Pages

Sunday, February 23, 2014

கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

ஒரு புலிக்குக் கூட  நன்றாக பயிற்சி கொடுத்து விடலாம்.  நமது சொல்படி செய்ய வைத்து விடலாம்.

ஆனால் இந்த கணவன் மார்களுக்கு  டிரைனிங்கா ... ??ஊஹூம் ...
சுத்தமாக நம்ம வழிக்கு கொண்டு வர முடியாது என்று அலுத்துக் கொண்டாள் எதித்த வீட்டு எச்சுமி.

என்ன ஏன் அப்படி சொல்லிபோட்டே..
என்று இவள் கேட்க,
 இந்தாங்க,  முதல் லே இந்த வீடியோவை பாருங்க என்று டி.வி.டி.லே போட்டு காண்பித்தாள் 

சரிதான். நான் கொஞ்சம் சிரமபட்டால் புலியைக்கூட ட்ரைன் செய்து விடலாம். போல இருக்கே. என்றாள் இவள்.

ஆனால், ஹஸ்பன்ட் பால்ஸ் இன் எ டிப்பரண்ட் காடிகரி. இல்லையா..
 Husband falls in a different category 
அவரை டைகர் மாதிரி ட்ரீட் பண்ணி டிரைன் பண்ண முடியாது. இது எச்சுமி. 

 அப்படியா. ? ஹஸ்பண்டை டிரைன் செய்வதற்கு ரொம்ப கஷ்டபடுகிறீர்கள் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியாதா என்று ஆரம்பித்த எச்சுமி , 

அடுத்த வீட்டுலே எதிர்த்த வீட்டுலே என்ன நடக்குரதுன்னெ கூட தெரியாம அப்படி என்ன தான் டி.வி. பார்ப்பீர்களோ தெரியல்ல  .

எனக் குறைப்பட்டுக் கொண்டாள் .

நானா ? டி.வி. லே காலைலே காபி சாப்பிட்டுக்கொண்டே வேளுக்குடி கேட்பேன். பத்துலெந்து பதினிரண்டு ஸ்டார் மூவீஸ். இல்லேன்னா ஏ  எக்ஸ். என். 

குக்கர்லே வைக்கறது அரிசி கழஞ்சு கொட்டறது, கறிகாய் நறுக்கி அதுலே வைக்கறது எல்லாமே  யாரு ?  அவரா ? நீங்களா ? இல்ல பிப்டி பிப்டி ஆ ?


நீங்க கேட்கிறதை பார்த்தா, ஏதோ நான் ஜாலியா இருக்கிற மாதிரி, உங்களுக்கு தோன்றது. நான் சும்மா ஒன்னும் உட்கார்ந்து இருக்கமாட்டேன். எனக்கு மட்டும் பொறுப்பு இல்லையா என்ன ?

அதானே பார்த்தேன்.

நடு நடுவிலே உப்பு புளி சாம்பார் பொடி எல்லாம் கரெக்டா இருக்கா அப்படின்னு போயி, செக் பண்ணிடுவேன். 

அப்படியா.

1 மணிக்கு லஞ்ச் வரும்.

 என்ன வருமா ?

ஆமாம். ரெடின்னு சொன்னவுடனே தான் போவேன் டேபிளுக்கு.

லஞ்ச் சாப்பிடுவீங்க..அப்பறம் ?

சாப்பிட்டபின், ஒரு தூக்கம் போட்டாத்தான், ஈவினிங் வாக் பிரிஸ்க் ஆ போக முடியும் இல்லையா.

ஸோ நைஸ் டு ஹியர். நீங்க மேன் மெனெஜ்மெண்டிலெ எம்.பி. ஏயா !!

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இருந்தாலும் எனக்கும் லேபர் ரூல்ஸ் எல்லாம் நன்னாவே தெரியும்.

என்ன ?

அட் நோ டயம்,  அஞ்சரை மணி நேரத்திற்கு மேலே தொடர்ந்து ஒர்க் பண்ண கூடாது என்று ஹஸ்பன்ட் கிட்டே ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லி இருக்கேன்.இந்த டொமஸ்டிக் வயலன்ஸ் மாதிரி எந்த குத்தமும் வந்துடக் கூடாது இல்லையா ??

ஹெச் ஆர் மேனேஜர் அவர் இருந்தாரா நீங்களா ?

அவர்தான். ஆனா அந்த ஹெச்.ஆர். வேற ..

இது ?

ஹௌஸ் ரிகன்ஸ்டர்க்சன் பிராசஸ்.

சாயந்திரம் ?

வாக்கிங் போவேன். அதுக்கு முன்னாடி ஸ்ட்ராங் டீ போட்டுத் தருவார் பாருங்க.. சுகமோ சுகம்.

அவர் கூட வருவாரா??
சில நாளைக்கு கூட வருவார். இல்லேன்னா, அடுத்த நாள் என்னென்ன வேணும் அப்படின்னு கேட்டுகிட்டு சமத்தா மார்கெட்டுக்கு போயி வாங்கிண்டு வருவார்.  என்ன அவருக்கு பிடிக்குமோ அத அந்த பீல்ட் அவர் பார்த்துக்கலாம் அப்படின்னு அலௌ பண்ணிட்டேன். 

அப்ப அவரு அந்த நேரத்துலே அவர்  ஜோலியை பார்த்துக்கலாம் . இல்லையா...

எஸ். ஹீ வில் பி ஆன் ஹிஸ் ஓன் . .நோ ப்ராப்ளம். ஐ கிவ் ஹிம் புல் ப்ரீடம்.

பின்னே ?

அப்பறம் சாயந்திரம் தான் ஆறு மணிக்கு ராஜ் நியூஸ் , பின்னே, மண் வாசனை , கருத்தம்மா, தெய்வம் தந்த வீடு, ...

அதுக்கே 8 ஆகி விடுமே...

ஆமாம். நடு விலே அந்த ad  வர நேரம் பார்த்து குக்கர் லே திரும்பவும் எல்லாத்தையும் சுட வச்சுடுவேன்.  அது என்னோட ஜாப்,     ரிலேஷன் ஷிப் லே ஒரு    ஈக்விடி வேணும் இல்லையா.
சில நாளைக்கு மட்டும். இவரு பார்த்து பாரு.

அப்பறம் ?

சரவணன் மீனாட்சி, சூப்பர் சிங்கர் ...

அப்படியா...

அந்த டயத்திலே தட்டுலே இவர் எல்லாத்தையும் போட்டு கொண்டு வந்து வச்சுட்டு போயிடுவார். நான் போட்டதை , இருக்கறதை, வாயைத் திறக்காம, சூப்பர் சிங்கர் முடியறதுக்குள்ளே சாப்பிட்டு விட்டு , நானே என் தட்டை கழுவி வச்சுடுவேன். இவருக்கு ஒரு தொந்தரவு கொடுக்கக்கூட மனசு வராது. 

பிரமாதம்...என்னதான் இருந்தாலும் உங்க மனசு தங்கம் தான். அப்பறம்..?

ஆபீஸ்  சீரியல் வந்து விடும்.

கார்த்திக், ராஜி  காதல் சண்டை படு ஜோர் இல்ல.??

 ஆனா விஷ்ணு லக்ஷ்மி தான் செம நடிப்பு, போதாதா !! நடுவிலே அந்த காமெடி கூட்டம் வேற.  சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாப் போயிடும்.

முடியறதுக்கு 11 ஆகிவிடுமே...

ஆமாம். ஆமாம்.  கண்ணை சுழற்றிண்டு வரும். அப்ப இவர் நான் கொஞ்சம் பி.பி.சி. பார்க்கரேனே அப்படின்னு கேட்பார்.  சரின்னு நானும் சொல்லிடுவேன்.

அப்படியா..

ஆமாம். காலைலேந்து கஷ்டப்படறார். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னிண்டாத் தானே அடுத்த நாளைக்கு பிரிஸ்கா இருக்கலாம்.  காலைலே  6 1/2 க்கே இவருக்கு காபி வேணும். தானே போட்டுப்பார். எனக்கும் கலந்து வைப்பார்.

சரிதான்.  அப்ப  அவருக்கு நாள் முழுக்கத்தான்  வேலை அப்படின்னு சொல்லுங்க..

வீட்டிலே இருக்கும் போதுதானே   வேலை.
 நான் வாக்கிங் போனா ஒன்னும் இல்லையே.. நீங்க அந்த பாயிண்ட் பார்க்கலையா ?

ஆமாம். 

நான் தான் கரெக்டா டிரைன் பண்ணி வச்சுருக்கேனே .. அப்பறம் என்ன கஷ்டம் ?

எப்படி ? எனக்கு  இந்த டிரைனிங் எப்படி ன்னு கொஞ்சம் சொல்லி தரக்கூடாதா...

நான் சொல்லித் தரதை விட நீங்களே இந்த வீடியோவை பார்த்து கத்துக்கலாம்.

அவரையும் பார்க்கச் சொல்லணும். பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்.

கண்டிப்பா கொடுப்பார். ஆனா ஒன்னு மட்டும் நினைவிலே வச்சுக்கணும்.
ச்  ச்  அப்படின்னு தொட்டதுக்கெல்லாம் இச் கொட்டுவார். கண்டுக்க கூடாது.

சரி. 

என்ன ,,,  எல்லா ஹஸ்பன்ட் ம்  முதல் ஒரு வாரத்துக்கு கஷ்டம் பீல் பண்ணுவாங்க  .அதைப்பார்த்து நானே பாத்துக்கறேன் என்று மட்டும் சொல்லி விடக்கூடாது. உங்க இலட்சியத்திலே நீங்க குறியா இருக்கணும்.

சரி. 

யூ ஷுட் பி லயன் ஹாரட்டட் .you should be lion-hearted

புரியல்ல. 

 நம்ம நெஞ்சத்த  கொஞ்ச நாளைக்கு அந்த கர்பக்ரஹத்துலே இருக்கிற ஈஸ்வரன் மாதிரி கல்லா வச்சுக்கணும் அப்படின்னு சொல்றேன்.

சரி. 

கொஞ்சம் கொஞ்சமா, எல்லாமே ஒரு வாரத்துலே  அட்ஜஸ்ட் ஆயிடும். அப்பறம் அதுவே ஜாப் ஆயிடுத்துன்னா நம்ம விட நம்ம கட்டிக்கிட்டவர் நன்னாவே சமைப்பார்.

ஆஹா. இதத்தான், இதத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

இது கணவன் மார்களுக்கு ஒரு சிறப்பு பயிற்சி. சீரியல் லே முதல் எபிசொட்.

நாளைக்கே இந்த வீடியோவைப் பார்த்து விடறேன். ஆனா கொஞ்சம் விட்டுப் பிடிக்கனுமோ ?விடாதே பிடி.
தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறது வேஸ்ட் ஆப் டைம்.

ரொம்ப தாங்க்ஸ் மாமி.


22 comments:

 1. நகைசுவையான பதிவு. இந்த மாதிரி மனைவியைக் கிண்டல் செய்யும் ஜோக் நிறைய படிக்கிறோம் சுப்பு ஐயா. ஆனால் உண்மை என்னவென்றால் இந்த மாதிரி ஒரு வீட்டில் கூட நடக்காது என்றே நினைக்கிறேன். நல்ல கற்பனை இது . கணவர் சமைத்தால் அவரே அதை சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே. இதில் மனைவி எங்கே சாப்பிடுவது.
  ஆனாலும் உங்கள் நகைச்சுவையை ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஏங்க, நல்லா சமைக்கற ஆண்கள் நிறைய பேர் இருக்காங்க.. :)

   Delete
  2. உங்க அப்பாவோட செல் நம்பர் இருக்கா ? தாங்க. .
   உங்களுக்கு ஒரு மேட்ரிமோனி ad கொடுக்கும்போது
   இந்த உங்களுடைய திறனையும் சேர்த்து தரச் சொல்லுங்க.

   குட் லக் ஸூன் .
   சுப்பு தாத்தா.
   www.wallposterwallposter.blogspot.in

   Delete
 2. ஹா....ஹா...

  முதல் வீடியோ சுவாரஸ்யம். என்னதான் பழகிய புலியாக இருந்தாலும் பயமாக இருக்காதோ? இந்தப் படத்தில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஒரு தாலாட்டுப் பாடலுக்கு ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டது இல்லை?

  ReplyDelete
  Replies
  1. 1.முதல் கொஞ்ச நாளைக்குத் தான்.அப்பறம் அட்ஜஸ்ட் ஆயிடும்.
   2. எக்சாக்ட்லி.
   சுப்பு தாத்தா

   Delete
 3. ரசிக்க வைக்கும் நகைச்சுவை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. ரசி,ருசி
   சுப்பு தாத்தா.

   Delete
 4. "எங்க வீட்டுல நடக்கிறதெல்லாம் இப்படி பப்ளிக்கா வெளியிடறது கொஞ்சம் கூட நல்லா இல்லே...." அப்டீன்னு சொல்லலாம்னு பார்த்தேன்...அது சரியில்லேன்னு தோணுது. நீங்க சொன்னதுல அம்பது பர்சன்ட்டு தான் இங்க நடக்குது!...

  ReplyDelete
 5. பெருமாள் தான் அவருக்கு நல்ல புத்தி கொடுக்கணும்....!!!!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த ஜன்மத்திலே கண்டிப்பா கொடுப்பார்.
   அதுக்காகத்தானே உங்க வலைக்கு தினமும் எழுந்த உடனேயே வரேன்.(man lives on hopes)
   சுப்பு தாத்தா.

   Delete
 6. எங்கேயும் எப்போதும் - நகைச்சுவை!.. நகைச்சுவை!..
  ஐயா.. உங்கள் தளத்தில் பதிவுகள் வெளியாகும் போது
  எங்கள் மனம் ஆனந்தத்தில் மிதக்கின்றது!..

  ReplyDelete
  Replies
  1. மிதக்கிறதா !!
   சேமியா பாயசத்திலே ஆங்கங்கே மிந்திரி திராட்சை மாதிரி யா ?

   சுப்பு தாத்தா

   Delete
 7. நீங்கள் வரிசைக் கிரமமாக எல்லா சேனல்களையும் சீரியல்களையும் பார்த்துவிட்டு பாட்டி மீது பழி போடுவதாகத் தெரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. நெவர் மை லார்ட்
   இட் இஸ் த அதர் வே அபௌட்
   ஆனா இதுலே சுப்பு தாத்தா மீனாச்சி பாட்டி அப்படின்னு போடவே இல்லயே ...

   சுப்பு தாத்தா

   Delete
 8. திடீர்னு ஒரு வாரம் உலகம் முழுக்க டிவி சிக்னல் வேலை செய்யலேன்னா என்னாகும்?

  ReplyDelete
  Replies
  1. அப்பாதுரை சார் ஒரு பதினைந்து நாளா புதுசு ஒண்ணுமே எழுதல்லெயெ .... அதுக்கே ஒன்னும் ஆவலையே
   சுப்பு தாத்தா

   Delete
 9. சிரிச்சுகிட்டே படிச்சு முடிச்சேன் தாத்தா..

  ReplyDelete
  Replies
  1. அனுபவப்பட்டவன் சொல்றேன். கோச்சுக்காதீக.
   இப்பவே சிரிப்பதெல்லாம் சிரிச்சுப்புடுங்க.
   கல்யாணம் கட்டிகின்னெ பின்னே

   ...????

   சுப்பு தாத்தா.
   www.wallposterwallposter.blogspot.in

   Delete
 10. செம காமெடி போங்க! தாத்தா உங்களுக்கு இந்த வயசுலயும் நக்கல்ஸ், நையாண்டி! ஏதோ சின்ன வயசு போல! நையாண்டி தர்பார் ஆரம்பிசுடுங்க! அது சரி எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் ஸ்ட்ரைக் பண்ணினா என்னாஅகும்?! அதான் இந்த Father's day, mother's day அப்படினு எல்லாம் கொண்டாடுறது போல husband's day அப்படினு கொண்டாடினா என்ன? என்ன சொல்றீங்க தாத்தா?!!!

  ரொம்பவே ரசித்தோம்!

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. அப்படியா !!
   அப்ப நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பதில் சொல்லவேண்டிய
   பதிவு ஒன்னு நீங்க வருவீக அப்படின்னு காத்துக்கிட்டு இருக்குது.
   www.wallposterwallposter.blogspot.in
   சுப்பு தாத்தா.

   Delete
 11. வீட்டில் மதுரை ராஜ்ஜியம் என்று சொல்லிக் கொள்வதிலும் ஒரு அலாதி இன்பம் தெரிகிறது. பதிவை ரசித்தேன்.

  ReplyDelete
 12. சரியான குறும்புத் தாத்தா அதுக்கு ஏற்றாப்போல் சீரியல்

  சமையல் அறையில் அவன் உப்பா சர்க்கரையா

  ஹா ஹா ஹா

  ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!