நிலவு வந்த நேரத்திலே
இலவு காத்த கிளி போல
இரவெல்லாம் வாடி நின்றேன்.
இனியவனைக் காணோமே...
அன்னமே ! நீ அருகில் வாராய் !!
நின் சேதிகளை உடனே சொல்வாய்
!.
என் கண்ணன் அவன் ஏதேனும்
புன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!
மா தவத்தில் நான் இருக்க
மாதவி பின் சென்றானோ !!
காதலி நான் காத்திருக்க
கருமுகிலில் மறைந்தானோ !!
வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை என்று நீ அந்த
நளனிடம் சொல்.
நாளைக்குள் வரச்சொல் . என்
நா வறளும் முன்
நயனங்கள் சோருமுன்
நல்ல சேதி சொல்லச் சொல்.
இலவு காத்த கிளி போல
இரவெல்லாம் வாடி நின்றேன்.
இனியவனைக் காணோமே...
அன்னமே ! நீ அருகில் வாராய் !!
நின் சேதிகளை உடனே சொல்வாய்
!.
என் கண்ணன் அவன் ஏதேனும்
புன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!
மா தவத்தில் நான் இருக்க
மாதவி பின் சென்றானோ !!
காதலி நான் காத்திருக்க
கருமுகிலில் மறைந்தானோ !!
வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை என்று நீ அந்த
நளனிடம் சொல்.
நாளைக்குள் வரச்சொல் . என்
நா வறளும் முன்
நயனங்கள் சோருமுன்
நல்ல சேதி சொல்லச் சொல்.
அருமை அருமை ஐயா...
ReplyDeleteஐயா அழகு அருமை இனிமை .
ReplyDeleteஐயா... அருமையோ அருமை. இத்தனை இனிமையாய், அழகாய் நீங்களே கவி புனைந்து அசத்துகிறீர்களே.
ReplyDeleteபரிசூஊஊ... உங்களுக்குத்தான்.
என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா!
''..என் கண்ணன் அவன் ஏதேனும்
ReplyDeleteபுன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!...''
தாத்தா கவிதை முழுதும் அருமை.
நல்ல சந்த வரிகள்.
பதிவை ரசித்தேன்.
மகிழ்வு. இறையாசி நிறையட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
அருமை.
ReplyDeleteஉங்களது கவிதை இன்று எனது வலைப்பூவில் வெளியாகி இருக்கிறது.
ReplyDeleteஇக்கவிதையை பாட்டாகப் பாடி அனுப்பவில்லையா என ரஞ்சனிம்மா எனது பக்கத்தில் கேட்டிருக்கிறார். இது உங்கள் தகவலுக்காக! :)