Pages

Monday, June 8, 2015

த்விஜாவந்தி

இந்த த்விஜா வந்தி ராகம் என்ன பாடு படுத்துகிறது நமது மனசை !!
இதை முன்னமே என்னுடைய சங்கீத வலையான மூவி ராகாஸ் ப்ளாக் ல் நான் விவரித்து இருந்தாலும் ஐரோப்பியர்களும் இந்த ராகத்தைப் பாராட்டிப் புகழ்வதை நேற்று தான் கவனித்தேன்.

ஹரி காம்போஜி ராக ஜன்யமான இந்த ராகத்தில் பல அறிய பாடல்கள், கிருதிகள் இருக்கின்றன.

அகிலாண்டேஸ்வரி எனத்துவங்கும் முத்துச்வாமி தீக்ஷதரின் சாஹித்யம் எனக்கு 1977 முதலிலே இருந்தே பரிச்சயம்.

அந்த ராகத்தில் நம் மனதை பிழிந்து எடுக்கும்
 மகாராஜபுரம் சந்தானம்,
ஜேசுதாஸ்,.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள்.

மற்றும்
 சாருலதாவின் வர்ணனை
எல்லாமே சுகம் சுகம்.
இந்த ராகத்தில் தில்லானா அசாத்தியம் .
அதையும் செய்து நம்மை அசத்தி இருக்கிறார் பால முரளி அவர்கள்.
பால முரளியின் தில்லானா இங்கே.
கர்நாடக சங்கீத இசை இலக்கண மேதை டி .என். சேஷகோபாலன் த்விஜாவந்தி ராகத்தை பாடும்போது நமது உனர்வுகள் எப்படி இருக்கிறது?தமிழ் இசைப் பெரியார் எனப் புகழ் பெற்ற

பெரியசாமி தூரன் எழுதிய பாடல்.

எங்கு நான் செல்வேன் அய்யா...?


எங்கு நான் செல்வேன் அய்யா
நீர் தள்ளினால்…
எங்கு நான் செல்வேன் அய்யா?
திங்கள் வெண் பிஞ்சினை, செஞ்சடை தாங்கிடும்
சங்கரா அம்பிகை தாய் வளர் மேனியார்

எங்கு நான் செல்வேன் அய்யாஅஞ்சினோர் இடர் எல்லாம் அழிய ஓர் கையினால் 

அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே
நஞ்சினை உண்டுமே வான் உளோர் நலமுற
நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே எங்கு நான் செல்வேன் அய்யா

by Bombay Jayashreeஉலக நாயகன் படமான
விஸ்வரூபத்தில் :


உனைக் காணாத நான் இன்று நானில்லையே ..

பாடுவது கமலும் சங்கர் மகாதேவனும்இத்தனை நளினமான ராகத்தை விட ஐரோப்பியருக்கும் மனம் வரவில்லை போலும்.
இதன் ஸ்பெர்ரி மார்ட்டின் என்னும் புகழ் பெற்ற இசை வல்லுநர் இந்த ராகத்திலே ஒரு பள்ளி இசை அமைத்து அதையும் தனது கல்லூரி மாணவர்களால் பாடி அவையினரை மகிழ்வித்து இருக்கிறார்.
western classical


த்விஜாவந்தி ராகத்தை ஈதன் சபாரி அவர்கள் தந்து இருக்கும் வித்தை.

விஸ்வரூபத்திற்கு பிறகு வந்த ரஜினி படத்திலும் த்விஜாவந்தியின் சாயல் ஸ்ரீனிவாஸ் அவர்களின் பாடலில் தெரிந்தது. அதனுடன் சாமா என்னும் இன்னொரு ராகத்தையும் கலந்து,
நம்ம கீதா அம்மா செய்கிற அவியல் மாதிரி பாடியிருந்தார்.

அதுவும் மணக்கிறது.

4 comments:

 1. விஸ்வரூபம் படப் பாடல் இந்த ராகம் என்று இன்றுதான் அறிகிறேன். இந்த ராகத்தில் நான் கேட்டிருக்கும் ஒரே பாடல் அகிலாண்டேஸ்வரிதான்!

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா
  சொல்லிய கருத்தும் வீடியோகள் எல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. பள்ளிப்பிள்ளைகள் ஆடும் ஆட்டமும் நன்று.

  ReplyDelete
 4. தாத்தா விஸ்வ ரூபப் பாடல் த்வாஜாவந்திதான்...அருமையான ராகம்....கொஞ்சம் ஹிந்துஸ்தானி கலந்தது. அதனால் அதில் கீர்த்தனைகள் அதிகம் இல்லை. மெதுவாக இழுத்து வேறு ஹிந்துஸ்தானி ஸ்டைலில் அமைந்துள்ளதால் அப்படி. பாம்பே ஜெயஸ்ரீ பாடி இருக்கும் பாடலும் கேட்டிருக்கின்றோம்...

  டிஎன் சேஷகோபாலன் இந்த ராகத்தைப் பாடுவதில் வல்லவர்.....அவரால் தான் அகிலாண்டேஷ்வரி பாடல் அறியப்பட்டத் வெகுவாக. அவர் பாடிய ராம மந்த்ரவ ஜெனிதோ எனும் ஜோன்புரி ராகப் பாடலும், காக்கைச் சிறகினிலே பிருந்தாவனச் சாரங்கா ராகப்பாடலும் முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி வைத்துப் பிரபலமானவை...

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!