Pages

Friday, June 19, 2015

அன்புள்ள அப்பா (2)

அந்த ராமசாமிக்கு ரொம்ப சந்தோஷம்.

தான் செய்யமுடியாததை தன் மகன் செய்து விட்டானே !!

என்ற பெருமிதம்
அவர் இதயமெங்கும் கொப்பளித்தது போலும் !!

ஆம்.
தனது வாழ்நாளெங்கும் ஒரு நடிகனாக வாழ்ந்தார். பெரும் பொருள் சேர்த்தார்.

ஆயினும் தனது மகனை தான் நினைத்தது போல் ஒரு எஞ்சினீர் ஆகவோ டாகடர் ஆகவோ
அவர் கனவு பலிக்கவில்லை.
காலம் அது போல அமையவில்லை.

ஒரு நாள் அந்த மகன் அவர் முன்னே வந்து நின்று:

அப்பா என்றான்.

என்னடா...

உனக்குத் தெரியாதா என்ன ?

என்னடா !! நீயும் தன்னை நடிகன்னு, ஊரை சுத்திக்கினு, ஒரு சான்ஸ் கூட கிடைக்காம திணறிக்கிட்டு இருக்கிறே... அது தான் எனக்குத் தெரியும்.

இல்லப்பா...

ஏன்ன நொள்ள்ப்பா...

நான் நடிச்ச படம் ,
அது சின்ன குறும்படம் தான், ஆனா அது ஆஸ்கார் லே விருது வாங்கி இருக்குன்னு
நியூஸ் வந்திருக்கு...

அவருக்கு இதயம் நின்று போனது போல் இருந்தது.

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..இவன்  தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.

மகனே என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டார்.

உனைப் பெற்றதற்கு என்ன தவம் செய்தேனோ !! என்று கண்ணீர் வடித்தார்.

அப்பா.. நீ தாம்பா எனக்கு எப்பவுமே ஹீரோ... அது சரியில்ல, என்னை அந்த படிப்பு , இந்த வேலை என்று அனுப்பிச்சா எப்படி ?

தப்பு தப்பு தான் .
ஆனா என்னை ஹீரோ ஹீரோ என்று சொல்லி
பெரிய வார்த்தை பேசாதே...
நான் சாதாரண நகைச்சுவை நடிகன் தான் ...
என்றார்.

சரிடா.ராமசாமி..
என்றான் ஆஸ்கார் விருது பெற்ற நடிகன்.

சொல்லிவிட்டு சிரிக்கிறான்.



 அன்புள்ள அப்பா (2)


அப்பாவை நினைந்து உருகச்செய்யும்
பத்து அற்புத
கணங்கள்.
Incredible
Moments
When
Dad
Yours and Mine
Saved the Day
for Us.

Do we remember them ???
!!!

Monday, June 8, 2015

த்விஜாவந்தி

இந்த த்விஜா வந்தி ராகம் என்ன பாடு படுத்துகிறது நமது மனசை !!
இதை முன்னமே என்னுடைய சங்கீத வலையான மூவி ராகாஸ் ப்ளாக் ல் நான் விவரித்து இருந்தாலும் ஐரோப்பியர்களும் இந்த ராகத்தைப் பாராட்டிப் புகழ்வதை நேற்று தான் கவனித்தேன்.

ஹரி காம்போஜி ராக ஜன்யமான இந்த ராகத்தில் பல அறிய பாடல்கள், கிருதிகள் இருக்கின்றன.

அகிலாண்டேஸ்வரி எனத்துவங்கும் முத்துச்வாமி தீக்ஷதரின் சாஹித்யம் எனக்கு 1977 முதலிலே இருந்தே பரிச்சயம்.

அந்த ராகத்தில் நம் மனதை பிழிந்து எடுக்கும்
 மகாராஜபுரம் சந்தானம்,
ஜேசுதாஸ்,.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.

மற்றும்
 சாருலதாவின் வர்ணனை
எல்லாமே சுகம் சுகம்.
இந்த ராகத்தில் தில்லானா அசாத்தியம் .
அதையும் செய்து நம்மை அசத்தி இருக்கிறார் பால முரளி அவர்கள்.
பால முரளியின் தில்லானா இங்கே.
கர்நாடக சங்கீத இசை இலக்கண மேதை டி .என். சேஷகோபாலன் த்விஜாவந்தி ராகத்தை பாடும்போது நமது உனர்வுகள் எப்படி இருக்கிறது?



தமிழ் இசைப் பெரியார் எனப் புகழ் பெற்ற

பெரியசாமி தூரன் எழுதிய பாடல்.

எங்கு நான் செல்வேன் அய்யா...?


எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்…
எங்கு நான் செல்வேன் அய்யா?




திங்கள் வெண் பிஞ்சினை, செஞ்சடை தாங்கிடும்
சங்கரா அம்பிகை தாய் வளர் மேனியார்

எங்கு நான் செல்வேன் அய்யா



அஞ்சினோர் இடர் எல்லாம் அழிய ஓர் கையினால் 

அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே
நஞ்சினை உண்டுமே வான் உளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே எங்கு நான் செல்வேன் அய்யா

by Bombay Jayashree



உலக நாயகன் படமான
விஸ்வரூபத்தில் :


உனைக் காணாத நான் இன்று நானில்லையே ..

பாடுவது கமலும் சங்கர் மகாதேவனும்



இத்தனை நளினமான ராகத்தை விட ஐரோப்பியருக்கும் மனம் வரவில்லை போலும்.
இதன் ஸ்பெர்ரி மார்ட்டின் என்னும் புகழ் பெற்ற இசை வல்லுநர் இந்த ராகத்திலே ஒரு பள்ளி இசை அமைத்து அதையும் தனது கல்லூரி மாணவர்களால் பாடி அவையினரை மகிழ்வித்து இருக்கிறார்.
western classical


த்விஜாவந்தி ராகத்தை ஈதன் சபாரி அவர்கள் தந்து இருக்கும் வித்தை.

விஸ்வரூபத்திற்கு பிறகு வந்த ரஜினி படத்திலும் த்விஜாவந்தியின் சாயல் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடலில் தெரிந்தது. அதனுடன் சாமா என்னும் இன்னொரு ராகத்தையும் கலந்து,
நம்ம கீதா அம்மா செய்கிற அவியல் மாதிரி பாடியிருந்தார்.

அதுவும் மணக்கிறது.

Sunday, May 10, 2015

அம்மா !!

இன்னிக்கு அம்மாக்கள் தினம்  தெரிந்த உடன்

அம்மாவுக்கு இன்னிக்கு ஒரு பரிசு  கொடுப்போம்

ஓடி வந்து
இங்கே வந்து பார்த்தேன்.


ஜானகி அப்படிங்கற பேருலே
மூணு பேரு இருக்கிறார்கள் .

இவர்களிலே
யார் என் அம்மா ?
தெரியல்லையே !!

அம்மா !!



"லவா..." என்றொரு குரல் கேட்டுத் திரும்பினேன்.
என் அன்னை குரல் போல் அல்லவா இருக்கிறது !!

ஒருவருமே இல்லை.

பிரமையோ !!

புவி உள்ளிருந்து வந்ததோ !!

மாதா ச பார்வதி தேவி. பிதா தேவோ மகேச்வரஹ
பாந்தவா சிவ பக்தாஸ்ச ஸ்வதேசம் புவனத்ரயம். 


எல்லோருமே என் அன்னை தான். 

(இதை சுட்டி என்ன அன்னைக்கு என்ன பரிசு என்று பாருங்கள் என்றேன். ​)





Saturday, May 2, 2015

இளசுகளின் பிதற்றல்கள்

இளசுகளின் பிதற்றல்கள்
இருப்பினும் அதில் என்ன
அற்புதங்கள் !!!

படம்   ஆஷிக் 2
 இசை : மிதுன்
 பாடுபவர்: அரிஜித் சிங்.

முதல் முறை இந்த பாட்டை கேட்கையில் அவ்வளவா ஈர்க்காது .
ஒரு சில தடவைகள் கெட்டுவிட்டாலோ நெஞ்சை விட்டு அகலாது.

ட்யூன் அதாவது மெலடி அதாவது இசை
மனதுக்கு இசைவு தந்தபோதிலும்
இந்த பாடலுக்குள்ளே நெஞ்சை ஈர்க்கும் கருத்து ஏதேனும் உளதா

வெறும்
இளசுகளின் பிதற்றல் போன்று தோன்றுகிறது.

இருந்தாலும்
இருபதுகளின் சிந்தனைகள் பற்றி
எழுபதுகள் என்ன சொல்ல முடியும் !!

பாட்டு கருத்து இதுவே:



நீ இலாது என் உயிரும் இல்லை
நீ இலா இவ்வாழ்வும் என்ன ?

நினைப் பிரிந்து நான் வாழ்வேன் எனின்
எனைப் பிரிந்தே நான் இருப்பேனோ ?

நீ ஒருத்தியே இருப்பதால்
நீயே என் உலகு என்பேன்.
உயிர் என்பேன். வாழ்வு என்பேன்.
உள்ளத்தே உறைந்துள்ள  அமைதி என்பேன்.
உணரும் வலியும்  நீயே என்பேன்.
உள்ளத்தில் உறைந்த காதலி நீயே.

நமது உறவு தான் என்னே
ஒரு கணம் கூட விலகி இருக்காத
உறவு தான் என்னே!
ஒவ்வொரு  உனக்கென வாழும்
ஒவ்வொரு கணமும் உனதே உனதே !!



உனக்காக வாழ்ந்தேன் நான்.
உனக்கே என என்னையும் தந்தேன். 
 உன் காதல்  ஒன்றே தான் என்னையும் காத்து 
 என்னுள் இருந்த வலியெல்லாம் நீர்த்தது.


Hum tere bin ab reh nahin sakte
Tere bina kyaa vajood meraa
Kyonki tum hi ho
Ab tum hi ho
Zindagi, ab tum hi ho
Chain bhi, meraa dard bhi
Meri aashiqui ab tum hi ho

Tujh se judaa gar ho jaayenge
To khud se hi ho jaayenge judaa


Teraa meraa rishtaa hai kaisaa
Ik pal door gawaaraa nahi
Tere liye har roz hain jeete
Tujh ko diyaa meraa waqt sabhi
Koi lamhaa meraa naa ho tere binaa
Har saans pe naam teraa


Tere liye hi jiyaa main
Khud ko jo yoon de diya hai
Teri wafaa ne mujh ko sambhaalaa
Saare ghamon ko dil se nikaala
Tere saath mera hai naseeb juDaa
Tujhe paa ke adhoora naa raha

வள வளா ன்னு சத்தம் போடாம, படத்தை போடுங்க....
இந்தபக்கம் கோவை ஆவி, அந்தப்பக்கம் அப்பாஜி சத்தம் போடுவது கேட்கிறது. 
சுப்பு தாத்தா த்யேட்டர் லே 
விசில் சத்தம் தாங்க முடியல்ல.
போட்டுட்டேன். 
நீங்க பாருங்க..
கடைசிலே அந்த பொண்ணு பாடும்போது 
ஹார்ட் வெடிச்சு மௌத் 
ஆகிவிட்டீங்க அப்படின்னா 
தாத்தா பொறுப்பில்ல.
  • என்ன இந்த பாட்டிலே அத்தனை மோகம் ?
  • என்று தானே கேட்கிறீர்கள் ?
  • சுப்பு தாத்தா நேற்று தான் இந்த பாட்டை கீ போர்டிலே கற்றுக் கொண்டார்.
  • எங்கேன்னு தானே கேட்கிறீக...
Beethoven Music School,
Vanchinathan Street , Alwar thirunagar, Valasaravakkam
key board Master
+Music Director Jaikeey

(near Kalyani Mahal)

Thursday, January 15, 2015

ஸ்ரீரங்கத் தெருக்களிலே சுந்தரக் கோலங்கள்

எனது அருமை நண்பர் திரு வேங்கட நாகராஜ் அவர்கள், திருவரங்கத்து தெரு வீதிகளில், பொங்கல் திருநாள் , போகி அன்று போடப்பட்டு இருந்த கோலங்களை, புகைப்படங்கள் எடுத்து அட்டகாச பிரசுரம் செய்து இருக்கிறார் தன வலையில்.
அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஒரு பானை அளவு சக்கரை பொங்கலை எடுத்து அவருக்கு அன்பளிப்பாக தரவேண்டும் .
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள்.

Beautiful Kolams on the streets of Srirangam on the Pongal Festival Day.
Courtesy: Venkatanagaraj.of Photography fame.
A few kolams are from my favourite kolam blog of Mrs.Vani Muthukrishnan also. Thank U madam.



பொங்கல் திருவிழா . யுனைடெட் அரப் எமிரேட்ஸ் இல் இருந்து.
உலகமெல்லாம் இருக்கும் அனைத்து தமிழ் மக்களுக்கும்
எங்கள் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்.


ALSO A PEACOCK DANCE FROM U.A.E.


Tuesday, December 30, 2014

இந்த ரோசா படுத்தும் பாட்டை என்னதான் சொல்ல !!

இந்த ரோசாப்பூ  சோகத்திலும்
பங்கு பெறுகிறதே !!!
முதலில்
பிரிட்டன் கிராமத்து  இசை.
காதரின் ரட்ஜ்.

Britten Folk Songs. Kathryn Rudge -
Mezzo Soprano


அடுத்து,
ராசாவே உன்னை நம்பி, இந்த
ரோசாப்பூ...
raasave unnai nambi
intha rosaappoo




பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண் மூடாதாம்.

இதுவும் சோகமோ ??





சோகம் போதும்.
ரோசா மையமா வச்சு
இன்னொரு பாடல்.


ரோசப்பூவாம் உன் கண்களை நான் பார்த்தேன்
ருசியாய் ஒரு கோப்பை மது அருந்தினேனா
தெரியவில்லை. மதி இழந்தேன்.

ராஜேஷ் கண்ணா
முகமது ரபி குரலில்.


Thursday, December 11, 2014

கண்ணுடையவன்

படமும் பின் வரும் வாசகங்களும் நான் இன்று படித்தது. 
 
 நன்றி: தமிழ் இந்து நாளிதழ். 


கண்ணுடையவன்

(இன்றைய தமிழ் இந்து பேப்பரில் படித்தது.) 

 

“கடவுள் எங்கும் இருக்கிறாரே?

 எல்லாம் கடவுள்தானே?

 ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி!

அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று.

 நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை -

 எல்லோரும் ஒரே உயிர். 

அந்த உயிரே தெய்வம். 

ஸ ஏகஹ . தஸ்ய வாசகஹ பிரணவ 

என்னும் ப்ரும்மஸூத்ர வாக்யத்தை எப்படி எனக்குப்புரியும்படி
அந்தக்காலத்துலேயே எழுதிவெச்சுட்டு போயிருக்காரு பாரதி.

வியப்பா இருக்குல்லே !!!

Friday, November 28, 2014

குடியிருக்கும் வீட்டிற்கு .....

எனது இனிய வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள் வலையிலே நான் படித்த செய்தி இது.

நீங்களும் படியுங்கள்.ரசியுங்கள்.

நண்பர் சசி ராமா அவர்களுக்கு எனது நன்றி. ஆன்மீகப் பதிவாளர் சசிராம் அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.



குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். வாரியார் சுவாமிகள்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

Tuesday, October 21, 2014

Thursday, October 2, 2014

வரம் வேண்டும் வாணி தேவியே

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே

வரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.
வாலறிவன் என்பவர் யார்?
வித்தை என்றால் என்ன?
விற்பன்னன் யார்?
 என்ற அறிவை தருவாய்
 உன்னை வணங்குவதற்கு வேண்டிய
பணிவைத் தருவாய்.
நன்றி.http://www.rangoli-sans-dots.com/2012/10/lotus-rangolis-for-poojas.html

ART OF LIVING BHAJAN
SHARADE SARASWATHI.
இன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து 
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும். 



SARASWATHI MANTHRA