Pages

Tuesday, December 30, 2014

இந்த ரோசா படுத்தும் பாட்டை என்னதான் சொல்ல !!

இந்த ரோசாப்பூ  சோகத்திலும்
பங்கு பெறுகிறதே !!!
முதலில்
பிரிட்டன் கிராமத்து  இசை.
காதரின் ரட்ஜ்.

Britten Folk Songs. Kathryn Rudge -
Mezzo Soprano


அடுத்து,
ராசாவே உன்னை நம்பி, இந்த
ரோசாப்பூ...
raasave unnai nambi
intha rosaappoo




பட்டு வண்ண ரோசாவாம்
பார்த்த கண் மூடாதாம்.

இதுவும் சோகமோ ??





சோகம் போதும்.
ரோசா மையமா வச்சு
இன்னொரு பாடல்.


ரோசப்பூவாம் உன் கண்களை நான் பார்த்தேன்
ருசியாய் ஒரு கோப்பை மது அருந்தினேனா
தெரியவில்லை. மதி இழந்தேன்.

ராஜேஷ் கண்ணா
முகமது ரபி குரலில்.


Thursday, December 11, 2014

கண்ணுடையவன்

படமும் பின் வரும் வாசகங்களும் நான் இன்று படித்தது. 
 
 நன்றி: தமிழ் இந்து நாளிதழ். 


கண்ணுடையவன்

(இன்றைய தமிழ் இந்து பேப்பரில் படித்தது.) 

 

“கடவுள் எங்கும் இருக்கிறாரே?

 எல்லாம் கடவுள்தானே?

 ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி!

அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று.

 நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை -

 எல்லோரும் ஒரே உயிர். 

அந்த உயிரே தெய்வம். 

ஸ ஏகஹ . தஸ்ய வாசகஹ பிரணவ 

என்னும் ப்ரும்மஸூத்ர வாக்யத்தை எப்படி எனக்குப்புரியும்படி
அந்தக்காலத்துலேயே எழுதிவெச்சுட்டு போயிருக்காரு பாரதி.

வியப்பா இருக்குல்லே !!!

Friday, November 28, 2014

குடியிருக்கும் வீட்டிற்கு .....

எனது இனிய வலை நண்பர் திரு சசி ராமா அவர்கள் வலையிலே நான் படித்த செய்தி இது.

நீங்களும் படியுங்கள்.ரசியுங்கள்.

நண்பர் சசி ராமா அவர்களுக்கு எனது நன்றி. ஆன்மீகப் பதிவாளர் சசிராம் அவர்கள் வலைக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்.



குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். வாரியார் சுவாமிகள்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

Tuesday, October 21, 2014

Thursday, October 2, 2014

வரம் வேண்டும் வாணி தேவியே

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே

வரம் வேண்டும் வாணி தேவியே எனக்கு.
வாலறிவன் என்பவர் யார்?
வித்தை என்றால் என்ன?
விற்பன்னன் யார்?
 என்ற அறிவை தருவாய்
 உன்னை வணங்குவதற்கு வேண்டிய
பணிவைத் தருவாய்.
நன்றி.http://www.rangoli-sans-dots.com/2012/10/lotus-rangolis-for-poojas.html

ART OF LIVING BHAJAN
SHARADE SARASWATHI.
இன்று இந்த வீடியோவை முழுவதும் பார்த்து 
சரஸ்வதி தேவியின் அருள் பெறவும். 



SARASWATHI MANTHRA

Monday, September 29, 2014

அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக


www.mykolam.blogspot.com

எந்த அன்னை அவள் எனக்கு அமைதியே உருவாக, ஆனந்த வடிவாக காட்சி அளிக்கிறாரோ
அவளை நான் வணங்குகிறேன்.
yaa devi sarva bhooteshu

Saturday, September 27, 2014

நவராத்திரி நடனம்

நவராத்திரி மூன்றாம்  நாள்.
கோலம் இட்டது திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள்.
நன்றி.
lalitha sahasra nama vaibhavam.
லலிதாம்பிகையின் ஆயிரம் பெயர்கள்.
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு  தத்துவம்.
ஒரு லக்ஷணம். ஒரு வைபவம்.


 லலிதா சஹச்ர நாம வைபவம்
சஹஸ்ர நாம பெருமையை 
எடுத்துரைக்கும் 
திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு 
நன்றி சொல்வோம். 
அவர்கள் வலைக்குச் செல்லும் 
வாயில் இதுவே.
Madam Rajarajeswari
at
http://jaghamani.blogspot.com/2014/09/shri-lalitha-shakaranamam.html

ஆண்டாள் திருக்கோஷ்டி 
நவராத்திரி நடனம்
மும்பை,செம்பூர் அரங்கில்.



Friday, September 26, 2014

நந்தினி நந்தித மேதினி

இரண்டாவது நாள் அன்று நவராத்திரி வைபவம்.

navarathri kolam.

மலைவளர் காதலி என்னும் தலைப்பில் வலை நண்பர் ஆன்மீக பதிவாளர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள்

+பார்வதி இராமச்சந்திரன். 
அவர்களுக்கு நன்றி.

இவர்
தாயுமானவர் அடிகளார் பாடல்கள் எட்டினையும் அழகெனத் தொகுத்து தமது வலையில் இட்டு  இருக்கின்றனர். ஒவ்வொரு பாடலுக்கும் எளிய வகையில் பொருள் சொல்கிறார்கள்.

துர்கையாக, இலக்குமியாக, வாணியாக
நாம் போற்றி மகிழும் இந்த அன்னை
நாதாந்த ரூபிணி.
ஒலியின் இலக்கே  உருவாம் இவள்.
தாயுமானவர் அடிகளின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சிறப்பினை எடுத்துச் சொல்கிறது.

அங்கு எட்டி பார்ப்போம்.
இன்று, 
ஞான ஆனந்த ஒளியே எனத்
துவங்கும் முதல் பாடல் அற்புதமானது.

அந்த மலை வளர் காதலியின் எல்லையில்லாப் புகழினை நாமும் பாடுவோம்.

இங்கே சொடுக்குங்கள்.

ayi giri nandhini
அயி கிரி நந்தினி நந்தித மேதினி

Thursday, September 25, 2014

துர்கையின் நாமங்கள் மூன்று.

நவராத்திரி துவக்க முதல் மூன்று இரவுகள்.
துர்கா பரமேஸ்வரி வழிபாடு.

ஒன்பது தேவிகளின் நாமங்களையும் இட்டு
அவர்கள் சிறப்புகளையும், வழிபடுதலால்
மாந்தருக்கு கிடைத்திடும் அருள் பற்றியும்
விளக்கமாக
திரு துரை செல்வராஜ் அவர்கள்  தனது பதிவில் எடுத்துச் 
சொல்லி இருக்கிறார்கள் .
துர்கையின் நாமங்கள் மூன்று.
கூத்தானுர் நவராத்திரி சிறப்புகளும் இங்கே வர்ணிக்கப்பட்டு
உள்ளன.




கோலம் போட கற்றுக்கொள்வோம்.

Wednesday, September 24, 2014

நவராத்திரி முதல் நாளன்று



நவராத்திரி முதல் நாளன்று

திருமதி வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலையில் போட்டு இருக்கும்

கோலத்தை நாம் கண்டு மகிழ்ந்தது போல எல்லோரும் மகிழ்ந்திட இங்கு அதை காபி அடிக்கிறோம்.

நன்றி: வாணி முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு. 
அவர்கள் பதிவுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்.