சம்மர் சோனோடா .. இன்னிக்கு போக்கப்போறோம் என்றாள் தர்ம பத்தினி.
அது என்ன சொனாடோ, சோன் பப்டி மாதிரி ..அது என்ன ரேசார்டா , என்ன சாப்பாடு என்று கேட்டேன்.
சாப்பாடா !! மிகப்பெரிய விருந்து.. என்றாள்.
சேமியா பாயசம், புளியோதரை, பிசி பேலா ஹூளி, மெது வடை , சிப்ஸ் எல்லாம் இருக்குமோ ?
இல்லை ...இது இசை விருந்து. நம்ம வீட்டுக்கு வரும் பியானோ மாஸ்டர் காரி மாடிசன் அவர்கள் தனது எல்லா சிஷ்ய புள்ளைங்களுடன் ஒரு ப்ரோக்ராம் பண்ணுகிறார் . மத்தியானம் 1 மணிக்கு கிளம்பி போனால், கரெக்டா இருக்கும் என்றாள். எடிசன் பக்கத்திலே ஒரு பிரபல பியானோ கம்பெனி இதற்கான ஏற்பாட்டைச் செய்து இருக்கிறது.
தாமஸ் ஆல்வா எடிசனைத் தான் எனக்கு தெரியும். இது என்ன எடிசன் ? யோசித்துக்கொண்டு இருக்கும்போது !!!
என் பெண்ணோ என்னைக் கூர்ந்து கவனித்தாள். உன் ஹேர் ஸ்டைல் சரியா இல்ல. என் பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க. அவங்களுக்கு உங்களை இன்ட்ரொடுயுஸ் பன்னனும்லே ... இது மாதிரி அசிங்கமா ஹேர் ஸ்டைல் ..!!1 எனக்கு மானம் போயிடும். போய் அர்ஜெண்டா ஒரு ஹேர் கட் பண்ணிண்டு வாங்க. ஏங்க !! இவரையும் நீங்க கூட்டிண்டு போய்ட்டு வாங்க அப்படின்னு அவ , பாவம் அவ ஆத்துக்காருக்கு , என் மாப்பிள்ளைக்கு ஒரு பிடி வாரான்ட் இஸ்யு பண்ணினாள்.
எனக்கு ஒன்னும் ஹேர் கட் வேண்டாம். ஹேர் சுத்தமா இல்ல. மொட்டையா இருக்கு. இதுலே அனாவசியமா ஒரு 15 டாலர் கொடுத்து என்ன ஸ்டைல் வேண்டி இருக்கு.? நான் என்ன ஹன்சிகாவோடயா நடிக்கபோறேன் !! ஒரு சங்கீத கச்சேரிக்கு போக இத்தனை கலாட்டாவா என்று இரைந்தேன்.
இது ஒன்னும் உங்க மைலாப்பூர் அகாடமி இல்ல. சொனோடா சம்மர். ஆபெரா சிங்கர்ஸ் எல்லாம் வந்திருப்பா. அப்பறம் சஞ்சுவோட ப்ரெண்ட்ஸ் அல்லாருமே அவாவா அப்பா அம்மா வோட வந்திருப்பாங்க... இவ்வளவு அசிங்கமா இருந்தா அவங்களுக்கு எப்படி உங்களை இன்ட்ரொட்யூஸ் பண்றது ?
அப்ப நான் வல்ல...என்று பேக் அடித்தேன்.
சரி.. போனாபோறது .. வரட்டும். ஆனா வந்தோமா சொனோடா கேட்டுட்டு சும்மா இருக்கணும். அனாவசிய அரட்டை கூடாது என்றாள்.
சுமார் 2 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.
THE GREAT AMERICAN PIANO STORE முன்பாக.
அது ஒரு பியானோக்கள் விற்பனை கூடம். அங்கு ஒவ்வொரு வாரமும் பியானோ வல்லுனர்கள் தங்கள் மாணவர்களுடன் அங்கு வந்து ஒவ்வொருவரும் பர்பார்மன்ஸ் தருகிறார்கள்.
எடுத்த எடுப்பிலே அந்த கம்பெனி ஓனர் ஒரு பியானோவின் நுணுக்கத்தைப் பற்றி விளக்கினார். மேஜருக்கும் மைனருக்கும் ஒலி வித்தியாசம் எப்படி வருகிறது என்பது பற்றி பேசினார் என நினைக்கிறேன். அவரது அக்சென்ட் புரிவதற்குள் அவர் தனது பேச்சை முடித்து விட்டார்.
காரி மாடிசான் தனது பியானோ புலமையை ஒரு இரு 10 நிமிசத்திலே பிச்சு உதறி விட்டார்.
அதர்குப்பின்னே செலஸ்டா மாண் ஒரு விசேட விருந்தினர். பிலெடெல்ப்பியா நகரத்தில் ஸ்பானிஷ் ரெபார்டையரில் சிறப்புடையவர். அவரது இரு பாடல்களும் வியக்க வைத்தது.
Tango de lo Menegilda (Federico Chueca)
Palomica aragonesa Jose Serrano
எனக்குள்ளே ஒரு எண்ணம். நம்ம கச்சேரி எல்லாமே ஆரம்பிக்கும்போது ஒரு ஹம்சத்வனிலே வாதாபி கணபதிம் பஜே இல்லேன்னா நாட்டை லே ஒரு வர்ணம் பாடிட்டு தான் மத்த பாடல்கள். இங்கே எப்படி.?
அந்த கன்வென்ஷன் இங்கே கிடையாதாம்.
அதற்கு பின் ஒவ்வொருவராக காரி மாடிசன் அவர்களின் மாணவர்கள் தங்கள் பியானோ பாடங்களை வாசித்து காண்பித்தார்கள். ஒரு அஞ்சு வயது பையன் முதல் எனது பேத்தி வரை அவரவர்கள் துறையிலே லெவல் லே பியானோ வாய்பாட்டு என்று அடுத்த 2 மணி நேரத்திற்கு ஜமாய்த்தார்கள்.
அவங்க அப்பா அம்மா, தாத்தா பாட்டி எல்லோருக்கும் மகா சந்தோஷம். பலர் தனது காமிராவில் வீடியோ எடுத்துக்கொண்டும் கை தட்டியும் உச்சி முகர்ந்தும் பாராட்டினார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் கரகோஷம்.
இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடை பெறுகிறதா என்று தெரியவில்லை. லக்ஷ்மண் சுருதி செய்கிறார்கள் போல் தோன்றுகிறது.
எனது பேத்தியின் பர்பார்மென்ஸ் வழக்கம் போல மிக நன்றாக இருந்தது.
முடிந்து வெளிலே வரும்போது வயிறு நானும் இருக்கேன் இருக்கேன் அப்படின்னு எல்லாருக்கும் சொன்னது.
நேரே எடிசன் சரவணா பவன் போனோம். உள்ளே நான் தான் முதல்லே நுழைந்தேன்.
அங்கே நம்ம தமிழ் பொண்ணு பார்த்தா சாப்ட் வேர் படித்த ஐ.டி. ப்ரோபசானல் மாதிரி ஒரு தோற்றம். ஜீன்ஸ் பாண்ட் பனியன் போட்டு, கையில் ஒரு குறிப்பு புத்தகம் பேனா இத்யாதி...
என்னை வழி மறித்து எத்தனை பேர் என்றாள். முதலில் எனக்கு புரியவில்லை. நான் ஒல்லியாத்தான்/இருக்கேன் என்னைப்பார்த்து எத்தனை பேர் அப்படின்னா என்ன அர்த்தம்?
பிறகு மாப்பிள்ளை தான் சொன்னார். அவள் ஹோஸ்டஸ்
யார் எங்கே உட்காரணும் அப்படின்னு சீட் ஆர்கனைசராம்.
நான் அஞ்சு பேர் என்றேன். எங்களுக்கு ஒரு தனி டேபிள் ஒதுக்கப்பட்டது.
எனக்கு சப்பாத்தி, வூட்டுக்காரி மசால் தோசை, பெண் 14 சின்ன இட்லி , பேத்தி ஆனியன் தோசை, கூடவே நான் இரண்டு மெது வடை, வூட்டுக்காரி தயிர் வடை மாப்பிள்ளை தோசை ,காபி, எல்லாம் சாப்பிட்டோம். மொத்த பில் 80 டாலர் கிட்டத்தட்ட.. சீப் என்றாள் என் பெண். நான் இந்திய ரூபாயில் கணக்குப்போட்டேன். ரூபாய் 4800 ஆ பில் !!! தலை சுற்றியது. இன்னொரு காபி சாப்பிட்டேன். மைலாபூர் சரவணா பவன் போல இங்கும் சாப்பிட்டபின் சோம்பு கற்கண்டு மிக்சர்.
வெளிலே வந்த உடனே நான் எங்க இப்ப நெக்ஸ்ட். என்றேன்.
இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா. நவ க்ருஹம் சுத்தணும். ஹனுமார் தரிசிக்கணும். இப்ப நம்ம ச்வீடிஸ்போரோ என்ற ஒரு இடத்துக்கு போறோம். அங்க ஒரு ராஜ கணபதி கோவில் இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்திலே போயிடலாம் என்றார் மாப்பிள்ளை.
எடிசன் லேந்து ஸ்வீடிஸ் போரோ ஒரு 50 மைல் இருக்கலாம். ஆடோ கியர்லே போட்டுட்டா அதுவே ட்ராபிக்குக்கு தகுந்தபடி அட்ஜச்ட் பண்ணிண்டு வேகமா கார் போகிரது.
நான் காரிலேயே தூங்கிப்போய் விட்டேன்.
தொடரும்.....
SVEDESBORO, NEW JERSEY
ராஜ கணபதி கோவிலின் வலைத்தளம் இது.
பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருங்கள்.

நீங்கள் இப்போது கேட்பது ஒரு இத்தாலியன் மொழி பாடல்
O del mio dolce ardor
Bramato oggetto,
L'aura che tu respiri,
Alfin respiro.
O vunque il guardo io giro,
Le tue vaghe sembianze
Amore in me dipinge:
Il mio pensier si finge
Le più liete speranze;
E nel desio che così
M'empie il petto
Cerco te, chiamo te, spero e sospiro.
கிரிஸ்போர்டு வான் கலக் இசை அமைத்த பாடல் இது. இவர் 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். டிராய் நகர இளவரசன் பாரிஸ் , பாரிஸ் அண்ட் ஹெலன் என்னும் ஆபெரா வில் பாடும் பாடல் இது.
கிரேக் இதிகாச காவியங்களில் ஹோமர் எழுதிய இலியட் .
அந்த காவியத்தில் ஒரு காட்சி.
மூன்று தேவதைகள் பாரிஸ் முன்னே தோன்றி தம் மூவரில் மிகவும் அழகு
யாரென கேட்கிறார்கள். தன்னை அழகு என்று சொன்னால் ஒரு பரிசு
தருவதாக அவர்கள் வாக்களிக்க,
பாரிஸ் அவர்களில் அப்ரோடைட் எனும் பேருடைய காதல் தேவதை தான் மிக
அழகு என்று உரைக்கிறான்.
பாரிஸ் க்கு பரிசாக உலகத்திலேயே மிகவும் அழகான பெண்ணான ஸ்பார்ட்டா
ராஜ்யத்தின் ராணி ஹெலன் உறுதி அளிக்கப்படிக்கிறான்.
ஆபெரா துவங்கும்போது, பாரிஸ் ஸ்பார்டா ராஜிய கடற்கரைக்கு வந்து,
தன கனவுக் கன்னி ஹெலனுக்காக காத்திருக்கும் நேரம் இப்பாடலைப்
பாடுவதாக அமைந்திருக்கிறது.
O my sweet ardor,and desired object.
The air which you breathe,
At last I breathe.
Wherever I turn my glance
Your lovely features
Paint love for me:
My thoughts imagine
The most happy hopes,
And in the longing which
Fills my bosom
I seek you, I call you, I hope, and I sigh.
ஓ என் மனமிசைந்த மணமே !!
நான் விரும்பிய பொருளே !!
நீ சுவாசித்த காற்றையே தானே பின்
நான் சுவாசிக்கின்றேன்.
எங்கெலாம் நான் பார்க்கிறேனோ
அங்கேலாம் உனது அழகிய அங்கங்கள்
எனக்கென ஒரு காதல் ஓவியத்தை
தீட்டுகின்ற பொலிவு தான் என்னே !!
எண்ணங்கள் எனது கற்பனையிலே
இன்ப எதிர்பார்ப்புகளை என்
இதயத்தில் நிரையச்செய்கின்றனவே.
நீ வேண்டுமென உன்னை நான் கூப்பிடும் குரலை
நீ கேளாயோ ?
என் பெருமூச்சை நீ கேளாயோ
பாடல் காதலில் தோய்த்த சோக சங்கீதம். சுகம். நான் பாடாத பாட்டா அப்படின்னு நினைத்துக்கொண்டு வந்தேன். ************************************************************* |
நேரே எடிசன் சரவணா பவன் போனோம். உள்ளே நான் தான் முதல்லே நுழைந்தேன்.
அங்கே நம்ம தமிழ் பொண்ணு பார்த்தா சாப்ட் வேர் படித்த ஐ.டி. ப்ரோபசானல் மாதிரி ஒரு தோற்றம். ஜீன்ஸ் பாண்ட் பனியன் போட்டு, கையில் ஒரு குறிப்பு புத்தகம் பேனா இத்யாதி...
என்னை வழி மறித்து எத்தனை பேர் என்றாள். முதலில் எனக்கு புரியவில்லை. நான் ஒல்லியாத்தான்/இருக்கேன் என்னைப்பார்த்து எத்தனை பேர் அப்படின்னா என்ன அர்த்தம்?
பிறகு மாப்பிள்ளை தான் சொன்னார். அவள் ஹோஸ்டஸ்
யார் எங்கே உட்காரணும் அப்படின்னு சீட் ஆர்கனைசராம்.
நான் அஞ்சு பேர் என்றேன். எங்களுக்கு ஒரு தனி டேபிள் ஒதுக்கப்பட்டது.
எனக்கு சப்பாத்தி, வூட்டுக்காரி மசால் தோசை, பெண் 14 சின்ன இட்லி , பேத்தி ஆனியன் தோசை, கூடவே நான் இரண்டு மெது வடை, வூட்டுக்காரி தயிர் வடை மாப்பிள்ளை தோசை ,காபி, எல்லாம் சாப்பிட்டோம். மொத்த பில் 80 டாலர் கிட்டத்தட்ட.. சீப் என்றாள் என் பெண். நான் இந்திய ரூபாயில் கணக்குப்போட்டேன். ரூபாய் 4800 ஆ பில் !!! தலை சுற்றியது. இன்னொரு காபி சாப்பிட்டேன். மைலாபூர் சரவணா பவன் போல இங்கும் சாப்பிட்டபின் சோம்பு கற்கண்டு மிக்சர்.
வெளிலே வந்த உடனே நான் எங்க இப்ப நெக்ஸ்ட். என்றேன்.
இன்னிக்கு சனிக்கிழமை இல்லையா. நவ க்ருஹம் சுத்தணும். ஹனுமார் தரிசிக்கணும். இப்ப நம்ம ச்வீடிஸ்போரோ என்ற ஒரு இடத்துக்கு போறோம். அங்க ஒரு ராஜ கணபதி கோவில் இருக்கிறது. இன்னும் ஒரு மணி நேரத்திலே போயிடலாம் என்றார் மாப்பிள்ளை.
எடிசன் லேந்து ஸ்வீடிஸ் போரோ ஒரு 50 மைல் இருக்கலாம். ஆடோ கியர்லே போட்டுட்டா அதுவே ட்ராபிக்குக்கு தகுந்தபடி அட்ஜச்ட் பண்ணிண்டு வேகமா கார் போகிரது.
நான் காரிலேயே தூங்கிப்போய் விட்டேன்.
தொடரும்.....
SVEDESBORO, NEW JERSEY
ராஜ கணபதி கோவிலின் வலைத்தளம் இது.
பாடல்களைக் கேட்டுக்கொண்டு இருங்கள்.
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!