Pages

Friday, June 14, 2013

எழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.

எழுபத்திரண்டு வயசுலே ஒரு ஹனிமூன் பயணம்.
கிட்டத்தட்ட ஒரு அம்பது வருசமா நாங்களும் போகணும் போகணும் அப்படின்னு இருந்த ஹனி மூனுக்கு ஒரு நேரமும் வந்தது.
வாழ்விலே எங்கே நிற்கிறோம் ? போய்க்கொண்டே இருக்கிறோம். திரும்பி பார்த்தால் அப்பா !! வாழ்வின் மாலைக்கு வந்துவிட்டோம் எனத் தெரிகிறது

ஒரு நாளைக்கு மாலையில் இப்படி கொஞ்ச தூரம் இந்த நியூ ஜெர்சி சௌத் ப்ரன்ஸ்விக் பகுதியில் இருக்கும் மன்மௌத் ஜங்க்ஷன் சபர்ப் அருகே நடப்போம்  ஹனி மூன் போனதே இல்லையே என்ற ஆதங்கத்தை தீர்ப்போம் என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டே இந்த கிழத்தை வா..வா வசந்தமே என்று அழைத்தேன்.
சும்மா  பாடிகொண்டே இந்த  மாலையிலே அழகு மிகு ச்வர்கத்திலே
எழுபது வயசிலே பார்க்காததை 
அடுத்த எழுபது நிமிசத்திலே பார்க்கலாம் என்றேன். 
PLEASE CLICK ON THE TITLE OF THE SONG.


 இப்ப நல்ல தூக்கம் வருதே .. என்றாள் . இவள்.  
அதெல்லாம் அப்பறம்
. இப்ப பாரு உன்னைத்தான் சொல்றேன். 
இது ஒரு பொன் மாலை பொழுது.

இப்படி ஒரு வாக் போவோம். போகும்போது ஒரு பாட்டு பாடேன்.என்றேன். 

கனவெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். இப்ப கொஞ்சம் அப்படியே காத்தாட வெளியே போவோம் அப்ப தான் பாட்டு உருப்படியா வரும். சரி.. வா  என்றேன். .காற்று வெளியிடை கண்ணம்மா உன் காதலை எண்ணி எண்ணி நான் உருகுகின்றேன்.
இவளோ..சீ ..ஆன வயசுக்கு அறிவே இல்லையே...   எனச் சீறுகிறாள். 
நான் என்ன பண்ணட்டும் ?வயசு என்னைக் கேட்டுண்டா கூடறது ?
நான் காத்து வாங்க போனேன்.
ஆனா கழுதை தான் வாங்கி வந்தேன்.என்று பாட துவங்கினேன்
என்னங்க.. காத்து வாங்கப்போனேன். கவிதை வாங்கி வந்தேன். அப்படின்னு தாங்க எம்.ஜி.ஆர். படத்து கவிதை.சொல்லி சிரிக்கிறாள். இவள். இரண்டாந்தரம் டென்சர் போட்டப்பறம் சிரிக்கிறதை ஒரளவுக்கு பார்க்க முடிகிறது.
அது அவங்க கவிதை நெசந்தான். நம்ப கதை வேற விதமா ஓடிப்போச்சே. அப்ப எல்லாம் காதலிக்க நேரமில்லை ங்க. கல்யாணமா, உடனே கையிலே ஒன்னு வயத்திலே ஒன்னு அப்படின்னு ஆயிபோச்சு இல்லையா...

இருந்தாலும், துவக்கத்திலே நாளாம் நாளாம் திருநாளாம்.அப்படின்னுள்ளே ஆரம்பிச்சபோது இருந்துச்சு.
இது போலத்தானே ஒரு ஐம்பது வருசத்துக்கு முன்னாடி காத்து வாங்க போன பொழு து தானே உன்னைப் புடிச்சேன். அது நினைவுக்கு வந்தது .  என்ன பாட்டு உன் நினைவுக்கு வருது. ?
நான் உன்னை நினைச்சேன். நீ என்னை நினைச்சேன்.
அந்த நினைவே ஒரு பறவை அப்படின்னு தோனுச்சு இல்ல..
அந்த காலம் எல்லாம் திரும்பி வராதுங்க. வந்தாலும் பேச முடியாதுங்க.
என்ன நினைச்சே..
நான் எங்கே என்ன பேசினேன் ?  அதுவும் அந்தக் காலத்துலே இப்ப மாதிரி எல்லாம் பேச முடியுமா என்ன ?  ஒரு பாட்டு நன்னா நினைவு இருக்குங்க...
நான் பேச நினைத்ததெல்லாம் நீ பேச வேண்டும்.
பேசுவதே அப்ப முடியாதுங்க.. என்ன பேசுவதா இருந்தாலும் ஒரு ஊமை ஜாடைலே தான் சொல்லியாவனும். அத நீங்களும் புரிஞ்சுப்பீக..
கண்ணாலேயே பேசிபேசி என்னை கொல்லாதே.  
 அப்படின்னு ஒரு நாளைக்கு நீங்க பாடித்தானே ....பெரிய ரகளை ஆச்சே..
ஹூம்..அதெல்லாம் அந்த காலம். இப்ப எல்லாம் நம்ம கண்ணுக்கு நேராவே கொஞ்சுறாங்க பாருங்க.. 
ஏன் பொறாமையா இருக்கா ?
எனக்கு எதுக்கு பொறாமை ? காசில்லாம சந்திரமுகி பார்க்கலாம் இல்லையா !!
கொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம்.  கொஞ்சி பேசலாமா.  . 
 வூடு வந்துடுச்சுங்க..    நாளைக்கு பேசலாங்க...
இன்னொரு தரம் திரும்பி போவோமா ?
ஒன்னும் வேண்டாம்.  கொஞ்சம் மௌனமா வாங்க..
 அப்படியே காரை ஓட்டிட்டு இன்னொரு தரம் வாரேன் .
சரி. 
மலரே மௌனமா...  என ஆரம்பித்தேன் 
அட கொஞ்சம் மெதுவா ஓட்டுங்க...  இது ரைட் ஹாண்ட் டிரைவ் வேற.
அப்படியே போயிட்டே இருக்கலாமா அப்படின்னு தோணுது இல்ல.
இன்னிக்குத் தாங்க ரொம்ப நாளா சொல்லனும்னு ஒன்னு இருந்துச்சு என்ன அது ..? என்ன இருந்தாலும்.....  அது என்ன " என்ன இருந்தாலும் " அது சும்மனாச்சும் ஒரு பேச்சுக்குங்க.. சரி சொல்லு. ஒரு பாட்டு பாடனும் போல இருக்குங்க. சரி. பாடு. மாசிலா உண்மை காதலே.
நீ பயப்படவேண்டிய தேவையே இருந்தது இல்லையா. செல்வம் எப்பவுமே வந்ததில்லை. ஆனா, குழந்தைங்க தான் நம்ம எல்லா செல்வமுமே. பாரு எப்படிப்பட்ட ஸ்வர்க்கத்தை நமக்கு அள்ளித் தந்து இருக்காங்க..
மங்கியதோர் நிலவினிலே....
அப்படின்னு மறுபடியும் ஆரம்பித்தேன். சித்த பேசாம இருங்க... இது மூன் இல்லை சன்    ....  அப்படின்னு சொல்றாள் பத்னி . இரவு எட்டு மணி ஆயிடுத்து.  இப்ப போயி சன் இருக்குமா என்ன ? இது கூட தெரியாத பைத்தியம். பைத்தியம்.  நான் சத்தம் போட்டேன். யார் பைத்தியம்.  நீங்க பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம். அது கிடக்கட்டும். நமக்கு ஊர் புதுசு. இல்லையா.  தெரிஞ்சவங்ககிட்ட கேட்போம். அப்படின்னு சமாதானம் பேசி அவளை சைலண்ட் ஆக்கினேன்.
வழிலே போற நம்ம ஊர்க்காரன் ஒருவனை மடக்கி சார் சார் என்றேன்.

 என்ன என்று முறைத்தான்.

 சார் எனக்கும் என்  மனைவிக்கும் சண்டை.

 எனக்கென்ன என்றான்.

 இல்லை சார் ..

 அப்ப என்ன ? 

இது சன்னா மூனா என்று ஆகாசத்தை காட்டினேன்

. சாரி.. நான் ஊருக்கு புதுசு. 
 என்று சொல்லி விட்டு 
அவன் 
அவன் வழி போனான்.

4 comments:

  1. ஹா ஹா .. இப்படி வாய் விட்டு சிரித்து எவ்வளவு நாளாச்சு ...
    படிச்சுக்கிட்டே சிரிக்கிறது ரெம்ப ஆனந்தமான உணர்வு ..
    அதை ஔன்பவிக்க வைத்ததற்க்கு நன்றிகள் பல ..

    ...சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்க சிர்க்க சிரிப்பு வருது...

    ReplyDelete
  2. ஹா ஹா .. இப்படி வாய் விட்டு சிரித்து எவ்வளவு நாளாச்சு ...
    படிச்சுக்கிட்டே சிரிக்கிறது ரெம்ப ஆனந்தமான உணர்வு ..
    அதை அனுபவிக்க வைத்ததற்க்கு நன்றிகள் பல ..

    சிரிப்பு வருது சிரிப்பு வருது
    சிரிக்க சிர்க்க சிரிப்பு வருது



    ReplyDelete
  3. தங்கள் சந்தோஷமும் உற்சாகமும்
    இப்போது தங்கள் பதிவைப் படிக்கிற
    அனைவருக்குள்ளும்...

    தங்களுடன் சென்னையில் சில நிமிடங்கள்
    இருந்தாலும் தங்களுடன் இருப்பது
    எத்தனை சுகமானது சுவையானது
    என்பதை அனுபவித்தவன் நான்

    மாமி கொடுத்து வைத்தவர்கள்

    வாழ்த்துக்கள்.....

    (மனத்தளவில் நீங்கள் எனக்கு நிச்சயம்
    இளையவர்தான் )

    ReplyDelete
  4. அருமை. அனுபவப் பகிர்வோடு பாடல் தெரிவுகளும் அருமை. ஒளிப்படங்கள் கூட ரசிக்க வைத்தன. வாழ்த்துக்கள். என் தளத்தில்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays http://newsigaram.blogspot.com/2014/04/100happydays.html

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!