Pages

Sunday, March 30, 2008

இந்த வாரம் நான் ரசித்த .... !! Who gets this Golden Crown this week ?


இந்த வாரம் நான் ரசித்த பதிவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். முதலில் நாம் காண இருப்பது:
http://arumbugal.blogspot.com/

அழகான மழலைச் செல்வங்களுக்கான பாட்டு ஒன்று அமோகமாக இருக்கிறது.
ஒரு சிட்டுக் குருவியோ அல்லது புறாவோ அது ! அதைப்பார்த்தபின் என்ன
அழகான ஒரு பாட்டு குழந்தைகளுக்காகவே எழுதியிருக்கார் பாருங்கள்.
சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் ! !

என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு


இதில் என்ன விசேடம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு ப் புரியாமல் இல்லை. இது மற்ற பாடல்களிலிருந்து எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது. சின்னஞ்சிறு வயது முதலிலிருந்தே குழந்தைக்கு உயரே உயரே செல்லவேண்டும் என்ற எண்ணத்தினைப் புகட்டுகிறது இப்பா. உன்னால் முடியும் நீ உயர்வது உன் கைகளில் தான் இருக்கிறது என்ற பாடம் துவங்குகிறது ஒரு சிட்டே பாட்டிலிருந்தே என்றால் இப்பதிவு " உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் " என்னும் வள்ளுவனின் சிந்தனைதனைச் சிறிய குழந்தைக்கும் புரிய வைக்கிறார் பாருங்கள். இவரை நாம் பாராட்டியே தீரவேண்டும்.
So beautiful, that I could not resist singing this song and putting the same in youtube. ****

அடுத்தது,
http://jayanthi-dj.blogspot.com/
இல்வாழ்வின் யதார்த்தங்களை இவர் மூன்று வாக்கியங்களில் எழுதிவிட்டார்.
இவர் கேட்கிறார்:
"Huh!!! Got confused. Can you tell me which one is correct ?"
மகளிர் இவருடைய பதிவினைப் பார்க்கவேண்டும். ***
*****************************************************************************
அடுத்து நாம் செல்ல இருப்பது. தூயாவின்ட சமையல் கட்டு
http://thooyaskitchen.blogspot.com
அட என்னங்க ! நம்ம துளசி டீச்சர் பீர்க்கங்காய் கூட்டு, துவையல் என்று ிரமாதப்படுத்தி ஒரு 100 நபர்களுக்கு விருந்து அளித்திருக்கிறாரே ! அதைப் பார்த்தீர்களா என்றால், பார்த்தேன். பண்ணச்சொல்லியும் துவையலை
சாப்பிட்டேன். நன்றாகவே இருக்கிறது. ஆயினும் பாகற்காய் என்னைக் கவர்ந்தது. இவர் எழுதுகிறார்:

"சீனிவியாதியால் அவதியுறும் பெரியம்மா என்னையும் பாகற்காயை வைத்து அவதிப்பட வைத்துவிடுவார். ஆனால் பெரியப்பா துணையுடன் என்று எங்க வீட்டு தோட்டத்தில் பாகற்காய் வந்துதோ, அன்றிலிருந்து பாகற்காயிற்கும் நான் பயப்படுவதில்லை. "

பாகலுக்கு அனேக குணங்கள் உண்டு என நான் அறிந்திருக்கிறேன். எனினும் மற்றவர்களுடன் அட்ஜஸ்ட் பண்னிக்கொள்ளவும் இது சொல்லித்தரும் என்று இப்போது தான் தெரிகிறது. ***
***********************************************
அடுத்து எனக்கு பழக்கமான ஒரு பதிவு.
http://valluvam-rohini.blogspot.com/
வள்ளுவம் என்ற பெயரில் இவர் தன்னைப் பற்றிச் சொல்கிறார்:
"அறிந்ததை அவையில் வைக்கிறேன் பட்டதைப் பகிர்ந்து கொள்கிறேன்"
இவர் எழுதும் புதுக் கவிதையும் ஒரு செய்தி சொல்கிறது. படிப்போமா ?

லட்சாதிபதி -
மரணப் படுக்கையில்.
சுற்றி நிற்கும் ,
குழந்தைகளுக்கு ,
ஒரு கண் அவர் உயிரில்,
மறு கண் அவர் உயிலில்.
கோடீஸ்வரர் -
வாழ்க்கையின் கோடியில்.
கூடி நிற்கும் ,
சுற்றத்தார்க்கு,
ஒரு கண் அவர் சாவில் ,
மறு கண் அவர் சாவியில்.

சும்மாவா சொன்னார் வள்ளுவர்:
ஒரு செல்வந்தரைச் சுற்றியுள்ள கூட்டத்தினை அவர் கூத்தாட்டு அவைக்குழாம் என்றோ
வர்ணித்தார்.
கூட்டாத்து அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று.
நச் என்று ஒரு உண்மைதனை எடுத்துச் சொல்லிய வள்ளுவம் ரோகிணி அவர்கட்கு
எனது பாராட்டுக்கள். ****
*****************************************************************
ஒரு அற்புதமான இசை கேட்டேன். அது கீழ்வரும் சுட்டியில் உள்ளது. கேட்கத்தவறாதீர்கள். ***
http://llerrah.com/thebestdayofmylife.htm
*******************************************************************
அடுத்தது ....
உங்களுக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
ஒரு புதிர் போடுகிறார் பாருங்கள் இங்கே. திக்குமுக்காடி விட்டது. இதைப்படித்து விட்டு, இதுவரை ஒரு ஐம்பது பேரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை என்று தான் சொல்கிறார்கள். உங்களுக்குத தெரியுமா?

http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post_26.html#links
கேள்வி ரொம்ப சிம்பிள்.
திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

ஸோடுகோ ப்ராப்ளம் கூட இதைப்பார்த்தால் ஈஸியாக இருக்கிறது. ***
***************************************************************************
அடுத்து, நான் செல்லும் பதிவுகள் யாவற்றிலும் அந்தக் கண்ணன் மாதிரியே இவரும் பிரசன்னமாகியிருப்பார்.
http://govikannan.blogspot.com/


இவர் விருப்பம் தலைப்பில்:
"நம் நற்சூழலுக்கு: நம்மை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என நம்மைச் சுற்றி இருப்பவர் எவரிலும் நாம் வெறுப்பவர்களோ...நம்மை வெறுப்பவர்களோ இருக்கக் கூடாது."
ஒவ்வொருவரும் இதுபோன்று ஒரு வட்டத்தினைத் தயார் செய்தால், உலகமே அமைதிப்பூங்கா ஆகிவிடுமே !
இருக்கட்டும். இவர் கேட்கும் கேள்வி:
"அகஅழகைவிட முகஅழகு அல்லது ஒருவரின் தோற்றம் அவ்வளவு முதன்மையானது அல்ல. முகம் காட்டாத உள்ளங்களை நேசிக்க முடியுமா ? "
தெரஸா அன்னையும் அண்ணல் காந்தியும் அவர் தம் அழகிற்கா போற்றப்பட்டனர் ? அழகு என்பது என்ன ?
என்று மிகவும் அழுத்தமான ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். ****



**************************************************************************

அடுத்து,
இம்சை எனத்தலைப்பிட்ட பதிவில், ஒரு அழகான குழந்தையைப் பார்த்தேன். அந்தப்பக்கத்தை விட்டு வர மனமில்லை.
அப்போது தான் அதில் என்ன எழுதியிருக்கிறது என கவனித்தேன்.
http://imsaiarasi.blogspot.com/
அள்ளி இறைத்த
இருளின் கருமையில்
விழித்திருந்து நோக்கியும்
உணர இயலா நொடியில்
பரவும் வெளிச்சக்கீற்றாய்
என்னுள் பரவினாயோ நீ!!!
________________


****
இதற்கு நான் ஒரு மறுமொழி தந்தேன். அது இதுவாம்:

"ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளுள்
உலகமே என்ன என சொல்லி விட்டீர்களே !!!

அற்புதமான படைப்பு.

இது இம்சையா ! இல்லவே இல்லை.
இது இன்னிசை. = ஒரு
தாயின் மனத்திலுதித்த தாலாட்டு."
*********************************************
*********************************************
இப்போதெல்லாம், பலர் தனது உடல் இளைக்கவேண்டுமென படாத பாடு படுகிறார்கள்.
ஒரு வேளை உணவைக்கூட நிறுத்தி நிறுத்து சாப்பிடுகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு
நான் ஒரு கோதுமை பிரான் வாங்குவதற்காக ஒரு கடைக்குச் சென்றேன். நான் எடுத்த‌
பாக்கெட்டைப் பார்த்த ஒரு பெண் (அங்கு வேலை பார்க்கிறவள் ) தாத்தா ! இதைச் சாப்பிட்டா எடை குறையுமா என்றாள். அவளைப்பார்த்தால் அப்படி ஒன்றும் குண்டாகத் தெரியவில்லை.இருந்தாலும், பிடிவாதமாக இருந்தாள். நான் சொன்னேன். நீ சாப்பிடுவது எத்தனை என்பதைவிட‌ அதை எப்படி சாப்பிடுகிறாய் என்பது தான் முக்கியம். காலையில் அதிகமாகவும், மதியத்தில் மிதமாகவும்,இரவு (டின்னர் ) கால் வயிறும் நிறைய சாப்பிடுங்கள். தானாகவே உங்கள் எடை குறைந்துவிடும் என்றேன். அவளோ நான் சொன்னதற்கு எதிரிடையாக சாப்பிடுகிறாள். ஒன்று. அதிகமாக சாப்பிடுவது எப்படித் தவறோ அத்தனை அத்தனை பட்டினி போடுவதும் தவறு. திடீரென ரத்தத்தில் ஹெமொக்ளோபின்
குறைந்துவிடும் ஆபத்து உள்ளது.

எடை குறைத்திட இரு நடுத்தர வயது பெண்மணிகள் நடத்தும் போராட்ட வாழ்க்கை இந்தப் பதிவில் பார்க்கலாம். ஒரு பக்கம் இவர்கள் தங்கள் எடையோடு போராடுவதும் தெரிகிறது. மறு பக்கம் இவர்கள் லிங்க் தந்திருக்கும் ரிஸைப்ஸ் மற்றும் பாடல்களைக் கவனித்தால் இவர்கள் லட்சியம் நிறைவேறுமா எனத்தெரியவில்லை. நீங்களும் பாருங்களேன். ****
http://helenkelley.spaces.live.com/
Helen and Kelley Joining Forces Across the Miles for Better Health
in "The Biggest Loser" Million Pounds Match Up

*********************************************************

கடைசியாக நாம் காண இருப்பது விஞ்ஞானக் கவிதை.
சூரிய ஒளி மண்டலத்தில் இருக்கும் அழகுச்சிலையான சுக்கிரனைப் பற்றி
என்னமா வர்ணிக்கிறார் ஜெயபரதன் அவர்கள் ! சுக்கிரன் வறட்சிக் கோளாய்
மாறியது எப்படி என எழுதும் இவரது வானியில் கட்டுரை
விண்வெளியில் கண்சிமிட்டும் விடிவெள்ளி பிரமிக்க வைக்கும் படம்
இதுகாறும் சுக்கிரனைப்பற்றி வானியல் ஆராய்ச்சியாளர் பலர் எடுத்துரைத்த அரிய தகவல்களை ஒரு
chronological orderல் கொடுக்கிறது.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா எழுதும் க‌விதை.

மின்னுவ தெல்லாம் பொன்னல்ல !
http://jayabarathan.wordpress.com/
// நீலக் கடலின் நிறமும்
மோன வெளி வண்ணமும்
காட்சிக் கனவு !
கடன் வாங்கிய களவு !
இடுப்புப் பிள்ளையைக்
கவண் கயிற்றில் சுற்றி இரவில்
வெண்ணிலவை
விளக்கேற்றி வைக்கும் பரிதி
பூமியில் !
நீல வண்ணம் வானிலே
பின்புல மானது எப்படி ?//

“நீரைத் தேடிச் செல்” என்பதே நிலவுக்கு அப்பால் பயணம் செய்ய நினைத்த இருபதாம் நூற்றாண்டு விண்வெளி விஞ்ஞானிகளின் தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. "சுக்கிரனையும் பூமியையும் ஒப்பிட்டு அவற்றின் பரிமாணங்களைக் கச்சிதமாக எடுத்துரைத்த அழகும் என்னே ! "வெள்ளிக் கோளின் விட்டம் பூமியின் விட்டத்துக்கு 95% ! வெள்ளியின் நிறை பூமியைப் போல் 81% ! சுக்கிரனில் சூழ்வெளி வாயு அழுத்தம் புவியைப் போல் 93 மடங்கு மிகையானது. அதன் அசுர வாயு மண்டலம் மூவடுக்கு நிலையில் 30 மைல் முதல் 55 மைல் வரை வியாபித்துள்ளது. பூமியில் 5 மைல் உயரத்துக்கு மேல் வாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவாயுவின் அழுத்தம் மிக மிகக் குறைவு. சுக்கிரனின் உட்கரு மண்டலம் பூமியைப் போல் அமைப்பும் தீவிரக் கொந்தளிப்பும் கொண்டது !"

இதுபோன்ற‌ ஆராய்ச்சிக் க‌ட்டுரைக‌ளை த‌மிழ் ம‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் ப‌டித்து அரிய‌
த‌க‌வ‌ல்க‌ளை அறிய‌ வேண்டும்.

ப‌திவு உல‌க‌த்தின் வெண்ணில‌வாய்ப் பிர‌காசிக்கும் இப்ப‌திவுக்கு இவ்வார‌ த‌ங்க‌க் கிரீட‌த்தைச் சூட்டி ம‌கிழ்கிறோம். *****

An Honour to Mr.Jayabharathan is indeed an honour to all scientists of Tamil origin.
He is one among those who have made Tamils feel proud.

Congratulations Mr. Jayabharathan.
We are proud of you.

Come on Friends ! Let us all give a Standing Ovation to Mr.Jayabharathan.

Friday, March 21, 2008

இந்த தடவை கிரீடம் யாருக்கு ????


இந்த தடவை கிரீடம் யாருக்கு என்று சொல்லுமுன் ஒரு வார்த்தை:

பதிவுகள் ஆயிரக்கணக்கில் உள்ளன். அவை எல்லாவற்றையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு ஒவ்வொரு வாரமும் வருவது இயலாத ஒன்றாகும். ஆகையால், நான் படித்ததற்குள் பிடித்தது, ரசித்தது மட்டுமல்ல, ஒரு பொருளைப் பற்றி மேன்மேலும் சிந்திக்கத் தூண்டும் பதிவுகள் பற்றியே இப்பகுதியில் குறிப்பிடுகிறேன். மற்றும் எழுத்து இயல் மட்டுமன்றி இசை, நாட்டியம், ஓவியம், ஆகிய ஏனைய பதிவுகளும் அடங்கும்.

முதலாக, நான் குறிப்பிட விரும்புவது

"அமராவதி ஆத்தங்கரை" தன்னைப் பற்றிய குறிப்பில் இவர் சொல்கிறார்:
"இல்லாத கடவுளுக்கான படையலாய்…எனது கவிதைகள்!" ஒரு புதுக்கவிதை
சற்று முரணாக இருந்தபோதிலும் சிந்திக்க வைக்கிறது.
http://blog.arutperungo/com

இவர் எழுதுகிறார்:” ரோஜாப்பூ மல்லிகையான கதை
ஷேக்ஸ்பியரின் இக்கூற்று ஆங்கிலத்தில் ஞாபகத்திலிருந்து எழுதுகிறேன்:

What is there in a name? That we call a rose would in any other name,
smell as sweet.

இதோ நேரிசை வெண்பா வடிவத்தில்:

பெயராக எச்சொல்லைப் பெற்றாலும் ஆங்கே
உயர்வேது மப்பொருளுக் குண்டோ? -- மயங்கா
துரைத்திடுவாய் மல்லிகைக் குற்றபெயர் மாறின்
மறைந்திடுமோ வீசும் மணம்? “

Just beautiful.
***************************************************
அடுத்ததாக நாம் காண்பது;
http://lifeexperiencenhospital.blogspot.com/
தனது இலக்கினைக் குறிப்பிடுகையில் இவர் சொல்கிறார்:

LIFE.... "no matter what work you do work to be the best at it"

தன்னை ஒரு மருத்துவராக எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள்:

I am a doctor, dedicated to God and to my patients

ஆசிரியர்களுக்காகவே ஒரு பாடல்,

A POEM FOR TEACHERS
Teachers Paint their minds
And guide their thoughts
Share their achievements and advise their faults
Inspire a Love Of knowledge and truth
As you light the path
Which leads our youth
For our future brightens
With each lesson you teach
Each smile you lengthen
Each goal you help reach
For the dawn of each poet
Each philosopher and king
Begins with a Teacher
And the wisdom they bring.
By Kevin William Huff.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு எல்லாப் பள்ளிகளிலும் இப்பலகை இடம் பெறவேண்டும்.
**************************** ****************

அடுத்து நாம் பார்க்கப்போவது,

செவ்வாய் கிரகத்தைப் பற்றி நாம் அறியவேண்டிய தகவல்கள் எல்லாமே இவர் பதிவினில் உள்ளன. பல வரை படங்கள், நாசா மைய நிழற்படங்கள் உள்ளிட்ட இவர் பதிவு ஒரு பொக்கிஷம்.
http://jayabarathan.wordpress.com/
"செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது.
செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது"

இவர் சொல்வதைப் பார்த்தால் நமது பூமியும் ஏதோ ஒரு எதிர்காலத்தில் செவ்வாய் போல ஆவது சாத்தியமே. (possibly in 2000000 A.D.) To my query whether there exists such a possibility, he replies, "பூமிக்கு என்ன கேடுகள் இயற்கையால் விளையும் என்று கற்பனை செய்ய இயலாது. தென்னாசியை நாடுகளைக் தாக்கிய கோரச் சுனாமி போல் இயற்கையின் சீற்றங்கள் எழலாம். 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று பூமியில் வீழ்ந்து ஏற்பட்ட பிரளயத்தில் அனைத்து டைனசாரஸ்களும் அழிந்து போயின."
***************************************
*************************************
தமிழ்ப் பதிவு உலகத்தில் போட்டோ போட்டி நடத்தும் மற்றும் அதில் பங்கு பெறும் யாவரும் கண்டு களிக்கவேண்டிய இடம் இதுவே:
http://www.nature.org/?src=t1
"These snakes are incredible swimmers, and given that we have found six 7-foot snakes within a two-month period .....

ஒரு சிறிய கதை படிப்போமா ?
http://athisha.blogspot.com/
ஜென் துறவி ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்ட அரசன், துறவியை நோக்கி "உன்க்கு இன்னமும் 24 மணி நேரம்தான் இருக்கிறது,நீ அதை எப்படி வாழ விரும்புகிறாய் ? " என கேட்டான். துறவி சிரித்து கொண்டே "எப்போதும் வாழ்வது போல் நொடிக்கு நொடி , என்னை பொறுத்தவரையில் இந்த கணத்துக்கு மேல் எதுவும் கிடையாது , எனவே எனக்கு 24 மணி நேரமும் 24 வருடமும் ஒன்று தான், நான் எப்போதும் கணத்துக்குக் கணம் வாழ்ந்து வந்திருப்பதால் எனக்கு இந்தக் கணமே அதிகம் தான் , 24 மணி நேரம் என்பது மிக அதிகம் , இந்த ஒரு கணமே போதும்" என்றார்.
************
*********
******
****
Next …paraak..paraak..
http://thulasidhalam.blogspot.com

As usual,
மேடம் துளசி அம்மா தான் as usual நல்ல கதை சொல்லுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் ஏதோ அனாடமி professor போல ஆபரேஷன் appraisal செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு earlier பதிவிலே தான் ஏதோ ஒரு கூட்டத்திற்குப் போய் வந்த கதையை சொல்லுகிறார். தான் என்ன நினைக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். பின்னூட்டங்களுக்கு அவர் போடும் பதிலிருந்துதான் அவர் என்ன நினைத்தார் எனத் தெரிகிறது.

சொல்லாத சொல்லுக்குச் சொல்லிய சொல்லைவிட பன்மதிப்பு உண்டு என சொல்வார்கள்.

அது அவர் பதிவினைப் படித்தாலே தெரியும். Among blogs, hers is Dhruva Star.
*****************************
NEXT
இது முதல் தடவையாக நான் கண்ட பதிவு. தான் படித்து ரசித்த பதிவுகளுக்கான சுட்டி தருகிறார்.
http://padiththavai.blogspot.com/" தம்பதியராகி இன்பமாக வாழ்ந்தவர் ஏன் பிரிகிறார்கள்" என்ற உள இயல் ரீதியான ஒரு விளக்கம்தனை ஒரு மன நிலை மருத்துவர் (ஐரோப்பியர்) தருகிறார். இப் பதிவுக்கான சுட்டி தந்திருக்கிறார்.
சற்று controversial ஆக இருக்கிறது. இருப்பினும் படிக்கத்தகுந்தது.

இதைவிட இந்தப் பதிவாளர் 2005 ம் வருடத்திலே "பணம், பணம் அறிய அவா" என்று எழுதியிருக்கிறார் பாருங்கள் ! அயல் நாடுகளில் உழைத்து ஓடாய்ப்போய் பாசத்துக்கும் பரிவுக்கும் ஆசைப்படும் ஒருவர் வேதனையுடன் என்ன எழுதுகிறார் : "ஒவ்வொரு முறையும் நலம் நலமறிய அவா என்றுதான் கடிதம் எழுதுகிறோம்! பணம் பணமறிய அவா என்றல்லவா பதில் வருகிறது! நமக்கு மட்டும் ஏன் பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?"

உண்மை கசப்பு என்பார்கள். அது உண்மையே.
******************************

படிப்போரது பொறுமை எல்லை தாண்டுமுன்னே நான் முடித்துக்கொள்ளவேண்டும்.

இத்தனை வலைப்பதிவுகளையும் சுற்றிவிட்டு வந்தபோது கண்ணில் பட்டது ஒரு
பெட்டகம்
http://pettagam.blogspot.com/
இந்தப் பெட்டகத்தினைத் திறந்தால் ஒரு வினா ..

ஆக்கபூர்வமாக எதையும் செய்யாது, எதை எடுத்தாலும் தான் செய்தது தான் சரி எனச்சொல்லி பிடிவாதமாக இருந்த ஒரு போக்கு தற்போது கொஞ்சம் கொஞ்சம் மாறி மாற்றான் கருத்துக்கு மதிப்பு தர துவங்கியிருக்கிறது. இது எங்கே போகிறது?

"ஒவ்வொரு துறையிலும் ரசனை மாற்றங்கள்..கொள்கைப் பிடிப்புகள் கருத்து வேறுபாடுகளாக உருவெடுத்து போட்டியிலும், பலப்பரிட்சையிலும் தொடர்ந்து..ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன."

அர்த்தமில்லாத விவாதங்கள் அளவுக்கு இந்த விஷயங்களைக் கொண்டுபோகாத இந்த இளைய தலைமுறையினர் நம்மைக் காட்டிலும் எதார்த்தவாதிகள்தான்."

அர்த்தமுள்ள வலைப்பதிவுகளில் இதற்குத்தான் பரிசளிக்கவேண்டும் என நான் நினைக்கத்துவங்கிய போது கண்ணில் பட்டது.
http://kouthami.blogspot.com/
"கண்மணி பக்கம் அ முதல் ஃ வரை பேசுவோம்"
எனும் தலைப்பில் எழுதும் இவர், தன்னைப் பற்றி எழுதுகிறார்:"

நானும்,என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா "

இவர் கேட்கும் கேள்வி:

"ஒரே ஒரு வரம் தருகிறேன் என்ன வேண்டும் கேள் னு நேர்ல வந்து கடவுள் கேட்டா நாம என்ன கேட்போம் ? "

அதுவும் அது தனக்காக இல்லாமல், பிறருக்காக இருக்கவேண்டுமாம்.
இந்த சிந்தனை எனக்கு மன நிறைவினைத் தந்தது எனச் சொன்னால் மிகையாகாது. தனக்கு என்ன இல்லை என நினைத்து நினைத்து அந்த நினைப்பிலேயே வாடி வதங்கி வேதனையும், பொறாமையும், கோபமும், நிறைந்த ஒரு மனித சமுதாயத்திடம் இவர் என்ன கேட்கிறார் பாருங்கள் : பிறருக்கு என்ன வேண்டும் என ஒரு கணமாவது நாம் நினைத்துப் பார்க்கிறோமா ? நாம் வாழ்கின்ற அளவிற்குக் கூட வாழ இயலாதவர்தம் துயர் துடைக்க நாம் என்ன செய்கிறோம் ? செய்யப்போகிறோம் ? அவர்கட்காக ஒரு சொட்டு கண்ணீர் ! அவர்கள் பொருட்டு ஒரு பிரார்த்தனை ! அவர்களுக்காக கடவுளிடம் ஒரு வரம் !

மேடம் ! நீங்க எங்கேயோ போயிட்டீங்க !! மனித நேயத்தின் உச்சிதனைத் தொட்டிருக்கிறீர்கள்
.
தனிமனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி.
இல்லாமை என்பது இல்லாமையாகவேண்டும் என நினைத்திருக்கிறீர்கள். மனித நேயத்தின் முதல் வெற்றி இதுவே. உங்கள் குரல் உலகெலாம் எதிரொலிக்கட்டும்!

வாருங்கள் !! இந்த வாரம் தங்க கிரீடம் தங்களுக்கே !


Congratulations.

Come on Friends! Let us all give a BIG clap.

Thursday, March 20, 2008

இயற்கை சிற்பி நீ யாரோ




இது இரண்டாவது பாட்டு இந்த வரிசையிலே.

மேடம் காட்டாறு எழுதியது. இந்தப் பாட்டிற்கு நான் கர்னாடக இசையின் ராகங்களான பைரவி மற்றும் ஹுசேனியில் மெட்டமைத்திருக்கிறேன் அல்லது மெட்டமைக்க முயற்சி செய்திருக்கிறேன். நேற்று என் தங்கையுடன் (அவள் ஒரு கர்னாடக சங்கீத பாடகி) விவாதித்தபோதுதான் தெரிந்தது : நான் என்னை அறியாமலே இந்த 2 ராகங்களுடன் மூன்றாவதாக முகாரி எனும் ராகத்தினையும் கலந்திருக்கிறேன் என்று. சொல்லப்போனால், இந்த மூன்று ராகங்களுமே ஒரே குழுவைச் சேர்ந்தவை. விஞ்ஞான ரீதியாகச் சொல்லப்போனால், இந்த மூன்று ராகங்களுடைய DNA வும் ஒன்றுபோல.


நான் பாடகன் அல்ல. வேண்டுமானால் என்னை நான் ஒரு க்ரிடிக் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ளலாம். குரல் வளம் என்னிடம் எப்போதும் இருந்ததில்லை. ஆகவே குரல் நயத்திற்காக இந்தப் பாட்டினைக் கேட்பவர்கள், முக்கியமாக, கர்னாடிக் க்ளாசிகல் தெரிந்தவர்கள், அவரவர் குரலிலே பாடி, பதிவு செய்து யூட்யூப்பில் சேர்த்தால் நல்லது.

The lyric content is as simple as scintillating.

ஈசன் அருளுடன் மேடம் காட்டாறு அவர்கள் மேலும் மேலும் நல்ல கருத்துள்ள கவிதைகளை இயற்றுவார் என நம்புகிறேன்.
.
I must repeat I am not a singer but only a grammarian (you may visit http://movieraghas.blogspot.com for more details). Those of you who are aware of the nuances of Carnatic Classical may sing the song in their voice and be kind enough to record and post the same in www.youtube.com.

The song is an ecstacy admiring Nature, in all its bountiful mercy and abundance. The author observing the beauty, serenity, tranquility as well as the harmonious blend in which the flora and fauna unite to make what is NATURE just wonders as to Who must have been the sculptor. The more you dwell into the contents the more you are spellbound at His Creation and His Omnipresence.

The lyric content is as simple as scintillating.

Thanks a lot Respected Madam kaattaaru.
http://kaattaaru.blogspot.com

Incidentlly, I could have well set this in light music (perhaps more enjoyable by fans and lovers of tamil film music, but being what I am, I thought, the lyric content in the song demanded much more a serious approach, that could withstand the viscittudes and test of Time. Music, that too classical and Carnatic, is my passion and it could possibly be wishful thinking that one day musicians of future say, in 2020s or 2050s, may sing this song in Sabhas of Chennai.


இயற்கை சிற்பி நீ யாரோ

கொஞ்சும் கிளியும்
பகையின் பருந்தும்
மருண்ட மானும்
வீருகொண்ட சிங்கமும்
மிரட்டலாய் ஒரு சேர உலவவிட்ட நீ யாரோ

கொத்தாய் கனியாட
அதை பறிக்கும் குரங்காட
தலையாட்டி கிளையாட
காற்று வந்து இன்னிசை பாட
கொள்ளை மனதை ஆட்டிவைக்கும் நீ யாரோ

மயக்கும் பச்சை புல்வெளியழகும்
சல சலக்கும் அருவியழகும்
ஒய்யார மலையழகும்
மூங்கில் இசையழகும்
காட்டில் ஒரு சேர தந்த அழகன் நீ யாரோ

பருத்திக் கொட்டை பஞ்சடைக்கி
பழுத்த மாதுளை பவளமடக்கி
உலவும் சிப்பியில் முத்தடக்கி
மானுட நெஞ்சில் ஈரமடக்கி
காட்சி உருவாக்கும் நீ யாரோ

மகத்துவமே மானிட உருவாய்
இயற்கையே என்னுருவாய்
சாதனை காட்டும் கருவாய்
மடிந்து துளிர்க்கும் சருகாய்
நாளும் மாறும் காட்சிதனை தீரஅமைக்கும் நீ யாரோ

-- காட்டாறு

GOD BLESS HER AND HER FAMILY FOR EVER AND EVER.

Tuesday, March 18, 2008

கொஞ்சம் பொறுத்துக்கங்க !!!!

கொஞ்சம் பொறுத்துக்கங்க..ஆமா. த‌ங்க‌ கிரீட‌ம் யாருக்குன்ற‌து சொல்ற‌துல்ல‌ கொஞ்ச‌ம் டிலே ஆகிப்போச்சுங்க‌. இந்த வாரம் பவுன் வில ரொம்ப எகிரிப்போச்சா ! அதுனால தங்கம் வாங்கி கிரிடம் செய்யரதுக்கு கொஞ்சம் டயம் ஆகிடுச்சுங்க. வாங்கி வந்தப்புரம் இந்த கிரிடம் செய்யற ஆட்க ரண்டு நாள் லீவு போட்டுட்டு கிராமத்துக்கு போயிட்டாங்க.. வ‌ ந்த‌ப்போர‌ம் எங்க‌டா கிரீட‌ம்னு கேட்டடாக்க‌, இன்னும் ஒரு வார‌ம் கொடுங்க‌, செஞ்சு கொடுத்துட‌றோம்னு சொல்றாக‌..

நான்கூட கேட்டேன்..எலே என்னங்கடா..வேலையே அப்படியே போட்டுவச்சுகிட்டு
கிராமத்துக்கு போயிட்டீக..அப்படின்னு..

அவங்க சொல்றாக.. நாங்க கிராமத்துக்கு போனோமா..அங்கே வாய்க்கா ஓரமா
வரப்போரமா போய்க்கினே இருந்தோமில்லே..ஒரு பாட்டு கேட்டுச்சுங்க..

அத கேட்டுகினே தூங்கிப்போயிட்டுங்க...

நான் கேட்டேன்.. அப்படி என்னடா அது பாட்டு..

அவங்க சொன்னாங்க.. நீங்க கேட்டுப்பாருகளேன்..அப்பறம் பொழுதைன்னிக்கும்
பாடிகிட்டே இருப்பீக..

இப்ப கேட்டு பாருக..


The composer of this song is kaattaaru. All Credit goes to her and her alone.
May be one day the author of the blog http://kaattaaru.blogspot.com
will be known as the WORDSORTH of Tamil Nadu.



The same song with a tabla, the ACCOMPANIMENT in a village surrounding ! IT IS YOUR CHOICE TO LISTEN TO THIS ALSO.

Wednesday, March 12, 2008

யாரும் அவக கிட்ட சொல்லிப்போடாதீக..


என்னோட பதிவுக்கு வந்து பாருங்க..அப்படின்னு
எனக்கு அழைப்பு வந்தது.

அங்கே பாத்தா இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகள்.
அவுக‌ள‌ அப்ப‌டியே
விட்டுட்டு வர மனசில்ல.
அத‌னால‌ அவ‌ங்க‌ பாக்காத‌போது
அந்த்‌ போட்டோக்க‌ள‌ ம‌ட்டும்
கூடவே கூட்டிகினு வந்துட்டேன்.

யாரும் அவக கிட்ட சொல்லிப்போடாதீக..
காப்பி அடிச்சேன்னு கேசு போட்டுடப் போறாக..

Sunday, March 9, 2008

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?


Who gets this Golden Crown This week ?

இந்த வாரம் மலர் க்ரீடம் யாருக்கு ?

சென்ற வாரங்களைப் போல் அல்லாது, இந்த வாரம் அதிக பதிவுகளைப்
படிக்க இயலவில்லை. ஒரு காரணம் எனது உடல் அயற்சி. இன்னொரு
முக்கிய காரணம் : படிக்க துவங்கியபோதே சில பதிவுகள் கண்களையும்
கருத்தையும் கவர்வதாக இருந்தன என்றால் மிகையாகாது.
அதில் சிலவற்றினை உங்களோடு முதற்கண் பகிர்ந்துகொள்வேன்.

முதலாக ஒரு ஆங்கிலப்பதிவு.
http://aaartzmuses.blogspot.com

சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் அதை ஃபோட்டோ எடுத்து போட்டவர்
பதிவுகள் ஏராளம். ஆயினும் அந்த சூரியனின் கிரணங்களுக்குப் பின்னே எவை
இருக்கும் என மனக்கணக்கு போட்டவர் வெகு சிலரே. சூரியன்
இவ்வளவு அபார சக்திதனை வெளிப்படுத்தவேண்டுமானால், இந்தக் கிரணங்களுக்குப்
பின்னே உள்ள கண்டறியாவற்றினைக் கண்டிட விழைகிறார் இந்த கவிஞர்.

//and wondered what was behind
the shimmering sun's rays

over the horizon
i knew new opportunities
unexplored ventures//
*************************************************************

அடுத்துப் படித்தது ஒரு நகைச்சுவை கடல்.
திரளாக இளைஞர்களிடையே எழுச்சியையும் வேகத்தையும் ஊக்கத்தையும்
எப்படி ஒரு தலைவர் தனது பேச்சினால் ஏற்படுத்துகிறார் என்று நான் சொன்னால்
புரியாது. நீங்களே சென்று படியுங்கள்.
சிரிப்பை அடக்க முடியாமல், உங்களுக்கு வயிற்று வலி வந்தால் நான் பொறுப்பல்ல.
http://sumasen.blogspot.com/2008/02/dynamite-speech-by-desi-
school-master.html

"மின்னல்" எனும் பெயர் கொண்ட இப்பதிவின் ஆசிரியர் ( ஆசிரியை ) தனனை எப்படி விமரிசித்துக்கொள்கிறார் பாருங்கள்.
"Sumathi.
சொல்லிக்கற அளவுக்கு பெரிய ஆளும் இல்ல, அதுக்காக ஏமாறவளும்

இல்ல.."
இவர் ஈ மைல் வந்ததை வாசிக்கும் விதமே தனி. நீங்களும் சென்று பாருங்கள்.
***********************************************************************
இந்த வாரம் ஒரு மின்னலாய் தோன்றியது.
http://photomathibama.blogspot.com/ஒளிக் கவிதை
தன் விவரங்களைத் தரும்போது பட்டிவீரன் பட்டி- பிறந்த ஊர் தற்போது -சிவகாசியில் “
சிவகாசி என்று சொன்னதால், பட்டாசு போல்
வெடிப்பாரோ என நினைத்து படிக்கத்துவங்கினேன்.
இவர் மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு என 2 பதிவுகள் போட்டிருக்கிறார். ஒன்றின் தலைப்பு காட்டுப் பூக்கள்.
அதைப்பார்த்த நான் எழுதினேன்:
காட்டுப் பூக்களா ?
இல்லவே இல்லை.
இவை
கண்ணன் குழலூதிய
நந்தவனத்தில்
முதல் மலர்ந்த
மொட்டுக்களல்லவா !
**************************************
இரண்டாவதாக ஒரு குளம். நடுவில் ஒரு மண்டபம்.
அதைப் பார்த்தேன் என்று சொல்வதை விட பிரமித்தேன் எனச்சொல்வது தான்
பொருத்தம்.
அதைப் பார்த்த மதிப்புக்குரிய
துளசி கோபால் said...
கோயில் மண்டபம் மனசைக் கொள்ளையடிக்குது.
படங்கள் அருமை
மற்றவர்கள் எழுதியவை இவை:
1.இது வெறும் நிழல் உருவல்ல.
கற்தூண்களில் நிறவி நிற்கும்
ஓர் காவியம்.
2. நேற்று வந்த நான்
இன்றும் வந்தேன்
நில ஒளியில் இதைக் காண வந்தேன்.
என்ன ஆச்சரியம் ?
என்னைப் போல் ஆதவனும்
பிரமித்துப் போயினனோ !
அங்கேயே நிற்கிறான்.
அந்தி வேளை வந்தபின்னும்
ஆதவா ! ஏன் தங்கி விட்டாய்?
நகர்ந்து போ.
நிலாவே ! வா !
*****************************************************************

அடுத்துப் பார்த்த பதிவு. ரெளத்திரம் பழகு என சொன்னது இவருக்காகத்தானோ எனத்
தெரியவில்லை. ரொம்பவே கோபமாக இருக்கிறார்.
http://jataayu.blogspot.com/2008/03/blog-post_07.html.
அவர் எழுதியதை விட அவர் தன்னை விவரிக்கும் விதம் எனக்குப் பிடித்திருந்தது.
"கதிரவனைத் தொட விரியும் சிறகுகள். அரக்கத் தனத்தை எதிர்த்துப்
போரிடும் சிறகுகள். தருமத்தின் துணை நிற்கும் சாமானியனின்
சிறகுகள். அவையே என் ஆதர்சம்."
********************************************************************************
கடோசியாக நான் வருவது
http://manggai.blogspot.com/
இவர் எழுதிய இரண்டு பதிவுகளில் எது சிறந்தது என எனக்குத் தீர்ப்பளிக்க இயலவில்லை.
தன்னை "மங்கை " எனவும் தன்னியல்பை "......வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு " வர்ணித்திருப்பதுமே இயற்கையாக இருந்தது.
1. வலிகளை பகிர்தலின் அவசியம்
2. குழந்தைகள் குழந்தைகள்தானே
இதில் இரண்டாவது ஒரு பயணத்தைப் பற்றியது.
let us also travel along with the author to find out what happened during her journey of ...... (WAIT TILL THE LAST LINE.)
"போக நினைத்துக் கொண்டிருந்த பயணம் அது.
இந்த முறை காப்பகத்தை நடத்தி வரும் ஃபாதர் கேரமல் போவதாக சொல்லவே நானும் தொற்றிக் கொண்டேன். கேரளாவில் இருக்கும் Missioneries of
St.Thomas the Apostle ஆல் நடத்தப் பட்டு வருகிறது.
அழகான,அமைதியான இயற்கை சூழலில் அமைந்திருந்தது அந்த
காப்பகம். 5 டிகிரி குளிரை பொருட்படுத்தாமல் கிடைத்த பூவை
கையில் வைத்து கொண்டு களங்கமில்லா சிரிப்புடன் அன்பாய்
வரவேற்றார்கள்.
காப்பகம், சுத்தமாகவும், பணிபுரிபவர்கள் உண்மையான
அக்கறையுடனும், அன்புடன் இருந்தது திருப்தி அளிப்பதாக இருந்தது
எச்ஐவி யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம்.
அந்த குழந்தை என்ன தவறு செய்தது, ஏன் இவர்கள் மட்டும் இங்கே
இப்படி காப்பகத்தில், இந்த அவல நிலைக்கும்,பழிச்சொல்லுக்கும் அந்த
குழந்தைகள் எந்தவிதத்தில் காரணமாவார்கள்.உதவிகள் என்ற பெயரில்
ஏதோ என்னாலானவற்றை செய்யமுடியும். ஆனால்,
அன்புக்கும்,அரவனைப்புக்கும் ஏங்கும் அந்த பிஞ்சுகளுக்கு சக
மனுஷியாய், ஒரு தாயாய் ஏதும் செய்யமுடியாமல் வெறும்
பார்வையாளனாய் இருக்க முடிவது எத்தனை கொடுமை. ?"இயலாமை என்னை பிடுங்கித்தின்ன கனத்த மனதுடன், மௌனத்துக்குள் ....
என்னை புதைத்துக் கொண்டு ......."
மங்கை அவர்கள் அனுபவித்து எழுதிய சொற்கள் படிப்போர் மனதை உருகச்செய்கிறது.
எழுதியது தாயுள்ளமல்லவா ?
வேதனைதனை அனுபவித்து தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என
ஏக்கப்படுவது, சொற்களால் சித்தரிக்க இயலாத ஒரு உணர்வு.
உலக மகளிர் தினத்தன்று, ஒரு இந்திய மண்ணில், குறிப்பாக தமிழ் மண்ணில்
பிறந்த நங்கையின் மன உணர்வுகள் ஒரு ஆதர்ச பெண்ணின், தாயின் மன நிலையை பிரதிபலிக்கின்றன். இது போன்ற பெண்ணினத்தைதான் பாரதி புதுமைப்பெண் என வர்ணித்தானோ ?
பாரதி எழுதுகிறான்:
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்.
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கவலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்"


ஆகவே பாரதி கண்ட பெண்மணியான மங்கை அவர்களுக்கு இந்த வார மகுடத்தை அணிவித்து பெண்குலத்தினைப் போற்றிடுவோம்.
Come on ! Let us all stand to give a big ovation to Mrs.Mangai.
Madam! This Crown is yours this Week.
Congratulations.Madam! you have embarked upon a journey of DIVINE LOVE. We equally share your emotions as u see these little children.
So let us sing
CLICK BELOW: (transfer of MONEY is worldly. Transfer of LOVE is GODLY. WAIT FOR A FEW MOMENTS TILL U GET THE SONG "anbe sivam "
http://www.raaga.com/playerV31/index.asp?pick=8698&mode=0&rand=0.7795892895807275&bhcp=1

Monday, March 3, 2008

இது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.


இது மார்ச் மாத ஃபோட்டோ போட்டிக்கு.


"அனேகமா எனக்குத்தான் ஃப்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும்.
ஆனா கொடுத்தாங்கன்னா அத பத்திரமா
போய் கொடுத்திடணும்."

"நாளைக்கு கண்டிப்பாக 1000 கட்டி வராகன் வந்துவிடும்."
ஃபோட்டோ கிராபர் தூங்குகிறார்.
கனவுக்காட்சி.
அரச அவை (ராஜ தர்பார்)

"அரசே ! இந்தாருங்கள் நீங்கள் கேட்ட ரிஃப்லெக்ஷன்ஸ் ஃபோட்டோ !
எங்கே 1000 கட்டி வராகன் ?"

"என்னது ? இது ஒரிஜினல் இல்லையா ?"
"அப்ப 1000 கட்டி வராகன் எனக்கில்லையா?"

"இது என்ன பின்ன அரசே ?"

"இது கட் அன்ட் பேஸ்ட் டெக்னிக். இதை நாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது."
"கொஞ்சம் குறைத்துக்கொண்டு 500 வராகன் தாருமே."
கிடையாது.
"ஒரு 200 ?"
"ஹூஹூம்".
"100 ? ...50..
"மன்னா...உனக்கே மனம் என்று ஒன்றே கிடையாதா?"
"பதிவாளரே ! நீர் போய் வாரும்."
"எப்ப வரவேண்டும் அரசே ?"
"வராதீர். போம். என்று சொன்னேன்."






Saturday, March 1, 2008

Who gets the Golden Crown this Week ?




இந்த வாரம் நான் படித்தேன் ரசித்தேன் என்று சொல்வதைவிட படித்தேன் உணர்ந்தேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. சில பதிவுகள் அப்பப்படியே நிற்கின்றன. 2006, அல்லது 2007 க்குப்பிறகு சில நல்ல வலைப்பதிவுகள் தொடரவில்லை. மனதை மட்டும் தொட்டுவிட்டுச் சென்ற சில பதிவுகள் ஏன் தொடரவில்லை என்ற வேதனை மனதில் தங்கிவிடுகிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சோகம் தன்னுடைய சஹானாவை இசைத்துக்கொண்டுதான் இருக்கும்போல் ! (I cannot but recollect Ilayaraja’s introduction in MUDHAL MARIYADHAI ?)
அதுவும் முற்றுப்பெறாத சோகக் கதைகள் கேட்பவர் மனதையும் உருக்கத்தான் செய்கின்ன்றன.
அப்படிப்பட்ட ஒரு வலைப்பதிவு :எனக்குள் ஒரு ஸ்ருதி இங்கு மட்டும் நான் நானாக.
http://shruthiyudan.blogspot.com/index.html
அனுப்பப்படாத கடிதங்களில் ஒன்று என ஒரு பதிவு.
அதில் ஒரு பகுதி : (I AM NOT GIVING..U YOURSELF GO AND READ ! )
மகளிர் சக்தி என்றும் feminine power என்றும் சொல்பவர் எல்லோரும் இந்தப்பதிவினைப் பார்த்து இந்த சோகத்திற்கு வழி ஏதேனும் உண்டா என யோசித்திட வேண்டும்.
Next blog
Seriously humorous OR humorously serious. Bothways it is OK.
இரண்டாவது, பதிவு தமிழ் வலையுலக மென்பொருள் பிரும்மா எனக்குறிப்பிட்டால் மிகையாகாது. இப்பொழுது நான் எழுதும் யூனிகோட் கூட இவர் நல்கியதுதான்.
இவருடைய வலை http://www.higopi.com இலக்கணம் என்று சொன்னால்
இவருடைய வலைப்பதிவு http://higopi.blogspot.com/index.html%20இலக்கியம்.
நகைச்சுவையுடன் கூடிய இவரது பதிவிலிருந்து:
"நீயும் அசைவம் நானும் அசைவம் நெனச்சி பாத்தா எல்லாம் அசைவம்.".
சில பேர் சொல்லுறாங்க கோழி, ஆடு, மாடு, மீன் இதை சாப்பிடறவங்க எல்லாம் அசைவம்னு. எதனால அப்படின்னு கேட்டா அதுக்கெல்லாம் நம்மை மாதிரியே சிவப்பு ரத்தம். நரம்பு, வலி எல்லாம் இருக்குன்னு."
தாவர இயல் படித்தால் தாவரங்களுக்கும் உயிர், உடல், உணர்வு, எல்லாமே இருக்கிறதே. சங்கீதம் கேட்டு
நன்றாக வளர்கிறது என்றுகூட சொல்கிறார்களே ! அப்படியானால் காய்கறிகளை வெட்டி த்தின்பது முறையா?
எனக் கேட்பதோடு நிற்கவில்லை.
ஒரு காய்கறிக் கொலை எப்படி இருக்கும் என்று ஒரு வீடியோ தனையும் சுட்டி தருகிறார். இருதய நோய் உள்ளவர்கள் இதைப் பார்க்காதீர்கள் எனவும் எச்சரிக்கிறார்.
இருந்தாலும் நீங்கள் பாருங்கள்.
http://www.vegetablecruelty.com/gallery/?show=1
இவருடைய சொல் நயமும் வாதம் புரியும் திறனும் அருமையாக இருக்கின்றன்.
Next Visuals Based Blogs

இந்த வாரம் நான் சில visuals
பதிவுகளில் கண்டேன். ஒரு படம் சொல்வதை ஓராயிரம் வார்த்தைகளினாலும் விளக்க இயலாது என்பர். அந்த வகைதனை ச் சேர்ந்தது
http://merezilla.blogspot.com/
Image and video hosting by TinyPic
I am so tired
exhaustion.

அடுத்து இவர் ஒரு சுட்டி கொடுத்திருக்கிறார் பாருங்கள். அமக்களம் போங்கள். எல்லா இளவட்டங்களும் இதில் அடக்கம்.
cupid struck me .

Next comes….
அடுத்து கலர் கலர் பாம்புகளைப் பார்க்க வேண்டுமா ? அரிய சந்தர்ப்பம்.
http://naturesphoto.blogspot.com/
snakes of various hues and colours
Please keep away from snakes, even when you

ENTER THE CAVES NOW ! THE GUIDE IS THERE FOR YOU !

அடுத்து நான் சந்தித்த யாத்திரிகன் எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தவர் தான்.sirpa
கலைகளை ஆராதிக்கிறார். அழகான இனிமையான சொற்களில் போற்றுகிறார்.
கைலாச நாதர் குகை இவர் வர்ணிக்கும் விதம் அபாரமாக இருக்கிறது.
என் போன்ற கிழங்கள் இந்த பதிவுக்குச் சென்றுதான் கைலாச நாதரையும்
அவரைச் சூழ்ந்திருக்கும் தேவியர், கணங்களையும் சந்திக்கவேண்டும். இல்லையென்றால்
அடுத்த ஆப்ஷன் கைலாசத்திற்கே போவது தான். I do not really know where and when
He would like to meet me !
http://yaathirigan.blogspot.com/2008/01/5.html
kailasanathan temple. architecture and sculpture..caves

NEXT before us

http://jayabarathan.wordpress.com/2008/02/22/asteroids/

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் ! (Asteroids - The Cosmic Bombs) Indeed a Treasure House for those who want to know more about Universe.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear),
பிரபஞ்சத்தைப பற்றி இவர் தரும் தகவல்கள் அரியவை மட்டுமன்றி அதிர்ச்சி தருவதாகவும் இருக்கின்றன்.
ஒரு சுனாமியின் கோர விளைவுகளைப் பார்த்தோம். அங்கங்கே நிகழும் பூமி அதிர்ச்சியின் விளைவுகளையும்
அவை ஏற்படுத்தும் நாசத்தினையும் காண்கிறோம். ஆனால் இவை எல்லாமே இப்புவியைச் சார்ந்தவை.
பிரபஞ்சத்திலிருந்து நமக்கு எந்தந்த அதிர்ச்சிகள் வரக்கூடும். ஓசோன் ஓட்டை எல்லாம் இவர் சொல்லும்
அகிலக் கற்கள் முன்னே அற்பம். ஒரு சின்ன கல் விழுந்தாலே என்னமா வலிக்கிறது ! ஒரு 500 சதுர மைல் கொண்ட ஒரு நிலப்பரப்பே வான வெளியிலிருந்து பூமியைத்த்தாக்கினால் என்ன ஆகும் ?
மனித இனமே அழிந்து போம் ! தாக்கப்பட்ட பின் பூமி எவ்வாறு இருக்கும்?
எல்லோரும் படிக்கவேண்டிய பதிவு. ஒரு முறை அல்ல..வாரம் ஒரு முறை இவர் என்ன சொல்கிறார்
எனக் கவனியுங்கள். மனித இனம் முற்றிலும் அழியுமுன்னே அறம் செய்ய அப்பவாவது மனம் வரட்டும் !

NEXT…NEXT…NEXT…..!!!!!

என்ன இந்த வாரம் வடகலை அய்யங்கார் வீட்டு சாப்பாடு போல விதவித மாக கிடைக்கிறதே என பிரமித்துக்கொண்டிருந்தவன் கண்களிலே ஒரு பதிவு.
நமக்கெல்லாம் ரொம்பவே நெருங்கியவர் பதிவுதான் அது.
http://thanglish.blogspot.com/2008/02/5-keys-to-better-personal.html

தவறு செய்தபின் மன்னிப்பு கோருவது எப்படி இருக்கவேண்டும் ? மன்னிப்பு கோருவது என்பது கலை அல்ல அது ஒரு விஞ்ஞானம் என்கிறார் பாஸ்டன் பாலா. சும்மானாச்சும் ஸாரி ஸார், இல்லை, ஸாரி என்று சொன்னால் போதுமா என்ன ? அதில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன ?
The science is "the list of ingredients you need to combine when crafting the most effective apology for your case." It includes a detailed account of the situation, acknowledgement of the damage done, taking responsibility for the situation, recognition of your role in the event, a statement of regret, asking for forgiveness, a promise that it won't happen again, and, when possible, restitution. The art side of apologizing is how you present and deliver your apology. "In other words, although every apology should include the same elements," they say, "the level of playfulness, formality, or romance you bring to it should be dictated by the recipient, the relationship that you have with them, and the nature of the infraction."
இதை எல்லாரும் படிக்கவேண்டும் என்றாலும், தாய்க்குலம் முக்கியமாய் நோட் பண்ணி வச்சுக்கங்க. அடுத்த வேளை உங்ககிட்ட, யாராவது " ஸாரி " எனச் சொன்னால், (your hubby included) இத்தனை ingredients அதிலே இருக்கான்னு பாத்துக்கங்க..

Now, finally,
All the blog posts described are GEMS. But there is one more gem, a diamond one, dazzling in all its brilliance.
And Amongst the Gems..I find this one as the one which compels you to reflect and introspect. Yes.
நான் எனது பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.." என் பெண்ணுக்குத் தேடாத இடம் இல்லை. 3, 4 வருஷமாத் தேடிட்டே இருந்தோம்..கடைசியா பார்த்தா எங்கள் வீதியிலே இருக்கிறார் எனக்கு வந்த மாப்பிள்ளை..இத்தனை நாள் என் கண்களில் படாது எங்கே ஒளிந்திருந்தாய் ? " என்று கேட்டுவிட்டேன், என்பார்கள்.

அப்படிப்பட்டது. இந்த வார ஸ்டார் பதிவு நமது ஸோலார் வட்டத்திற்குள்ளேயே இருக்கிறது.
அதுதான் ! மரணம் என்று ஒன்று நிகழும்போது அதன் அருகில் இருப்போர்தம் உணர்வுகளை எத்தனை தெளிவாகவும், மெலிதாகவும், யதார்த்தமாகவும் எடுத்துச் சொல்கிறார் இவர் !

Death is not the greatest loss in life. The greatest loss is what dies inside us while we live.”
-- Norman Cousins quotes (American Essayist 1912-1990)

ஒரு மர வண்டிச்சக்கரத்தினைப் போட்டு symbolic ஆக இது சுழல்வது போலத்தான்பிறப்பும் மரணமும் என்கிறார். (birth-death.jpj)
ஆதி சங்கரர் வேறா சொன்னார் ?
புன்ரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்.

பயம், கருணை, சோகம்,தனிமை, ஆறுதல், கடைசியில் யதார்த்த நிலை இதுதான் என ஒப்புக்கொள்ளுதல், (reconciliation )இப்படிப்பட்ட பற்பல நிலைகளில் மனித மனத்தினை ஒரு அலசு அலசியிருக்கிறார் பாருங்கள்! ஒரு மன இயல் மருத்துவராகவோ அல்லது கெளன்சலராகவோ (தமிழ் வார்த்தை தெரியவில்லை) இருப்பார் என்று பார்த்தால், இவர் ஒரு மென் பொருள் பொறியாளர்.

நான் இந்த வாரம் சந்தித்த வலைப்பதிவுகளின் ஆசிரியர் பலர் நம்மில் வெளியே நடப்பதைக் கூறும்பொழுது இவர், நம்மின் உள்ளே நடப்பதைக் கூறுகிறார். நமக்கே தெரியாமல், நமக்குள் நடப்பவைதனை எத்தனை கச்சிதமாக சொல்லுகிறார் !
ஆக, இவருக்குத்தான் இந்த வார மகுடம், ஸ்டார் பதிவு நிலை எல்லாம்.
வாருங்கள். காட்டாறு ! இதோ உங்களுக்கான மகுடம் ! Let us all give a big clap.
http://kaattaaru.blogspot.com/
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.