Pages

Tuesday, January 21, 2014

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன





இன்னிக்கு கல்யாண சாப்பாடு, 


காரட் பொரியல் , கதம்ப சாம்பார், சௌ சௌ கூட்டு, ஆப்பிள் பச்சடி, சேமியா பாயசம், மெது வடை,, அப்பளம், மைசூர் ரசம், பொடடோ சிப்ஸ், சோன் பப்டி, எல்லாமே 

கிழவி , உண்ட மயக்கம் ரொம்ப இருக்குது போல. கொஞ்சம் தூங்கிட்டு வரேன் என்று கிளம்பினாள் 

என்ன அவசரம் !!

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன 

என்று பாட ஆரம்பித்தேன். 

என்ன இது ? எழுபத்தி இரண்டு முடிஞ்சுடுத்து. 22 ஞாபகம் வருதோ ??
என்று சிரித்தாள் கிழவி. 

இல்லேடி, இந்த சரத் பாடினதை சொன்னேன். 




காலிங் பெல் அடிக்குது.  டிரிங்....டிரிங்.....


ஹாப்பி வெட்டிங் டே  

அப்படின்னு பாடிக்கினெ
தாத்தா பாட்டி 46வது திருமண நாள் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டு,
சோனியா வும் சரத் சந்தோஷும்  வர்றாங்க.



தாத்தா பாட்டி, 

நாங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடப்போறோம் 



அடடா // இன்னிக்கு ஒரு கச்சேரி வேறயா ...

ஜமாயுங்க. என்றேன் நான். 


அதுக்கு முன்னாடி இந்த ஐஸ் சாக்கலேட் கேக் சாப்பிடுங்க என்றேன்.






sonia and
sarath santhosh.
together
தில்லானா தில்லானா  




சரத், சோனியா. உள்ளிட்ட 

சூப்பர் சிங்கர் 4 லே தேர்ந்து எடுக்கப்பட்ட பைனலிஸ்ட் ஐந்து பேருக்கும்  


எங்களது இதயங்கனிந்த பாராட்டுக்கள்.  நல வாழ்த்துக்கள்


திவாகர் , பார்வதி, சுபான், சரத், சோனியா 

இவர்கள் எல்லோருமே 

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில் 

மின்னப்போகும் 

நட்சத்திரங்கள்


ஆனா இதிலே பைனல்சிலெ யார் பர்ஸ்ட் வருவாங்க..யார் செகண்ட் ? 

எல்லாமே மக்கள் கையிலே தான் இருக்கு. 

இருந்தாலும் ...அப்படின்னு வூட்டு கிழவி  இழுக்குது. 


நான் சொன்னேன்;

பைனல்ஸ் லே 
என்னோட  சாய்ஸ். 


சோனியா, பார்வதி, சரத் .  

நோ. நோ. அப்படின்னு சத்தம் போட்டாள்  கிழவி.  

பின்னே எப்படி? உன்னோட  சாய்ஸ் என்ன ?  என்றேன் நான்  

சரத், பார்வதி, சோனியா. 

இல்லேன்னா 

சரத், பார்வதி, சுபான். 

என்றாள் இவள். 

அப்ப திவாகர் ?

அவரு தனி உலகம் ..  அதுக்கு யாருமே நிகர் இல்லைங்க.

அன்னி தேதி சி.எஸ்.ஜெயராமன், பி.யூ.சின்னப்பா  போல குரலுங்க... அதுக்கு ஒரு 
ஸ்பெசலா அவார்டு தரனுங்க.  ரஹ்மான் சார் மனசு வச்சார் அப்படின்னா இவரு எங்கேயோ போயிடுவாரு.  இவரோட உழைப்புக்காகவே இவருக்கு ஒரு தனி ரிகக்னிஷன் தரனும். 

அப்ப சோனியா என்ன ஆறது ? என்று இறைந்தேன் நான். 

சோனியாவுக்கு நோ சான்ஸ். என்று உள்ளே நுழைந்தார் என் நண்பர் வெங்கடராமன்.

அவர் சொல்ற சோனியா வேற சோனியா என்று கிசு கிசுத்தாள் வூட்டுக் கிழவி.

என்ன சண்டை இன்னிக்கு என்று உள்ளே நுழைந்தார் வெங்கடராமன், என் பிரண்டு. 

நீங்க சொல்லுங்க நியாயத்தை என்று ஆரம்பித்தேன். 
ஆதியோட அந்தமா அரை மணி நேரத்திற்குள்ளாகவே என் பிரசங்கத்தை .
முடித்தேன்.என் வாதத்தை.

நோ நோ.  இதெல்லாமே இல்லை. என்றார் காலனி பிரண்டு. 

பின்னே எப்படி ?

பேப்பர் லே வேற இல்ல போட்டு இருக்கு என்று ஹா ஹா என்று சிரித்தார். 

என்ன ?

நாடு முழுக்க சர்வே பண்ணினதிலே 
இன்னிக்கு தேதியிலே 

மோடி, கஜ்ரிவால், சோனியா தான். 

அப்படித்தான் இல்லையா 
எல்லா டி.வி. யும் சொல்லுது. 
முக்கியமா ஐ.பி. என். டி.வி. சொல்லுது. 

சரிதான். 
ஆனா இது நமக்கு வேணாம் ங்க  ...

நம்ம இந்த இசை உலகத்துலேயே இருந்துடுவோம். 







Friday, January 10, 2014

Vijay TV அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

அனந்த் சார் கிட்டே ஒன்னு கேட்கணும்.

எனக்கு ஒரு உண்மை தெரியனும்க....

நயாகரா ஏன் உறைஞ்சு  போயிடுத்து.

எப்படி இந்த மாதிரி பனி பாறையா  ஆயிடுச்சு ?







நாங்க ஜூலை 2013 லே நேரடியா பார்த்தபோது இப்படி இல்ல இருந்துச்சு!!



இந்த கொட்டுகின்ற நயாகரா நீர்விழ்ச்சி கூட நின்னு போய்,
ஸ்தம்பிச்சு போய் பனிக்கட்டி யா போயிடுச்சே !  ஏன் ??

இந்த விஜய் டி.வி.லே சோனியா பாடல்
கேட்டபின்னே தான்
தெரிய வருது.

ஒரு வேளை இந்தனை வெள்ளமும், அருவியா பாஞ்ச நீர் வீழ்ச்சியும் சோனியா பாட்டை கேட்டு பிரமிச்சு போய், அப்படியே நிக்குது போல .. ?




niagara


ra ra

ra ra



ஆர்க்டிக்லேந்து வந்த குளிர் காற்றுலே இறுகிப்போன நீர் வெள்ளம் அங்கே.  இசையிலே கூட உருகாத பனிக்கட்டிகள் இங்கேயா ??




ஆனா, இந்த பனிக்கட்டி எல்லாமே  உருகி திரும்பவும் வெள்ளம் போல நீர்
பெருகி வரும்.
திரும்பவும் அந்த நயாகரா ஒரு நாள்  பார்க்க முடியும்.





இன்னும் கொஞ்ச நாட்களிலே வெய்யில் அடிக்கும்.
இந்த பனிக்கட்டி எல்லாமே கரைஞ்சு போயி,
முன்னம் போலேநயாகராவிலே  நீர் பாயும்.

ஆனா, மனுசங்க மனசு கரைஞ்சு உருகி, சோனியாவுக்கு வோட்டு போடுவங்களா ?

தெரியலயே !!

அனந்து ஸாரு என்ன சொல்வாரு ?

இசை வாழ்க.


Tuesday, December 31, 2013

சதமானம் பவதி Happy New year.


HAPPY NEW YEAR  2014

புத்தாண்டு 
 புதிய திருப்பங்களைத் தரட்டும்.

சதமானம் பவதி. 

எ வெரி ஹாப்பி நியூ இயர் 

நூறு வயது வாழ வாழ்த்துகிறோம் 

சுப்பு தாத்தா.
மீனாச்சி பாட்டி. 

பெரிய வாழ்த்து மடல் பெற இங்கே செல்க.


Saturday, December 14, 2013

டோண்ட் கிளிக் ஹியர்

இன்னா பாட்டி, தூக்கமே வல்லே..
ஏண்டா ??

இது அமெரிக்காவிலே டே டைம் பாட்டி.
இப்ப நீ      ஆராரோ ஆரீராரோ
பாடினா நான் எப்படி பாட்டி தூங்கறது ?
அந்த ஐ.பாடு லே கேம்ஸ் போடு.


டேய். கண்ணா எனக்கு தூக்கம் வருதுடா.
கொஞ்சம் படுத்துக்கொண்டு பாரேன். நான் நல்ல தாலாட்டு  பாடறேன்
உனக்கு தூக்கம் வல்லேன்னா அப்பறம் சொல்லு

சரி.   ட்ரை  பண்ணு.

  கண்ணே கண்மணியே கற்பகமே கனியமுதே
                            யார் அடிச்சு நீ அழுதாய்.
  (இத க்ளிக்குடா ராசா)
                            பாட்டி  அடிச்சாளோ உனக்கு பாலூட்டும் கையாலே...
                            அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே.
                            மாமி  அடிச்சா\ளோ உனக்கு மையூட்டும் கையாலே.





யாரும் அடிக்கல்லே...பாட்டி 
 இந்த பாட்டுதான் ரொம்ப போர் அடிக்குது.

இது ரொம்ப ஓல்டு லல்லபி சாங் பாட்டி.

நீ வேற பாட்டு போடு.  

ஏன் பாட்டி !! டு யூ ஹாவ்

வொய் திஸ் கொலை வெறி டீ  பாட்டு இல்லையா ?
(mob flash in Auckland,NS)

என் ராசா.. அதெல்லாமா இப்பவே வேணுமா டா !!!
புறக்கும்போதே வெறி வேண்டாம்டா கண்ணா
அதெல்லாம் தாத்தாவோட போகட்டும்டா 
இந்த பாட்டு கேளுடா ராசா.
 சித்ரா பாடுறாட .  சின்னக்குயில் சித்ரா.

சரி. போடு. 


ஓமனதிங்கள் கிடவோ ...
(WITH ENGLISH TRANSLATION)


நல்லாத்தான் ஸ்வீட்டா தான் பாட்டி இருக்கு.
பாஷை தான் கொஞ்சம் புரியல்ல.
பாட்டி

இன்னாடா ராசா..

ஐ. ஆம் ஹங்கிரி .

இப்பதானே டா நான் பாலு மம்மு ஊட்டிவிட்டேன்.

நௌ ஐ ஆம் ஹங்கிரி .
அந்த சாக்லேட் ஐஸ்க்ரீம் கொண்டாந்து தா. அத சாப்பிட்டுகிட்டே தூங்கறேன்.

ஐஸ் தொண்டை கட்டிகும்டா.

இன் அமெரிக்கா வீ ஹாவ் ஐஸ் க்ரீம் இன் விண்டர் ஆல்சோ பாட்டி. 
வேண்டாம்.  வேபார் பிஸ்கட் சாக்லேட் தா.

வேண்டாம்டா, . இந்த பொம்மை தரேன்.
பாத்துக்கினே தூங்குடா..

அந்த சாக்லேட் பொம்மை தா பாட்டி, . பாத்துகினே தூங்கிப்போறேன். 

டோண்ட் கிளிக் ஹியர் 
நன்றி: www.tamilboon.wordpress.com

பாட்டி, இந்த பொம்மைக்கு அந்த அர்லா பாலோன் லல்லபி  தான் மேட்ச் ஆகும். மம்மி  அந்த அயர்லாந்து பாட்டு போட்டு தூளி ஆட்டுவாங்க. 

தே !! இன்னாது.!! தாலாட்டுலே கூட ஐயர்லாந்து அய்யங்கார் லாண்டு தாலாட்டு அப்படின்னு கீதா ?

பாட்டி, அது ஐயர்லாந்து இல்லை, அயர்லாந்து . போட்டு பாரு. அப்பறம் நீயே அதை பாடுவே.***

இன்னமா தாலாட்டு !! எங்கன இருந்தாலும், அம்மா அம்மா தான்!!!
 தாலாட்டு பாடற விதமும் ஒண்ணுதான் போல இருக்கு.

பேராண்டி ராசா , நம்ம லதா தாலாட்டு பாட்டு கேளுடா.. இதத்தாண்டா உங்க மம்மிக்கு தாத்தா பாடுவாரு.




இது big baby lullaby பாட்டு . எனக்கில்லை பாட்டி.
மம்மி சொல்லி இருக்கா, தாத்தா பாடற தாலாட்டு வேறவாம். பாட்டி, அந்த மலர்ந்தும் மலராத பாட்டை பாடி பாரேன்.
அதுக்காவது தூக்கம் வருதா ன்னு பாக்கறேன்.



இதுக்குமாடா தூக்கம் வல்லே.. இன்னாடா செய்யச்சொல்றே..

அது என்ன பாட்டி அது ?
அத்தை மக அப்படின்னு அந்த பாட்டு லே வருது ??.
அவ யார்?  எங்க இருக்கா ?

கொஞ்சம் எங்கிட்ட கொண்டு வந்து காட்டேன் .
அவளை பாத்துகினே தூங்க முடியுதா ட்ரை பண்ணி பாக்கறேன்.

அட படவா ராஸ்கல்..!
 கல்ச்சரே மாறிப்போச்சு. என்ன செய்யறதுன்னே  தெரியல்லே +Geetha Sambasivam பாட்டி கிட்டே தான் அட்வைஸ் கேட்கணும் 
சரி, இந்த பாத்துட்டு போ..


பாட்டி, நான் தூங்கிட்டேன். நீ லைட் அணைச்சுட்டு தூங்கப்போ. காலைலே எழுந்துட்டு எனக்கு காம்பிளான் போட்டுத் தரணும்.


பதிவு ரொம்ப நீளம் அப்படின்னா +Vetha. Elangathilakam படிக்க மாட்டாக.
தி என்டு
  *******************************************************************************
***

Leanbhan, is an old Irish word for little child.

Lyrics:
Sleep, oh babe, for the red bee hums
The silent twilight's fall
Aoibheall from the gray rock comes
To wrap the world in thrall
A leanbhín ó, my child, my joy
My love and heart's desire
The crickets sing you lullaby
Beside the dying fire

Dusk is drawn and the green man's thorn
Is wreathed in rings of fog
Siabhra sails his boat till morn
Upon the starry bog
A leanbhín ó, the paly moon
Hath brimmed her cusp in dew
And weeps to hear the sad sleep-tune
I sing, my love, to you

Sleep, oh babe, for the red bee hums
The silent twilight's fall
Aoibheall from the gray rock comes
To wrap the world in thrall
A leanbhín ó, my child, my joy
My love and heart's desire
The crickets sing you lullaby

Beside the dying fire  

The whole world belongs to us. Every community, every faith, people of all age groups, rural or urban - they are all part of us and they all belong to us. The sense of the entire humanity being one family, of belonging to each other, is essential for us to have an ethical and just society. +Sri Sri Ravi Shankar 


Wednesday, December 4, 2013

ஜே ஜே !! வாதாபி கணபதிம் பஜே . A Carnatic classical with a mind boggling band

வாதாபி கணபதிம் பஜே ...
இந்த ஹம்சத்வனி ராகத்து பாட்டை சாக்ஸபோன் , கிதார், ட்ரம்ஸ், வயலின்,அத்தோட கூட மத்தளம், கடம் மாதிரி,
ஒரு பத்து  வாத்தியங்களுடன் பாடினால் எப்படி இருக்கும் ?

அனுபவித்துப் பாருங்கள். 


Krishna's Temple Rock -Vocals/
Kanjira: Krishna Kumar;
 Bass: Mishko M'ba;
Saxophone: Matt Littlewood;
Keys: Aman Mahajan;
 Electric guitar: Jay Sithar;
 Tavil/Ghatam: Sowri Rajan;

Courtesy: A Kappa Tv Production.
உங்களுக்கு  இந்த வாதாபி கணபதிம் பாடல் கன்வென்ஷன் ஆக தான் பிடிக்கும் என்றால்,
நீங்கள் செல்ல வேண்டிய இடம் மூவி ராகாஸ். அதுவும் சுப்பு தாத்தாவின் காண சபா.




Monday, December 2, 2013

பிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.



ஒரு மண் பானைக்குள்ளே இன்னாய்யா  இந்த ம்யூசிக் சௌண்ட் வருது !!

தென் இந்தியாவிலே கடம்.
வட இந்தியாவிலே தபலா.

இங்கே.. விநாயக்  ராம்.
அங்கே. ஜாகிர் ஹுசைன்.

ஒரு கர்நாடக சங்கீத மேடையிலே வயலின், மிருதங்கம் மட்டும் தான் இருக்கும். ஆனால் , பாடுபவர் பிரபலமானவர் ஆக இருப்பின், பக்க  வாத்தியங்களில்,மிருதங்கம் தவிர, கடம், மோர்சிங், இருக்கும்.

பல நேரங்களில் மிருதங்கமும் கடமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வாசிக்க ரசிகர் உள்ளங்கள் துள்ளிக்குதிக்கும் .

இங்கே..இப்பொழுது 
கடம் வாத்தியம் தனி ஆவர்த்தனம்.
GHATAM SURESH தனி ஆவர்த்தனம்
இதில் என்ன ஆச்சர்யம்.??
சுரேஷ் என் அத்தை பேரன்.



என்ன கடம் தனியா போர் அடிக்கிறதா ?

அப்பொழுது ஒரு பான்ட் இசை  கிதார்,  வயலின்,சாக்ஸபோன், ட்ரம்ஸ் உடன்
ஆகம் நிகழ்ச்சி இது.

பண்டு ரீதி கௌலு  ..
பிச்சு பிச்சு உதர்றார் பாருங்க.






அதுவே சிங்கபூரிலே.



கர்நாடிக் சங்கீதம் கேட்பதற்கு நீங்கள்  இங்கே செல்லுங்கள். ரஞ்சனி காயத்ரி அவர்களின் இசை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்.

தமிழ் இசை கேட்க இங்கே செல்லுங்கள். 

Sunday, December 1, 2013

கிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர்கள்.

இன்னிக்கு டிசம்பர்
ஒண்ணாம்  தேதி.


சங்கீதம், கச்சேரி , அப்படின்னு அந்த பிரும்ம கான சபா, நாரதா கான சபா, சங்கீத நாடக சபா, பாரதீய வித்யா பவன் , ம்யூசிக் அகடெமி, என்று

மைலாபூர், தி.நகர் அப்படி எல்லாம் இந்த டிராபிக்லே ஓட முடியுமோ?அலைய முடியுமோ ? எங்கே பார்த்தாலும் மெட்ரோ ரயில் காரங்க பாதி ரோடை மூடி வெச்சு இருக்காங்க .

எங்கேயும் எப்போதும் சங்கீதம் ... 

அப்படின்னு இருக்கவேண்டிய டிசம்பர்
எங்கேயும் எப்போதும் ஏர் பொல்ல்யுஷன் ஆக
சென்னை முழுவதுமே இருக்கிறது.


அதனாலே, சுப்பு தாத்தாவே ஒரு தனி சபா நடத்திட்டு இருக்காரு. இப்ப இல்ல , நேத்திக்கு இல்ல, 2001ம் ஆண்டுலேந்து நடக்குது.

அவங்கவங்க டேஸ்டுக்கு  தகுந்தபடி இருக்கும்

அப்படின்னு சொன்னாலும்
டிசம்பர் மாதம் மட்டும், 

ப்யூர் காபி மாதிரி, 
ப்யூர் கர்னாடிக் .  

உங்களுக்கு பிடிச்ச இசை கலைஞர் தினம் அங்கே வந்து

உங்களை அசத்த இருக்கிரார்கள்.

அது என்ன தளம்.

மூவி ராகாஸ். 

அங்கே போவதற்கு முன்னாடி இன்று முத்தாய்ப்பு ஆக,

ஹாரிஸ் ஆகம் பாண்ட்.  இசை.  ராகம். ஆபேரி.


கிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர்கள்.




Friday, November 22, 2013

இதுவும் காபிதான்


 மக்கள் டி.வி. லே மாலை நேரத்துலே இலக்கண  இசைக்கு இடம் தந்து அந்த கர்நாடக இசையை மக்கள் மத்தியிலே கொண்டு செல்கிறார்கள்.

இதுவும் காபி தான்.  ராகமும் காபி.


. கர்நாடக இசையில் இந்த ராகத்துக்கு பெயர் மிஸ்ர காபி .
அது என்ன மிஸ்ர என்றால் என்ன அர்த்தம்?

கலப்பு ... !!!  பாலுடன் டிகாஷன் கலந்தால் தானே காபி ?  ஒரு வேளை சிக்கிரி அதிகமாக போட்டிருக்குமோ என்னவோ ?

சுத்தமான காபி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.

ராதா கல்யாணத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார்கள் ஆலங்குடி உத்சவப்ரியர்கள்.

அங்கே கலைமாமணி ஷோபனா ரமேஷ் என்னமா பாரத நாட்டியம்.ஆடுகிறார்கள் !!  பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது.





Only +meena kavinaya Madam can confirm இது சாஸ்த்ரீய இலக்கணத்துக்கு உட்பட்டதா இல்லையா என்று...   விஸ்வரூபம் படம் பார்த்தப்புறம் தாத்தாக்கு  இப்ப எல்லாம் ஒடிசி டான்ஸ் தான் பிடிக்கும்

எதற்கும் ஒரு டிகிரி காபி குடித்துகொண்டே பார்ப்போம்  கேட்போம் என்று
அடியே...ஒரு வாய் காபி தாயேன்...என்று
ஆத்துக்காரி கிழவியை கெஞ்சினேன்.

இப்ப தானே காபி கொடுத்தேன். அதுக்குள்ளே என்ன இன்னும் ஒன்னு ?

இத பாருங்க.. இப்போதைக்கு என்றாள் பார்யாள்.

திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையிலே என்னமா ஒரு தோட்டத்தை நிழற்படம் எடுத்திருக்காக..அது மாதிரி ஒரு தோட்டத்துக்கு உள்ளார  போய் சைலண்டா  உட்கார்ந்துக்கணும் . யாருகிட்டயும் பேசக்கூடாது. கண்ணை மூடிட்டு தியானம் பண்ணுங்க.  முடியுதா ? எண்ணங்கள் வர்றது ஸ்டாப் ஆவுதா ?  அப்படின்னு  கொஞ்சம் பாருங்க.




அங்கே போய் கண்ணை மூடிக்கொண்டு இந்த மூச்சு பயிற்சி சொல்றாங்க பாருங்க... அதை கொஞ்ச நேரம் ப்ராக்டீஸ் செய்யுங்களேன்.

 ( என்ன தான் இந்த ஆர்ட் ஆப லிவிங் போலாம் என்றால் அங்கே சாதாரண ஒரு பிராணாயாமம் சொல்லி கொடுக்க 1500 ரூபாய் தரச் சொல்கிறார்கள்.  ஒரு நோட்டிஸ் பார்த்தேன். பிராணனே  போய் விடும் போல் இருக்கிறது. )

அடடா..என்ன ஒரு சூப்பர் தோட்டம் ...இருந்தாலும் ஒரு வாய் காபி தாயேன்.!!
அத குடிச்சு விட்டு அந்த பிராணாயாமத்தை சுறு சுறுப்பாக செய்யறேன்.

ஹூம் ஹூம்.  இந்த கிழவி தரமாட்டாளே..

When nothing is possible, kneel down and pray to God  

என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.
சில சமயங்களில் நிகழ் காலம் நிம்மதி தராத போது பழைய நினைவுகளில் பசுமையைத் தேடித்தான் போக வேண்டி இருக்கிறது.




நல்ல காபி க்கு உதாரணம் ஒரு அனாலஜி அல்லது சிமிலி  சங்கீதத்திலே ஒரு பைரவி ராகம் தானே.
அத சொன்னால் இந்த கிழவி,
பைரவி யா ? யாருங்க அந்த பைரவி என்று மூஞ்சியை ஒரு சந்தேஹமா
வைத்துக்கொண்டு

என்னை பார்க்க,

இத பாரு இது தான் அந்த பைரவி என்று நான் சொன்னால் ...
நம்ப  மாட்டேன் என்கிறாளே...?

நீங்க வந்து கொஞ்சம் சமாதானம் சொல்லுங்களேன்.

சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?

அது என்ன இங்கிதம் ?

தெரிஞ்சவங்க சொல்லுங்க...



Friday, November 8, 2013

சூர சம்ஹாரம்.



இன்று சூர சம்ஹாரம்.

 சூர சம்ஹார நேரடி தொலைக்காட்சியை ரசித்து பார்த்து தாரகாசுரன் யானை முகம் சிம்ம முகத்தோடு வந்த அந்த அசுரனின் சோதரர்களை தன் வேலினால் வதம் செய்து பின் தன் முன்னே யுத்தம் செய்ய வந்த தாரகாசுரனையும் கொல்லாது ஆட்கொண்டார் முருகப்பெருமான் என வர்ணனையாளர் சொல்ல வியந்து போய் ,

அப்படியே எமது மனமுகந்த நண்பர் திரு கண்ணபிரான் அவர்கள் வலைக்குச் சென்றால் அவரோ சூர சம்ஹாரம் நடந்தது இலங்கையிலே, ஈழத்திலே என ஆதார பூர்வமாக சொல்லுவதை சிரத்தையுடன் கேட்டு விட்டு,

அருவமும் உருவமும் ஆகி, அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய்  நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாக,
கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய

என்று ஒரு தோத்திரப்பாடலை சரியாகத்தான் சொல்கிறேனா என்று வலை நண்பர் திரு. துரை செல்வராஜ் அவர்கள் பதிவையும் படித்துவிட்டு,

எதற்கும் இன்று முருகப்பெருமான் சன்னதிக்கே சென்று தியானிப்போம், அசரீர் மூலம் நம் மன வலி தீர்க்கும் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பி,

எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிந்தாமணி விநாயகர் கோவிலுக்குச் சென்றேன்.  போகும் வழியில் அவர் வலையிலே நான் கண்ட திருப்புகழை
என் அம்மா அடிக்கடி பாடும் திருப்புகழை பாடிக்கொண்டு சென்றேன் . ரோடைக் கடக்கும்போது, ஸ்பீடா வந்த ஒரு இளவட்டம், யோவ் பெரிசு, வீட்டுலே சொல்லிக்கினு வந்துட்டயா டா என்ற போது தான் இன்னமும் இவ்வுலகிலே தான் இருக்கிறோம் என்ற நினைப்பே வந்தது.

 இந்த திருப்புகழை நினைக்கும்போத அம்மாவை, நான் சொல்றது என்னோட அம்மாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அம்மா உனக்கு இந்த பாட்டை டெடிகேட் .செய்யட்டுமா ?.




ஒரு வழியா கோவிலுக்குள் நுழைந்தேன்.  முருகன் சன்னதி விநாயகர் அருகிலே.

இன்று அழகிய முருகன் அலங்கார முருகனாக, ஆறு இருகரங்களுடன் ஆறுமுகத்தான் ஆக,

அடைக்கலம் என்று அவன் தாள் அடைந்தோருக்கு ஆதரவற்றவருக்கு அருள் புரிபவனாக காட்சி அளித்ததை கண்டு நெஞ்சுருக,

முருகா, என் மனதினிலே நீ இருக்கும் திருக்கோலம் அமைய அருள் புரிவாய் என வேண்டிக்கொண்டே கோவிலை சுற்றி வர,

ஆங்கே .....

ஒரு இளம் பெண்  (கண்டிப்பாக இவள் வள்ளியோ அல்லது தெய்வானை இல்லை. ஜீன்ன்ஸ் போட்டு இருக்கிறாள்.)என்னைப் பார்த்து ஏதோ தர,

ஆஹா, முருகப்பெருமான் எனக்கு இன்று கண்களுக்கும் கண்ணீர் மல்கும் என் இதயத்துக்கு மட்டுமல்ல, என் வாய்க்கும் ஏதோ ருசியாக, சுவையாக தருகிறார் போலும் என நினைத்து நான் என் கரம் நீட்ட,

கிடைத்ததோ முருகன் படம்.

ஆம். நீங்கள் பார்க்கும் படம். அதுவே தான்.

என்னே உன் கருணை என நினைத்து முருகனை மறுமுறையும் நினைவு கூர்ந்து ,

முருகா, நீ ஆட்சி செலுத்தும் என் மனமும் உன் அரசாங்கம் என்று சொல்லாமல் சொல்லி,



என் மன வலி போக்க வந்த என் இதயத்திற்குள்ளே மட்டும் அன்றி என் சட்டைப்பைக்குள்ளும் புகுந்த உன் கருணையே கருணை என்று கண்ணீர் விட்டு அழாமல் அழுது,

படத்தின் மறு பக்கத்தை பார்த்? தேன்.

திடுக்கிட்டேன்.

அது என்ன ?

ஒரு விளம்பரம்.
 . 
கழுத்து வலியா ..?  மூட்டு வலியா ? என்று உடனடி சிகிச்சைக்கு அழைக்கிறது.

முருகா ...

என்ன என்று ஒரு முறையாவது கேளேன்.
என் வலி என்ன எனச் சொல்லுமுன் ....?
என் கழுத்து வலிக்கும் முதுகு வலிக்கும் வழி சொல்கிறாயே ..

இதெல்லாம் என்  வலிதான் .  இல்லை எனச் சொல்லவில்லை.

இருப்பினும் என் மன வலிக்கு மருந்தொன்று தா.

உன் காலடியில் இருக்கும் என நான் காத்திருக்கிறேன்.

வலி தீர வழி தருவாய்.





Posted by Picasa