சின்மயா பால விஹார்
ஆண்டோவர் என்னும் சிறிய டவுன் இது. பாஸ்டன் லிருந்து ஒரு 40 மைல் தொலைவு.
இங்கு பூஜ்ய ஸ்ரீ சின்மயாநந்தா அவர்கள் துவங்கி வைத்த பால விஹாரில் ஹனுமனை தரிசிக்க
இது வரை ஒரு மூன்று தரம் போயிருப்பேன்.
இந்த ஹனுமார் கோவில் இந்த பாஸ்டன் சுற்று வட்டாரத்தில் மிக பிரசித்தமாக இருக்கிறது.
இந்த தளத்தில் கோவிலைக் கண்டு களியுங்கள்.
பூஜ்ய ஸ்ரீ தேஜோமயானந்தா, தயானந்த சரஸ்வதி குருகுலத்தைச் சார்ந்த துறவி.
இந்த மாதம் 21ம் தேதி முதல் துளசி ராமாயணம் உபன்யாசம் செய்யப்போகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சம்பந்தமான ஐயங்களுக்கு அவர் பதில் அளிப்பாராம்.
அத்துடன் இந்த ஸ்தலம் மிகவும் அழகான ஆர்கிடேக்சரல் ப்யூடி. அமெரிக்க கட்டிட கலை இந்திய பண்பாட்டுடன் கலந்து காணப்படுகிறது.
இதின் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. அவர்கள் சம்மதம் இன்றி எனக்கு புகைப்படம் எடுக்கவும் மனம் வரவில்லை.
இருப்பினும் நேற்று
மூன்றாவது மாடியில் இருக்கும் ஆடிடோரியம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.
அதை மனக்கண் மூலம் ஒரு போடோ எடுத்தேன்.
மூன்றாவது தளத்தில் இங்கு வசிக்கும் பாரத நாட்டு மக்கள் கலாசார உணர்வினை எடுத்து வலியுறுத்தும் விதமாக,
அவ்வப்போது ப்ல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பல்வேறு மொழிகள் கற்று தரப்படுகின்றன. தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, சம்ஸ்க்ருதம், ஆகிய மொழிகளில் அவ்வப்போது வாலண்டியர்ஸ் வாரம் இரு முறை அல்லது மூன்று முறை மொழி மட்டும் அல்லாது மொழி பேசப்படும் மக்களின் பண்பாட்டினையும் போதிக்கிறார்கள்.
இதைத் தவிர கணிதம் கற்று தரப்படுகிறது.
செஸ் துவக்க வகுப்புகள், தமிழகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியினால் நடத்தப் படுகின்றன.
எனது பேரன் ஐ பாடில் செஸ் காயின்ஸ்களை வெகு வேகமாக மூவுகளைச் செய்கிறான்.
செஸ்ஸில் யானைக்கு ரூர்க் என்று ஒரு பெயரும் உண்டல்லவா ? அதற்கு மட்டும் யானையின் உருவம் ஏன் இல்லை என்று கேட்டான்.
அது அப்படித் தாண்டா என்று சமாளித்தேன்.
அதைப் பாரு, பில்லர் போல் இருக்கிறது இல்லையா .. அது ராஜா பாலஸில் தூண் போன்றது . ரொம்ப ஸ்ட்ராங். அதனால், ராஜா வோடபரிவாரத்திலே குதிரை, சிப்பாய், பிஷப் போன்று எளிபெண்டும் உண்டு. அதற்கு தான் அப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, காலரை நிமித்திக்கொன்டேன்.
என்ன தாத்தா. பில்லர் அப்படின்னா எப்படி நகரும் ?
சும்மா இருடா !! தாத்தா வை ரொம்ப தொந்தரவு செய்யக்கூடாது.. விஸ்வநாதன் ஆனந்திக் கேட்டு சொல்வார் என்றார் மாப்பிள்ளை.
அவர் இப்ப பார்ம்லே இல்ல. அவருக்கு எப்படித் தெரியும் எனக்கேட்கிறான் பிச்சை, என் பேரன்.
அனுமார் கிட்டே போய்,
அப்பனே , அசாத்திய சாதகன் அல்லவா நீ.
என்னை காபாத்துடா ...இந்த
கேள்விக்கு என்ன பதில் ?
அனுமான் என்ற உடன் ஜகமணி அவர்கள் வழிதான் நினைவுக்கு வருகிறது.
இன்று சனிக்கிழமை. அவர தளத்திற்கு செல்லவேண்டும்.
வேகத்திற்கு மட்டுமல்ல, விவேகத்திற்கும் அவன் பாதங்களே துணை.
அவனோ கண்களை மூடிக்கொண்டு, கண்களிலே நீர் சுரக்க ராமா, ராமா என்று
24 7 ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் பிரும்ம சாரினம்.
துஷ்ட கிருக வினாசாயா ஹனுமந்தம் உபாஸ்மஹே.
ராமாய ராம பத்ராய ராம சந்திராய வேதசே.
ரகுநாதாய நாதாய சீதாயாஃ பதயே நமஹ.
அப்பனே ! ஆஞ்சனேயா..
என் பேரக்குழந்தைகளை காப்பாற்று.
உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.
இன்னிக்கு மதியம் 11 மணி அளவில் இந்த ஊரில் இருந்து திரும்பி ஜெர்சிக்கு
செல்லவேண்டும்.
பிரச்னைகளுக்கு தீர்வு காண் என்ற தலைபபிலே இந்த பதிவை எழுதும்போது
திரு ராஜ முகுந்த வல்லியூறான் அவர்களிடமிருந்து ஒரு செய்தி. அது என்ன ?
அனுமார் அவர் மூலம் எதுனாச்சும் செய்தி எனக்கு அனுப்பி இருக்கிறாரோ ?
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!