Sunday, March 30, 2008
இந்த வாரம் நான் ரசித்த .... !! Who gets this Golden Crown this week ?
இந்த வாரம் நான் ரசித்த பதிவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நாம் காண இருப்பது:
http://arumbugal.blogspot.com/
அழகான மழலைச் செல்வங்களுக்கான பாட்டு ஒன்று அமோகமாக இருக்கிறது.
ஒரு சிட்டுக் குருவியோ அல்லது புறாவோ அது ! அதைப்பார்த்தபின் என்ன
அழகான ஒரு பாட்டு குழந்தைகளுக்காகவே எழுதியிருக்கார் பாருங்கள்.
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !
ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !
உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் ! !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு
இதில் என்ன விசேடம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு ப் புரியாமல் இல்லை. இது மற்ற பாடல்களிலிருந்து எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. சின்னஞ்சிறு வயது முதலிலிருந்தே குழந்தைக்கு உயரே உயரே செல்லவேண்டும் என்ற எண்ணத்தினைப் புகட்டுகிறது இப்பா. உன்னால் முடியும் நீ உயர்வது உன் கைகளில் தான் இருக்கிறது என்ற பாடம் துவங்குகிறது ஒரு சிட்டே பாட்டிலிருந்தே என்றால் இப்பதிவு " உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " என்னும் வள்ளுவனின் சிந்தனைதனைச் சிறிய குழந்தைக்கும் புரிய வைக்கிறார் பாருங்கள். இவரை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
So beautiful, that I could not resist singing this song and putting the same in youtube. ****
அடுத்தது,
http://jayanthi-dj.blogspot.com/
இல்வாழ்வின் யதார்த்தங்களை இவர் மூன்று வாக்கியங்களில் எழுதிவிட்டார்.
இவர் கேட்கிறார்:
"Huh!!! Got confused. Can you tell me which one is correct ?"
மகளிர் இவருடைய பதிவினைப் பார்க்கவேண்டும். ***
*****************************************************************************
அடுத்து நாம் செல்ல இருப்பது. தூயாவின்ட சமையல் கட்டு
http://thooyaskitchen.blogspot.com
அட என்னங்க ! நம்ம துளசி டீச்சர் பீர்க்கங்காய் கூட்டு, துவையல் என்று ிரமாதப்படுத்தி ஒரு 100 நபர்களுக்கு விருந்து அளித்திருக்கிறாரே ! அதைப் பார்த்தீர்களா என்றால், பார்த்தேன். பண்ணச்சொல்லியும் துவையலை
சாப்பிட்டேன். நன்றாகவே இருக்கிறது. ஆயினும் பாகற்காய் என்னைக் கவர்ந்தது. இவர் எழுதுகிறார்:
"சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. "
பாகலுக்கு அனேக குணங்கள் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எனினும் மற்றவர்களுடன் அட்ஜஸ்ட் பண்னிக்கொள்ளவும் இது சொல்லித்தரும் என்று இப்போது தான் தெரிகிறது. ***
***********************************************
அடுத்து எனக்கு பழக்கமான ஒரு பதிவு.
http://valluvam-rohini.blogspot.com/
வள்ளுவம் என்ற பெயரில் இவர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்:
"அறிந்ததை அவையில் வைக்கிறேன் பட்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்"
இவர் எழுதும் புதுக் கவிதையும் ஒரு செய்தி சொல்கிறது. படிப்போமா ?
லட்சாதிபதி -
மரணப் படுக்கையில்.
சுற்றி நிற்கும் ,
குழந்தைகளுக்கு ,
ஒரு கண் அவர் உயிரில்,
மறு கண் அவர் உயிலில்.
கோடீஸ்வரர் -
வாழ்க்கையின் கோடியில்.
கூடி நிற்கும் ,
சுற்றத்தார்க்கு,
ஒரு கண் அவர் சாவில் ,
மறு கண் அவர் சாவியில்.
சும்மாவா சொன்னார் வள்ளுவர்:
ஒரு செல்வந்தரைச் சுற்றியுள்ள கூட்டத்தினை அவர் கூத்தாட்டு அவைக்குழாம் என்றோ
வர்ணித்தார்.
கூட்டாத்து அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று.
நச் என்று ஒரு உண்மைதனை எடுத்துச் சொல்லிய வள்ளுவம் ரோகிணி அவர்கட்கு
எனது பாராட்டுக்கள். ****
*****************************************************************
ஒரு அற்புதமான இசை கேட்டேன். அது கீழ்வரும் சுட்டியில் உள்ளது. கேட்கத்தவறாதீர்கள். ***
http://llerrah.com/thebestdayofmylife.htm
*******************************************************************
அடுத்தது ....
உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஒரு புதிர் போடுகிறார் பாருங்கள் இங்கே. திக்குமுக்காடி விட்டது. இதைப்படித்து விட்டு, இதுவரை ஒரு ஐம்பது பேரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை என்று தான் சொல்கிறார்கள். உங்களுக்குத தெரியுமா?
http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post_26.html#links
கேள்வி ரொம்ப சிம்பிள்.
திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.
ஸோடுகோ ப்ராப்ளம் கூட இதைப்பார்த்தால் ஈஸியாக இருக்கிறது. ***
***************************************************************************
அடுத்து, நான் செல்லும் பதிவுகள் யாவற்றிலும் அந்தக் கண்ணன் மாதிரியே இவரும் பிரசன்னமாகியிருப்பார்.
http://govikannan.blogspot.com/
இவர் விருப்பம் தலைப்பில்:
"நம் நற்சூழலுக்கு: நம்மை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என நம்மைச் சுற்றி இருப்பவர் எவரிலும் நாம் வெறுப்பவர்களோ...நம்மை வெறுப்பவர்களோ இருக்கக் கூடாது."
ஒவ்வொருவரும் இதுபோன்று ஒரு வட்டத்தினைத் தயார் செய்தால், உலகமே அமைதிப்பூங்கா ஆகிவிடுமே !
இருக்கட்டும். இவர் கேட்கும் கேள்வி:
"அகஅழகைவிட முகஅழகு அல்லது ஒருவரின் தோற்றம் அவ்வளவு முதன்மையானது அல்ல. முகம் காட்டாத உள்ளங்களை நேசிக்க முடியுமா ? "
தெரஸா அன்னையும் அண்ணல் காந்தியும் அவர் தம் அழகிற்கா போற்றப்பட்டனர் ? அழகு என்பது என்ன ?
என்று மிகவும் அழுத்தமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ****
**************************************************************************
அடுத்து,
இம்சை எனத்தலைப்பிட்ட பதிவில், ஒரு அழகான குழந்தையைப் பார்த்தேன். அந்தப்பக்கத்தை விட்டு வர மனமில்லை.
அப்போது தான் அதில் என்ன எழுதியிருக்கிறது என கவனித்தேன்.
http://imsaiarasi.blogspot.com/
அள்ளி இறைத்த
இருளின் கருமையில்
விழித்திருந்து நோக்கியும்
உணர இயலா நொடியில்
பரவும் வெளிச்சக்கீற்றாய்
என்னுள் பரவினாயோ நீ!!!
________________
****
இதற்கு நான் ஒரு மறுமொழி தந்தேன். அது இதுவாம்:
"ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளுள்
உலகமே என்ன என சொல்லி விட்டீர்களே !!!
அற்புதமான படைப்பு.
இது இம்சையா ! இல்லவே இல்லை.
இது இன்னிசை. = ஒரு
தாயின் மனத்திலுதித்த தாலாட்டு."
*********************************************
*********************************************
இப்போதெல்லாம், பலர் தனது உடல் இளைக்கவேண்டுமென படாத பாடு படுகிறார்கள்.
ஒரு வேளை உணவைக்கூட நிறுத்தி நிறுத்து சாப்பிடுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு
நான் ஒரு கோதுமை பிரான் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றேன். நான் எடுத்த
பாக்கெட்டைப் பார்த்த ஒரு பெண் (அங்கு வேலை பார்க்கிறவள் ) தாத்தா ! இதைச் சாப்பிட்டா எடை குறையுமா என்றாள். அவளைப்பார்த்தால் அப்படி ஒன்றும் குண்டாகத் தெரியவில்லை.இருந்தாலும், பிடிவாதமாக இருந்தாள். நான் சொன்னேன். நீ சாப்பிடுவது எத்தனை என்பதைவிட அதை எப்படி சாப்பிடுகிறாய் என்பது தான் முக்கியம். காலையில் அதிகமாகவும், மதியத்தில் மிதமாகவும்,இரவு (டின்னர் ) கால் வயிறும் நிறைய சாப்பிடுங்கள். தானாகவே உங்கள் எடை குறைந்துவிடும் என்றேன். அவளோ நான் சொன்னதற்கு எதிரிடையாக சாப்பிடுகிறாள். ஒன்று. அதிகமாக சாப்பிடுவது எப்படித் தவறோ அத்தனை அத்தனை பட்டினி போடுவதும் தவறு. திடீரென ரத்தத்தில் ஹெமொக்ளோபின்
குறைந்துவிடும் ஆபத்து உள்ளது.
எடை குறைத்திட இரு நடுத்தர வயது பெண்மணிகள் நடத்தும் போராட்ட வாழ்க்கை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு பக்கம் இவர்கள் தங்கள் எடையோடு போராடுவதும் தெரிகிறது. மறு பக்கம் இவர்கள் லிங்க் தந்திருக்கும் ரிஸைப்ஸ் மற்றும் பாடல்களைக் கவனித்தால் இவர்கள் லட்சியம் நிறைவேறுமா எனத்தெரியவில்லை. நீங்களும் பாருங்களேன். ****
http://helenkelley.spaces.live.com/
Helen and Kelley Joining Forces Across the Miles for Better Health
in "The Biggest Loser" Million Pounds Match Up
*********************************************************
கடைசியாக நாம் காண இருப்பது விஞ்ஞானக் கவிதை.
சூரிய ஒளி மண்டலத்தில் இருக்கும் அழகுச்சிலையான சுக்கிரனைப் பற்றி
என்னமா வர்ணிக்கிறார் ஜெயபரதன் அவர்கள் ! சுக்கிரன் வறட்சிக் கோளாய்
மாறியது எப்படி என எழுதும் இவரது வானியில் கட்டுரை
விண்வெளியில் கண்சிமிட்டும் விடிவெள்ளி பிரமிக்க வைக்கும் படம்
இதுகாறும் சுக்கிரனைப்பற்றி வானியல் ஆராய்ச்சியாளர் பலர் எடுத்துரைத்த அரிய தகவல்களை ஒரு
chronological orderல் கொடுக்கிறது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா எழுதும் கவிதை.
மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
http://jayabarathan.wordpress.com/
// நீலக் கடலின் நிறமும்
மோன வெளி வண்ணமும்
காட்சிக் கனவு !
கடன் வாங்கிய களவு !
இடுப்புப் பிள்ளையைக்
கவண் கயிற்றில் சுற்றி இரவில்
வெண்ணிலவை
விளக்கேற்றி வைக்கும் பரிதி
பூமியில் !
நீல வண்ணம் வானிலே
பின்புல மானது எப்படி ?//
“நீரைத் தேடிச் செல்” என்பதே நிலவுக்கு அப்பால் பயணம் செய்ய நினைத்த இருபதாம் நூற்றாண்டு விண்வெளி விஞ்ஞானிகளின் தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. "சுக்கிரனையும் பூமியையும் ஒப்பிட்டு அவற்றின் பரிமாணங்களைக் கச்சிதமாக எடுத்துரைத்த அழகும் என்னே ! "வெள்ளிக் கோளின் விட்டம் பூமியின் விட்டத்துக்கு 95% ! வெள்ளியின் நிறை பூமியைப் போல் 81% ! சுக்கிரனில் சூழ்வெளி வாயு அழுத்தம் புவியைப் போல் 93 மடங்கு மிகையானது. அதன் அசுர வாயு மண்டலம் மூவடுக்கு நிலையில் 30 மைல் முதல் 55 மைல் வரை வியாபித்துள்ளது. பூமியில் 5 மைல் உயரத்துக்கு மேல் வாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவு. சுக்கிரனின் உட்கரு மண்டலம் பூமியைப் போல் அமைப்பும் தீவிரக் கொந்தளிப்பும் கொண்டது !"
இதுபோன்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளை தமிழ் மக்கள் ஆர்வமுடன் படித்து அரிய
தகவல்களை அறிய வேண்டும்.
பதிவு உலகத்தின் வெண்ணிலவாய்ப் பிரகாசிக்கும் இப்பதிவுக்கு இவ்வார தங்கக் கிரீடத்தைச் சூட்டி மகிழ்கிறோம். *****
An Honour to Mr.Jayabharathan is indeed an honour to all scientists of Tamil origin.
He is one among those who have made Tamils feel proud.
Congratulations Mr. Jayabharathan.
We are proud of you.
Come on Friends ! Let us all give a Standing Ovation to Mr.Jayabharathan.
Subscribe to:
Post Comments (Atom)
சூப்பர் செலக்ஷன்.
ReplyDeleteஆமாம். கிரீடம் கல்வச்சு அழகா இருக்கே.
தமிழ்மணத்துலே ஏன் சேர்க்கலை? பட்டைபோட்டுக்கிட்டு ஜாலியா இருக்கலாமே:-)))))
"இப்படியாகத்தானே ..ஸ்ரீ ராமன், சீதை, இலக்குமணன் ஆகிய மூவரும் பரத்வாஜ முனிவர் ஆசிரமம் இருக்கும்
ReplyDeleteசித்ர கூட மலை அடைந்து அங்கு வசிக்கத் துவங்கினர் ..."
என்று நான் சங்க்ஷேப இராமாயணத்தின் ஒரு நிகழ்ச்சியை எனது வலைப்பதிவு
http://pureaanmeekam.blogspot.com
க்காக தட்டச்சு செய்து முடிக்கும்போது,
துளசி கோபால் வருகை தருகிறார்கள்.
http://arthamullavalaipathivugal.blogspot.com
ஸ்ரீ ராமனின் பூஜைக்காக துளசி மாலை வந்தது போன்ற உணர்வு எனக்கு.
நன்றி டீச்சர்.
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு வேப்பம் பூ வில் பாயசம் செய்வது எப்படி என
ஒரு பதிவு போடுங்களேன் !
ஆன்மீக தோழியர் யாவரும் அள்ளிப் பருகுவார்கள் இல்லையா ?
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பதிவும்,விளக்கமும் அருமை
ReplyDeleteஒவ்வொருவருடைய பக்கத்தையும் அழகாக அலசி கடைசியா அவர்களுக்கு கிரீடமும் வைத்து அழகுபார்பது மிக்க அழகாக உள்ளது.
ReplyDeleteநான் திரு ஜெயபாரதன் பதிவுக்குள் போனாள் அடுத்த பதிவுக்கு போக சுமார் அரை மணிநேரமாகிவிடும்.
கேள்வி மேல் கேள்வி வந்து மோதும்,சிலவற்றுக்கு விடைகிடைத்தாலும் சில அப்படியே தொங்கி நிற்கும்.
//அடுத்து, நான் செல்லும் பதிவுகள் யாவற்றிலும் அந்தக் கண்ணன் மாதிரியே இவரும் பிரசன்னமாகியிருப்பார்.
ReplyDeletehttp://govikannan.blogspot.com///
ஐயா,
பூச்சென்டு கொடுத்திருப்பது தெரியாது. தாமதமாக வந்து பெற்றுக் கொண்டேன். பின்னூட்டத்தில் அறிவித்த உங்களுக்கு மிக்க நன்றி !
பூச்சென்டு கிடைத்தற்கு மிக்க மகிழ்ச்சி !
அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDelete// திகழ்மிளிர் said...
ReplyDeleteபதிவும்,விளக்கமும் அருமை
March 31, 2008 12:06 AM
//
நன்றி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வரவும்
http://vashvuneri.blogspot.com
http://movieraghas.blogspot.com
*******
//வடுவூர் குமார் said...
ஒவ்வொருவருடைய பக்கத்தையும் அழகாக அலசி கடைசியா அவர்களுக்கு கிரீடமும் வைத்து அழகுபார்பது மிக்க அழகாக உள்ளது.//
அலசி அலசி வந்த தங்கத்தை வைத்துத்தானாக்கும் கிரீடம் செய்திருக்கிறேன்.
*******
கோவி.கண்ணன் said
// பூச்சென்டு கிடைத்தற்கு மிக்க மகிழ்ச்சி //
எனக்கும்தான்.
*******************
சுப்பு ரத்தினம்
தஞ்சை.
வணக்கம் சுப்பு ஐயா!
ReplyDeleteஅந்தப் பாடல் என் உறவினர் மகனின் எல்.கே.ஜி புத்தகத்தில் இருந்து எடுத்தது தான். எழுதியவர் யார் என்ற தகவலும் அதில் இல்லை. தெரிந்திருந்தால் அவர் பெயரையும் போட்டு நன்றியும் தெரிவித்திருப்பேன்.
அரும்புகள் பதிவு குறித்த தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
Arummaiyana rasanai...
ReplyDelete