Pages

Saturday, December 14, 2013

டோண்ட் கிளிக் ஹியர்

இன்னா பாட்டி, தூக்கமே வல்லே..
ஏண்டா ??

இது அமெரிக்காவிலே டே டைம் பாட்டி.
இப்ப நீ      ஆராரோ ஆரீராரோ
பாடினா நான் எப்படி பாட்டி தூங்கறது ?
அந்த ஐ.பாடு லே கேம்ஸ் போடு.


டேய். கண்ணா எனக்கு தூக்கம் வருதுடா.
கொஞ்சம் படுத்துக்கொண்டு பாரேன். நான் நல்ல தாலாட்டு  பாடறேன்
உனக்கு தூக்கம் வல்லேன்னா அப்பறம் சொல்லு

சரி.   ட்ரை  பண்ணு.

  கண்ணே கண்மணியே கற்பகமே கனியமுதே
                            யார் அடிச்சு நீ அழுதாய்.
  (இத க்ளிக்குடா ராசா)
                            பாட்டி  அடிச்சாளோ உனக்கு பாலூட்டும் கையாலே...
                            அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே.
                            மாமி  அடிச்சா\ளோ உனக்கு மையூட்டும் கையாலே.





யாரும் அடிக்கல்லே...பாட்டி 
 இந்த பாட்டுதான் ரொம்ப போர் அடிக்குது.

இது ரொம்ப ஓல்டு லல்லபி சாங் பாட்டி.

நீ வேற பாட்டு போடு.  

ஏன் பாட்டி !! டு யூ ஹாவ்

வொய் திஸ் கொலை வெறி டீ  பாட்டு இல்லையா ?
(mob flash in Auckland,NS)

என் ராசா.. அதெல்லாமா இப்பவே வேணுமா டா !!!
புறக்கும்போதே வெறி வேண்டாம்டா கண்ணா
அதெல்லாம் தாத்தாவோட போகட்டும்டா 
இந்த பாட்டு கேளுடா ராசா.
 சித்ரா பாடுறாட .  சின்னக்குயில் சித்ரா.

சரி. போடு. 


ஓமனதிங்கள் கிடவோ ...
(WITH ENGLISH TRANSLATION)


நல்லாத்தான் ஸ்வீட்டா தான் பாட்டி இருக்கு.
பாஷை தான் கொஞ்சம் புரியல்ல.
பாட்டி

இன்னாடா ராசா..

ஐ. ஆம் ஹங்கிரி .

இப்பதானே டா நான் பாலு மம்மு ஊட்டிவிட்டேன்.

நௌ ஐ ஆம் ஹங்கிரி .
அந்த சாக்லேட் ஐஸ்க்ரீம் கொண்டாந்து தா. அத சாப்பிட்டுகிட்டே தூங்கறேன்.

ஐஸ் தொண்டை கட்டிகும்டா.

இன் அமெரிக்கா வீ ஹாவ் ஐஸ் க்ரீம் இன் விண்டர் ஆல்சோ பாட்டி. 
வேண்டாம்.  வேபார் பிஸ்கட் சாக்லேட் தா.

வேண்டாம்டா, . இந்த பொம்மை தரேன்.
பாத்துக்கினே தூங்குடா..

அந்த சாக்லேட் பொம்மை தா பாட்டி, . பாத்துகினே தூங்கிப்போறேன். 

டோண்ட் கிளிக் ஹியர் 
நன்றி: www.tamilboon.wordpress.com

பாட்டி, இந்த பொம்மைக்கு அந்த அர்லா பாலோன் லல்லபி  தான் மேட்ச் ஆகும். மம்மி  அந்த அயர்லாந்து பாட்டு போட்டு தூளி ஆட்டுவாங்க. 

தே !! இன்னாது.!! தாலாட்டுலே கூட ஐயர்லாந்து அய்யங்கார் லாண்டு தாலாட்டு அப்படின்னு கீதா ?

பாட்டி, அது ஐயர்லாந்து இல்லை, அயர்லாந்து . போட்டு பாரு. அப்பறம் நீயே அதை பாடுவே.***

இன்னமா தாலாட்டு !! எங்கன இருந்தாலும், அம்மா அம்மா தான்!!!
 தாலாட்டு பாடற விதமும் ஒண்ணுதான் போல இருக்கு.

பேராண்டி ராசா , நம்ம லதா தாலாட்டு பாட்டு கேளுடா.. இதத்தாண்டா உங்க மம்மிக்கு தாத்தா பாடுவாரு.




இது big baby lullaby பாட்டு . எனக்கில்லை பாட்டி.
மம்மி சொல்லி இருக்கா, தாத்தா பாடற தாலாட்டு வேறவாம். பாட்டி, அந்த மலர்ந்தும் மலராத பாட்டை பாடி பாரேன்.
அதுக்காவது தூக்கம் வருதா ன்னு பாக்கறேன்.



இதுக்குமாடா தூக்கம் வல்லே.. இன்னாடா செய்யச்சொல்றே..

அது என்ன பாட்டி அது ?
அத்தை மக அப்படின்னு அந்த பாட்டு லே வருது ??.
அவ யார்?  எங்க இருக்கா ?

கொஞ்சம் எங்கிட்ட கொண்டு வந்து காட்டேன் .
அவளை பாத்துகினே தூங்க முடியுதா ட்ரை பண்ணி பாக்கறேன்.

அட படவா ராஸ்கல்..!
 கல்ச்சரே மாறிப்போச்சு. என்ன செய்யறதுன்னே  தெரியல்லே +Geetha Sambasivam பாட்டி கிட்டே தான் அட்வைஸ் கேட்கணும் 
சரி, இந்த பாத்துட்டு போ..


பாட்டி, நான் தூங்கிட்டேன். நீ லைட் அணைச்சுட்டு தூங்கப்போ. காலைலே எழுந்துட்டு எனக்கு காம்பிளான் போட்டுத் தரணும்.


பதிவு ரொம்ப நீளம் அப்படின்னா +Vetha. Elangathilakam படிக்க மாட்டாக.
தி என்டு
  *******************************************************************************
***

Leanbhan, is an old Irish word for little child.

Lyrics:
Sleep, oh babe, for the red bee hums
The silent twilight's fall
Aoibheall from the gray rock comes
To wrap the world in thrall
A leanbhín ó, my child, my joy
My love and heart's desire
The crickets sing you lullaby
Beside the dying fire

Dusk is drawn and the green man's thorn
Is wreathed in rings of fog
Siabhra sails his boat till morn
Upon the starry bog
A leanbhín ó, the paly moon
Hath brimmed her cusp in dew
And weeps to hear the sad sleep-tune
I sing, my love, to you

Sleep, oh babe, for the red bee hums
The silent twilight's fall
Aoibheall from the gray rock comes
To wrap the world in thrall
A leanbhín ó, my child, my joy
My love and heart's desire
The crickets sing you lullaby

Beside the dying fire  

The whole world belongs to us. Every community, every faith, people of all age groups, rural or urban - they are all part of us and they all belong to us. The sense of the entire humanity being one family, of belonging to each other, is essential for us to have an ethical and just society. +Sri Sri Ravi Shankar 


11 comments:

  1. தாலாட்டு முழுசும் கேட்டா தூங்கிடுவோம்..ன்னு - கொஞ்சம் தான் கேட்டேன்!..

    எண்ணத்தைச் சொல்லனும்..ல்ல!...

    ஓமனதிங்கள் - உள்பட எல்லாமே .. அற்புதம்!.. இனிமை!..

    ReplyDelete
  2. ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இனி வரும் காலங்களில் தாலாட்டுப் பாட்டே மறைந்து போய்விடும்...குழந்தைகளை யாரோ வளர்த்து நம் கையில் கொடுக்கும் காலமாகலாம்...பல பாடல்களை நினைவூட்டியமைக்கு நன்றி... மலர்ந்தும் மலராத....அருமை...

    ReplyDelete
  4. அருமையான தாலாட்டுகளின் தொகுபுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. தாலாட்டுப் பாடல்களில் இளையராஜா பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் "ஏலே இளங்கிளியே..." இளையராஜாவும் பாடியிருப்பார். சுசீலாம்மாவும் பாடியிருப்பாங்க. மிக இனிமையான பாடல். தாலாட்டுன்னு இல்லைன்னாலும் குழந்தைப் பாடல். நினைவ்ஹ்ச் சின்னம் படத்தில் இடம்பெற்ற பாடல்.

    ReplyDelete
  6. ரசனையான தொகுப்பு அய்யா...
    அருமை...

    ReplyDelete
  7. அய்யா ஜோகாரி விண்டோ பதிவின் லிங்க் தந்தால் மகிழ்வேன்..நன்றி..

    ReplyDelete
  8. நாட்டுக்கு நல்ல மெசேஜ் தாத்தா!

    ReplyDelete
  9. மனதை தாலாட்டிய பதிவு

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!