இன்னொருவளோ  எந்தக்குழலை எடுத்து ஊதத் துவங்கினாலும் அதில்
கண்ணன் குரல் தானே கேட்கிறது.. என்பாள்.       இல்லைடி, அவன் என்னைத் தான் ராதே ராதே என்று   அல்லும் பகலுமா சொல்லுகிறான்.  அவன் சொல்வதைத் தான் இந்த நந்தவனமும் இதில் பரவசமாகிப்   பாடும் குயில்களெல்லாம் சொல்லுகின்றன.   மாடுகளும் நாலு குடம் கூட பால் தருகின்றன என்பார் கண்ணதாசன்

   கண்ணனைத் தவிர வேறு எங்கிலும் எம் மனம் நாடவில்லை.  நாடாது.  என்கிறார்கள் கோபியர்கள். ஒன்றல்ல.    இரண்டல்ல. கோகுலத்தைச் சார்ந்த எல்லா கோபிகைகளுமே.

   அந்த மாயக்கண்ணன் அப்படி எல்லாரையுமே மயக்கிவிட்டான்.  இந்த மயக்கம் என்ன ?

  அன்பா, வாத்ஸல்யமா, நட்பா, காதலா, ப்ரேமையா, அந்த ப்ரேமையிலே உதிக்கும் மயக்கமா  மயக்கம் தெளியாத நிலையில் மனதில் உருவாகும் காமமா இல்லை காமம் அவிந்த நிலையில்    மனதில் உருவாகும் தெய்வீகமா, ......

    கண்கள் உருகும் நிலை.  நெஞ்சு விம்மும் நிலை.  குரல் படபடக்கும் நிலை.

    எல்லாமே அவர்களுக்கு கண்ணன் கண்ணன் கண்ணன்.

    கண்ணனைத் தவிர வேறு எதுவுமே கண்ணில் படவில்லை. இதயத்தைத் தொடவில்லை.     நெஞ்சிலும் வேறு ஏதும் இல்லை.

    எங்கும் எதிலும் எப்பொழுதும் கண்ணன், கண்ணன்.

    இது மானிடக்காதல் அல்ல..அல்ல... அல்ல... என்று ஒரு குரல் நினைவுக்கு வருகிறதா....

    இதில் ஒரு அமானுஷ்யம். தெய்வீகம்.  அந்த அன்பு ஆத்மார்த்தம்  தான் எனும் நிலையை துறந்து தானே கண்ணனாக பாவிக்கும் நிலை ஒன்று . கண்ணனோடு கண்ணனாக இணையும் நிலை இன்னொன்று

   சாதாரண மனிதர்களுக்கு இது புரியாது.  புரிந்தால் அவர்கள் தேவர்கள் ஆகிவிடுவர்.

   இது ஆண் பெண் உடல் உறவு சம்பந்தப்பட்டதல்ல.  சொல்லப்போனால் அவர்களது ஆத்மா.   இது உறவு என்று சொன்னால் அது  உடலை  மறந்த உறவு..

   கண்ணனும் லட்சோப லட்சம் ராதை (களும்) ஐக்கியம். கோபிகாதீ ஸ்மரணம் ஜே ஜே பாண்டு ரங்கா என்று பண்டரிபுரத்தில்அபங்கம் பாடும் பெண்டிர் , ராதே ராதே என்று ராதா கல்யாண நிகழ்ச்சியிலே நடனங்கள் ...
சர்வம் கிருஷ்ண மயம்   ஆகவே மாயம்.
கண்ணன் காதலன் கண்ணன் என் தோழன் கண்ணன் என் குரு

அண்மையில்  நடந்த ராதா கல்யாண நிகழ்ச்சியில் ஒரு நடனம் .



SRI DEVI NRITHYALAYA...RADHA KALYANAM 2013...
CONCEPT: KANNAN EN KAADHALAN.
(really amazing. Transports us all to the Seventh Heaven of Joy and Immortal Bliss.)

ராதே ராதே என கண்ணனும் ஏங்குகிறான். இழைகிறான் .

   இந்த உறவினை நாம் போற்றத்தானே செய்கிறோம்.    காலம் காலமாக பாடுகிறோம். தெய்வீக அவைகளிலே மனமுருகப்பாடி ஆடி மன மகிழ்கிறோம்.    

   கிருஷ்ண பிரேமைக்கு ஒரு எல்லை உண்டோ?
***********************************************************************

((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(
     ,

    எல்லாமே க்ருஷண மயம். 

((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(


   ,
பின் குறிப்பு 

   அன்று விஜய் டி.வி. பார்த்தபொழுதும்  இது தான் தோன்றியது.  ஒரு தனி நபர் இத்தனை உள்ளங்களை    தன் பால் இழுத்து நிறுத்தி வைக்க இயலும் என்றால்.....

    காந்தம் கவர்ச்சி திறன் சக்தி ஆற்றல் சொல்வன்மை பொருட்சுவை எல்லாவற்றையும   இணைத்து எல்லாவற்றையும் கடந்து ஒரு திறன் உங்களிடமிருக்கிறது.  இது உண்மை.


   யூ ஆர் ரியலி க்ரேட். 
((((((((()()())()()())()()()()()())())())))()()*()()()()()()(()()()()()(()()(

   
     ,

   

Saturday, April 20, 2013

என்னவன் என் இனியவன்




Sajan Sang Kaahe Neha Lagaaye

-Main Nashe Men Hoon

Music director: SHANKAR JAI KISHAN.
SINGER; LATHA MANGESHKAR.





என்னவன் என் இனியவன்
அவனுடன் உறவாடிய 
நாளும் இனி என்று வரும் ?

என் இனிய உறவும்  என்று மலரும் ?

அவனை நினைந்து உருகும் வேளையிலே
அவனி புன்னகைக்கிறதே.

என் இதயத்தில் பல வர்ணங்கள் பூசி
கிள்ளியதில் அவன் கில்லாடி ஆனான்
கண்ணனே அவன் என நம்பவும்  வைத்தான்.

 சொல்லாலே எனை சொந்தமாக்கி.
 பதில் சொல்வதற்குள் எனை சிறை வைத்தான்.

சகி...கேள்  கேள்

எத்தனை தான் கெஞ்சல் கொஞ்சல்
அத்தனை.. யும்  வெறும்   சொல்தானா?

என்னவன் என் இனியவன்
அவனுடன் உறவாடிய 
நாளும் இனி என்று வரும் ?
 
***********************************************************************
original song transliterated in English.

Sajan sang kaahe nehaa lagaaye
nehaa lagaaye
ke ham pachhtaaye
aur jahaan muskuraaye
jahaan muskuraaye
sajan sang kaahe neha lagaaye

natkhat rangeela aisaa
laage Kanhaiyya jaisa
batiyon se apna karle
man ko rijhaaye aisa
aji ho ho
kina manaaya
kitna manaaya na maane batiyaan batiyaan ho
sajan sang kaahe neha lagaaye
neha lagaaye
ke ham pachhtaaye
aur jahaan muskuraaye
jahaan muskuraaye
sajan sang kaahe nehaa lagaaye
******************************************************************************
எனது இன்னொரு உருது இந்தி பாடல் கஜல்கள் கவிதைகள் இந்த வலையில் உள்ளன 
www.sachboloyaar.blogspot.com

Friday, April 19, 2013

இன்னிக்கு ஒரே ரசம்


     இந்த +Geetha Sambasivam கீதா மேடம் அது இது எது அப்படின்னு VIJAYA  வருஷ பிறப்புக்கு வித விதமா செஞ்சு அப்படியே அசத்தறதைப் பாத்தப்பறம் ....

     இன்னிக்கு காலைலே எங்க ஊட்டுக்கிழத்தைக் கிழவி...கிழவி... எனக் கூவினேன் ( KOOVI AZHAITHAAL KURAL KODUPAAN )

     " பெரிய குமரன் இவரு... என்னைக் கிழவின்னு நாலு வூடு கேட்கறாமாதிரிலே கூப்பிடராரு.."  என்று

    முணுமுணுத்தவாறெ அந்தக்காலத்து என்னோட் கனவுக்கன்னி, மத்யம காலத்துலே பார்யாள்  ,  இப்ப கிழவி..

    என்முன்னே ப்ரசன்னமானாள்.

     அடியே...  என்றேன்.

     என்ன அடியே......

     ரசத்திலே எத்தனை தினுசு இருக்கு தெரியுமா ?

     தெரியும் ஆனா தெரியாது.

     அது என்ன அப்படி சொல்றே ?

     தெரியும் அப்படின்னு சொன்னா என்ன தெரியும் அப்படின்னு கேட்பீங்க..
     தெரியாது அப்படின்னு சொன்னா ஏதோ உங்களுக்குத் தெரியும்னு
     நினைச்சுண்டு தெரியாததெல்லாம் தெரிஞ்சது போல பில்ட் அப் விடுவீங்க...

     அப்ப உனக்குத் தெரியும்னு சொல்லு...

     என்ன சொல்லணும்..?

     ரசத்திலே எத்தனை தினுசு இருக்கு ?

     நீங்களே சொல்லுங்க... இத்தனை வருசமா சாப்பிட்டது நினைவு இல்லையா என்ன ?

     இருக்கே... அதானே உபத்திரவமே...

     என்ன நான் செஞ்சது உபத்திரவமா போயிடுத்தா...

     அதுக்கில்லடி...  நீ செஞ்சது நினைவுக்கு வந்து திரும்பவும் திரும்பவும்
     அந்த ரசத்தை தா தா தா அப்படின்னு கெஞ்சறது

     என்ன ரசம் அப்படி கெஞ்சறது...

     ஒண்ணா ரண்டா...

     சொல்ல ஆரம்பிங்க...

      மிளகு ரசம்,
      ஜீரக ரசம்.
      பருப்பு ரசம்.
      ஓம வல்லி ரசம்.
      தக்காளி ரசம்.
      எலுமிச்சை ரசம்.
      இஞ்சி பூண்டு ரசம்.
      பன்னீர் ரசம், பதனீர் ரசம், இப்படி பல விதமா இருக்கே...

          இன்னிக்கு ஒரே ரசம் தான்...
     நம்ம வூட்டிலே மட்டுமல்ல.  எல்லா வீட்டுலேயும்..

     அது என்ன விசேஷம் இன்னிக்கு அப்படி ஒரே ரசம் ஆல் வீட்டுலேயேயும்....

     பிபரே ராம ரசம்......      Drink Rama Rasam.....

  இந்த ரசத்தை முதல்லே மனசுலே நினைச்சுக்கங்க...
லலிதா மேடம் இரண்டு நாள் முன்னாடியே பிபரே ராம ரசத்தை மொழி பெயர்த்து உங்களை பாடச் சொன்னாங்களே நினைவில்லையா !!

     ஆஹா..  இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி ஆச்செ....

     ராமா  என்ற வார்த்தைக்கு உண்டான மகிமையே என்ன என்ன என்ன....
                            ( கே.பி.சுந்தராம்பாள் மாதிரி ..பாடலாமே)


www.mykolam.blogspot.in
Courtesy: 





     அத ஒரு தரம் ராமா அப்படின்னு சொன்னா நூறு தரம் சொன்னா மாதிரி

pibere rama rasam

http://youtu.be/OPKaQcvCM1o?t=26s






சதாசிவ பிருமேந்திரர்.இயற்றிய இந்தக்கவிதையை ஒரு சிறுவன் என்ன அழகாக பாடுகிறான் கேளுங்கள் .  ராகம் ஆஹிர் பைரவி.

pallavi
pibarE rAmarasam rasanE pibrE rAmarasam
caraNam 1
dUrIkrta pAtaka samsargam pUrita nAnAvidha phalavargam
caraNam 2
janana maraNa bhaya shOka vidUram sakala shAstra nigamAgama sAram
caraam 3
paripAlita sarasija garbhANDam parama pavitri krta pASANDam
caraNam 4
shuddha paramahamsAshrama gItam shuka shaunaka kaushika mukha pItam

அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம்


தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம்
பூரித நானாவித பல வர்க்கம்


புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.

 ஜனனமரணபய சோக விதூரம்
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம்


பிறவிமரணபயம்  மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.

 பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம்
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம்.
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் .

 சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம்
சுக சௌனக  கெளசிக முக பீதம்

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் .

Ramaaya Rama bhadraaya Rama chandraaya Vedase.
Raghunaathaaya Nathaaya Seethaaya Pathaye namaha...

TODAY IS RAMA NAVAMI.
EVERYONE OF MY READERS ARE ADVISED TO CLICK RAMA NAMA ABOVE
POSITIVELY , I SAY POSITIVELY,
AND LISTEN TO
LORD RAMA'S STORY.
AS TOLD BY MADAM +Shylaja Narayan

RAMA RAKSHA STOTRAM BY S.P.BALASUBRAMANIAN.


ஸ்ரீ ராமரை தரிசனம் செயதவர்கள் அனைவருக்கும் பிரசாதம் 
பாயசம் கிடைக்கும் இடம் 
மேலே க்ளிகினால் ஆஞ்சநேயர் வந்து உங்களை அழைச்சுண்டு போவார் 

Thursday, April 18, 2013

Maalakhamar vannu poo-Makane Ninakku Vendi



Courtesy: youtube
Thank U Madam +Sunitha Nair for posting a wonderful song from P.Suseela.

 “MAALAKHAMAR VANNU POOVIDARTHUNNANU…”

Film : Makhane Ninakkuvendi
Lyrics: Vayalar
Music :G.Devarajan
Singer: P.Susheela

இவிட ஒரு சுந்தர கானம் கேட்டோ +Tulsi Gopal

வானத்து  தேவதைகள் வண்ண மலர் பூக்களுடன்
புன்னகைத்தே  உன் அருகில் கானம் பாடுவார் 
 ... மகனே 

என் இதயம்  தேனாக தித்திக்கும் அமுதமாக   
 என்றென்றும் காத்திருக்கும் உந்தன்  வழியே....  மகனே.

புன்னகையும் முத்தங்கள் கணக்கில்லை  
என் முகத்தை நீ கொஞ்சம் பாரடா மகனே...


அகலிலே தீபம் கொண்டு  
அருகினில் உந்தன்   அன்னை
அமர்ந்திருக்கும் காட்சி அதை 
கண்டு களிடா . மகனே..

உனக்காக
நீரோடும் என் விழிகள் ஆறாக பெ காத்திருக்கும் 
காட்சி பாரடா. ..
 ருகி நின்று 

நீயே என் எல்லாம் என நினைப்பதைப் பார்.

நீ பிறந்திட்ட நேரமுதல் நான் உண்ட  
தீ தனை என்று வருவாய் நீ என்று அணைப்பாய் . 

மௌனமாய் முள்ளில் ஒரு 
மகுடம் கொண்டேன் . 

அது உனக்காகவே என அணிந்து 
வாழத் துடித்தேன் 
உனக்காக வாழத் துடித்தேன். 
... மகனே 



Malakhamar vannu poovidartthunnathu
Mninikuvendi
akhane ... Manassil snehamam sudha niraykunnathu
Makhane ... ninaku vendi (malakhamar...)
Mandhasmithathile chumbanam chorinjathu
Makhane ... ninaku vendi
Amma mezhuku vilakkumayi kathirikkunnathu
Makhane ... ninakuvendi (malakhamar...)
Mizhikal bashpathadakangalayathu
Makhane ... ninakuvendi
Amma prasavichanalmuthal thee thinnunnathu
Makhane ninakuvendi (malakhamar...)
Mookhadhakangale mulmudiyanjathu
Makhane ... ninakuvendi
Amma marikkathirikkan aagrahikkunnathu
Makhane... ninakkuvendi (malakhamar)


…………………………………………………………………………………………….

……………………………………………………………………………………………..

Wednesday, April 17, 2013

என் உருவம் உனது கண்கள்


மேரி சூரத் தேரி ஆன்கேன்.

என் உருவம் உனது கண்கள்

 என்ற   சோக காவியம் ஒன்று திரை வானில் 1963 ல் வந்தது. .   ஷைலேந்திரா பாடல்கள் எல்லாமே..   ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கும்    எஸ்.டி. பர்மன் இசை

   ஒரு பாடல் மன்னா டே பாடியது.

   இந்த பாடல் ஹிந்துஸ்தானி க்ளாசிகல் ராகம் ஆஹிரி யின் அடிப்படையில் அமைந்திருந்தது.

   அற்புதமாக பாடியிருந்தார் மன்னா டே அவர்கள்.
 
   திருச்சி கெயிட்டி தியேட்டரில் நான் பார்த்த படம்.
   நடு இரவு. நிசப்தம்.
   மன்னா டே யின் குரல்.

   நீங்களும் கேளுங்கள்.

   இதன் தமிழாக்கம் தந்திருக்கிறேன்.



pocho na maine kaise rain bitaaye


poochho na kaise maine rain bitai
ik pal jaise, ik yug beeta
yug beete mohe neend na aai
poochho na kaise maine rain bitai…

எப்படி இரவெலாம் கழித்தாய் என்றே
இப்போதென்னை கேட்டுவிடாதே

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகம் போல்
ஓடியது யுகமே..உறங்கினேன் அல்லேன்.


a kaheen chanda na kaheen tare
jot ke pyase mere nain bichare
bhor bhee aas kee kiran na lai
poochho na kaise maine rain bitai…

நிலவும் இல்லை  விண்மீனும் இல்லை
ஏங்கிய  என் கண்களுக்கு
ஒளி ஏதும் வானில் இல்லை.


விடியல் வரும் ஓளியும் வருமென
காலை வரும் வரை உறங்காதிருந்தேன்.
கதிரவன் வந்தான் ஒளியிலாமலே


it jale deepak ut man mora
fir bhee na jaye mere ghar ka andhera
tadpat tarsat umar ganwai
poochho na kaise maine rain bitai…

இங்கு அகல் எரியும்  என்னுள்ளே  மனம் எரியும்.
இருந்தும் இருட்டே என்னுடன் இணைந்தே இருக்கும்  .
ஏங்கியும் தவித்தும் என் பருவத்தைக்   கழித்தேன்.
தூங்கினாயா என எனைக்கேட்டுவிடாதே...



(Song from Hindi film ‘Meri Surat Teri Aan
raag ahiri
manna dey
SD burman shailendra
meri surat teri aankein. 1963
poochho na kaise maine rain bitai
ik pal jaise, ik yug beeta
yug beete mohe neend na aai
poochho na kaise maine rain bitai…



(Song from Hindi film ‘Meri Surat Teri Aankhe’ ….
. Singer – Manna De ….
. Musice Director – S.D. Burman)

Monday, April 15, 2013

என் கண்களுடன் கலந்தானடி.


shyaam se nain mila aayi


ராஜ நர்த்தகி என்னும் இந்த படம் 1941 ல் வெளியானது.

வங்காள, ஹிந்தி, ஆங்கில மொழிகளிலே திரை உலக முன்னோடிகளான வாடியா மூவி டோன்ஸ் தயாரித்தது ஆகும்

ஆங்கில மொழியில் இந்தியர் தயாரித்த  இந்தியர்கள் நடித்த முதல் படமும் இதுவே

ஆங்கிலத்தில் வசனம் இருந்தாலும் பாடல்கள் மட்டும் இந்தியில் இருந்தன என்பதும் சுவையான தகவல்

இந்த படத்தின் தயாரிப்பாளர் மது போஸ் . டைரக்டரின் மனைவி சாதனா போஸ் அவர்கள் தர்பாரில் நடனம் ஆடும் பெண் இந்திராணி ஆக நடித்து உள்ளார் ப்ரித்வி ராஜ் கபூர் இந்த அளவுக்கு ஒல்லியாக இருந்தாரா என்ற அதிசயத்துடன் இதை பார்க்கலாம் 
பாடலைப் பாடியது சுப்ரபா பண்டிட்  . இயற்றியது பண்டிட் இந்த்ரா சந்த்ரா. இசை அமைத்தது திமிர் பாரன். 
இந்தப் பாடல் மொழி பிரிஜ் பாஷா .மேற்கு உத்தர பிரதேசத்தில் அக்காலத்தில் பேசப்பட்ட மொழி.  
பாடும் விதமோ மெட்டோ வங்காளி. 
உடையோ மணிபுரி. 
இந்த பாடல் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் 
யுத்த காலத்தில் வந்த இந்த படத்தை பார்க்க ஆயிரகணக்கான மக்கள்  குவிந்தனர். 1960லே பிரசித்தமான நடிகை சாதனா இந்தப் படத்தின் ஹீரோயின் பெயரை கொண்டார் 
( ஒரு உபரி தகவல். அந்தக்காலத்திலே சினிமா படங்களில் வரும் நாயகியின் பெயரைத் தான் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு வைத்தனர்  எனது சஹ தர்மிணியும் இதற்கு விதி விலக்கு அல்ல. 1942 ல் மேனகா படம் வந்தது. தமிழ் நாட்டில். அப்போது பிறந்து பெயர் மேனகா என செல்லமாக அழைக்கப்பட்ட பெண் மகவுகளில் எங்க ஊட்டுக்கிளவியும் ஒன்னாம். )





ஷ்யாம் சே நைன் மிலாயி. ..

வருவது பின்னே பாடலின்  தமிழாக்கம்( நாட் லிடரல் )  

 நீல நிறக்கண்ணன் அவன் சியாம வர்ணன் 
அவன் கண்ணோடு நான் கண்ணிமைக்க காரிருளில் வந்தேனடி தோழி. 
உன் சித்தத்தை நான்  அறிவேன். 
உன் சிந்தனையையும் அறிவேன்.
உன் சமத்தையும்  அறிவேன்.... நானோ 
ச்யாமுடன் கண்  கலக்க வந்தேனடி  தோழி.


யமுனை கரையினிலே  
 அமர்ந்தேன் அவன்  நினைவினிலே 
      மாலை நேரத்திலே  தென்றல் காற்றினிலே 
      
      மண் பானை .ஒன்றெடுத்தேன் 
      நீரினிலே மொண்டெடுத்தேன் - அதில்
      நீலவண்ணன் வந்தானடி,  என் 
      கண்ணன் அவன் புரிந்தேனடி, என் 
      கண்களுடன் கலந்தானடி. 

அந்த மண்பானையுள்ளெ
    அவன் செய்யும் அற்புதங்கள் 
     சொல்லி மாளாதடி, எனை 
     கொஞ்சி மகிழ்ந்தானடி.
     
   அவன் குழலை எடுத்தேன் நான். 
என் வாயில் வைத்தேன் நான்.
 ராதே ராதே என அவன் குழலும்
 என் பெயர் சொல்லுதடி.


கண்ணன் குரலே அது நான் அறிவேன்.
ராதே ராதே  பெயர் சொல்வதும் அவனே. 

அந்தக் கண்ணனுடன் கண் சேர்க்க 
கருமை நிற வண்ணனின் குரல் கேட்க,
அக் குழலில் நானுமென் 
இதழ்களை  இணைத்திடவே 
காரிருளில் வந்தேனடி. தோழி...

அவன் என் கண்ணன் 
கண்களோடு கண் சேர்க்க 
கார் இருளில் வந்தேனடி. தோழி. 


श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
उसी घड़े से
उसी डगरिया
उसी घड़े से
उसी डगरिया
हेराफेरी करत साँवरिया
साँवरिया
राधा राधा राधा बोले बांसुरिया
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी

मोहन करे चतुराई
राधा राधा राधा बोले बांसुरिया
मोहन करे चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम से नैनन मिला आई
सहेली तोरी जानी चतुराई
श्याम बसे मोरे मन में
सखी
श्याम बसे मोरे मन में
अपनी अटारी बैठी सुनूँ मैं
बंसी की मीठी तान
सखी
बंसी की मीठी तान
चाँद सूरज दोनों नैन बना के
श्याम छबी सखी मैं निहारूँ
नाहीं जिया भरे
कारे बसिवारे
नाहीं जिया भरे
तन मन प्राण पियासे
सखी
तन मन प्राण पियासे


தகவல்கள் அறிந்த இடம். 
http://atulsongaday.me/2013/04/13/shyaam-se-nain-milaayi/




Sunday, April 14, 2013

PB Srinivas with Latha Mangeshkar ..... The Ever Green Singer ..






   இந்த இனிய குரலோன் இந்தியில் பாடியதை கேட்டிருக்கிறீர்களா ?

   இது தமிழில் வந்த படம் தான்.

   இந்தியில் டப்பிங் செய்யப்பட்டபொழுது 
   பி.பி.எஸ்.குரல் ஒலிப்பது
   லதா மங்கேஷ்கருடன்.



P.B.Srinivas and Latha Mangeshkar

புத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை பலா பலன்கள்

.
தமிழ் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும்    உலகத் தமிழர்  யாவருக்கும்

                         புத்தாண்டு வாழ்த்துக்கள்.



     இன்று காலை கண் விழித்துப் பார்த்தேன்.



      புதிய வானம் புதிய பூமி என்று புது மழை பொழிகிறது. 

      நான் வருகையிலே என்னை வரவேற்க..
      
       அந்த காலத்து எம்.ஜி. ஆர்.பாட்டு சுகமாக ஒலிக்க,


       என்ன விஷயம் என்று நன்றாக பார்த்தால், 



       ஆமாம்.  இன்று முதல் புத்தாண்டு 

              புது வருஷம் விஜய வருஷம்.


        இந்த விஜய வருஷத்துகுள் இன்று செல்லப்போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன்

        தோரணங்கள் கட்டி துந்துபி நாதம் முழங்குமந்த வீட்டுக்கு வேக வேகமாக நடந்தேன்
        அந்த மண்டபம் கண்ணில் பட்டது. 


        விஜய மண்டபம்... என்று கொட்டை எழுத்துக்களில்.....



         உள்ளே போகவேண்டும்..என்றேன் காவலாளியிடம். 



         பாஸ் வேர்டு போட்டு நீங்களே திறந்து செல்லுங்கள். 



         ஆமாம். தட்டுங்கள்..திறக்கப்படும்.கேளுங்கள் கொடுக்கப்படும்.

         நம்ம எதுனாச்சும் செஞ்சாத்தானே வேண்டியது வேண்டியபடி வேண்டி நிற்பவனுக்கு கிடைக்கும்.


          என்ன பாஸ் வேர்டு...  ஹா...  நினைவு வந்தது. 

              தி. த..     இன்னும் யோசித்து பார்த்தேன்    திண்தன
  
                                போட்டு உள்ளே சென்றேன். 


                                அங்கே ஒரு வரவேற்பு பலகை. 



            அதில்  நான் கண்ட வாசகம் இதோ. 




கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 



          என்ன ஆச்சரியம்..!! திண்டுக்கல் தனபாலன் 




          திண்டுக்கல் தனபாலன் வருபவர் அனைவரையும் ரோசா பூ  தந்து வரவேற்கிறார்.



         வாழ்க உமது பாரி உள்ளம் என 



வாழ்த்திக்கொண்டே விஜய மண்டபத்திற்குள் நுழைகிறேன்





இந்த ஆண்டு புத்தாண்டு விஜய வருஷம் மேஷ ராசி முதல் மீன ராசி வரை பலா பலன்கள் பின்வருமாறு.




.
மேஷம் ....                                        சிறப்பாக இருக்கும் 
ரிஷபம்.....                                        இனிமையாக இருக்கும். 
மிதுனம்;                                           மிருதுவாக இருக்கும். 
கடகம். .....                                        கற்கண்டு போல் இனிக்கும் .
சிம்மம்......                                      ..சீரிய செயல் புரிய சரியான நேரம் . 
கன்னி......                                         நிறைந்த செல்வம் கிடைக்கும்.
துலாம்......                                       செல்வம்  துரத்திக்கொண்டு வரும்.
விருச்சிகம்   வானம் நமக்கு எல்லை இல்லை என்ற துணிவு வரும்.
தனுசு.              தயங்காது தனி வழி போகவும் முயற்சி வரும். 
மகரம்............. மன்மதனுக்கு ரதி கிடைப்பாள். 
கும்பம்.            கனி இருக்கும்போது இவர்கள் காயை விரும்ப மாட்டார்கள். 
மீனம்.               முன்னுக்கு வரும் குழாமில் முன்னணியில் இருப்பார்கள். 


சும்மா கற்பனை  அப்படின்னு நினைக்காதீர்கள். எல்லாமே உண்மை. 

Saturday, April 13, 2013

வல்லிம்மா !! நீங்க தான் வந்து இத செட்டில் பண்ணணும்.


From chithrabanu 1942 to Vijaya 2013 A journey.

வல்லிம்மா !! நீங்க தான் வந்து இத செட்டில் பண்ணணும்.
நீங்க போட்ட படத்துலே இருந்து தான்  
ஆரம்பிச்சது இது.

    வருசம் முழுக்கவே சண்டை தான். சித்திரை 1 முதல் பங்குனி 31 வரை 24 * 7

    எல்லாமே ஒரு ஈகோ ஃபைட்.   நீயா நானா...  ( இந்த ஈ என்ன மருந்து அடிச்சாலும் போவாது )

    இந்த கோபி நாத்தை பார்த்தபின்னே எல்லா வூட்டுலேயும் இன்னும் பலமா இந்த ஃபைட் நடக்குது.

சம் என்ஜாய். 
சம் அதர்ஸ் ஹாவ் நோ சாய்ஸ்.

உமன் எம்பவர்மென்ட் .

 என்னடா விசயம் அப்படின்னு நீங்க கேட்கறீக..
 கேட்குது.
வாழ்வே மாயம் அப்படின்னு ஆரம்பிச்சேன்

என்னங்க இது... இன்னும் அனுபவிக்க வேண்டியது இன்ப துன்பங்கள்  எத்தனையோ இருக்கே அப்படின்னு ...
என்னோட சம்சாரம்...

 சம்சாரம் அப்படின்னாலே அதுலே some  தான் சாரம். மிச்சமெல்லாம் காரம்.

 ஒத்துண்டு போனா சாரம்.
 இல்லைன்னா ...நம்ம நேரம். 
 நான் சொல்லணுமா என்ன ?  

 என்ன இது ... பொழுது விடிஞ்சதும் விடியாததுமா இந்த கிழவனும் கிழவியும் ஆரம்பிச்சுட்டாங்களா.?  இன்னிக்கு சண்டைய ?  கோவாலு  கேட்கறாரு எனக்கு கேட்குது

சண்டை அப்படின்னு சொல்ல முடியாது ...
சும்மா.. சும்மா .   ( வடிவேலு சொல்றப்போல நினைச்சுக்குங்க.)
இது ஒரு இண்டலக்சுவல் டிஸ்கசன்.
அம்புடுதேன்

சண்டை லே மட்டும் உங்களுக்கு இண்டரஸ்ட் அப்படின்னா பதிவின் கடைசிக்கு செல்லவும்   

 சனிக்கிழமை இன்று.
 இந்த வருசத்தின் கடைசி நாள். நந்தன வருசம்.
 நாளைக்கு விஜய வருசம்.
 
எல்லாமே ஒரு கடைசிக்கு வரும் அது பஞ்சாங்கத்துக்கும் அதாவது நந்தன வருச பஞ்சாங்கத்துக்கும   கடைசி நாள்.  வாக்கியமா இருந்தாலும் த்ருகணிதமா இருந்தாலும் திருநெல்வேலியா இருந்தாலும் ஸ்ரீரங்கம்
ஆனாலும் ஒரு வருஷம் முடியும்போது புது பஞ்சாங்கம் வாங்கணும்  வருஷம் துவங்கற அன்னிக்கு பஞ்சாங்க படனம் .

(என்னைப்போல் இருக்கிறவர்கள் எல்லாருக்கும் நித்யம் படனம் ஒரே வித்யாசம். வூட்டு அம்மா daily படிப்பாக )

விசயத்துக்கு வாய்யா அப்படின்னு  சொல்றீக.

       இன்னிக்கு ஒரு நல்லா பாடல் கன்னட மொழிலேந்து போடுவோம்னு நினைச்சுகிட்டு இருக்கும்போத   பார்த்தேன்.

   அந்த வேளைலே நான் படிச்ச ஸ்கூலூ இ.ரெ.உயர்னிலைப்பள்ளிலே எனக்கு 12 வருசம் முன்னாடி   படிச்ச திரு கல்பட்டா நடராசன் அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த பாடலை பார்த்தேன்.  போடோ கலைஞர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள் மூலமாக அறிமுகம் ஆனவர் .  அவர் எனக்கு ஒரு இ மெயில் போட்டு இருந்தார் அவருடன் தொலை பேசியில் பேசும் பாக்கியம் கிடைத்தது.
அப்பொழுது அவரது வலையில் இட்டு இருந்த ஒரு கவிதையை எனக்கு காண்பித்தார்

   இது கவிதை இல்லை  காலம் காலமாய் பட்டினத்தார் முதல் கண்ணதாசன் வரை சொன்ன வேத வாக்கியம்.

   வார்த்தைக்கு வார்த்தை இந்த அன்னமாச்சார்ய கீர்த்தனையை அக்ஷர சுத்தமா மொழிபெயர்த்து    அன்னமாச்சாரியா அவர்களுடைய மன நிலை யை அப்படியே எடுத்துக்கொண்டு வந்து மூஞ்சி    முன்னாடி வச்சு,

 டேய்..  சுப்பு தாத்தா..  இதாண்டா உலகம்
அப்படின்னு பளார்னு அறைஞ்சா மாதிரி சொல்றாரு.

  மனுச வாழ்க்கையின் மாயையை வள்ளுவன் சொல்லாததா என்ன ? அதை இவரு எப்படி சொல்றாரு
  பாருங்க...

முதல்லே அன்னமாச்சார்யா பாடிய பாடலை விசாகா ஹரி பாட, பின்னே வருவது கல்பட்டு நடராஜன் அவர்களின் பாடல் மொழி பெயர்ப்பு.  அக்ஷரத்துக்கு அக்ஷரம் ஆயிரம் பொன் பெறும் .



இனி வருவது திரு நடராஜன் சொற்கள்: 


தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்று அழைக்கப் படுபவர்.  அவர் பல ஆயிரம் பாடல்கள் இயற்றினார்.  எல்லாமே பக்திப் பாடல்கள்.  அவற்றில் அழகான ஒன்று ரேவதி ராகத்தில் அமைந்த  நாநாடி ப்ரதுகு நாடகமு” என்ற பாடல்.  அதனைத் தழுவி தமிழில் ஒரு பாடல் இதோ:

பல்லவி

நாம் வாழும் வாழ்க்கை யோர் நாடகம் தான்
என்றுமே வேண்டும் இன்பமாம் முக்தி   

                                                (நாம்.....)
 அனுபல்லவி

பிறப்பதும் நிஜமே இறப்பதும் நிஜமே
இடையில் வாழ் வாழ்க்கையோர் நாடகமே
வாழ்க்கையே மாயந்தான்
முக்தியே உண்மை காண்
                                               (நாம்.....)
சரணம் - 1

உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
வந்திடா துன்கூட சென்றிடும் வேளையில்
வந்திடும் நிச்சயம் நீ செய் நன்மைகள்
தீமைகள் இவற்றின் பலன்கள் தான்
                                              (நாம்.....)

சரணம்  2

கெட்டதின் பலன் தான் விட்டிடா துன்னையே
நல்லதின் பலனோ கைவிடா துன்னையே 
எங்கும் நிறை ஆண்டவன் தாள் பணி
என்றும் நீ அடைவாய் நிச்சயம் 
இன்பந்தரும் முக்தியே
                                              (நாம்.....)

04-02-2010                                 நடராஜன் கல்பட்டு

  8888**********************************************************************8888

இதுலே இந்த பாட்டிலே ஆண்டவன் அப்படின்னு ஒரு வார்த்தை வருது. 
அது யாரு ? 

எங்கும் நிறை ஆண்டவன் அப்படின்னா பிருஹத் ஆரண்யகத்திலே வர நிர்குண நிராகார பிரும்மன் அப்படின்னு என் கட்சி.

புரியராபோலே நீங்க பேசி ரொம்ப நாளாச்சு. அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச ஆண்டவன் பெருமாள் தான். 
பாற்கடல் லே பள்ளி கொண்டானே
அந்த பெருமாள். .
சாட்சாத் பெருமாள் 
அப்படின்னு 
இது என் சஹ தர்மினி 
அதாகப்பட்டது எங்க வூட்டு கிழவி கட்சி. 

எது ரைட்டு?? எது தப்பு ????
நீயா நானா ?
வல்லி அம்மா எங்கே இருக்கீக....!!!