Pages

Saturday, June 29, 2013

குருவாயூரப்பா !! குருவாயூரப்பா !!

 குருவாயூரப்பா !! குருவாயூரப்பா !!

  இன்று மாலை மார்கன் வில்லியில் இருக்கும் குருவாயுரப்பன் கோவிலுக்குப் போவோம் என்று மாப்பிள்ளை சொன்னதுமே

    நாங்கள் இருக்கும் மிடில்செக்ஸ் கவுண்டியுடன் சேர்த்து  ஒரு 16 சபர்ப் களுக்கு நியூ ஜெர்சி மாநிலத்தில் இன்று டோர்னடோ TORNADO  எச்சரிக்கை.

 மாலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை.புயல் ஒருஅதிக பட்சம் 300 மெயில் வேகத்தில் அடிக்கும். மேக்சிமம் ஒரு அஞ்சு நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை தான். அதுக்குள்ளே எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போய்விடும், என்று டோர்னாடோ என்றால் என்ன என்று தெளிவாக்கினார்.

 அது வந்தால் என்ன செய்யவேண்டும் என்றேன். வீட்டுக்குள் இருந்தால் பேஸ்மெண்டில் போய் இருக்கலாம்.

வெளிலே கார்லே போய்க்கொண்டு இருந்தால் ?  என்று இழுத்தேன்.
 குருவாயுரப்பன் காப்பாத்துவான் அப்படிங்கற நம்பிக்கை இருக்கணும்.  என்றார் அவர்


அப்படின்னு பாடிண்டு காரில் கிளம்பினோம்.







கோவிலுக்கு பக்கத்தில் வந்தாகி விட்டது.




  ( துளசி அப்படின்னு நினைச்ச உடனே மேடம் துளசி கோபால் அவர்கள்  நினைவு வந்தது. அவர்களுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் )       

* கோவில் பக்கத்திலே வந்த உடனே ஜன்மமே சாபல்யம் ஆன மாதிரி ஒரு பீலிங் வருகின்றது
.குருவாயுரப்பா, குருவாயூரப்பா ..  

இந்த மாதிரி ஒரு கோவிலை குருவாயூர் லேந்து கண்டம் விட்டு கண்டம் வந்து ஸ்தாபிதம் பண்ணனும் அப்படின்னு சொன்னா அதுக்கும்    அந்த குருவாயுரப்பன் கேசவன் அருள் இருந்தால் தான் சாத்தியம்.            




கோவில் முழுவதும் மார்பிள் மாயம்.  வழுக்கோ வழுக்கு அப்படின்னு வழுக்கறது   கண்ணாடி போல தரை எல்லாம். காலை வைக்கவே கூசறது.  கோவிலுக்குள்  போட்டோ வீடியோ எதுவுமே எடுக்கக்கூடாது .  

***  த்வஜஸ்தம்பம்.***
    கோவிலில் மெயின் DEITY குருவாயூரப்பன் சாமி தான். தான்.


  அந்த சன்னதி லே ஆரத்தி, அர்ச்சனை எல்லாமே நடந்து கொண்டு இருந்தது.  அர்ச்சகர்கள் இரண்டு பேருமே நம்ம தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மாதிரி தான் இருந்தார்கள்.இருந்தாலும், மலையாளம் சம்சாரித்தார்கள். தெலுங்கு, தமிழ் மொழிலேயும் பக்தர் பலர் பேசினது காதில் விழுந்தது

                                         ******************************

.  தீப ஆராதனை . சூடம் ஏற்றுவதில்லையாம். சந்தனம் ஒரு கிண்ணத்திலே . ஒரு விரலிலே தொட்டு நானும் நெத்தியிலே இட்டுக்கொண்டேன். பிரசாதம் திராட்சை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஒரு கைப்பிடி அளவுக்கு கலவை எடுத்துக்கொண்டேன்.    இது மெட்ராஸ் இல்ல, அகத்தீஸ்வரர் கோவிலும் இல்லை. அமேரிக்கா , கொஞ்சமாவது டீசெண்டா இருங்கோ...  என்று முணுமுணுத்தாள் தர்ம பத்தினி. 

                                                    ****************************
  இடது கை பக்கத்திலே விநாயகர்,  ( மூலவர் பக்கத்திலே உத்சவ விநாயகர் சில்வர் மூஞ்சூர் மேலே அமக்களமா உட்கார்ந்து இருக்கார்./ )  இடது பக்கத்துலே முருகபெருமான் வள்ளி தெய்வ யானை சமேதரா இருக்கார்.   

  சிவ பெருமான் அருவாய் இருந்து என்னை மாதிரி பக்தர் எல்லாம்
  அபிஷேகம் செய்யும்  நீரெல்லாம்  தனது மேலே கங்கையாய் பொழிய அருள் புரிகிறார்.
   பக்கத்திலே அமர்ந்திருக்கும்  அம்பாள் அழகோ அழகு. ஜொலிக்கிறாள். அருள் பாலிக் கிறாள்.


 நம்ம இளைய ராஜா
 பாட்டு பாடினாரோ. அப்படி நினைக்கற அளவுக்கு அம்பாள் அவ்வளவு இன்ஸ்பயரிங்  

  குருவாயுரப்பன் சன்னதியைச் சுத்தி வரும்போது பெருமாள்


சன்னதி வருகிறது. ஓம் நமோ நாராயணாய என்று ஒலித்துகொண்டே இருக்கிறது. பெருமாள்  முன்னே கருடாழ்வார்  அமர்ந்து இருக்கிறார். 



அங்கம் ஹரே புலக பூஷன மாஸ்ரயந்தி  

 பக்கத்துலே ஆண்டாள் ஆண்டு கொண்டு இருக்கிறாள்   


**பதினெட்டாம் படி ஐயப்பனும் கோலா கலமா வீற்று இருக்கிறார்.   சாமி சரணம் அய்யப்ப சரணம். சாமியே சரணம் ஐயப்பா.


 கொஞ்சம் பக்கத்துலே ராமர் சன்னதி. ராம பட்டாபிஷேகம்.


கண்முன்னால்.   ராதே கிருஷ்ணன் மார்பிளில் மயக்குகிறார்.

 ராதே ராதே என்று கிருஷ்ணன் குழல் ஊதுவதை நிறுத்தாமல் இருக்கிறார்.

  இந்த பக்கம் வந்தா அசாத்ய சாதக சுவாமி  இராம பக்தன்  ஹனுமான். ஆன்மீக பதிவாளர்களில் முதலானவர் முக்கியமானவர்


திருமதி இராஜேஸ்வரி அவர்கள் இந்த கோவிலுக்கு என்றாவது ஒரு நாள் வருவார்கள். ஹனுமானின் பெருமையை விளக்குவார்கள்.  

 சுவற்றில் BHAGAVATH GEETHA

முக்கியமாக பக்தி மார்க்கத்தைச் சொல்லும் இரண்டாம் அதிகாரம்.  தினம் படிக்கவேண்டிய பல ச்லோகங்கள் அழகாக பொறிக்கப்பட்டு இருக்கின்றன.    

ஒரு முறை சுற்றி வந்தா அங்கே நவ க்ருஹ  சன்னதி.    
பக்கத்திலே கால பைரவர்.      
தேய் பிறை அஷ்டமி அவருக்கு அபிஷேகம்.


 எல்லா சன்னதிகளிலும் ஒரு உண்டியல் பெட்டி இருக்கிறது.  பக்தர்கள் தட்டில் போடும் எந்த டாலரையும், அர்ச்சகர்கள் உண்டியலில் போட்டு விடுகின்றனர்.   எல்லாரும் தட்டிலே ஒரு டாலர், இரண்டு டாலர் நோட்டா போடுகிறார்கள்.    பாலாஜி சன்னதிலே தீர்த்தம், சடாரி சாதிக்கிறார்கள்.     

 **********************************************************************

 மெயின் ஹாலை விட்டு கொஞ்சம் வெளிலே வந்தா அங்கே நைவேத்தியம் செய்த பொங்கல், சக்கரை பொங்கல், எல்லாம் பாத்திரங்களிலே .  பக்கத்திலே பிளேட் ஸ்பூன் எடுத்து சாப்பிடறோம்.  வெண் பொங்கல் நல்ல சூடாகவே இருக்கிறது.  இன்னொரு ஸ்பூன் எடுத்து சாப்பிடலாம் என்று நினைக்கிறேன். அத்தனை சுவை.  


 அலுவலக பக்கத்திலே ஒரு மேசையில் பட்டு புடவை, பட்டு வேஷ்டி, அங்க வஸ்திரம், இத்யாதி, இத்யாதி, ஒரு பத்து பதினைந்து அடுக்கி வைத்து இருக்கிரார்கள்.   பெருமாளுக்கு தாயாருக்கு சாத்தியத்தை எல்லாம் நமது கோவில்களில் ஏலம் போட்டு விற்றுவிடுவது அல்லது வேண்டியவர்களுக்கு இலவசமாக தருவது வழக்கம். இவை ஆலய நிர்வாகத்தால் புதியதாக பக்தர் சௌகரியத்திற்காக வாங்கி வைத்து இருக்கிரார்கள்.  பட்டு புடவை விலை 500 டாலர். ( இந்திய மதிப்பு ரூபாய் 30000 )  எல்லா நன்கொடைகளுக்கும்  வருமான விலக்கு தரப்படுகிறது.                 



  கோவிலுக்கு வெளியே வந்து ஒரு வலம் வருகிறோம். மழை பிடித்துக்கொள்கிறது.  காரை நோக்கி விரைகிறோம்.           குருவாயூரப்பனை நோக்கி மனம் விரைகிறது.          உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா ?   கடந்த ஜூலை மாதம் நடந்த கும்பாபிஷேக காட்சி இது.     மக்கள் வெள்ளம். குருவாயூரப்பா ..   

ஐயப்பா ஐயப்பா 
 என மக்கள் குரல்.    கோலாட்டம்    முழுவதையும் பாருங்கள்.         தொடர்ந்து நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் வந்திருந்த குழந்தைகள் நடத்திய ஒரு நிகழ்ச்சி.     பார்க்க பார்க்க ஆனந்தம்.  

   சும்மாவா சொன்னார்கள்.     குழந்தைகள் நமது தெய்வங்கள்.     அவர்கள் நன்மை தான் நமது இன்பம். அவர்களது எதிர்காலம் தான் ஒவ்வொரு பெற்றோரின் லட்சியமும் கூட.      

 குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.     
       
 கடைசியில் குருவாயூரப்பனைக் காணுங்கள்.

அடுத்த தடவை அமேரிக்கா வரும்போது எனது தங்கை பிள்ளை மதன் தனது செல்வங்களோடு வந்து இங்கு குருவாயூரப்பனை தரிசிப்பார் என்று மனசிலே ஒன்று சொல்கிறது.

பாஸ்டனுக்கு போய்விட்டு நீங்கள் திரும்பின உடன் இன்னொரு தடவை இங்கு வருவோம் என்றார் மாப்பிள்ளை.  எனது பேத்தி சஞ்சிதா இந்த தடவை எங்களுடன் வரவில்லை.  சம்மர் ஸ்கூல் இப்பொழுது.  யோகா, ம்யூசிக், டீம் மெனேஜ்மெண்ட் என்று பல நிகழ்ச்சிகள்.  அடுத்த வாரம் நியூ யார்க் சர்ச்சில் எனக்கு பிடித்த பாடல் அவள் அந்த அவையில் பாட ஏற்பாடு ஆகியிருக்கிறது.  அது முடிந்ததும் அவளையும் கூட்டிக்கொண்டு ஜூலை இரண்டாவது வாரம் மறு முறை வருவோம் என்றார். எஸ் என்றேன்.

  என் பெண் சொன்னாள். 
வீட்டிலேயே நெய்வேத்தியம் பொங்கல் வடை ஆகியவை செய்து கொண்டு வரலாமாம். இங்கு வரும் பக்தர்களுக்கு தந்து அவர்களுடன் நாமும் குருவாயூரப்பனை இன்னும் ஒரு முறை காண வேண்டும்.
அவனைக் காண கண் கோடி வேண்டும் . திரும்பி வர மனதே இல்லை. 

 வெளியிலே பெரும் மழை. 
மனசுக்குள்ளே அருள் மழை.      

1 comment:

  1. Nicely written with slight fun. Took me along with you to the temple (maanaseegamaaga). very divine.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!