Pages

Thursday, September 26, 2013

எல்லா அன்பும் எல்லா காதலும் என்னுள்ளே

ஆஹா...
நானும் அப்பாதுரை sir  போல் ஒரு கவிதையை
தமிழாக்கம் செய்துவிட்டேன். +A Durai

என்னது ?  காதில் வந்து யாரோ சொல்வது ?

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி. 14



அது கிடக்கட்டும்.

சும்மா இரு, எனக்குத் தெரியும்.அப்பாதுரை சார் மாதிரி எழுதணும் அப்படின்ன்ன 
இன்னும் ஆறு ஜன்மம் ஆகும். 
இப்ப நீ இதைக் கேளு.


விட்னி ஹுஸ்டன் பாடுவதை முதலில் கேளுங்கள்.





Courtesy: WHITENEY HOUSTON LYRICS.

Sunday, September 22, 2013

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.,,,,சுப்பு தாத்தாவுக்கு .

என்னது ?  கடவுள் காப்பி போட்டு கொடுத்தாரா ?

ஆமாம். ஆமாம். 

இத பாருடா ...என்ன காபி தாத்தா ? நரசூஸ் காபி யா லியோ வா..?

தெரியாது..

பீபரி யா பிளான்டேஷன் ஏ யா ?

தெரியாது. 

பில்டர் காபியா இன்ஸ்டன்ட் காபியா ?

தெரியாது.

சிக்கிரி போட்டா போடாமயா 

தெரியாது. 

சக்கரை உண்டா இல்ல டயபெடிக் நீ அப்படின்னு தெரிஞ்சு கட் பண்ணிட்டாரா  ?

தெரியாது. 

அப்ப என்ன தான் தாத்தா சொல்றே உனக்குத் தெரியும்னு ?? 
எதுனாச்சும் பகல்கனவா?

தோ ...இங்கன போய் click நீயே பார்த்துக்க... (  காபி வரும்போது ஸ்க்ரோல் down செய்யணும் )
இந்த வயசுலே நான் ஒண்ணும் பொய் சொல்லவேணாம். 


போறேன். பொய் மட்டும் சொல்லி இருந்தே...பிச்சுபிடுவேன். பிச்சு. 

போயி, எனக்கும் இன்னொரு கப் வாங்கி வா. 


சுப்பு தாத்தாவுக்கு . மட்டும் 

கடவுள் போட்டுக்கொடுத்த காப்பி.


Sunday, September 15, 2013

ஒரு பதிவர் விழா

பதிவர் மா நாடு பற்றி எல்லோரும் எழுதி எது சரி எது சரியில்ல அப்படின்னு சொல்லிக்கிட்டு சரி, அடுத்த தடவை ஈரோட்டிலே நடக்கும்போது எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம் அப்படின்னு ஏற்பாடு பண்ணிய பிரபல பதிவர்கள் எல்லாமே சொல்லிட்டு இருக்கும்போது,

ஏன்யா பெரிசு .. உனக்கேதுனாச்சும் ஐடியா இருக்குதா அப்படின்னு +Chellappa Yagyaswamy +Balasubramaniam G.M  +Durai A  +kg gouthaman கேட்கராக. (நான் கேட்கவே இல்லயே அப்படின்னு துரை சார் சொல்றாரு.)


நாம ஒரு விழா நடத்தினா என்ன செய்யறது அப்படின்னு நினைசுக்கினே தூங்கிட்டேனா..  ஒரு விதமா

இந்த மாதிரி வரிசையா வந்துகினே கீது.


விழா நடப்பது பைவ் ஸ்டார் ஹோட்டல் தாஜ் கொரமாண்டல் மாதிரி.இருக்குது.

வர்றவங்க எல்லாம் முன்னமே சொல்லிப்புடனும்.  அப்பத்தான் வூட்டுக்கு கரெக்ட் நேரத்துக்கு இன்னோவா அனுப்பிச்சு பதிவர்களை கூட்டிக்கினு வர முடியும்  அப்படின்னு சொல்லிபோட்டாங்க போல. ஒவ்வொரு காரா போர்டிகோ விலே வந்து நிக்குது.

உள்ளே வருகையிலே ஒவ்வொருவருக்கும் ஒரு ரோஜா கொத்து தராங்க..


அதிலே வாங்கிகிட்டு உள்ளே போகும்போது அடுத்த கேட் லே , ஒரு கேள்வி கேட்கிறாங்க.

கேள்வி எதுவேணுமானாலும் இருக்கலாம்.

ஒரு சாம்பிள்:

அந்த ரோஜா கொத்திலே எத்தனை ரோஜா இருக்கிறது ?

உங்க வலைப்பதிவிலே இதுவரைக்கும் எத்தனை பேரு பின்னூட்டம் போட்டு இருக்காங்க ?
முள்ளும் மலரும் படத்திலே முதல் பாட்டு யாரு பாடறாங்க ?
போன பதிவர் மா நாட்டிலே மேடை ஏறி பேசினவங்கள் லே அதிக நேரம் பேசினது யாரு ?

சரியா சொல்றவங்க அடுத்த ரிஜிஸ்ட்ரேஷன் மேடைக்கு நேரே போவாங்க.. அங்கே உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், எது வேணுமானாலும் எடுத்து குடிங்க..உங்கள் சாய்ஸ்.




உங்களுக்கு எதுவேணுமானலும் எடுத்துக்கிட்டு  விழா மேடையில்?இரண்டாவது வரிசைலே போய் உட்காருவாங்க.



எல்லா கேள்விக்கும் கரெக்ட் பதில் சொல்றவங்க விழா மேடை முதல் ரோ விலே இருப்பாக.

தப்பா சொல்றவங்க எல்லாரும் அடுத்த ஹாலுக்கு ஒரு மெடல் டிடெக்டார் வழியே போறாங்க..   ஏங்க நான் இது வழியா போகனும் அப்படின்னு ஒருவர் கேட்கறாரு. அவரை சுரேகா சார் கட் பண்ணி நீ என்னோட வலைப்பதிவு படிச்சப்பறம் வாங்க அப்படின்னு அன்போட சொல்றாரு.

அவரு சரியாத்தாங்க சொல்றாரு. புறம் ஒழிஞ்சாத்தான் அகம் சிறக்க முடியும்.
அப்படின்னு ரஞ்சனி அம்மா காதுக்கு பக்கத்திலே வந்து சொல்றாங்க.

ரமணி , பித்தன், சீனா எல்லாரும் ஆமா, ஆமா, அப்படின்னு ஜில், ஜில், அப்படின்னு ...

ஒத்துகிட்டு அது வழியா போறவங்களுக்கு, அங்கே

அவங்களுக்கு அங்கே டாடா டீ நிறுவனத்தாரின் துளசி, ஜிஞ்சர், போட்ட சூடான டீ  ஒரு கப்பிலே தர்றாங்க.    டீ  வாணாம் அப்படின்னு சொல்றவங்களுக்கு வசந்த பவன் காரங்க ஒரு டிகிரி காபி தர்ராங்கா.

சாப்பிட்டுட்டு, நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.

{சார், நான் புதிய பதிவர் இந்த வருஷம் தான், சொல்லப்போனா போன மாதம் தான் முதல் பதிவே போட்டு இருக்கிறேன் என்று ஒரு ஜீன்ஸ் சொல்ல,  . அப்ப இவருக்கு காம்ப்ளான் கொடுப்பா என்று உத்தரவு மைக்கில் வந்தது. }


நானும் ஒரு சேர்லே உட்கார்ந்து டீயை குடிப்போம், அதுக்கு முன்னாடி, பேன் எங்கே அப்படின்னு பார்த்து உட்காரணும் அப்படின்னு யோசிச்சு,பாத்தா ஒரு பேன் fan  கூட இல்ல. என்னடா இது. அப்படின்னு மூளை காஞ்சு போனப்பறம் தான் ஞாபகம் வருது. அட ஏ சி. ஹால் லே இது. இங்கே எதுக்கு fan.

 தலைக்கு பின்னாடி கொஞ்சம் தட்டி விட்டுப் பின், மேலே பார்த்தா, அங்க ஒத்தரு ஆகாசத்துலேந்து வந்துக்கினு இருக்காரு.

வந்தவர் சும்மா சிவனேன்னு உட்காராம, நான் கொஞ்சம் கூட எதிர்பாராத நிலையிலே, "என்னைச் சிலுவையில் அறைந்தால் உயிர்க்கத்தேரியாது. விட்டு விடு என அவர்  அலற ஆரம்பிக்க, நான் அப்ப தான் கவனிச்சேன். மனுஷன்  சாக்ஷாத் பரமேச்வரன் சவாரி செய்த வாகனத்தில் வந்திருக்கிறார்.

விடமாட்டேன் என்று வெளிநாட்டில் இருந்து வந்த அவரது ரசிகை ஒரு தொல்காப்பிய நூலே பின்னூட்டமாக  எழுதி இல்லை, பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் என்னதான் பேசுகிறார் என்று பார்த்தேன். இல்லை. கேட்டேன்.

மஞ்சு பாஷிணி  எனக்கு குவைத் லே கிடைக்கிற  டீ தாங்க புடிக்கும் அப்படின்னு சொல்லிடராக.  அட, இதுக்கா இவ்வளவு பேசுறீங்க.. நீ ஒண்ணும் கவலைப்படாதே மஞ்சு, நான் மா நாடு நடத்தும்போது கம்ப ராமாயணத்தைப் பத்தி விரிவா பேசப்போறேன். அப்ப எல்லாருக்கும் பத்து நிமிசத்துக்கு ஒருகுவைத்  டீ தருவேன். என்கிறார் ஷைலஜா மேடம். 

  ஆஹா, இவர் மட்டும் கம்பனுக்காகவே ஒரு விழா எடுப்பதாக இருந்தால், அந்த விழாவுக்கு வரும் அத்தனை பேருக்கும் அறுசுவை உண்டி அந்த நடராசன் கையால் செய்து தரலாமே என நானும் அவருக்கு செல்லினேன்.

டீயை ஜூசை  சாப்பிட்டுட்டு எல்லோரும் அவங்களும் அடுத்த அடுத்த சீட்டிலே போய் நேரடியா உட்காராம,

தனக்கு ஏற்கனவே தெரியாத ஒரு ஐந்து பேரோட ஒரு ஐந்து நிமிஷம் பேசி அவங்க விவரம் எல்லாம் புரிஞ்சுக்கணும்.அப்படின்னு ஒலி பெருக்கிலே ஒரு அனௌன்ஸ் மென்ட் வருது.



 இந்த அஞ்சு பேரும் ஒரு குழுவா அறிமுகம் நேரம் வரும்போது மேடைக்கு போகணும்.

விழா துவங்கி வரவேற்புரை முடிஞ்சப்பறம் அஞ்சு அஞ்சு பேரா போகும்போது, ஒவ்வொருவரும் தன்னோட அறிமுகம் பண்ணாம, இன்னொருவருடைய அறிமுகம் செய்யணும். அவங்களோட சிறப்பு என்ன அப்படின்னு சொல்லணும். ஒரு நிமிஷம் தான் நேரம் தராங்கா.  ( அது சரிதானா என்று அறிமுகம் செய்யப்பட்டவர் சொல்லிவிட்டு, தான் அடுத்த இன்னொருவர் அறிமுகம் செய்யவேண்டும் )


விழாவிலே நீராரும் கடலுடுத்த பாடறாங்க.

மைக் அட்ஜஸ்ட் செய்யற வரைக்கும் பொறுமையா இருங்க.
குழந்தைங்க பாடுறாக இல்லையா..



அடுத்தபடியா, +Rajeswari Jaghamani அம்மா வந்து விநாயகன் பெருமை சொல்லும் அகவல் பாடுறாங்க.
விழா துவங்குது.

முன்னமே சொன்னது போல அஞ்சஞ்சு பேரா மேடைக்கு வந்து இன்னொருவருடைய சிறப்புகளை, பெருமைகளை ஒரு இரண்டு நிமிஷத்திலே எடுத்து சொல்றாக.

திண்டுகல் தனபாலன் பத்தி சுப்பு தாத்தா சொல்றாரு.
நீ உன்னை அறிந்தால் என்று சொல்லும்போது நம்ம  எம்.ஜி. ஆர். பாட்டு. எடுத்து விட்டேனா..அதுவே back ground லே கேட்குது. 



இது போல அறிமுக நிகழ்ச்சி அட்டகாசமா போவுது.

சில பேரு தன்னோட சாதனைகளை சொல்லணும் அப்படின்னு எந்திருச்சு  சொல்றாக. ஒவ்வொருவருக்கும் பத்து நிமிஷம் டைம் தறாங்க.














சுப்பு தாத்தாவுக்கு போர் அடிக்குது. ஒரு நாலு பேரை கூட்டிக்கிட்டு பக்கத்து ஹோட்டலுக்கு போயி, இன்னொரு காபி குடிச்சுட்டு வரலாம் அப்படின்னு போறாரு.

கூட வரும்   வேங்கட நாகராஜ் சார் எல்லாரையும் போடோ எடுக்கறாரு.

மஞ்சு பாடப்போறாங்க அப்படின்னு மைக்கிலே சொல்றாக.


{எங்கள் ப்ளாக்...லே பாடியிருக்காங்க.. அங்கேயிருந்து மைக் கனெக்ட் பண்ணியாச்சு.)


நேரம் பதினிரண்டு மணி ஆகப்போகிறதே...இன்னும் விழா நாயகர்  காணோமே என்று பார்த்தால், அவர் கரெக்டா நேரத்துக்கு வர்றாரு.

புத்தக ரிலீஸ் செய்யறாரு.




அதுக்குப் பின்ன, வலைப் பதிவாளர்களின் அன்புக்கு பாத்திரமான திருமதி துளசி கோபால் அவர்கள் கைங்கர்யமாக , ஒரு லஞ்சு ஏற்பாடு பண்றாங்க.
நாங்க மலேசியா பயணத்திலே இருக்கோம், இருந்தாலும், எங்க பெஸ்ட் பிரண்டு வல்லி அம்மா அரேஞ்சு செய்வாங்க அப்படின்னு போன் போட்டு பால கணேஷ் சார்கிட்டே சொல்றாங்க.

பால கணேஷ் மின்னல் போல துள்ளித் துள்ளி வேலை பார்க்கிறாரு.


ஆரூர் மூனா செந்தில் கையை மடிச்சுட்டு கிட்டு வராரு.

 என்ன விஷயம் அண்ணே அப்படின்னு kG கௌதமன்  கேட்கும்போ, அடுத்த ரூமிலே சுரேகா அண்ணன் ரத்த அன்பளிப்பு முகாம் ஒண்ணு ஏற்பாடு பண்ணி இருக்காரு இல்ல. அதுக்கு நான் ரத்தம் கொடுத்துட்டு வாரேன். என்கிறார்.

அப்ப நாங்க எல்லாரும் தர்றோம் அப்படின்னு ஒரு நூறு பேரூ அங்க கூட்டமா நுழையறாங்க.

லஞ்ச்சு முடிஞ்சப்பின்னே விழாவுக்கு இரண்டு சிறப்பு பேச்சாளர்கள் வர்றாங்க.

Solomon Pappiah




suki sivam Time Management



விழா முடியல்ல.

+Sasi Kala
மேடம் சசிகலா அவங்க தான் வெளியிட்ட புத்தகத்தை எல்லோருக்கும் ஒரு நினைவுப்பரிசாக தர்றாங்க..

அக்கா மகளே ரோசாப்பூ அப்படின்னு ஒரு கவிதை படிக்கராக. அப்படியே வரிக்கு வரி கர கோஷம். கை தட்டு.



நல்லாவே  இருக்கு அப்படின்னு புலவர் இராமானுசம் ஐயாவே சொல்றாரு. 

ஐயா உங்க மரபு கவிதையை படிச்சு பேச எனக்கும் ஒரு நாள் வேணுமுங்க.அத்தனை கருத்து அதுலே இருக்குல்ல என்கிறார்.
+கவிஞா் கி. பாரதிதாசன்

வாசல் கேட்டையே பார்த்துக்கொண்டு ஒருவர் இருந்தாற்போல் இருந்தது. அவரிடம் போய் கேட்டேன்.  உங்கள் பதிவின் பெயர் எனக்கு மறந்து போய் விட்டது. நீங்கள் தானே அந்த கம்பெனி லா எல்லாம் பற்றி கூட்டங்களிலே பேசுகிறீர்கள் என்றேன்.

ஆம்.ஆம். உங்களுக்கும் கம்பெனி லா தெரியுமா ? என்று கேட்க,
என்ன இது சரியாக மாட்டிக்கொண்டு விட்டோமே, அதெல்லாம் மறந்து போய், ஒரு பதினைந்து வருடம் ஆயிற்றே என்று நினைத்துக்கொண்டு, 
சார், எனக்கு என் மதர்  இன் லா ஒருவரைத் தான் தெரியும்.அது கிடக்கட்டும்.  நீங்கள் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவேண்டும்.  என்றேன்.

நான் அறம் பொருள் இன்பம் மூன்றும் கண்டுவிட்டேன். இப்போ.....என்று இழுத்தார்.  

ஆஹா..இவர் நம்ம மோஹன் குமார் சார் அல்லவா என்று அதிசயித்தேன்.

அப்பைக்கினு பார்த்து இடி இடிக்குது, மின்னலோ மின்னல், மழையோ கொட்டு கொட்டு ன்னு கொட்டுது.  எங்க்கெந்தோ வந்த சுனாமி வெள்ளம் அப்படியே பதிவர்கள் இருந்த மா நாடு நடக்கும் இடம் எல்லாம் தண்ணீர் வெள்ளம். 

கரெண்ட் கட் ஆயிடறது. ஒரு பத்து செகண்டுக்கு எல்லாம் இருட்டு. .

அமைதி...அமைதி..அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. அமைதி. 

  திடீர் அப்படின்னு ஒரு ஒளி வெள்ளம் ஆகாசத்துலே...   என்னன்னு பார்த்தா...

ஒரு சர்ப்ரைஸா,சூப்பர் ஸ்டார்  ரஜினி சார் மகள் சௌந்தர்யா வர்றாங்க.

 தமிழ் பதிவர்கள் எல்லோருக்கும் தனி ஷோ ஒண்ணூ கோச்சடையான் படத்துக்கு ஏற்பாடு பண்ணப்போறோம் என்று சொல்றாங்க.
கை தட்டு சத்தத்திலே ஹாலே அதிருது.

இப்போதைக்கு இந்த படத்தோட டிரைலர் பாருங்க. அப்படின்னு சொல்லிபோடராக.



  ஹாலே
சும்மா அதிருதுல்ல.

எல்லோரும் தேசீய கீதம் பாடராக.

எல்லோரும் கிளம்ப பார்க்கறாங்க. அப்ப மேடை லே வெளுப்பு புகை புகையா வருது. எல்லாருமே பயந்து போயிட்டாக.  எங்கனாச்சும் fire ஆயிடுச்சோ ?

அப்ப ஒரு சௌண்ட் மட்டும் வரது.

கோவை ஆவி வர்றாரு.  மேடைலேந்து ஒரு அனௌன்ஸ் பண்றாரு.

காரு, பைக் லே வராதவங்களுக்காக, நான் வேன் ஒன்னு ஏற்பாடு பண்ணி இருக்கேன். அதுலே போவலாம்.அப்படின்னு சொல்றாரு.  நான் இப்ப வலைச்சரத்திலே உலா வந்திட்டு இருக்கேன். எல்லோரும் அங்க வாங்க என அன்போடு அழைக்கிறார்.

சுப்பு தாத்தா அப்ப திடீர்னு கண்ணை முழிச்சு பார்க்கறாரு.

அடே கனவா இது ?

ஒரு பதிவர் விழா 

Monday, September 2, 2013

பிச்சை எடுத்தானாம் பெருமாள்

எப்ப நான் கோவிலுக்குச் சென்றாலும், குறிப்பாக விசேட நாட்களிலே  ஒரு காட்சி.

சிவனை வலம் வரும் வழியிலே நின்று இருப்பார் யாராவது ஒரு பெண்மணி அல்லது முதியவர்.  நமது கவனத்தை அவர் பக்கம் திருப்புவதில் அவர் குரல் என்றைக்குமே துணை.

பெண்மணி ஆகப்பட்டவர் தனது புடவையின் தலைப்பை முன் நிறுத்தி , சன்ன குரலில் முந்தானையை   ஒரு பாத்திரம் போல நம் முன் விரித்து சொல்லுவார்:

என் பெண்ணுக்கு  பிச்சை எடுத்து திருமணம் செய்கிறேன். மாங்கல்ய தாரணத்துக்கு, தாலிக்கு பிச்சை தாருங்கள்.

  ஒரு இரண்டு மாதங்களுக்கு முன் நின்று கொண்டு இருந்த பெண்மணி அணிந்திருந்த நகைகள் பார்த்தால் ஏதோ தங்க மாளிகை விளம்பரம் போல கூட தோன்றியது.  ஆஹா, என்ன பக்தி, என்ன பக்தி, இப்பேர்பட்டபணக்கார  பக்தர்கள், பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் ஆனால், பிச்சை எடுத்து மாங்கல்யம் வாங்குகிறேன் என்று சபதம் இட்டு இருக்கிறார்களே என்று வியக்கும் படி இருந்தது. .

என்னைப்போல சில கிழவர்கள் , மிடில் ஏஜ் இன்னும் தாண்டாதவரும் கூட   தனது மேல் துண்டை விரித்து திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு இருக்கிறேன். பிச்சை எடுத்து  உன் சன்னதிக்கு வருகிறேன் என்று சூளுரைத்து இருக்கிறேன்.
என்று சொல்வதில் நம்மை நம்ப வைப்பதில் நிபுணராக இருக்கிறார்கள்.

அவர்கள் நீட்டி இருக்கும் புடவைத் தலைப்பிலோ அல்லது துண்டிலோ ஏற்கனவே ஒரு சில பத்து ரூபாய் நோட்டுக்கள், சில ஐந்து ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்து,  உன் பர்ஸ் எப்போது திறக்கப்போகிறது என்று நம்மிடத்தில் கேட்பது போல் இருக்கும்.

கோவிந்தா, நாராயணா, வெங்கடேசா, திருப்பதி மலை வாசா என்று சேவித்து வரும்போது இப்படி ஒருவர் அல்லது ஒரு பெண்மணி கண்ணில் படும்போது, அவருக்கு நம்மால் இயன்றதை செய் என்று அந்த திருப்பதி பெருமாளே கட்டளை இட்டு இருக்கிறார் என்று நமக்கும் தோன்றுவது இயற்கையே.

உனக்கு ஒரு டெஸ்ட் வச்சுருக்கார் பெருமாள். பதில் சொல்லாம பத்து ரூபாய் மினிமமா போட்டு விடு என்று மனசுக்குள்ளேந்து ஏதோ ஒண்ணூ சொல்லும்.

அது என்று எதை நினைக்கிறோமோ   அதன் மேலே தான் அவ்வளவு நம்பிக்கை வைச்சு  பிச்சை கேட்பவர்களும் துணிந்து கேட்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

 இவர்கள் உண்மையிலேயே மகளுக்கு திருமணம் நிச்சயித்து தாலி வாங்கப்பொன் வாங்கத்தான் பிச்சை எடுக்கிறார்களா ? நமது பத்து ரூபாயில் தான் அவர்கள் பையனின் உபநயனம் நடக்கப்போகிறதா, அல்லது அவர்கள் திருப்பதி பயணம் துவங்கியதா ? என்று நாம் எப்பவுமே கவனித்தது கிடையாது.

செய்த தர்மத்தை தொடர்ந்து கண்காணிப்பது கூடாது. என்று எப்பவோ எழுதப்பட்டு இருக்கும் வாக்கியம்.

கொடுத்ததை கொடுத்தேன் என்று சொல்லாதே.  மறந்து போ. என்றும் நீதி உரைப்பதும் உண்மையே.

ஆயினும், இது போன்ற ஆனால், தனக்காக இல்லாமல், பொது தர்ம கார்யங்களை நடத்துகிறோம் என்று வசூலிக்கும் நபர்கள் எத்தனை பேர் வந்த தொகையை எப்படி செலவு செய்தார்கள் என்று நாம் கவனிப்பது இல்லை.

குறிப்பாக, ஆன்மீக உலகில், அந்த யாகம் செய்கிறோம், இந்த ஹோமம் செய்கிறோம், லோக க்ஷேமத்தின் பொருட்டு செய்கிறோம், ஆயிரம்  பேருக்கு அமாவாசை அன்னிக்கு அன்ன தானம் செய்கிறோம், அந்தகூகிள் லேயே கண்டு  பிடிக்கமுடியாத ஒரு ஊர் பெயர் சொல்லி, அந்த இடத்தில் இருக்கும் ஒரு  பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்டுகிறோம்.,அங்கு இருக்கும்  ஏழை குழந்தைகளுக்கு எள்ளுருண்டை வாங்கித் தருகிறோம், எள்ளுருண்டை வேண்டாம் அப்படின்னு சொன்னா லாப் டாப் வாங்கித் தருகிறோம் என்று  பலர் பலவிதமாகச் சொல்லும்போதெல்லாம் எனக்குத் தோன்றும்:

அடடா.. என்ன தர்மாத்மாக்கள் இத்தனை பேர் சடன்னா நம்ம நாட்டில் தோன்றி விட்டார்கள் ?

 எல்லாரையுமே குற்றம் சொல்வதற்கில்லை. ஆனால் எல்லா நிதி  திரட்டுபவர்களும் புறங்கையில் ஒட்டிய தேனைத் தான் நக்குகிரார்களா?
இல்லை, அத்தனையுமே அல்வா செய்து அமுக்கு விடுகிறார்களா என்றெல்லாம் ஐயம் இருக்கத்தான் செய்கிறது.

பல பொது நிறுவனங்கள் என்.ஜி.ஓ. என்றுபெயர் போட்டுக்கொண்டு  நிதி திரட்டுபவை.  ்இந்த நிருவனங்களின் வருடாந்திர கணக்கில் பார்த்தால் நிர்வாக செலவுகள், நிறுவனச் செலவுகள் என்று ஒரு கணிசமான விழுக்காடு தனை அந்த நிதியில் இருந்து விழுங்கி விடுகின்றன.

நான் எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரைச் சொல்லவும்  விரும்பவில்லை.  ஆயினும், எந்த ஒரு பொது என்.ஜி.ஓ. நிறுவனத்துக்கும்நிதி தருவதற்கு முன்பாக, அந்த நிறுவனம் அரசாங்கத்தாரால் அனுமதிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட நிறுவனமா, அவர்களது கணக்குகளுக்கு தணிக்கை முறை இருக்கிறதா, அந்த நிறுவனத்தில் டைரக்டர் , மேலாளர்களின் ஊதியம் என்ன ? அவர்களின் வருடாந்திர டிராவலிங் அலவன்ஸ் எத்தனை, எண்டர்டைன்மெண்ட் அலவன்ஸ் எத்தனை ? அவர்கள் என்னென்ன நிருவனங்கள் இந்த என்.ஜி.ஓ.உடன் தொடர்பு இருக்கிறது, நீங்கள் கொடுக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டா, அதற்கான சான்றிதழ் தருவார்களா என்றெல்லாம் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த பதிவு அதற்காக நான் போடவில்லை.என்னைப்போல வெங்காயம் கூட வாங்க முடியாதவனுக்கு வெங்கடேச பெருமாளை பார்க்க புறப்பட முடியுமா ,சொந்தக்காசில் சாத்தியமே இல்லை.

 காஸ் வாங்கவே காசு இல்லாதவன் கூட்டத்தில் என்னைப்போன்ற பல பென்சனர்கள் கூடிய விரைவில் இருக்கபோகிறோம் என்பது மட்டும் தெரிகிறது. தர்மத்துக்கும் நமக்கும் அவ்வளவு தொடர்பு இல்லை.

அது ஒரு பக்கம்.

அண்மையில் துண்டை நீட்டிய ஒருவரிடம் நான் விசாரித்தேன். எனக்கு வேண்டாத வேலை தான்.  இருந்தாலும் வேறு என்னதான் வேலை என்று நினைத்து  அவரிடம் கேட்டேன்.

பிச்சை எடுத்துத்தான் பெருமாளைப் பார்க்க போகவேண்டுமா ?

 ( மனசுக்குள்ளே நான் நினைத்துகொண்டதெல்லாம் . : எங்குமே அந்த பெருமாள் பிரசன்னமாக இருக்கிறார்.  என்று தானே எல்லா வேதமும் சொல்கிறது. மனசுக்குள்ளே பெருமாளே என்று ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கொண்டால் போதாதா ?)

அவர் என்னை முறைத்துப் பார்த்தார்.  அவர் பார்வையில் எனக்கு பல அர்த்தங்கள் தொனித்தன.

1.  யோவ் கசமாலம். உன்னால் முடியும்னா எதுனாச்சும் போடு. இல்லைன்னா உன் வழியை பாத்துகினு போவயா ...

2. நான் என்ன செய்யணும் அப்படின்னு உன்னைக் கேட்டுண்டு தான் செய்யணுமா ?

3. என் டயத்தை வேஸ்ட் பண்ணாதே.  உனக்கு பதில் சொல்ற நேரத்துலே கஸ்டமர் பத்து பேர் அதுக்குள்ளே காணாம போயிடுவாங்க...

இதெல்லாமே அவர் சொல்லவில்லை.  மாறாக,

பெருமாளே பிச்சைக் காரர் தானே.  அந்த பிச்சையை பார்க்க இந்த பிச்சை போறார்.  ,அதுலே தப்பு என்ன இருக்கு ? எங்க இருக்கு ?  என்றார்.

எனக்கு திடுக்கிட்டது.

என்ன பெருமாள் பிச்சை காரரா ? என்றேன்.

 ஆமாம்.என்ன  சந்தேகம்.இல்லைன்னா ஏன் அவ்வளவு பெரிய உண்டியல் ?

அப்ப, இவங்க கிட்ட வாங்கி, அந்த உண்டியல் லே  போடப்போறீக... என்றேன்.

அப்படின்னு இல்லாட்டியும் அந்த பெருமாள் பிச்சை எடுக்கத்தான் செஞ்சார்.

என்ன அது ?

வாமனாவதாரத்துலே பலிட்டே பிச்சை கேட்டார்.  கொடுக்க முடியல்லே அப்படின்னு தெரிஞ்சுண்டு தலை மேல காலை வெச்சு க்ளோஸ் பண்ணிட்டார். 

அப்பறம்....

அது மட்டுமா...   பிராமணன் மாதிரி வேசத்தை போட்டுகிண்டு, கர்ணன் முன்னாடி போய், நீ செஞ்ச புண்ணியத்தை எல்லாம் கொடு அப்படின்னு அவனோட காது வளையத்தை பிச்சை கேட்டார்.. இல்லையா...

அது... அப்படின்னு ...இழுத்தேன்....

என்ன அது, இது, எது ?   பாண்டவர்களுக்காக, எதுன்னாச்சும் அஞ்சு கிராமமாவது கொடு அப்படின்னு துர்யொதனாதிகளிட்டேயே பிச்சை கேட்டாராமே ? 

என்னை பேச விடமாட்டார் போலத் தெரிந்தது.

மனுஷ்யனாப் புறந்தவன் எதுனாச்சும் ஒரு டயத்திலே பிச்சை எடுக்கத்தான் செய்யறான்.   பல தடவைகள் தெரியாம  பிச்சை எடுக்கிறான். சில தடவை தெரிஞ்சு பிச்சை எடுக்கிறான். 

வீட்டுக்காரிக்கு ிடி ரன்ஸ்பர் வேணும், பிரமோஷன் வேணும் அப்படின்னு ஏகப்பட்ட பேரு அலையறார்களே அதெல்லாம் பிச்சை இல்லையா...? 

அப்ப உங்க இந்த பிச்சை ஜஸ்டிபைட் அப்படின்னு சொல்றீக இல்லையா..

நாட் ஒன்லி தட்.  . யூ ஆர் பீயிங் பெனெபிட்டட் (not only that..U R being benefited.)

  எனக்கு பிச்சை போடரதுனாலே உங்களுக்குத் தான் புண்யம் போய் சேருகிறது. எனக்கு லாபம்  ஒண்ணுமில்ல. 

உண்மையிலே நீங்க தான் கருமம் செய்யறீங்க. அந்த பகவத் கைங்க்கர்யத்துலே கார்யத்துலே நான் ஒரு கருவி அவ்வளவு தான் ....

என்று திடீர் என்று ஒரு ப்ரும்மாஸ்திரத்தை வீசினார்.  

நான் அப்ப வர்றேன் என்று நழுவினேன்.

அடுத்த மாசம் .  அதே நபர்.  அதே துண்டு.  ஆனால் கோவில் வேற .இப்ப மைலாபூர்  பக்கம்.

காசிக்கு போறதா இருக்கேன். பிச்சை எடுத்துண்டு உன்னை தரிசிக்க வர்றேன் அப்படின்னு காசி விஸ்வநாதர் கிட்டே வேண்டிண்டு இருக்கேன்... என்று உடஞ்சு போன டேப் ரெகார்ட் மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தார். 

இந்த தடவை நான் அந்தப்பக்கம் போகவில்லை.அவர் பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

 நம்ம தான் காசிக்கு போக முடியவில்லை. விருப்பப்படுபவர்களை  காசி விஸ்வநாதர் தனியா கூப்பிடும்போது நம்ம அதுலே நடுவிலே நிக்கறது சரியா படல. 

ஒன்ஸ் பிட்டன் ட்வைஸ் ஷை.

ஆனாலும் சிதம்பரத்திடம் சொல்லணும்.

சர்வீஸ் டாக்ஸ் அதுவும் TDS லே சார்ஜ் பண்ணறதுக்கு இன்னொரு சோர்ஸ் பாக்கி இருக்கிறது