Pages

Saturday, March 30, 2013

அப்பாதுரை ஸார் ஆத்து பரண்


The Sound of Music.

The first Film We saw within a month  of our marriage.  Way back in 1968 at Plaza theater at Tiruchy.


((( 45 வருசம் முன்னாடி நடந்த காதோர பேச்சு. இடம் ப்ளாசா த்யேட்டர். திருச்சி. )))






 ஏண்டி இங்கே வந்து பாரு... உனக்கு ஞாபகம் இருக்கா ??

 என்னது !! நீங்களும் அப்பாதுரை ஸார் ஆத்து பரண் லே போய் உட்கார்ந்துட்டீங்களா...       அந்தக் காலத்து பாட்டு போட்டு இருக்கேளே...

முதல்லே இந்த பாட்டு கேளு.  என்ன ஞாபகம் வர்றதுன்னு சொல்லு.

     ஏன் இல்லாம...  நீங்களும் நானும் தான் இந்தப் படத்த....

    ஆமாம்.  திருச்சி ப்ளாசா த்யேட்டர்லே பாத்தோமே ... ரொம்ப நேரம் பேசிகிண்டெ இருந்தோமே...

       1968 லே இருக்கும்னு நினைக்கிறேன். 
     ஆமாம்.  என்ன பேசினோம்...!!

    சும்மா பொய் சொல்லாதே....

    இதே மாதிரி ஜாலியா பாட்டு பாடிண்டே லைஃப் எல்லாம் இருக்கணும்...  

    அப்பறம்...

   அப்பறம் என்ன....  

   இதே மாதிரி ஏழு குழந்தைக பெத்துக்கணும்.   ச, ரி, க , ம , ப , த , நி, ஸ  
 அப்படின்னு நம்ம classical ம்யூசிக்குக்கு    தகுந்தாபோல பேரு வைக்கணும்..

   சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், மேல் சட்ஜம்    அப்படின்னு பேரு வைக்கமுடியுமா என்ன ?



 சட்ஜம் அப்படின்னா, ச விலே ஆரம்பிக்கர ஒரு பேரு, சரோஜா, சரிதா, சரிகா,
   அது மாதிரி.

  

   ஏன் அதோட நிறுத்திட்டேள் ?

   அந்த ரிஷபத்துக்குள்ளேயே சுத்த ரிஷபம், சதுஸ்ர ரிஷபம்,  காந்தாரத்திலே சுத்த காந்தாரம், சாதாரண காந்தாரம்     அப்படின்னு போகலாமே,

   போகலாம் ... ஆனா அதெல்லாம் தாங்காது. ...

   நீங்க எதைச் சொல்றேள் !

   நான் ஏழு குழந்தையப் பெத்துண்டா என்ன பெயரை வைக்கலாம்னு...

   ராகவா..  ராமா....  


   ஆமா...    ஆமா...    

 ரொம்ப ராத்திரி 9 மணியாயிடுத்து. சீக்கிரம் பஸ்ஸைப் பிடிங்கோ...   அம்மா காத்துண்டு இருப்பா... 

   அப்படின்னு கூட நான் சொன்னேன் ஞாபகம் வரது.


  
   ஆமா..  சீக்கிரமே போய் ஸ்டார்ட் பண்ணனும்...  அப்படின்னு கூடநான் சொன்னேனே.!!!

எதுக்கு...????
 
   என்னது ? என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் பஸ் வந்துவிட்டது.  



                                                (( பின்னே வருவது பலஸ்ருதி. ))

   பஸ்ஸில் ஒரே கூட்டம்.   ப்ளாசா த்யேட்டரில் படம் பார்த்த அனைவருமே அந்த ஒரு சின்ன பஸ்ஸில்    சங்கமம்.

    ஒரு வழியாக மெயின் கார்டு கேட் அடைந்து அங்கிருந்து பொடி நடையாக நடந்தோம்.  வானப்பட்டரை     மாரியம்மன் கோவில் பூட்டி விட்டார்கள்.  ரொம்ப நேரம் ஆகிவிட்டதே ., அம்மா என்ன சொல்வார்களோ     என்று இவள் முணுமுணுத்தாள்.

    அந்தக் காலத்தில் ஆண்டார் தெரு ராத்திரி 10 மணிக்கும் முழித்துக்கொண்டு தான் இருக்கும்.   


    பக்கத்து வீட்டு பட்டாளங்கள் இன்னமும் கொட்டம் அடித்துக்கொண்டு இருந்தன.

    வீட்டுக்குள்ளே நுழைந்தோம்.    

    என்னடா விஷயம்.?  எங்கே போயிருந்தேள்..?  
    அம்மா கேட்கவில்லை.  கண்களால் ஆராய்ந்தாள். 

    நானே சொன்னேன்.   அந்த த்யேட்டரில் ம்யூசிக் சினிமா ஒண்ணு வந்திருக்கே....  அதுக்குப்போயிட்டு வந்தோம்...

    சௌன்ட் ஆஃப் ம்யூசிக் ஆ சொல்றே...  நானும் வந்திருப்பேனே...  என்றாள். 

    நறுக் என்று தலையில் குட்டிக்கொள்ள நினைத்தேன்.  அதற்குள் நறுக் என்று லேசா துடையில் ஒரு கிள்ளு
    உணர்ந்தேன். 

    நீங்களும் நானும் இன்னிக்கு போவாம் மா..  உங்களுக்கு ரொம்பவே புடிக்கும்.   ஏழு ஸ்வரங்கள் மாதிரி     குழந்தைகளை வச்சுண்டு என்னமா ஒரு படம் எடுத்திருக்கான்...  என்றாள்  தர்ம பத்னி.

    சாப்பிட்டு முடித்து உறங்கினோம். 

     திடீரென ஒரு சத்தம் கேட்டாற்போல் இருந்தது.  முழித்துக்கொண்டேன்.    பொழுது நன்றாக விடிந்திருந்தது.

     பக்கத்தில் இவளைக் காணோமே !!  எங்கே போனாள் ?   குழாயடியில் ஏதோ ஒரு சத்தம்.

     இங்கே வாடா ...  இவ தலையைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ...   என்றாள் அம்மா. 

     என்னது ...  என்னது... என்று ஓடினேன்  . 

    டாக்டர் ஒன்பது மணிக்குத்தானே வருவார்.  என்ன பண்றது... . என்று கவலையுடன் கேட்டேன்.

     ஒண்ணும் பண்ணவேண்டாம்.  பண்ணினதே போதும்.  என்றாள் அம்மா.
 
     புரியவில்லையே   என்றேன்.

    சட்ஜம் என்றாள் தர்மபத்னி.  



  

    






  

 

      

   

11 comments:

  1. சௌன்ட் ஆஃப் ம்யூசிக் மிகவும் ரசிக்கவைத்தது ..படத்தைப்போலவே..!

    ReplyDelete
  2. என்னது !! நீங்களும் அப்பாதுரை ஸார் ஆத்து பரண் லே போய் உட்கார்ந்துட்டீங்களா... அந்தக் காலத்து பாட்டு போட்டு இருக்கேளே..

    பரணறையில் சௌன்ட் ஆஃப் ம்யூசிக் ..!!

    ReplyDelete
  3. படமும் பதிவும் அழகு. ச ஆரம்பம்.அப்புறம் எத்தனை ஆச்சுனு சொல்லலியே:)))))

    ReplyDelete
  4. இன்று பிளாசா தியேட்டர் இல்லை. ஆனால் அந்த ஏரியாவே 24 மணிநேரமும் விழித்திருக்கிறது.ஆண்டார் தெரு அந்த காலம் போலவே.

    sound of music போலவே பதிவும் அழகு.

    ReplyDelete
  5. //என்னது !! நீங்களும் அப்பாதுரை ஸார் ஆத்து பரண் லே போய் உட்கார்ந்துட்டீங்களா... //
    ரசித்தேன்!
    சும்மா எட்டிப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்த என்னை ரசித்து படிக்க வைத்தது உங்கள் பதிவு. நன்றி!

    ReplyDelete



  6. மேடம் ராஜராஜேஸ்வரி, மேடம் வல்லி நரசிம்மன், மேடம் ராஜலக்ஷ்மி மேடம் ஹேமா
    உங்கள் அனைவர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    ராஜ ராஜேஸ்வரி மேடம், இந்த பழங்காலத்து குப்பைகளெல்லாத்தையும் மறக்கணும்தான்
    காலைலே எழுந்த உடன் அடுத்த நிமிசம் உங்க பதிவுக்கு வரேன்.

    இருந்தாலும் அகத்துக்காரி அடுத்த காஃபியை எட்டு மணிக்கு கொண்டு வந்து எப்ப நீங்க எழுந்துண்டீங்க‌
    அப்படின்னு கேட்கும்பொழுது நினைவுகள் 58க்கு போயிடறது.

    மேடம் வல்லி நரசிம்மன் ...
    சட்ஜம், ரிஷபம் சரியாத்தான் ஸ்ருதி போயிண்டிருந்தது. காந்தாரத்துலே கொஞ்சம் பிசிரு தட்டித்து
    மத்யமம் வந்த உடனே அப்பாடா இந்த பா ( ட்) டே போதும் என்றாயிடுத்து.

    மேடம் ராஜலக்ஷ்மி பரமசிவம்.
    நீங்கள் ப்ளாசா த்யேட்டர் பக்கமா திருச்சியில் இருக்கிறீர்கள் ? அந்தப்பக்கம் பெரிய அய்யப்பன் கோவில்
    ஒன்று கோவிலுக்கு பக்கத்தில் ஒன்று பிரபலமா இருக்கிறதாமே ?

    மேடம் ஹேமா
    உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வானம் வெளுத்த பூமி அந்த வலைப்பதிவாளர் இலங்கைத் தமிழர் தற்பொழுது யூரோப்பில் இருப்பவர்
    வேறு போல் இருக்கிறது.
    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. ஹாஹா... சூப்பர்'இஸ்யூ' :-))))

    ReplyDelete
    Replies
    1. இஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்யூ

      சுப்பு தாத்தா.

      Delete
  8. ஹாஹா. தாத்தாவுக்கு ரொம்பவே குறும்புதான் :) ரசித்தேன்...

    ReplyDelete
    Replies

    1. ஏதோ அந்த நாள் ஞாபகம்.

      சுப்பு தாத்தா.

      Delete
  9. எனக்கு புத்தூர் பக்கம் இருந்த அருணாவில் ஓடிய ஜாபகம்.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!