Last Saturday, we started on a spiritual Tour .
மான் ஆட மயிலாட மங்கை மீனாட்சியுடன் நானுமாட |
இன்னிக்கு சனிக்கிழமை. வாங்க.. ஒரு ஆன்மீக பயணம் போவோம் என்று சொன்னார் எனது மூத்த மாப்பிள்ளை. ஆஹா..ஆஹா என்று ஆரவாரம் செய்துகொண்டே கிளம்பினேன்.
ரொம்ப தூரமா என்று ஸ்டார்டிங்கிலெயே ட்ரபிள் கொடுத்தாள்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய், நீ வாராய் என்று அவளை கெஞ்சாத குறையாய் ஒரு வகையாய் காரில் ஏற்றினேன்.
அர்ஷ வித்யா குருகுலம், சேலர்ஸ்பர்க், பென்சில்வேனியா
குரு தக்ஷிணாமூர்த்தி ஆலமரத்தடியிலே அமர்ந்திருக்கும் காட்சி காணுவோம்.
அதன்பிறகு சிருங்கேரி சாரதாம்பா மந்திர் செல்லுவோம்.அதன் பின்னே நேரம் இருந்தால் சாயீ பாபா ( சீரடி) மந்திருக்கும் செல்லுவோம். என்றார்.
பெல்ட் போட்டுக்கோ என்றாள் என் பெண்
. நாப்பத்தி அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எனக்கு உங்க அம்மா பெல்ட் போட்டு விட்டாச்சு. என்றேன்.
பேத்தி ஹா ஹா ஹா .
என நினைத்துகொண்டேன்.
சென்னையில் உள்ளவர் ஸ்வாமினி சத்யவ்ரதானந்தா அவர்கள்.
சென்னை தி. நகர், கேசரி வித்யாலயாவில் நடக்கும்அவர்களது வேத வகுப்புகளுக்கு தொடர்ந்து 2007,2008, ஆண்டுகளில் சென்று கொண்டு இருந்தேன். பின்னால் பல காரணங்களால் தொடர இயலவில்லை.
அர்ஷ வித்யா குருகுலம்
குரு தக்ஷிணா மூர்த்தி
ஆலமர் கடவுள்
ந ஹி ஞானேன சத்ருசம் பவித்ரம் இஹ வித்யதே
அறிவை விட புனிதம் கண்முன் காண்பது ஒன்றும் இங்கில்லை.
na hi gnane na sadhrusam pavithram iha vidyathe.
There is nothing that is purer than Knowledge.
குரு பிரும்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மகேச்வரஹாகுரு சாக்ஷாத் பரபிரும்ம தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ.
GURU BRAHMA GURU VISHNU GURU DEVO MAHESWARAHA
( கிளிக்கவும். )
GURU SAAKSHAATH PARABRAHMA THASMAISREE GURAVE NAMAHA.
தாத்தா என்ன சொல்றார் என்று கேட்டாள் என் பேத்தி.
அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சாமி கிட்ட சொல்வாரு
மூட் வந்திடுச்சுன்னா ஒரேடியா பாட ஆரம்பிச்சுடுவாரு .
அதுவும் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தா மணிக்கணக்கில் .அப்படின்னு இவள் அதுக்கு பதில் சொல்றாள். .
இந்த குருகுலத்தை நிறுவியவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இந்து தர்மம் என்ன , என்ன இல்லை என்பதை சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
அதுவும் இரண்டு பேர் பக்கத்தில் இருந்தா மணிக்கணக்கில் .அப்படின்னு இவள் அதுக்கு பதில் சொல்றாள். .
இந்த குருகுலத்தை நிறுவியவர் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள். இந்து தர்மம் என்ன , என்ன இல்லை என்பதை சொல்வதை கேட்டுகொண்டே இருக்கலாம்.
விபூதி, குங்குமம், சந்தனம் என்று பிரசாதங்கள் தட்டுகளில்
சம்ஸ்க்ருதம் சொல்லிகொடுக்கும் ஆசிரியர் ஒருவர் கண் முன் வருகிறார்.
கோவையைச் சேர்ந்தவராம். சுப்பிரமணியம் என்று பெயராம். அவர் இந்த குருகுலத்தில் காலை முதல் மாலை வரை நடக்கும் எல்லாவற்றையும் பற்றி விளக்குகிறார்.
எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியும் என்று எனது மாப்பிள்ளை சொல்ல, இவரோ சம்ச்க்ருதத்திலே பேச ஆரம்பித்தார். நமது மொழி இருக்க ஆங்கிலம் எதற்கு என்று வடமொழியில் துவங்க, எனக்கு நன்றா புரிந்தாலும், அதற்கு, திக்கி திக்கி ஒவ்வொரு வார்த்தையாக சம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
நீங்கள் தமிழ் நாடு தானே. தமிழிலே பேசுவோமே..என்றேன். ஆஹா. என்றார்.
நமது பாரம்பரியங்களை பண்பாடுகளை மொழியை கலாசார நிகழ்ச்சிகளை இந்தக்காலத்து குழந்தைகளுக்கு போதிக்கும் ஆஸ்ரமம் இது.
கட்டணம் எதுவும் இல்லை. உணவு தங்கும் இடம் உட்பட. வருபவர்கள் ஏதேனும் நன்கொடைகள் தந்தால் நன்கொடைகளை பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் தருகிறார்கள்.
இந்த குருகுலம் எல்லோருக்குமே உடல் நலம் குறித்த புது கலையை கற்று கொடுக்கிறது.
போடோபயடன் தெரபி என்று இதை சொல்கிறார்கள்.
உடம்பிலே ஏகப்பட்ட செல்கள் வெளிச்சத்தை அவ்வப்போது வெளிவிடுகின்றனவாம்.
உடம்பில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் உயிர் அணுக்கள் வெளியிடும் மின்சார சக்தி வெளிச்சத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்ட செல்களை குணப்படுத்த இயலும் என இவர்கள் சொல்கிறார்கள். கேன்சர், ஆஸ்துமா, போன்ற வியாதிகள் குணமாகும் என்று சொல்கிறார்கள்.
மேறகொண்டு என் மனைவி தொடருகிறாள்.
அந்தப்பக்கம் என் பெண்ணும் மாப்பிள்ளையும் அர்ஷ வித்யா என்றால் என்ன என்று அந்த போர்டை உத்து பாக்கறாங்க.
இவரு, இந்த பக்க டைனிங் ஹாலிலே என்ன மெனு அப்படின்னு
உத்து பார்த்துகிட்டு இருக்காரு.
எனக்கு சிரிப்பு தான் வந்துகிச்சு. சத்தமா சிரிக்க முடியுமா ?
இருந்தாலும் இவரு நான் சிரிக்கிறத பாத்துட்டாரு. பாயசம்,
என்ன சிரிக்கிற ? என்றார்.
வயிறு முக்கியமில்லையா. என்றேன்.
ஆமாம். ஆமாம். எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம். பப்ளிக்கா ஆமாம் போட்டார்.
இன்னிக்கு என்ன அன்ன தானம் ? என்று பார்க்கு முன் ,
இன்னிக்கு என்ன அன்ன தானம் ? என்று பார்க்கு முன் ,
இரண்டு சப்பாத்தி,சாதம், ரவா கேசரி, சாம்பார் , பருப்பு,உருளை பொரியல் ,
பாயசம், தயிர், இத்தனையும் இரண்டு பேப்பர் ப்ளேட், கப், இவற்றில் ரொப்பி, எங்க முன் கொண்டு வைத்தார் .மாப்பிள்ளை.
அடுத்தது சொல்வது நான்.
அகண்ட மண்டலாகாரம் என்று ஆரம்பித்தேன்.
குரு க்ஷேத்திரத்திலே குரூ ஸ்தோத்ரம் கொஞ்சமாவது சொல்லணும் இல்லையா ?
அடுத்தது சொல்வது நான்.
அகண்ட மண்டலாகாரம் என்று ஆரம்பித்தேன்.
குரு க்ஷேத்திரத்திலே குரூ ஸ்தோத்ரம் கொஞ்சமாவது சொல்லணும் இல்லையா ?
அக்கம் பக்கத்திலே எல்லாமே உங்களை பாக்கிறாங்க.
முதல்லே சாதம் ஆரிப்போரதுக்கு முன்னாடி சாப்பிடுங்க. ஒன்னரை மணிக்கு ஹாலை மூடிடுவாங்க....
மாமா !! மெதுவா சாபிடுங்கோ.
நல்ல ஹைஜீனிக் உணவு. வீட்டு சாப்பாடு மாதிரியே இருக்கு இல்ல. என்றார் மாப்பிள்ளை.
ஆமாம்.ஆமாம். அந்த பாயசம் தீந்து போச்சா இன்னும் இருக்கா ?
என்ன விஷயம் ! ஏற்கனவே தான் இரண்டு கப் குடிச்சாசே !! இவள் இன்டர்ரப்ட் செய்தாள்.
இல்ல. ரொம்ப நன்னா இருக்கு. பார்செலா எடுத்துண்டு போனா போற வழியெல்லாம் குடிச்சுண்டு போலாம்.
போற வழிக்கு புண்ணியத்தைத் தேடணும் அப்படின்னு சொல்லிட்டு வந்த மனுஷன் இங்கே என்ன தேடறாரு, பேசறார் பாத்தியா நீ ?
என்று என் மகளைக் கெட்டாள் வீட்டு எசமானி.
என்ன நல்லா வந்திருக்கா அப்படின்னு போடோ எடுத்த பின்னே கேட்டேன்.
ஆஹா. கோவில் மிக அழகா வந்திருக்கு...என்றார் இவர்.
நான் ?
என்று பாடறாரே. பொது இடம் அப்படின்னு தெரிய வேண்டாமோ ?
இந்த ஆசரமத்திலே ஒரு மெடிடேஷன் சென்டர் இருக்கிறது. அதைத் தவிர சின்மயானந்த ஆஸ்ரமம் வெளியிட்ட பல நூல்களும் இருக்கின்றன. எல்லாமே யானை விலை. டாலரில் 10, 15 என்று போட்டு இருக்கிறார்கள். ரூபாயில் மாற்றி கணக்கு போட்டால் மயக்கம் வந்துவிடும்.
வாங்க வேண்டிய தேவை இல்லை. எல்லா புத்தகங்களும் என்னிடம் இருக்கின்றது.
என்ன அழகா இருக்கு பாருங்க..s
கோவில் இதுவுங்க. இந்த டூயட் எல்லாம் இங்கன பாட கூடாதுங்க..
அப்ப இத பாடுவோம்.
இந்த இடத்தை விட்டு நகரவே மனசில்லே. இருந்தாலும் சிருங்கேரி சாரதாம்பா கோவிலுக்கு சீக்கிரமே போகணும்.வாருங்கள். என்று
எல்லோரையும் கூட்டிக்கொண்டு காருக்கு விரைந்தார் மாப்பிள்ளை.
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!