இன்னிக்கு கல்யாண சாப்பாடு,
காரட் பொரியல் , கதம்ப சாம்பார், சௌ சௌ கூட்டு, ஆப்பிள் பச்சடி, சேமியா பாயசம், மெது வடை,, அப்பளம், மைசூர் ரசம், பொடடோ சிப்ஸ், சோன் பப்டி, எல்லாமே
கிழவி , உண்ட மயக்கம் ரொம்ப இருக்குது போல. கொஞ்சம் தூங்கிட்டு வரேன் என்று கிளம்பினாள்
என்ன அவசரம் !!
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் தான் என்ன
என்று பாட ஆரம்பித்தேன்.
என்ன இது ? எழுபத்தி இரண்டு முடிஞ்சுடுத்து. 22 ஞாபகம் வருதோ ??
என்று சிரித்தாள் கிழவி.
இல்லேடி, இந்த சரத் பாடினதை சொன்னேன்.
காலிங் பெல் அடிக்குது. டிரிங்....டிரிங்.....
ஹாப்பி வெட்டிங் டே
அப்படின்னு பாடிக்கினெ
தாத்தா பாட்டி 46வது திருமண நாள் அப்படின்னு நினைவு வச்சுக்கிட்டு,
சோனியா வும் சரத் சந்தோஷும் வர்றாங்க.
தாத்தா பாட்டி,
நாங்க உங்களுக்காக ஒரு பாட்டு பாடப்போறோம்
அடடா // இன்னிக்கு ஒரு கச்சேரி வேறயா ...
ஜமாயுங்க. என்றேன் நான்.
அதுக்கு முன்னாடி இந்த ஐஸ் சாக்கலேட் கேக் சாப்பிடுங்க என்றேன்.
sonia and
sarath santhosh.
together
தில்லானா தில்லானா
சரத், சோனியா. உள்ளிட்ட
சூப்பர் சிங்கர் 4 லே தேர்ந்து எடுக்கப்பட்ட பைனலிஸ்ட் ஐந்து பேருக்கும்
எங்களது இதயங்கனிந்த பாராட்டுக்கள். நல வாழ்த்துக்கள்.
திவாகர் , பார்வதி, சுபான், சரத், சோனியா
இவர்கள் எல்லோருமே
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில்
மின்னப்போகும்
நட்சத்திரங்கள்.
இவர்கள் எல்லோருமே
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இசை வானில்
மின்னப்போகும்
நட்சத்திரங்கள்.
எல்லாமே மக்கள் கையிலே தான் இருக்கு.
இருந்தாலும் ...அப்படின்னு வூட்டு கிழவி இழுக்குது.
நான் சொன்னேன்;
பைனல்ஸ் லே
என்னோட சாய்ஸ்.
சோனியா, பார்வதி, சரத் .
நோ. நோ. அப்படின்னு சத்தம் போட்டாள் கிழவி.
பின்னே எப்படி? உன்னோட சாய்ஸ் என்ன ? என்றேன் நான்
சரத், பார்வதி, சோனியா.
இல்லேன்னா
சரத், பார்வதி, சுபான்.
என்றாள் இவள்.
அப்ப திவாகர் ?
அவரு தனி உலகம் .. அதுக்கு யாருமே நிகர் இல்லைங்க.
அன்னி தேதி சி.எஸ்.ஜெயராமன், பி.யூ.சின்னப்பா போல குரலுங்க... அதுக்கு ஒரு
ஸ்பெசலா அவார்டு தரனுங்க. ரஹ்மான் சார் மனசு வச்சார் அப்படின்னா இவரு எங்கேயோ போயிடுவாரு. இவரோட உழைப்புக்காகவே இவருக்கு ஒரு தனி ரிகக்னிஷன் தரனும்.
அப்ப சோனியா என்ன ஆறது ? என்று இறைந்தேன் நான்.
சோனியாவுக்கு நோ சான்ஸ். என்று உள்ளே நுழைந்தார் என் நண்பர் வெங்கடராமன்.
அவர் சொல்ற சோனியா வேற சோனியா என்று கிசு கிசுத்தாள் வூட்டுக் கிழவி.
என்ன சண்டை இன்னிக்கு என்று உள்ளே நுழைந்தார் வெங்கடராமன், என் பிரண்டு.
நீங்க சொல்லுங்க நியாயத்தை என்று ஆரம்பித்தேன்.
ஆதியோட அந்தமா அரை மணி நேரத்திற்குள்ளாகவே என் பிரசங்கத்தை .
முடித்தேன்.என் வாதத்தை.
நோ நோ. இதெல்லாமே இல்லை. என்றார் காலனி பிரண்டு.
பின்னே எப்படி ?
பேப்பர் லே வேற இல்ல போட்டு இருக்கு என்று ஹா ஹா என்று சிரித்தார்.
என்ன ?
நாடு முழுக்க சர்வே பண்ணினதிலே
இன்னிக்கு தேதியிலே
மோடி, கஜ்ரிவால், சோனியா தான்.
அப்படித்தான் இல்லையா
எல்லா டி.வி. யும் சொல்லுது.
முக்கியமா ஐ.பி. என். டி.வி. சொல்லுது.
சரிதான்.
ஆனா இது நமக்கு வேணாம் ங்க ...
நம்ம இந்த இசை உலகத்துலேயே இருந்துடுவோம்.
மிக்க மிக்க மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteபல்லாண்டு வாழ்க...
வாழ்த்துக்கள் பல...
ஹஹஹா.. ரொமேண்டிக்கா ஆரம்பிச்சு வழக்கம் போல் அரசியலுக்குள் நுழைஞ்சுட்டீங்க..
ReplyDeleteமீனாட்சி பாட்டிக்கும் உங்களுக்கும் என் வணக்கங்கள்..!!
வாழ்த்துகள் சுப்பு தாத்தா!
ReplyDeleteஇன்று 46வது மணநாள் காணும் தங்கள் இருவரையும் வணங்குகிறேன்..என் பணிவான நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்!!!.. நீங்கள் இருவரும் எல்லா நலங்களும் பெற்று வளமோடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.. உங்கள் நல்லாசிகள் என்றென்றும் எங்களுக்குத் துணையாக இருக்க வேண்டுகிறேன்..
ReplyDeleteவிருந்து சூப்பர் (சோன்பப்டி செய்முறையைப் பதிவாப் போட்டுடுங்க என்ன!!..)நீங்க வோட் பண்ணின சோனியாவும், நான் வோட் பண்ணின சரத்தும் இறுதிப் போட்டிக்குப் போயிட்டாங்க!!. அந்த சந்தோஷத்தையும் கேக் வெட்டிக் கொண்டாடுவோம்!!.....
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் என் நமஸ்காரங்கள்... தங்களின் ஆசிகள் எங்களுக்கும் என்றென்றும் வேண்டும்..
ReplyDeleteசூப்பர் சிங்கர் பைனலில் திவாகரும்,சோனியாவும், பார்வதியும் என் சாய்ஸ் ...
பார்க்கலாம்..
இசைவான இசை உலகத்தில் நாம் இருப்பதே நமக்கு மகிழ்ச்சி ,ரசனையுடன் வாழ்வதே பேரின்பம் !
ReplyDeleteவாழ்த்து சொல்ல வயதில்லை ,வணங்குகிறேன் !
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்.
பதிவு, பாடல்கள் எல்லாம் அருமை.
இன்று 46வது மணநாள் காணும் தங்கள் இருவரையும் வணங்குகிறேன்.. உங்கள் நல்லாசிகள் என்றென்றும் வேண்டி விரும்புகிறேன்..
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துகள். உங்கள் இருவரின் ஆசீர்வாதம் எங்களுக்கும் தேவை.
ReplyDeleteஇந்த பதிவினை எனது இன்றுதான் (22.01.2014) எனது டேஷ்போர்டில் பார்த்தேன்! வாழ்த்துக்கள்! பெரியவர்கள் ஆசீர்வாதம்! மீனாட்சி பாட்டி – சூரி தாத்தா எங்கள் குடும்பத்தாரை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்!
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....!
இன்று போல் என்றும் இன்பமாய்,
எண்ணிய எண்ண மெல்லாம் ஈடேற
நோய் நொடியின்றி வளமாய்
வாழ வாழ்த்துகிறேன்.....!
தங்கள் நல்லாசி வேண்டி பணிகிறேன். தாத்தா பாட்டி.
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்....!
வணக்கம்
ReplyDeleteஐயா.
தங்களின் வாழ்க்கையில் என்றென்றும் புன்னகையுடன் மலரட்டும்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகளும் சொல்லிட்டு வணங்கிக்கறோம். ஆனானப்பட்ட இறைவனையே வாழ்த்தி வணங்கறச்சே சூரி சாரையும், மீனாக்ஷி அம்மாவையும் வாழ்த்தியே வணங்கலாம். தப்பில்லை. ஆப்பிள் பச்சடி புதுசா இருக்கே! ரெசிபி போடுங்க.
ReplyDeleteரொம்ப தாமதமாய் இன்னிக்குத் தான் பார்க்கிறேன், உங்க பதிவை. அப்புறம் இந்த சூப்பர் சிங்கர் எல்லாம் பார்க்கிறதில்லை; அதனால் அது குறித்து எதுவும் புரிஞ்சுக்க முடியலை. பையர் இங்கே வந்திருப்போப் பார்த்துட்டு இருந்தார். (அப்பாவோட போட்டி போட்டுக் கொண்டு பார்ப்பார்) :))))) நான் ஒன்பது மணி ஆச்சுன்னா சாமியாட ஆரம்பிச்சுடுவேன். ஆகவே சூப்பர் சிங்கரெல்லாம் சான்ஸே இல்லை! எதிலே வருது?
ReplyDeleteபடத்திலே பார்த்தேன் ஸ்டார் விஜயில் வருதா?? ஓகே, ஓகே!
ReplyDeleteதாத்தா ஷமிக்கணும் ,ஒருநா பிந்திட்டுது 'belated wishes.மாமியும் நீங்களுமா எங்கள ஆசிர்வாதம் பண்ணுகோ !
ReplyDelete46வது மணநாள் காணும் தங்கள் இருவரையும் மனதார பணிந்து வணங்குகிறேன்.. என்றென்றும் தங்களின் நல்லாசிகளை வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDeleteஅன்னை அபிராமவல்லி உடனுறை அமிர்த கடேஸ்வரர் தங்களுக்கு எல்லா மங்களங்களையும் அருள்வாராக!..
congratulations!
ReplyDeletesuper singer - is that a sewing machine?
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...