Pages

Wednesday, March 20, 2013

மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே



மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே

            மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே
        மௌனம் வெளியேதான் வரத்துடித்தே
        இமைகள் கண்களைத் தழுவ மறந்தே
        இருக்கின்ற நிலைதனைச் சொல்லிவிடவா

ஆஹா !! இதுவல்லவோ ஒரு இனிய கவிதை !!

   இணைய வலைத்தளத்திலே இரண்டு நாட்களுக்கு முன்னே ஒரு அற்புதமான கவிதை.

   இளமதியாம் அவர் பெயர்.  எழுதுவதோ இளைய நிலா என்னும் வலையில்.

   என்ன ஒரு அற்புதம் அழகு... ஆனந்தமே ஆனந்தம்.

   அதைப்படித்துப் பரவசமாய் அதை நான் பாடவா என்று கேட்டேன்.

   அவர்கள் யாரென்வே தெரியவில்லை.

   அயல் நாடு ஏதோ ஒன்றில் இருப்பவர் போலும்.
   அவர் தமிழர்.  அது தான் தெரிகிறது.

   மனமுவந்து சரி என்றார்கள்.  நானும் பாடிவிட்டேன்.

   சுப்பு தாத்தா பாடகர் இல்லை.   இசை இலக்கணங்கள் சற்று அறிவேன். அதற்கு மேல் சொல்லிக்கொள்ளும்படியான‌
    குரல் வளம் இல்லை.

    இந்தக் கவிதை படிக்கும்போது என்னிடம் வெள்ளம் போல் பெருகிய உவகை என்னைப்பாட வைத்ததென்றால் அது மிகையல்ல.

   வலையிலே எப்போதாவது தான் இது போன்ற கவிதைகள் காணக்கிடைக்கின்றன.

   இளமதி அவர்களே !!

   நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு எங்கள் ஆசிகள். 

   இங்கு இந்தப்பாடலைக் கேளுங்கள்.  இங்கும் கேட்கலாம். சுப்பு தாத்தா.

8 comments:

  1. இனிய கவிதை...

    தங்களை இணைப்பில் பார்க்கிறேன்... கேட்கிறேன்...

    நன்றி ஐயா...

    ReplyDelete
  2. ஐயா..... மிக்க்க்க நன்றி ஐயா!!!
    அருமையோ அருமை. இத்தனை அழகாக இருக்கிறது. அழகாக மெட்டமைத்துப் பாடியதும் அட இது நான் எழுதியதுதானா என்று வியக்க வைக்கிறது.
    ரொம்ப ரொம்பச் சந்தோஷம். மிக்க நன்றி ஐயா.
    உண்மையாகவே உங்கள் வயதிற்கு எத்தனை அற்புத அபாரத்திறமை உங்களிடம். வியப்பாக இருக்கிறது.

    நன்றி ஐயா நன்றி!!!

    ReplyDelete
  3. ஐயா.. மீண்டும் மீண்டும் கேட்டுவிட்டு வந்து எழுதுகிறேன்.
    இந்த வயதிலும் இத்தனை ஞானத்துடன் கொஞ்சமும் மெட்டும் ஸ்ருதியும் பிசகாமல் அருமையாகப் பாடியிருப்பதை கேட்கும்போது ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அற்புதம்!

    ஐயா....
    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்துள் மறைந்தது மாமத யானை

    என்பது இதுதானோ....:)

    உங்களின் பாடியவிதத்தால் இன்று என் கவியும் ஒரு நல்ல இடத்தைப்பெற்றுவிட்டது. மிகுந்த மகிழ்ச்சி ஐயா.
    நான் தமிழ்மொழி ஆர்வம் மிகுந்தவள். அதில் கவி எழுத மிக மிக ஆர்வம்.இப்பொழுதுதான் சிறிதளவு பயின்று வருகிறேன். அவ்வகையில் எழுதிய இக்கவி இன்று உங்கள் செயலால் ஒரு நல்ல இடத்தைப்பிடித்தது என் அதிர்ஷ்டமே.

    இன்னும் என்னை எழுதத்தூண்டிவிட்டீர்கள். மிக நன்றி ஐயா.

    உங்களுக்கு என் அன்பு வணக்கமும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete

  4. வணக்கம்!

    நற்சுப்புத் தாத்தா நறுந்தமிழ் இன்னிசைச்
    சொற்கட்டு சூடிச் சுவையூட்டும்! - பற்றுடனே
    கேட்டு மகிழ்ந்தேன்! கிளா்ந்த அவா்குரலை
    மீட்டு மகிழ்ந்தேன் வியந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete

  5. வணக்கம்!

    நற்சுப்புத் தாத்தா நறுந்தமிழ் இன்னிசைச்
    சொற்கட்டு சூடிச் சுவையூட்டும்! - பற்றுடனே
    கேட்டு மகிழ்ந்தேன்! கிளா்ந்த அவா்குரலை
    மீட்டு மகிழ்ந்தேன் வியந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. அருமையான கவி வரிகளுக்கு இசைவடிவம் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா... நல்ல முயற்சி..
    இதன் மூலம் கவிதை படைப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீகள்....தொடருங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கவிதையும் உங்கள் குரலும் சேர்ந்து எங்கள் காதுகளுக்கு ஒரு இசை அமுதம் படைத்துவிட்டன. இரண்டும் ஒன்றிணைந்து அற்புதம்!

    கடவுள் உங்களுக்கு வெகு அற்புதமான இசைஞானத்தை அளித்துள்ளார்.

    எல்லோரையும் ஈர்க்கும் கவிதை எழுதிய இளமதிக்கும், அதை ராகம் போட்டுப் பாடி எங்களை மகிழ்வித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. வருகை புரிந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    திண்டுக்கல் தனபாலன், இளமதி அவர்கள், கவிஞர் பாரதிதாசன் அவர்கள். பூங்கோதை செல்வன் அவர்கள்
    திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எல்லோருக்கும் நன்றி.

    இனிய பாடல் எனின் அதுவும் சந்தத்துடன் கூடி இருப்பின் எனக்கு இள நீர் போல.
    இள நீர் ஒன்று யாரேனும் தந்து குடி என்றால் கைகள் இரண்டையும் நீட்டி பெற்றுக்கொள்வது போலத்தான்.
    பாடலொன்று காணின் அதை பாடாது இருத்தல் எப்படி இயலும் ?


    ரஞ்சனி நாராயணன் அவர்களே !
    உங்கள் யூ ட்யூப் சானல் கண்டேன். மனம் மகிழ்ந்தது.
    உன்னதோடடரு உடையவரு பாடல் மிகவும் ரசித்தேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!