Pages

Saturday, March 30, 2013

அப்பாதுரை ஸார் ஆத்து பரண்


The Sound of Music.

The first Film We saw within a month  of our marriage.  Way back in 1968 at Plaza theater at Tiruchy.


((( 45 வருசம் முன்னாடி நடந்த காதோர பேச்சு. இடம் ப்ளாசா த்யேட்டர். திருச்சி. )))






 ஏண்டி இங்கே வந்து பாரு... உனக்கு ஞாபகம் இருக்கா ??

 என்னது !! நீங்களும் அப்பாதுரை ஸார் ஆத்து பரண் லே போய் உட்கார்ந்துட்டீங்களா...       அந்தக் காலத்து பாட்டு போட்டு இருக்கேளே...

முதல்லே இந்த பாட்டு கேளு.  என்ன ஞாபகம் வர்றதுன்னு சொல்லு.

     ஏன் இல்லாம...  நீங்களும் நானும் தான் இந்தப் படத்த....

    ஆமாம்.  திருச்சி ப்ளாசா த்யேட்டர்லே பாத்தோமே ... ரொம்ப நேரம் பேசிகிண்டெ இருந்தோமே...

       1968 லே இருக்கும்னு நினைக்கிறேன். 
     ஆமாம்.  என்ன பேசினோம்...!!

    சும்மா பொய் சொல்லாதே....

    இதே மாதிரி ஜாலியா பாட்டு பாடிண்டே லைஃப் எல்லாம் இருக்கணும்...  

    அப்பறம்...

   அப்பறம் என்ன....  

   இதே மாதிரி ஏழு குழந்தைக பெத்துக்கணும்.   ச, ரி, க , ம , ப , த , நி, ஸ  
 அப்படின்னு நம்ம classical ம்யூசிக்குக்கு    தகுந்தாபோல பேரு வைக்கணும்..

   சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், மேல் சட்ஜம்    அப்படின்னு பேரு வைக்கமுடியுமா என்ன ?



 சட்ஜம் அப்படின்னா, ச விலே ஆரம்பிக்கர ஒரு பேரு, சரோஜா, சரிதா, சரிகா,
   அது மாதிரி.

  

   ஏன் அதோட நிறுத்திட்டேள் ?

   அந்த ரிஷபத்துக்குள்ளேயே சுத்த ரிஷபம், சதுஸ்ர ரிஷபம்,  காந்தாரத்திலே சுத்த காந்தாரம், சாதாரண காந்தாரம்     அப்படின்னு போகலாமே,

   போகலாம் ... ஆனா அதெல்லாம் தாங்காது. ...

   நீங்க எதைச் சொல்றேள் !

   நான் ஏழு குழந்தையப் பெத்துண்டா என்ன பெயரை வைக்கலாம்னு...

   ராகவா..  ராமா....  


   ஆமா...    ஆமா...    

 ரொம்ப ராத்திரி 9 மணியாயிடுத்து. சீக்கிரம் பஸ்ஸைப் பிடிங்கோ...   அம்மா காத்துண்டு இருப்பா... 

   அப்படின்னு கூட நான் சொன்னேன் ஞாபகம் வரது.


  
   ஆமா..  சீக்கிரமே போய் ஸ்டார்ட் பண்ணனும்...  அப்படின்னு கூடநான் சொன்னேனே.!!!

எதுக்கு...????
 
   என்னது ? என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் பஸ் வந்துவிட்டது.  



                                                (( பின்னே வருவது பலஸ்ருதி. ))

   பஸ்ஸில் ஒரே கூட்டம்.   ப்ளாசா த்யேட்டரில் படம் பார்த்த அனைவருமே அந்த ஒரு சின்ன பஸ்ஸில்    சங்கமம்.

    ஒரு வழியாக மெயின் கார்டு கேட் அடைந்து அங்கிருந்து பொடி நடையாக நடந்தோம்.  வானப்பட்டரை     மாரியம்மன் கோவில் பூட்டி விட்டார்கள்.  ரொம்ப நேரம் ஆகிவிட்டதே ., அம்மா என்ன சொல்வார்களோ     என்று இவள் முணுமுணுத்தாள்.

    அந்தக் காலத்தில் ஆண்டார் தெரு ராத்திரி 10 மணிக்கும் முழித்துக்கொண்டு தான் இருக்கும்.   


    பக்கத்து வீட்டு பட்டாளங்கள் இன்னமும் கொட்டம் அடித்துக்கொண்டு இருந்தன.

    வீட்டுக்குள்ளே நுழைந்தோம்.    

    என்னடா விஷயம்.?  எங்கே போயிருந்தேள்..?  
    அம்மா கேட்கவில்லை.  கண்களால் ஆராய்ந்தாள். 

    நானே சொன்னேன்.   அந்த த்யேட்டரில் ம்யூசிக் சினிமா ஒண்ணு வந்திருக்கே....  அதுக்குப்போயிட்டு வந்தோம்...

    சௌன்ட் ஆஃப் ம்யூசிக் ஆ சொல்றே...  நானும் வந்திருப்பேனே...  என்றாள். 

    நறுக் என்று தலையில் குட்டிக்கொள்ள நினைத்தேன்.  அதற்குள் நறுக் என்று லேசா துடையில் ஒரு கிள்ளு
    உணர்ந்தேன். 

    நீங்களும் நானும் இன்னிக்கு போவாம் மா..  உங்களுக்கு ரொம்பவே புடிக்கும்.   ஏழு ஸ்வரங்கள் மாதிரி     குழந்தைகளை வச்சுண்டு என்னமா ஒரு படம் எடுத்திருக்கான்...  என்றாள்  தர்ம பத்னி.

    சாப்பிட்டு முடித்து உறங்கினோம். 

     திடீரென ஒரு சத்தம் கேட்டாற்போல் இருந்தது.  முழித்துக்கொண்டேன்.    பொழுது நன்றாக விடிந்திருந்தது.

     பக்கத்தில் இவளைக் காணோமே !!  எங்கே போனாள் ?   குழாயடியில் ஏதோ ஒரு சத்தம்.

     இங்கே வாடா ...  இவ தலையைக் கொஞ்சம் பிடிச்சுக்கோ...   என்றாள் அம்மா. 

     என்னது ...  என்னது... என்று ஓடினேன்  . 

    டாக்டர் ஒன்பது மணிக்குத்தானே வருவார்.  என்ன பண்றது... . என்று கவலையுடன் கேட்டேன்.

     ஒண்ணும் பண்ணவேண்டாம்.  பண்ணினதே போதும்.  என்றாள் அம்மா.
 
     புரியவில்லையே   என்றேன்.

    சட்ஜம் என்றாள் தர்மபத்னி.  



  

    






  

 

      

   

Friday, March 29, 2013

உலகத்தில் சத்தியம் திரும்பவும் ஒரு தடவை

 இன்று புனித வெள்ளி.

    திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்கள் தனது புனித வலையில் யேசு காவியம் படைத்த‌    தமிழ் உலகம் போற்றிடும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடலை ஒன்றினை இட்டு     எல்லா உலகத்தாருக்கும் ஏசுவின் ஆசிர்வாதங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

   நானும் அதைப் பாடுவேன். 



 இன்று உலகம் எங்கும் புனித வெள்ளியைக் கொண்டாடும்
 கிருத்துவ பெருமக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுவேன். 

    உலகில் இன்னும் ஒரு தடவை யேசு பிறப்பார் என சொல்கிறது கண்ணதாசன் காவியம்.


   உலகத்தில் சத்தியம் திரும்பவும் ஒரு தடவை மேலே எழுந்து நிற்கும் என நம்பிக்கை பிறக்கிறது.

Thursday, March 28, 2013

NORTH and SOUTH சபாஷ் சரியான போட்டி. Zakir Hussain and A.K.Pazhanivel



வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது என்று அந்தக் காலத்திலே சொல்வார்கள்.

இதப் பார்த்தா வடக்கும் தெற்கும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு  ..

அடடா.

சபாஷ்  சரியான போட்டி.

Thavil: Thiru A.K.Palanivel.
Tabla:  Zakir Hussain. 

Tuesday, March 26, 2013

MAHALAKSHMI



அழகு என்ன எனச் சொல்வதற்கே நிலவு வந்ததோ !!
 அவ்வழகினை ரசிப்பதற்கே மலரும் வந்ததோ !!

 மலர் மலர்ந்த போதினிலே மங்கையவள் வந்தனளோ !
 மாலவனை மணந்தபின்னே மா லக்குமி ஆனாளோ !!

 Madam Kavinaya has composed a song in praise of Goddess Mahalakshmi. 

I am privileged to sing this here in Raag Revathi

Sunday, March 24, 2013

இதையா கிறுக்கல் என்றா சொல்கிறீர்கள் ?




 வலைச்சரம் இன்று படிக்கப்போய் அங்கு அருணா என்ன சொல்கிறார் என்று பார்க்கும்போதே

     கிறுக்கல்கள் என கீதா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று என்னை
     கவர்ந்தது எனச்சொன்னால் அது மிகையல்ல .கவிதை படிக்க மேலே கிளிக்கவும். 

     கவிதை மரபு இலக்கணத்துக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்ற கட்சி எனதல்ல.

     சந்தங்கள் இருந்தால் தான் அது சிந்தை கவரும் என்ற வாதத்தையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை.

    வசன கவிதை பாரதி காலம் முதலே ( என்க்குத் தெரிந்து )  உருவாகி இருக்கிறது.  ஏன் ..  அதற்கு முன்னமே    சங்க கால கவிதைகள் சில இது போலவே இருக்கின்றன.

     ஒரு கவிதையைப் படித்து அதனால் உங்கள் உள்ளத்தில் ஒரு உதய சூரியன் உருவானால் அது கவிதை.

    என்ன ஒரு எளிமையான, பொருள் பொதிந்த கவிதை பாருங்கள்.

    இதையா  கிறுக்கல் என்றா சொல்கிறீர்கள் ?
    இதயம் எனக்கு இருக்கிறது.
    இனிய கவிதை என
    இதையே நான் சொல்வேன்.

Friday, March 22, 2013

யாரங்கே !! அந்த வேங்கட நாகராஜ் அவர்களிடம் சொல்லுங்கள். நாளை காலை கதிரவன் வருவதற்குள் காசுகளை ஆம் ஐநூறு பொற்காசுகளை கொண்டு வரவேண்டும். ...

நிலவு வந்த நேரத்திலே
இலவு காத்த கிளி போல
இரவெல்லாம் வாடி நின்றேன்.
இனியவனைக் காணோமே...


அன்னமே ! நீ அருகில் வாராய் !!
நின் சேதிகளை உடனே சொல்வாய்

!.
என் கண்ணன் அவன் ஏதேனும்
புன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!

மா தவத்தில் நான் இருக்க‌
மாதவி பின் சென்றானோ !!
காதலி நான் காத்திருக்க
கருமுகிலில் மறைந்தானோ !!

வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை என்று நீ அந்த
நளனிடம் சொல்.

நாளைக்குள் வரச்சொல் . என்
நா வறளும் முன்
நயனங்கள் சோருமுன்
நல்ல சேதி சொல்லச் சொல்.



Thursday, March 21, 2013

சத்தியமா நயனதாராவுக்காக இந்த பாடலை நான் போடல. நம்புங்க ஸாரே.




 RAMA RAJYAM

சத்தியமா நயனதாராவுக்காக இந்த பாடலை நான் போடல.

  நம்புங்க ஸாரே.
   
    சுப்பு தாத்தா.

Nayanadhara as Sita

Wednesday, March 20, 2013

மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே



மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே

            மனதின் கதவொன்றைத் தாள் திறந்தே
        மௌனம் வெளியேதான் வரத்துடித்தே
        இமைகள் கண்களைத் தழுவ மறந்தே
        இருக்கின்ற நிலைதனைச் சொல்லிவிடவா

ஆஹா !! இதுவல்லவோ ஒரு இனிய கவிதை !!

   இணைய வலைத்தளத்திலே இரண்டு நாட்களுக்கு முன்னே ஒரு அற்புதமான கவிதை.

   இளமதியாம் அவர் பெயர்.  எழுதுவதோ இளைய நிலா என்னும் வலையில்.

   என்ன ஒரு அற்புதம் அழகு... ஆனந்தமே ஆனந்தம்.

   அதைப்படித்துப் பரவசமாய் அதை நான் பாடவா என்று கேட்டேன்.

   அவர்கள் யாரென்வே தெரியவில்லை.

   அயல் நாடு ஏதோ ஒன்றில் இருப்பவர் போலும்.
   அவர் தமிழர்.  அது தான் தெரிகிறது.

   மனமுவந்து சரி என்றார்கள்.  நானும் பாடிவிட்டேன்.

   சுப்பு தாத்தா பாடகர் இல்லை.   இசை இலக்கணங்கள் சற்று அறிவேன். அதற்கு மேல் சொல்லிக்கொள்ளும்படியான‌
    குரல் வளம் இல்லை.

    இந்தக் கவிதை படிக்கும்போது என்னிடம் வெள்ளம் போல் பெருகிய உவகை என்னைப்பாட வைத்ததென்றால் அது மிகையல்ல.

   வலையிலே எப்போதாவது தான் இது போன்ற கவிதைகள் காணக்கிடைக்கின்றன.

   இளமதி அவர்களே !!

   நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு எங்கள் ஆசிகள். 

   இங்கு இந்தப்பாடலைக் கேளுங்கள்.  இங்கும் கேட்கலாம். சுப்பு தாத்தா.

Friday, March 15, 2013

கண்ணனை நினைந்து நினைந்து உருகி உருகி...



ஆஹா !!
கண்ணனை நினைந்து நினைந்து
உருகி உருகி
குளிரில்
உறைந்துபோகும் நிலைக்கு வந்துவிட்டார்
வசந்த குமார்
அவரது அழகு கவிதையை இங்கு பாருங்கள்
அந்த சுந்தர கவிதையை
தாத்தா பாட இங்கு கேளுங்கள்.


Thursday, March 14, 2013

Ranjani Narayanan Prays to Perumal in Appadurai Sir Blog.

/பெருமாளே! இப்படியெல்லாம் பைத்தியம் பிடிச்சு பாயை சொரண்டரதுக்கு முன்னால திருவடி சேர்த்துக்கோ' என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்.//

 
     இந்த மாதிரி ஃபீலீங்க்ஸ் வரும்போதுதான் ரொம்ப ஒர்ரி பண்ணிக்காதேங்கோ ..

நம்ம ஊரு நித்யஸ்ரீ அம்மா நாராயணனை ப்ரார்த்திச்சுண்டு  இருக்கா... 

     அவர்களோட நாமும் சேர்ந்துப்போம்.


   





 அதுக்குத்தான் அதுக்கு முன்னாலே இத கேட்டுடலாம் அப்படின்னுகேட்டுண்டு இருக்கேன்

நாராயணா !! நாராயணா.. !!

 அடியே !! மீனாட்சி... மீனாட்சி,..!!!!

எங்க போயிட்ட...






Friday, March 1, 2013

தன்னானே தானன்ன்னே ...


thamarai poo

அடடா என்ன சுகமான கிராமீய பாடல் ...
தன்னானே தானன்ன்னே ...

இது போல படிச்சே ரொம்ப நாளாச்சி.
வசந்த மண்டபம் வலை திரு மகேந்திரன் எழுதி இருக்காரு.
சுந்தரக்கவிதையிலே சொர்க்கமே இன்னா அப்படின்னு காட்டி இருக்காரு.

வலைச் சரத்திலே இன்னிக்கு எழுதி இருந்தாக
சூப்பர் பாட்டு இது.

 நானே பாடிக்கிட்டே படிச்சேன் அப்படின்னு
ஆசிரியர் எழுதி கீறாரு.

நானு மட்டும் பாட மாட்டேனா என்ன..
இதோ கேளுங்க ...
இங்கன கேளுங்க