Thursday, August 28, 2014
Sunday, August 17, 2014
தாராவா ? ராதா வா ?
கண்ணன் இன்று பிறக்கிறான்.
ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா
தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது.
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது.
அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன்.
அவன் புகழ் பாட இன்று ஒரு நாள்.
இந்த நாள் கோகுலாக்ஷ்டமி
ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள்.
ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி.
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?
Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna.
- Sri Sri Ravi Shankar
ஆஹா ..
ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.
ந்ருத்தமாடு கிருஷ்ணா நடனமாடு கிருஷ்ணா
கோபாலா
தாரா என்றால் மூலம் எதுவோ அதில் இருந்து பெருகி வருவது.
ராதா என்றாலோ அந்த மூலப்பொருளை நோக்கி செல்வது.
அந்த மூலவன் கண்ணன், கிருஷ்ணன் வாசுதேவன், கிருஷ்ணன், கேசவன், பரந்தாமன்.
வெங்கடேசன், கோவிந்தன்.
அவன் புகழ் பாட இன்று ஒரு நாள்.
இந்த நாள் கோகுலாக்ஷ்டமி
ராதா அந்த கண்ணனை நினைத்து நினைத்து உருகுகிறாள்.
ராதையின் கண்களில் இருந்து கசியும் நீர் தாரையாக பெருகும் காட்சி.
அந்த கண்ணன் எப்போது வருவான் என்று ஏங்கி நிற்கும் காட்சி ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் ஒரு இலக்கிய வாதி கேட்கிறார்.
ராதா வா ? தாராவா ?
Dhara means that which comes from the source, while ‘Radha’ means that which goes back to the source. Lord Krishna is the source and Radha is the way or path to the source. Till you become Radha, till you return to the source, you cannot attain Lord Krishna.
- Sri Sri Ravi Shankar
ஆஹா ..
ராதா ராதா என்று கதறி கதறி
தாரை தாரையாக கண்ணீர் வடிக்கும் பக்தரின் கவலை தீர்க்க
அந்த கோவிந்தன் வருவான்.
அந்த கண்ணனைத் துதிக்க, அவன் புகழ் பாட
வலை உலக கவிதாயினி கவிநயா அவர்கள் பாடல் ஒன்றினை யான் பாட
அதை நீங்கள் இங்கு சென்று கேளுங்கள்.
please click on here:
Sunday, July 20, 2014
சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம்
சுப்பு தாத்தாவுக்கு பிடிக்காத சமாசாரம் பலது இங்கே இருக்கு.
நன்றி:
In true love, anyone becomes a poet or a singer. Likewise, Kavya who is drenched in love, dedicates a heart dissolving song to Humpty. A song that expresses her strong affection towards him. Experience a touch of love by Samjhawan; a song voiced by Alia Bhatt.
The film stars Varun Dhawan as Humpty Sharma, Alia Bhatt as Kavya Pratap Singh.
Directed by Shashank Khaitan
பிடிச்சது ஒன்னே ஒன்னு தான்
ப்ளீஸ் நம்புங்க சார்.
அலியா பட் அவங்களோட வாய்ஸ்.
இன்னாயா அப்படி குயில் கொஞ்சறது !!!!!
எந்த பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.
காயத்ரி மந்திரம் நூறு தடவை சொன்னா எந்த பாவமும் பறந்து போயிடுமாம்.
அப்பாதுரை சார் நோஸ் பெட்டர். !!
என்னவோ போங்க.
இந்த அலியா பட் பாடிய பாட்டை கேட்ட, நோ நோ ...
அதிலே கூட கூட வந்த படத்தை ரஹ்ச்யமா ஆனா சுவாரசியமா பார்த்த பாவத்தை போக்கணும் இல்லையா..
அதுனாலே.. அதுனாலே...
இதை ஒரு மணி நேரம் கேட்டுட்டேன்.
Sunday, June 29, 2014
அத லவ்வு என்பாக.
பாரஸ்மானி என்னும் படத்துலே 1963 லே வந்தது.
முகேசும் லதா அம்மாவும் பாடுறாக.
முன்னுரை.
சென்னை அடுத்த குப்பத்து கடற்கரையில் தனியே உட்கார்ந்து யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம, ஆனா சத்தமாக பாடிக்கொண்டிருந்தேன். அங்கு என்னை எதிர்கொண்ட குடிமகன் ஒருவர் தனியே
இன்னாய்யா பாடுறே பெரிசு !! நேக்கு புரியராப்போலே சொல்லு என்று சீறியதன் விளைவு இந்த மொழி பெயர்ப்பு.
சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு
புலவர் இராமானுசம் மன்னிப்பாராக.
பொறுங்க . இதாங்க அவுக அதாங்க டாவ் அடிக்கரவக பெசிக்கராக.
என்றேன்.
திருட்டுத் தனமா சந்திச்சதெல்லாம்
தெரிஞ்சு போயிடும் சீக்கிரம் .
தெரிஞ்சு போயிடும்.
ஊர் சனம்
கூடி கூடி
என்ன சொல்வாக .. நம்ம
மக்காஸ் என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக.
ஊர் முழுக்க சீக்கிரமே
வம்படிப்பாக.
வாய்க்கு வாய் பேசுவாக . அவுக
என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக .
உன்னைப் பத்தி
என் மனசு
எப்ப நினைச்சதோ
கால் நிக்கல்லே. கையும் ஓடல்லே
காசில்லாம க்வார்ட்டர் குடிச்ச
போதை வந்துச்சே.
பேரம் பேசி
மனசைத்தந்து ஒன்
மனசை வாங்கி வச்சேன்.
போகப்போக சனங்களுக்குப்
புரிஞ்சு போயிடும்.
நம்ம சோலி புரிஞ்சு போயிடும். எங்க
மக்காஸ் என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக.
இன்னா குத்தம் செஞ்சுட்டேன் நான்
உன்னை சந்திச்சேன்.
இன்னா பயம் இங்கன இருந்திச்சோ
அதுலே மாட்டிகிட்டேன்.
ஆசை பெருகிச்சு. தாகம் உண்டாச்சு.
மேகமாயிடுச்சு
மழையாய் பெஞ்சு
நெஞ்சு நனைச்சிச்சு .
நீயி நானு ஒன்னு விடாமே
உளறிப்போட்டோமே
விட்டுத் தள்ளு,
இந்த ஜொள்ளு லொள்ளு .
அந்தாண்ட
என்ன சொல்வாக - ஊர்
மக்காஸ் இன்னா சொல்வாக. ?
இத லவ்வு ன்னு சொல்வாக.
चोरी-चोरी जो तुमसे मिली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
गली गली ये बात चली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
तेरा ख्याल मेरे दिल में जब से आया है
क़दम स.म्भलते नहीं और नशा सा छाया है
क़रार खो के ही दिल ने क़रार पाया है
धीरे धीरे ये बात बढ़ी तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...
कितनी ज़ालिम ये मुलाक़ात हुई
जिससे डरते थे वही बात हुई
बढ़ गई प्यास तमन्नाओं की
इस तरह प्यार की बरसात हुई
क़सम तुम्हारी मेरे दिल की बात कह डाली
छोड़ो छोड़ो ये दिल्लगी कि लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...
Movie/Album: पारसमणि (1963)
Music By: लक्ष्मीकांत-प्यारेलाल
Lyrics By: फ़ारूक़ कैसर
Performed By: लता मंगेशकर, मुकेश
முகேசும் லதா அம்மாவும் பாடுறாக.
முன்னுரை.
சென்னை அடுத்த குப்பத்து கடற்கரையில் தனியே உட்கார்ந்து யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம, ஆனா சத்தமாக பாடிக்கொண்டிருந்தேன். அங்கு என்னை எதிர்கொண்ட குடிமகன் ஒருவர் தனியே
இன்னாய்யா பாடுறே பெரிசு !! நேக்கு புரியராப்போலே சொல்லு என்று சீறியதன் விளைவு இந்த மொழி பெயர்ப்பு.
சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு
புலவர் இராமானுசம் மன்னிப்பாராக.
பொறுங்க . இதாங்க அவுக அதாங்க டாவ் அடிக்கரவக பெசிக்கராக.
என்றேன்.
டாவ் அடிச்ச புராணம்.
திருட்டுத் தனமா சந்திச்சதெல்லாம்
தெரிஞ்சு போயிடும் சீக்கிரம் .
தெரிஞ்சு போயிடும்.
ஊர் சனம்
கூடி கூடி
என்ன சொல்வாக .. நம்ம
மக்காஸ் என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக.
ஊர் முழுக்க சீக்கிரமே
வம்படிப்பாக.
வாய்க்கு வாய் பேசுவாக . அவுக
என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக .
உன்னைப் பத்தி
என் மனசு
எப்ப நினைச்சதோ
கால் நிக்கல்லே. கையும் ஓடல்லே
காசில்லாம க்வார்ட்டர் குடிச்ச
போதை வந்துச்சே.
பேரம் பேசி
மனசைத்தந்து ஒன்
மனசை வாங்கி வச்சேன்.
போகப்போக சனங்களுக்குப்
புரிஞ்சு போயிடும்.
நம்ம சோலி புரிஞ்சு போயிடும். எங்க
மக்காஸ் என்ன சொல்வாக ?
அத லவ்வு என்பாக.
இன்னா குத்தம் செஞ்சுட்டேன் நான்
உன்னை சந்திச்சேன்.
இன்னா பயம் இங்கன இருந்திச்சோ
அதுலே மாட்டிகிட்டேன்.
ஆசை பெருகிச்சு. தாகம் உண்டாச்சு.
மேகமாயிடுச்சு
மழையாய் பெஞ்சு
நெஞ்சு நனைச்சிச்சு .
நீயி நானு ஒன்னு விடாமே
உளறிப்போட்டோமே
விட்டுத் தள்ளு,
இந்த ஜொள்ளு லொள்ளு .
அந்தாண்ட
என்ன சொல்வாக - ஊர்
மக்காஸ் இன்னா சொல்வாக. ?
இத லவ்வு ன்னு சொல்வாக.
चोरी-चोरी जो तुमसे मिली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
गली गली ये बात चली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
तेरा ख्याल मेरे दिल में जब से आया है
क़दम स.म्भलते नहीं और नशा सा छाया है
क़रार खो के ही दिल ने क़रार पाया है
धीरे धीरे ये बात बढ़ी तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...
कितनी ज़ालिम ये मुलाक़ात हुई
जिससे डरते थे वही बात हुई
बढ़ गई प्यास तमन्नाओं की
इस तरह प्यार की बरसात हुई
क़सम तुम्हारी मेरे दिल की बात कह डाली
छोड़ो छोड़ो ये दिल्लगी कि लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...
Movie/Album: पारसमणि (1963)
Music By: लक्ष्मीकांत-प्यारेलाल
Lyrics By: फ़ारूक़ कैसर
Performed By: लता मंगेशकर, मुकेश
Monday, June 16, 2014
அப்பா என்று ஒரு அல்ப ஜீவன்
இன்னிக்கு அப்பா நாள்.
+Balu Sriram
எழுதற மாதிரி பாசிடிவ் கண்ணோட்டம் தேவை தான்.
ஸோ , முதல் லே
an inspirational song by Gary Valenciano
My dad
+Balu Sriram
எழுதற மாதிரி பாசிடிவ் கண்ணோட்டம் தேவை தான்.
ஸோ , முதல் லே
an inspirational song by Gary Valenciano
My dad
அப்பாவுக்கும் மகளுக்கும் இருக்கும் பாச உறவே தனி.
இங்கே.
அன்புள்ள அப்பா உங்கள் காதல் கதையை கேட்டால் தப்பா !!
எல்லா பொண்ணுங்களுக்கும் அப்பா தான் HERO.
A tribute to father.
+Chellappa Yagyaswamy மாதிரி புண்யாத்மாக்கள் இந்த காலகட்டத்துலே துர்லபம்.
பொண்ணுங்க வூட்டுலேயும் ஒரு மனுசன் ஓஹோன்னு இருக்கணும் அப்படின்னா அவன் ஜாதகத்துலே அஞ்சாம் இடம் வலுவா இருந்து குரு, சுக்ரன் , இல்லைன்னா, அட் லீஸ்ட் லக்னாதிபதி பார்வையாச்சும்
இருக்கணும்.
+Geetha Sambasivam
கீதா அம்மா நான் சொல்வதற்கு நோ சொன்னாலும் பரவாயில்லை
இன்னிக்கு எங்கே பார்த்தாலும் அப்பா அப்பா அப்பா அப்படின்னு அப்பா புராணம். ஹேமா, ராஜி, காவியக்கவி, தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அரசி, அம்பாள் அடியாள் எல்லோருமே கச்சை கட்டிக்கிட்டு அப்பா அப்பா அப்படின்னு உருகறாங்க.
அவங்களுக்கு அப்பாக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தாங்க்ஸ் சொல்லித்தான் .ஆகணும்.
திருமணமான பொண்ணுங்க, எல்லா விதமான கவலைகளையும் விட்டு விட்டு, ஈவன் .இன் லாஸ் பர்மிசன் கூட இல்லாம, புரந்த வூட்டை புகழ் பாட இன்னிக்கு ஒரு நாள் தான் கண்டிப்பா முடியும் .
அப்பா இஸ் ரியலி கிரேட் யூ நோ.
அப்படின்னு எதிர்த்த ப்ளாக் குட்டிப்பொண்ணு யூ.கே.ஜி. படிக்கிறது. சொல்லும்போது, நான் உன்மையிலேயே விக்கிச்சு போயிட்டேன்.
இங்கன, சீனா அவங்க வலை போனேன்.
A tribute to dad
Suja's composition in the blog of VALAICHARAM EDITOR THIRU CHEENA.
SUBBU THATHA SINGS
சுஜா அவர்கள் வியக்கத்த கவிதை ஒன்று எழுத அதை நான் உடனே பாட ,
உங்களுக்கு கேட்க பொறுமை இருக்குமா ? தெரியல்லையே !!!
இப்பாடலைக் கேட்டு அடுத்த நிமிடமே எனக்கு மடல் எழுதிய அன்பு சீனா அவர்கள் எழுதியது :
+அன்பின் சீனா .
சுப்பு தாத்தா @ சூரி சிவா
நினைவுகளைச் சுமக்கின்ற காலத்தில் இளைப்பாற இது ஒர் நிழல்.
நிமிர்ந்து நடந்து நெஞ்சம கலங்காது செயல் புரிந்த ஓர் சிந்தனை.
உடல் தளர்ந்து ஓய்வு தேடும் காலத்து ஒர் இனிய கனவு.
இன் சொல்லும் இனிய நினைவும் மனத்திற்கு ஓர் நிம்மதி
பாவினைப் பாடலாய்த் தந்த தங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்
எதிர் பாராத நிலையில் மகிழ்வூட்டும் பாடல்
மனம் மகிழ - துணவி - மகள் - மாப்பிள்ளை பேத்திகள் எனக் குடும்பமே மகிழ்ந்தது.
நல்வாழ்த்துகள்நட்புடன் சீனா:
என்னதான் சீனா சார் சொன்னாலும், தினம் தினம் கோவில்களிலும் பப்ளிக் பார்க் லேயும் ஆச்ரமங்களிலும் முதியோர் இல்லங்களிலும் நான் பார்க்கும் அப்பாக்கள் : பலரிடம் தேவையான பணம் இருக்கிறது. ஆ..ஆனாலும் ஆ..ஆதரவா பேச ஆள் இல்லையே !!
அண்மையில்
.......
ஒரு போஷ் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் எனது நண்பர்,
ஒரு 85 வயது முதியவர் சொன்னார்.
பையன் நேரடியா அந்த ரெசிடென்சி ஆபிசுக்கு பணம் அனுப்பிச்சுடறான்.
எத்தனை ?
நான் கேட்டு இருக்கவேண்டாம். கேட்டு விட்டேன்.
அட்வான்ஸ் 25 லட்சம். மாச மாசம் 19 ஆயிரம்.
அப்படியா என்று கேட்டேன்.
எல்லா வசதியும் இருக்கிறது என்றார்.
அப்படி என்ன வசதி ? வீட்டில் இல்லாதது, கிடைக்காதது ?
என்று வெகுளித்தனமாக நான் கேட்க,
காமன் கிச்சன், ப்ரேயர் ஹால், ஜிம், இன்டர்னட், ஸ்விம்மிங் பூல், அவசர வைத்திய வசதி 24 x7 எல்லாமே இருக்கு. உடம்புக்கு வந்த அடுத்த செகண்டே, அப்பாலோ விலேந்து ஆம்புலன்ஸ் வந்துடும்.
பலே என்றேன்.
என் கண்களை கூர்ந்து பார்த்த அவர்,
தொடர்ந்து,
"என் பையன் எப்பவுமே ப்ரோ ஆக்டிவ் ." என்றார்.
புரியல்ல என்றேன்.
"அப்படியே எதுனாச்சும் நடந்துடுத்துன்னா, பையன் நம்ம சம்பிரதாயப்படி எல்லாம் செஞ்சுடலாம், தனக்காக வைட் பண்ண வேண்டாம் என்று எழுதிக்கொடுத்து விட்டு போயிருக்கான் ஸ்டேட்சுக்கு.
ஹி வொர்க்ஸ் யூ நோ ரௌண்ட் த கிளாக்.
ஆல்வேஸ் பிளையிங் ப்ரம் ஈஸ்ட் டு வெஸ்ட் . "
அவர் சிரித்துக்கொண்டே தான் சொன்னார். எனக்குத் தான் பாவம் என்று தோன்றியது.
பக்கத்திலே என் இல்லாள் இருந்தாள். லேசா என் இடுப்பை இடித்தாள். அம்பது வருசத்துக்கு முன்பு ரசித்து இருந்திருக்கலாம். இப்ப வலித்தது.
"பேசினது போதும். சும்மா இருங்கோ "
என்று அதற்கு அர்த்தம் என்று எனக்குப் புரியும்.
"எப்பவுமே ஒரு ஜெனரேஷன் அடுத்த ஜெனெரேஷன் நன்னா இருக்கணும் என்ற நினைப்பிலே தான் தன கார்யங்களைச் செய்யணும்.
அப்படி நம்ம நினைக்கிற பட்சத்திலே நம்ம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகணும். we should always adjust "
இது என் பார்யாள்.
your wife is smart
என்றார் .வந்த நண்பர்
ஐ ஆம் ஒன்லி ப்ராக்மாடிக் என்று இவள் அதற்கு add பண்ணினாள் .
நான் மேலே ஆகாயத்தைப் பார்த்தேன். மேகங்கள் கலைந்து கலைந்து புது தினுசான உருவங்களை உண்டு பண்ணிக்கொண்டு இருந்தன. அந்தக் காலத்து வால்யூஸ் எல்லாம் இந்தக்காலத்துக்கு பொருந்தாதுடா தாண்டவக்கோனே..
என்று தூரத்தில் யாரோ சதிராட்டம் போடுவது போன்று பிரமை.
நம்ம போயிட்டா இவளை யாரு பார்த்துப்பா அப்படின்னு யோசனை பண்ணினது , எத்தனை ஃபூலிஷ் என்று புத்தருக்கு வந்த ஞானம் போல் வந்தது.
IN THE MODERN WORLD, IT IS THE APPAs WHO are perceived by most of the present day children just as
ammas husband and
who continue to suffer in silence
அம்மாக்கள் எப்பவுமே அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போயிடுவார்கள்.
அப்பா நீ எப்படி இருக்கே ?
அந்த ஒரு வாக்கியத்துக்காக ஏங்கும்
அப்பாமாருக்கு
நீ உன் கடமையைச் செஞ்சாச்சு இல்ல..
கம்னு கிட.
வந்தவருக்கு லேசா கண் கலங்கியதை பார்த்துவிட்டு, இவள் :
கண்ணைத் துடைச்சுக்கோங்கோ . அழக்கூடாது. இன்னிக்கு அப்பாக்கள் தினம்.ஆயுஷ்மான் பவ.
இங்கே இருந்தே ஸ்கைப்பிலே குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கோ.
Thursday, May 8, 2014
Thursday, April 3, 2014
கண்கள் இல்லாதவர் மட்டும் படிக்க
இன்று ஒரு அமுதமான பதிவு படித்தேன். அது ஆங்கில பதிவு.
ஒரு பெண்.
பிறவியிலேயே அவள் குருடு இல்லை. எனினும் அவளுக்கு விவரம் தெரிந்தது முதல் அவள் உலகத்தைக் கண்டதே இல்லை.
அவளுக்கு, தான் குருடு என்பதாலேயே
உலகத்தார் எல்லாவற்றையும் காண்கையிலே
தான் மட்டும் காண இயலவில்லையே என்ற ஆதங்கம்.
கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்குச் சொந்தமில்லை என்பதை புரியாத வயது.
தனக்கு இல்லாதது பார்வை. அது மற்றவர்களுக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் தன்னைக் காண வருபவர் அத்தனை பேரையும் வெறுத்தாள் .
ஒருவன் மட்டும் விதி விலக்கு . அவனும் அவள் வயதை ஒத்தவன்.
அவன் பேசுவது இதமாக இருந்தது. அவன் அருகாமை அவள் ஆதங்கத்தைக் குறைத்தது.
அவளுக்கு வேண்டுவது எல்லாம் அவன் மூலம் கிடைத்தது. அவன் அவள் கண்களாய் இருந்தான்.
அவனும் அவளும் ஒன்றாய் இருந்ததைக் கண்ட சுற்றம் உற்றம் அவளிடம் அவனிடம் சொல்லியது.
நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்.
கண்டிப்பாக செய்துகொள்கிறேன். மன்னவனே மனதுக்கு ஏற்ற வனே அவன் தானே .!!
ஆனால் ஒன்று
திருமணம் எனக்கு பார்வை கிடைத்த பின். என்றாள் அவள்.
அதைக் கேட்ட அவன் உலகெங்கும் சுற்றினான். தன பொருள் எல்லாம் கொட்டினான். வாரி இறைத்தான்.
அவன் பார்க்காத மருத்துவர், வணங்காத தெய்வம் இல்லை.
ஒரு நாள் ஒரு நாள் ...
அவளுக்கு பார்வை கிட்டியது.
ஆஹா என மகிழ்ந்தாள்.
என்ன ஒரு உலகம் ! என்ன அழகான உலகம். !!
என்ன அழகான வாலிபர்கள் !
உலகத்தின் அழகில் லயித்தாள் .
எதிரில் உள்ள கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்.
தான் எத்தனை அழகு !!
தன் அழகிலே தானே மயங்கினாள்.
அந்த சமயத்தில், பக்கத்தில் இருந்த யாரோ ஒருவர், அவள் என்றோ இட்ட
வாக்குறுதியை நினைவு கூர்ந்தார்கள்.
ஆமாம். எனக்குப் பார்வை கிடைத்தால், எனக்கு இதுகாறும் உறுதுணையாய் இருந்தவனைத் திருமணம் செய்வேன் என்று வாக்கு தந்தேன்.
அவன் எங்கே ?
இதோ வந்து விடுவான் என்றார் ஒருவர் .
அவன் வந்தான்.
இவள் திடுக்கிட்டாள்.
இவனையா திருமணம் செய்துகொள்வது ?
இவன் அழகில்லையே ?
எனக்கு நிகரில்லையே..!!
தன்னால் முடியாது என்று தீர்மானமாக நினைத்தாள்.
சொல்லிவிட்டாள்.
ஐ ஆம் சாரி.
அவன் சொன்னான்.
சரி. .
நீ கண்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.
சொல்லி மறைந்தான்.
**************************************************************************
***********************************************************************
********************************************************************
.
கருத்து:
ஆவிஸ் விச்வனாநாதன்.
http://avisviswanathan.blogspot.in/2014/04/when-you-give-give-without-expectations.html
Anything you gave, bounces back to you. What we gave, comes back to us. - Sri Sri Ravi Shankar
But not necessarily from the same person.
Sunday, March 23, 2014
மணிராஜ்: மாங்குயிலே .. பூங்குயிலே..
(மேலே கிளிக்குங்கள். கிளி சத்தம் குயிலு சத்தம் கேளுங்க.)
என்னங்க இன்னிக்கு இந்த பாட்ட கேட்டு கிட்டு சொக்கி போயி இருக்கீக ?
அடியே... இந்த குருவி குயிலு பற்றி ராஜேஸ்வரி மேடம் இன்னிக்கு இன்னா அழகா ஒரு பதிவு போட்டு இருக்காக.
அப்படியே பிரமிச்சு போயி இருக்கேனாக்கும்.
என்னங்க இன்னிக்கு இந்த பாட்ட கேட்டு கிட்டு சொக்கி போயி இருக்கீக ?
அடியே... இந்த குருவி குயிலு பற்றி ராஜேஸ்வரி மேடம் இன்னிக்கு இன்னா அழகா ஒரு பதிவு போட்டு இருக்காக.
அப்படியே பிரமிச்சு போயி இருக்கேனாக்கும்.
Sunday, February 23, 2014
கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.
ஒரு புலிக்குக் கூட நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம். நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.
ஆனால் இந்த கணவன் மார்களுக்கு டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.
ஆனால் இந்த கணவன் மார்களுக்கு டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.
என்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..
என்று இவள் கேட்க,
என்று இவள் கேட்க,
இந்தாங்க, முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள்
சரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.
ஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..
Husband falls in a different category
அவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி.
அப்படியா. ? ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
உங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி ,
அடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல .
எனக் குறைப்பட்டுக் கொண்டாள் .
நானா ? டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ எக்ஸ். என்.
குக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே யாரு ? அவரா ? நீங்களா ? இல்ல பிப்டி பிப்டி ஆ ?
நீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன ?
அதானே பார்த்தேன்.
நடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன்.
அப்படியா.
1 மணிக்கு லஞ்ச் வரும்.
என்ன வருமா ?
ஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.
லஞ்ச் சாப்பிடுவீங்க..அப்பறம் ?
சாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.
ஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா !!
அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.
என்ன ?
அட் நோ டயம், அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா ??
ஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா ?
அவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..
இது ?
ஹௌஸ் ரிகன்ஸ்டர்க்சன் பிராசஸ்.
சாயந்திரம் ?
வாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.
அவர் கூட வருவாரா??
சில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார். என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன்.
அப்ப அவரு அந்த நேரத்துலே அவர் ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...
எஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.
பின்னே ?
அப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...
அதுக்கே 8 ஆகி விடுமே...
ஆமாம். நடு விலே அந்த ad வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன். அது என்னோட ஜாப், ரிலேஷன் ஷிப் லே ஒரு ஈக்விடி வேணும் இல்லையா.
சில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.
அப்பறம் ?
சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...
அப்படியா...
அந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது.
பிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..?
ஆபீஸ் சீரியல் வந்து விடும்.
கார்த்திக், ராஜி காதல் சண்டை படு ஜோர் இல்ல.??
ஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா !! நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற. சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.
முடியறதுக்கு 11 ஆகிவிடுமே...
ஆமாம். ஆமாம். கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார். சரின்னு நானும் சொல்லிடுவேன்.
அப்படியா..
ஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம். காலைலே 6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.
சரிதான். அப்ப அவருக்கு நாள் முழுக்கத்தான் வேலை அப்படின்னு சொல்லுங்க.. ?
வீட்டிலே இருக்கும் போதுதானே வேலை.
நான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா ?
ஆமாம்.
நான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் ?
எப்படி ? எனக்கு இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...
நான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.
அவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.
கண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.
ச் ச் அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.
சரி.
என்ன ,,, எல்லா ஹஸ்பன்ட் ம் முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.
சரி.
யூ ஷுட் பி லயன் ஹாரட்டட் .you should be lion-hearted
புரியல்ல.
நம்ம நெஞ்சத்த கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.
சரி.
கொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.
ஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.
இது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.
நாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ ?
விடாதே பிடி.
தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.
ரொம்ப தாங்க்ஸ் மாமி.
Subscribe to:
Posts (Atom)




