மக்கள் டி.வி. லே மாலை நேரத்துலே இலக்கண இசைக்கு இடம் தந்து அந்த கர்நாடக இசையை மக்கள் மத்தியிலே கொண்டு செல்கிறார்கள்.
இதுவும் காபி தான். ராகமும் காபி.
. கர்நாடக இசையில் இந்த ராகத்துக்கு பெயர் மிஸ்ர காபி .
அது என்ன மிஸ்ர என்றால் என்ன அர்த்தம்?
கலப்பு ... !!! பாலுடன் டிகாஷன் கலந்தால் தானே காபி ? ஒரு வேளை சிக்கிரி அதிகமாக போட்டிருக்குமோ என்னவோ ?
சுத்தமான காபி எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன்.
அங்கே கலைமாமணி ஷோபனா ரமேஷ் என்னமா பாரத நாட்டியம்.ஆடுகிறார்கள் !! பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதாது.
Only +meena kavinaya Madam can confirm இது சாஸ்த்ரீய இலக்கணத்துக்கு உட்பட்டதா இல்லையா என்று... விஸ்வரூபம் படம் பார்த்தப்புறம் தாத்தாக்கு இப்ப எல்லாம் ஒடிசி டான்ஸ் தான் பிடிக்கும்
எதற்கும் ஒரு டிகிரி காபி குடித்துகொண்டே பார்ப்போம் கேட்போம் என்று
அடியே...ஒரு வாய் காபி தாயேன்...என்று
ஆத்துக்காரி கிழவியை கெஞ்சினேன்.
இப்ப தானே காபி கொடுத்தேன். அதுக்குள்ளே என்ன இன்னும் ஒன்னு ?
இத பாருங்க.. இப்போதைக்கு என்றாள் பார்யாள்.
திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையிலே என்னமா ஒரு தோட்டத்தை நிழற்படம் எடுத்திருக்காக..அது மாதிரி ஒரு தோட்டத்துக்கு உள்ளார போய் சைலண்டா உட்கார்ந்துக்கணும் . யாருகிட்டயும் பேசக்கூடாது. கண்ணை மூடிட்டு தியானம் பண்ணுங்க. முடியுதா ? எண்ணங்கள் வர்றது ஸ்டாப் ஆவுதா ? அப்படின்னு கொஞ்சம் பாருங்க.
அங்கே போய் கண்ணை மூடிக்கொண்டு இந்த மூச்சு பயிற்சி சொல்றாங்க பாருங்க... அதை கொஞ்ச நேரம் ப்ராக்டீஸ் செய்யுங்களேன்.
( என்ன தான் இந்த ஆர்ட் ஆப லிவிங் போலாம் என்றால் அங்கே சாதாரண ஒரு பிராணாயாமம் சொல்லி கொடுக்க 1500 ரூபாய் தரச் சொல்கிறார்கள். ஒரு நோட்டிஸ் பார்த்தேன். பிராணனே போய் விடும் போல் இருக்கிறது. )
அடடா..என்ன ஒரு சூப்பர் தோட்டம் ...இருந்தாலும் ஒரு வாய் காபி தாயேன்.!!
அத குடிச்சு விட்டு அந்த பிராணாயாமத்தை சுறு சுறுப்பாக செய்யறேன்.
ஹூம் ஹூம். இந்த கிழவி தரமாட்டாளே..
When nothing is possible, kneel down and pray to God
என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.
சில சமயங்களில் நிகழ் காலம் நிம்மதி தராத போது பழைய நினைவுகளில் பசுமையைத் தேடித்தான் போக வேண்டி இருக்கிறது.
நல்ல காபி க்கு உதாரணம் ஒரு அனாலஜி அல்லது சிமிலி சங்கீதத்திலே ஒரு பைரவி ராகம் தானே.
அத சொன்னால் இந்த கிழவி,
பைரவி யா ? யாருங்க அந்த பைரவி என்று மூஞ்சியை ஒரு சந்தேஹமா
வைத்துக்கொண்டு
என்னை பார்க்க,
இத பாரு இது தான் அந்த பைரவி என்று நான் சொன்னால் ...
நம்ப மாட்டேன் என்கிறாளே...?
நீங்க வந்து கொஞ்சம் சமாதானம் சொல்லுங்களேன்.
சங்கீதம் தான் தெரியல்ல, கொஞ்சம் இங்கிதமாவது வேண்டாமோ..?
அது என்ன இங்கிதம் ?
தெரிஞ்சவங்க சொல்லுங்க...
ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteரசித்தேன் தாத்தா ... :)
ReplyDeleteஆஹா பரப் பிரம்மம் நான் என் சுப்புத் தாத்தாவைக் கண்டுகொண்டேனே ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் இன்னும் நூறென்ன 108 வயசுவரைக்கும் அவர் வாழ வேண்டும் !!
ReplyDeleteகாபி சுவைத்தது...!
ReplyDeletessssuuppeerrrrrr. nameskaram for the super coffee.
ReplyDeleteஇப்புவியில் காப்பிபைர விக்கிணை யாதெனச்
ReplyDeleteசுப்பையா தேடல் சிறப்பு!
மிக மிக அருமை!
காபி + பைரவி + பதிவும்.. ரொம்பவே நானும் ரசித்தேன் ஐயா!
தஞ்சாவூர் டிகிரி காபி குடித்த மாதிரி இருக்கிறது ஐயா.
ReplyDeleteநன்றி பகிர்விற்கு.
காபி பிரமாதம். ரசித்தேன்.
ReplyDeleteகாபியும் பைரவியும் கலக்கல்.
ReplyDelete'எங்கள் ப்ளாக்'கின் 'ஓடிப்போன உறவு' கதையில் உங்களிடம் ஜீவி ஸார் ஒரு கேள்வி கேட்டிருக்கிறாரே... பார்க்கவில்லையா!
Kapi pramatham rasithen....Bhiravi raga alapanai was superb by Ranjani Gayathri
ReplyDeleteVery nice bhairavi by Ranjani Gayathri
ReplyDeletepure filter coffee :) அருமை
ReplyDeleteதங்கள் எல்லா பதிவுகளும் super :)
pure filter kaapi!
ReplyDeleteமிகவும் அருமை...