Pages

Sunday, June 29, 2014

அத லவ்வு என்பாக.

பாரஸ்மானி என்னும் படத்துலே 1963 லே வந்தது.
முகேசும் லதா அம்மாவும் பாடுறாக.




முன்னுரை.


சென்னை அடுத்த  குப்பத்து  கடற்கரையில் தனியே உட்கார்ந்து யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம, ஆனா சத்தமாக பாடிக்கொண்டிருந்தேன்.  அங்கு என்னை எதிர்கொண்ட குடிமகன் ஒருவர் தனியே 
இன்னாய்யா பாடுறே பெரிசு !! நேக்கு புரியராப்போலே சொல்லு என்று  சீறியதன்  விளைவு இந்த மொழி பெயர்ப்பு. 

சென்னைத் தமிழில் ஒரு மொழி பெயர்ப்பு 
புலவர் இராமானுசம் மன்னிப்பாராக.

பொறுங்க . இதாங்க அவுக அதாங்க டாவ் அடிக்கரவக பெசிக்கராக. 
என்றேன்.

டாவ் அடிச்ச புராணம். 

திருட்டுத் தனமா சந்திச்சதெல்லாம்
தெரிஞ்சு போயிடும் சீக்கிரம் .
தெரிஞ்சு போயிடும்.
ஊர் சனம்
கூடி கூடி
என்ன சொல்வாக .. நம்ம
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத லவ்வு  என்பாக.

ஊர் முழுக்க சீக்கிரமே
வம்படிப்பாக.
வாய்க்கு வாய் பேசுவாக . அவுக
என்ன  சொல்வாக ?

அத லவ்வு  என்பாக .



உன்னைப் பத்தி
என் மனசு
எப்ப நினைச்சதோ
கால் நிக்கல்லே. கையும் ஓடல்லே
காசில்லாம  க்வார்ட்டர் குடிச்ச
போதை வந்துச்சே.

பேரம் பேசி
மனசைத்தந்து ஒன்
மனசை   வாங்கி வச்சேன்.

போகப்போக   சனங்களுக்குப்
புரிஞ்சு போயிடும்.
நம்ம சோலி புரிஞ்சு போயிடும். எங்க
மக்காஸ் என்ன சொல்வாக ?

அத  லவ்வு என்பாக.

இன்னா குத்தம் செஞ்சுட்டேன் நான்
உன்னை சந்திச்சேன்.
இன்னா பயம் இங்கன இருந்திச்சோ
அதுலே மாட்டிகிட்டேன்.

ஆசை பெருகிச்சு. தாகம் உண்டாச்சு.
மேகமாயிடுச்சு
மழையாய் பெஞ்சு
நெஞ்சு நனைச்சிச்சு .

நீயி நானு ஒன்னு விடாமே
உளறிப்போட்டோமே
விட்டுத் தள்ளு,
இந்த ஜொள்ளு லொள்ளு .
அந்தாண்ட
என்ன சொல்வாக - ஊர்
மக்காஸ் இன்னா சொல்வாக. ?

இத லவ்வு ன்னு சொல்வாக. 




चोरी-चोरी जो तुमसे मिली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे
गली गली ये बात चली तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे 


तेरा ख्याल मेरे दिल में जब से आया है
क़दम स.म्भलते नहीं और नशा सा छाया है
क़रार खो के ही दिल ने क़रार पाया है
धीरे धीरे ये बात बढ़ी तो लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...

कितनी ज़ालिम ये मुलाक़ात हुई
जिससे डरते थे वही बात हुई
बढ़ गई प्यास तमन्नाओं की
इस तरह प्यार की बरसात हुई
क़सम तुम्हारी मेरे दिल की बात कह डाली
छोड़ो छोड़ो ये दिल्लगी कि लोग क्या कहेंगे
अजी इसे प्यार कहेंगे...


Movie/Album: पारसमणि (1963)
Music By: लक्ष्मीकांत-प्यारेलाल
Lyrics By: फ़ारूक़ कैसर
Performed By: लता मंगेशकर, मुकेश



7 comments:

  1. இந்தப் பாட்டு கேட்டதில்லையே...

    ReplyDelete
  2. தூங்குமுன் கொஞசம் படிப்பதும் கொஞ்சம் பழைய இந்தி பாட்டு கேட்பதும் கண்டிப்பாகிப் போன வழக்கம். நேற்றிரவு தூங்குமுன் கடைசியாகக் கேட்ட பாட்டு.. இன்னிக்கு உங்க ப்லாக் பார்த்தால்.. அட.
    மிகவும் பிடித்த ஐம்பது டூயட்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் இந்தப் பாடல் இடம்பெறும்.

    ReplyDelete
  3. இதற்கு முன் இந்தப் பாட்டைக் கேட்டதில்லை.. ஆனாலும் இனிமையாக இருக்கின்றது.

    ReplyDelete
  4. பாடல் பகிர்வு அருமை.

    ReplyDelete
  5. ஹிந்திப்பாட்டு கேட்டு ரொம்ப நாளு ஆச்சு!

    ReplyDelete
  6. மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  7. அய்யா! தங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். நேரம் வாய்க்கும்போது பார்க்கவும்//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!