Pages

Wednesday, July 13, 2016

வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக







வாசலிலே பூத்திருக்கும் வண்ண மலர் உனக்காக 
என்று துவங்கும் இந்த பாடலை இயற்றியது யார் ?

அமெரிக்கா வாழ் தமிழ் ஆன்மீக பாடல் ஆசிரியர் .


இந்த பாடலை மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.

பாடலை இயற்றியவர் மேடம் கவிநயா அவர்கள். அம்மன் பாட்டு என்னும் வலைத் தளத்திலே பதினைந்து ஆண்டுகளாக, ஓய்வில்லாது அம்மன் புகழ் பாடுகிறார். ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அவரது பாடலை சுப்பு தாத்தா கடந்த பத்து ஆண்டுகளாக பாடி வருகிறார். சுமார் 1000 பாடல்களுக்கு மேல் கவிநயா பாடல்களை இசை அமைத்து இருக்கிறார்.

இருந்தாலும் சுப்பு தாத்தா பாடகர் இல்லை. அவருக்கும் மிகவும் வயதாவதால்
குரலும் ஒத்துழைக்கவில்லை .

அப்போது தான் தாத்தாவின் இல்லத்துக்கு மனமுவந்து வருகை தந்தார்,  சுப்பு தாத்தா வை தாத்தா , தாத்தா எனக்கூப்பிடும் கீதா ரங்கன் அவர்கள்.

நீங்கள் இதை பாடுங்கள் என்று சொன்ன போது சென்ற செவ்வாய் அன்றும் நாட்டக்குறிஞ்சி யில் பாடினார்.  நேற்றும் வெளிவந்த இந்தப் பாடலை அவரே
வலஜி ராகத்தில் மெட்டமைத்து பாடுகிறார்.

வலஜி ராகத்தில் பாடுபவர் தில்லை அகத்து கர்னானிக்கல்ஸ்  தளத்தின் இணை ஆசிரியர். 

முறையாக இசை பயின்றவர் அவர். அதனால் தான் ராகத்தின் சிறப்புகள் தூக்கி நிற்கின்றன.

அவரை வாழ்த்துங்கள்.

 அதே பாடலை பாடுவது மறுபடியும் சுப்பு தாத்தா.

போனால் போகிறார். அவரை
மன்னித்து விடுங்கள்.

i



8 comments:

  1. தாத்தா நான் முறையாகப் பியின்றவள் இல்லை. கேள்வி ஞானம் தான். ஜஸ்ட் ஒருவருடம் மறைந்த ஜலத்தரங்கம் விற்பன்னர் திருமதி சீதாலக்ஷ்மி துரைசாமி அவர்களிடம் சில மாதங்கள் கற்றுக் கொண்டேன். நீங்ஸ்ல் என்னை இப்படிக் கௌரவம் அளிப்பது.எல்லாம் என் குருநாதருக்கேகே அர்ப்பணிக்கின்றேன்
    உங்களுக்கும் என் மனம் நிறைந்த் நன்றிகள் பல

    கீதா

    ReplyDelete
  2. தாத்தா நீங்கள் இந்த வயதிலும் இத்தனை அழகாக ஆர்வமுடன் பாடுவதைவிடவா தாத்தா நான். நீங்கள் அன்புடன் தரும் உற்வகாகம்தான் தாத்தா.....மிக்க நன்றி வணக்கங்கள் தங்கள் பாதங்களில்..

    கீதா

    ReplyDelete
  3. //ஒருவருடம் மறைந்த ஜலத்தரங்கம் விற்பன்னர் திருமதி சீதாலக்ஷ்மி துரைசாமி அவர்களிடம் சில மாதங்கள்//

    ஒரு வருடமா,சில மாதங்களா கீதா ரங்கன்?

    எப்படியோ பாடல் அருமை. குரல் உங்களுக்கு அற்புதமாய் ஒத்துழைக்கிறது. தாத்தா பாடலைத்தான் என்னால் கேட்க முடியவில்லை. இங்கு பிளாக்கில் கணினியில் ஓடவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ஹஹஹ் அடடா. இந்தப் பின்னூட்டத்தை என் மொபைலில் இருந்து கொடுத்தேன். அதில் இருந்து ப்ளாகிற்குக் கமென்ட் கொடுப்பது இதுதான் முதல் முறை. எப்படியோ கஷ்டப்பட்டு அடித்துக் கொடுத்தேன்...

      இரு வருடங்களுக்கு முன் மறைந்த ஜலதரங்கம் விற்பன்னர் திருமதி சீதாலஷ்மி துரைசாமி அவர்களிடம் சிலமாதங்கள்// என்று வர வேண்டியதே இப்படி வந்துவிட்டது...

      மன்னிக்கவும் தவறாகிவிட்டதற்கு.

      இப்போதுதான் தாத்தா அவர்கள், கவிநயா அவர்கள் அளித்திருந்த பின்னூட்டத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதனால்தான் தெரியவந்தது ஸ்ரீராம்...மிக்க நன்றி.

      Delete
  4. அம்மாவின் பாடல்களை சுப்பு தாத்தா அன்புடன் பாடி வந்தார். இப்போது உங்களையும் அழைத்திருக்கிறாள். உங்கள் குரல் மிக இனிமை. மிக்க நன்றி கீதாம்மா. அழைத்து வந்த சுப்பு தாத்தாவிற்கும் ஆயிரம் நன்றிகள். இருவரின் குரலிலும் கேட்டு மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கவிநயாம்மா. உங்கள் பாடல்களை எனக்கு அறிமுதப்படுத்தி அதற்குமெட்டு அமைத்துப் பாடச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தும் சுப்புத்தாத்தாவிற்குப் பல நன்றிகள்.

      மிக்க நன்றி மீண்டும்.

      Delete
    2. மிக்க நன்றி கவிநயாம்மா. உங்கள் பாடல்களை எனக்கு அறிமுதப்படுத்தி அதற்குமெட்டு அமைத்துப் பாடச் சொல்லி என்னை உற்சாகப்படுத்தும் சுப்புத்தாத்தாவிற்குப் பல நன்றிகள்.

      மிக்க நன்றி மீண்டும்.

      கீதா

      Delete
  5. கவிநயாவும் சரி, நீங்களும் சரி,

    அவர் பாடலை இயற்றுவதிலும், நீங்கள் அதைப் பாடிப் பரவசப்படுவதிலும்--

    என்றுமே சோடை போனதில்லை. பிரமாதம்..

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!