Pages

Thursday, September 26, 2013

எல்லா அன்பும் எல்லா காதலும் என்னுள்ளே

ஆஹா...
நானும் அப்பாதுரை sir  போல் ஒரு கவிதையை
தமிழாக்கம் செய்துவிட்டேன். +A Durai

என்னது ?  காதில் வந்து யாரோ சொல்வது ?

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14அது கிடக்கட்டும்.

சும்மா இரு, எனக்குத் தெரியும்.அப்பாதுரை சார் மாதிரி எழுதணும் அப்படின்ன்ன 
இன்னும் ஆறு ஜன்மம் ஆகும். 
இப்ப நீ இதைக் கேளு.


விட்னி ஹுஸ்டன் பாடுவதை முதலில் கேளுங்கள்.

Courtesy: WHITENEY HOUSTON LYRICS.

ا

நம்புகிறேன். நான் நம்புகிறேன்.
நம் குழந்தைகளே நம் எதிர்காலம்.
எண்ணும் எழுத்தும் எடுத்துச் சொல்  பின்
ஏணியில் அவரே ஏறட்டும்.
எத்துணை அழகு அவர்களுக்குள்ளே
அத்தனையுமே அவர்கள் அறியட்டும்.
தத்தம் பெருமை தத்தம் மதிப்பு
தாமே உணர்ந்திட வாய்ப்பு கொடு.

சின்ன குழந்தைகள் சிரிப்பினிலே நாம்
என்னவாய் இருந்தோம் நினைவுகளே

 நாயகன் ஒருவனை நாடியே
நானிலம் முழுவதும் தேடுகின்றார். எல்லோரும்
யாரேனும் வருவரா ஏங்குகிறார்.
எனக்கென ஒருவன் எங்குமில்லை.
என் தேவைகள் என்ன என அறியவில்லை.

தனியிடம் நோக்கி சென்றமர்ந்தேன்.
தன்னையே நம்பிட அறிந்துகொண்டேன்.

எவரின் நிழலையும் நாடாது
நானே நடக்க முடிவெடுத்தேன்.
வென்றாலும் நான் வீழ்ந்தாலும்
வாழ்வேன் என்பதில் திடமிருப்பேன். .
எவரின் நிழலையும் நாடாது
நானே நடக்க முடிவெடுத்தேன்.
வென்றாலும் நான் வீழ்ந்தாலும்
வாழ்வேன் என்பதில் திடமிருப்பேன். .

எடுத்துச்செல்ல எது இருந்தாலும்
எடுக்கமுடியாதது என்னிடமுண்டு.
என் கௌரவம் என் மதிப்பு
எல்லாமே என் உள் இருக்கு.


எல்லா அன்பும் எல்லா காதலும்
என்னுள்ளே நான் கண்டேனே.
என்னுடன் நானே அன்புடன் இருந்தால்
எல்லாம் வந்திடும் புரிந்தேனே.


"Greatest Love Of All"


I believe the children are our future
Teach them well and let them lead the way
Show them all the beauty they possess inside
Give them a sense of pride to make it easier
Let the children's laughter remind us how we used to be

Everybody's searching for a hero
People need someone to look up to
I never found anyone who fulfilled my needs
A lonely place to be
And so I learned to depend on me

[Chorus:]
I decided long ago, never to walk in anyone's shadows
If I fail, if I succeed
At least I'll live as I believe
No matter what they take from me
They can't take away my dignity
Because the greatest love of all
Is happening to me
I found the greatest love of all
Inside of me
The greatest love of all
Is easy to achieve
Learning to love yourself
It is the greatest love of all

I believe the children are our future
Teach them well and let them lead the way
Show them all the beauty they possess inside
Give them a sense of pride to make it easier
Let the children's laughter remind us how we used to be

[Chorus]

And if, by chance, that special place
That you've been dreaming of
Leads you to a lonely place
Find your strength in love
*****************************************************************************
Thanks to Specific, James, Barbara Nuffer for correcting these lyrics.
****************************************************************************இன்னடா இம்புட்டு போர் இன்னிக்கு அடிக்கிறார் என்று சொல்லாமல் 
சுப்பு  தாத்தா தரும் இம்சை தாளாமல் 
தவிப்பருக்கு, 

வலை நண்பர் திருமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்கள் வலையில் 
கண்ட ஒரு காணொளி போனசாக.


அடடா... இதுதான் பாடாத பாட்டோ No comments:

Post a Comment

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!