thamarai poo
அடடா என்ன சுகமான கிராமீய பாடல் ...
தன்னானே தானன்ன்னே ...
இது போல படிச்சே ரொம்ப நாளாச்சி.
வசந்த மண்டபம் வலை திரு மகேந்திரன் எழுதி இருக்காரு.
சுந்தரக்கவிதையிலே சொர்க்கமே இன்னா அப்படின்னு காட்டி இருக்காரு.
வலைச் சரத்திலே இன்னிக்கு எழுதி இருந்தாக
சூப்பர் பாட்டு இது.
நானே பாடிக்கிட்டே படிச்சேன் அப்படின்னு
ஆசிரியர் எழுதி கீறாரு.
நானு மட்டும் பாட மாட்டேனா என்ன..
இதோ கேளுங்க ...
இங்கன கேளுங்க
ரசித்தேன் ஐயா...
ReplyDeleteஅந்த 'அப்படியா' -வும் நீண்ட ராகமும் சூப்பர்...
Delete//ரசித்தேன் ஐயா...
அந்த 'அப்படியா' -வும் நீண்ட ராகமும் சூப்பர்...//
நான் ருசித்தேன். உண்மையிலேயே.
முதல் தரம் படிக்கும்பொழுதே நான் பாடிக்கொண்டே தான் படித்தேன்.
சுப்பு தாத்தா.
ஐயா, நானும் ரசிச்சேன்... மெல்லிய தாளத்துடன் அருமை....
ReplyDeleteநன்றி எழில் அவர்களே..
Deleteஉங்கள் பதிவு எங்கே உளது ?
சுப்பு தாத்தா.
எத்தனை அருமையாகப் பாடுகிறீர்கள் ஐயா!
ReplyDeleteஎங்கள் மனமும் உருகிவிட்டது நீங்கள் பாடும் போது!
பாராட்டுக்கள்!
'நேச மாமோய்!' அருமை!
நான் ஒரு ஸ்டான்டார்டு பாடகன் அல்ல. எனது குரலும் பாடாவதி தான். எனக்கு நன்றாகவே தெரியும்.
Deleteஇருந்தாலும் கர்னாடக சங்கீத இலக்கணங்கள் தெரியும் என்பதால் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சம் இழுப்பேன்.
அவ்ளோ தான்.
நீங்க வந்தமைக்கும் ரசித்ததற்கும் நன்றி. நீங்கள் ஒரு கவிதை எழுதுங்கள்.
பாடுகிறேன்.
சுப்பு தாத்தா.
ஆத்தி!!!, எம்புட்டு நல்லா இருக்குது பாட்டு...அத என்னாமா பாடி இருக்கீங்க....அட்டகாசம் போங்க....
ReplyDeleteஆஹா..புலவர் மகேந்திரனுக்கு கிடைத்த இன்னொரு மணி மகுடம் இது....உங்க சத்தமும் சும்மா கண்ணீர்னு சூப்பராக இருக்கிறது சுப்பு அய்யா...வாழ்த்துக்கள்...!
ReplyDeleteஎனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளேன்.
//உங்க சத்தமும் சும்மா கண்ணீர்னு சூப்பராக இருக்கிறது சுப்பு அய்யா..//
Deleteசத்தம் என்றால் சௌன்டு என்று சொல்கிறீர்களா அல்லது நாய்ஸ் என்று சொல்கிறீர்களா ?
எப்படி இருந்தாலும் உங்களை இங்கு இழுத்து வந்திருக்கிறேன் அல்லவா...
என்னையே நான் முதுகில் ஒரு தட்டு தட்டிகொள்கிறேன்.
நன்றி. உங்கள் வலைக்கு இன்று தான் சென்று படித்தேன். \
அது என்ன உங்களுக்கும் என்னைப்போலவே ஆஃபீஸ் கனவாகவே வருகிறது.
எனக்கு தேவலை. ரிடையர் ஆகி 12 வருடம் கழித்துத் தான் வருகிறது. உங்களுக்கு வேலையில் இருக்கும்பொழுதே
வருகிறதே !! யுவர் லாயல்டி இஸ் கமென்டபிள்.
யூ கான் டிமான்ட் ஒன் மோர் ஸாலரி ஃப்ரம் யுவர் பாஸ்.
சுப்பு தாத்தா.
ReplyDeleteமனம் குளிர்ந்தேன் ஐயா ...
என் விரல் வழிந்த வார்த்தைகளுக்கு
உயிரூட்டம் கொடுத்து விட்டீர்கள்...
சிரம் தாழ்ந்த நன்றிகள்...
//வார்த்தைகளுக்கு
ReplyDeleteஉயிரூட்டம் கொடுத்து விட்டீர்கள்...//
வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தது
உங்கள் சொல் வளம்.
அந்த சூழ் நிலையை என்னமா ஒரு ஓவியமா வார்த்தைகளில் தீட்டியிருக்கிறீர்கள்.
யார் படிச்சாலும் பாடத்தான் செய்வாக...
நான் பாடுவது என்ன அதிசயம்.!!
அதோட ஒரு மெஸேஜ் சொல்லியிருக்கீக இல்லயா ?
அது என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்தது. இம்ப்ரெஸ் தமிழ்ச்சொல் சரியா என்ன ?
கவர்ந்தது, ஈர்த்தது... இல்ல இல்ல அதுக்கும் மேல.
ஆல் த பெஸ்ட்.
சுப்பு தாத்தா.