Pages

Wednesday, July 24, 2013

ஆனந்த நயாகரா வெள்ளம்

நியூ ஜெர்சியிலிருந்து சிகாகோ வழியே நாங்கள் வந்த வான் வழிப் பயணத்தை பற்றி அறியாதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டு பிறகு இங்கே வரவும். 

நயாகரா நகரம் பக்கத்துலே வரும்போது பார்த்த வியூ. 


நாங்கள் தங்கிய ஹோட்டல்.


கிட்டத்தட்ட ஒரு பதினிரண்டு மணி இரவு ஹாம்டன் இன் ஹோட்டலுக்குச் சென்றோம்.  ஏகப்பட்ட கார்கள். ஒரு வழியா பார்கிங் ஸ்லாட் கண்டுபிடித்து
ஹோட்டலுக்கு உள்ளே நுழைந்தோம்.  நம்ம பக்கத்திலே போன உடனே கதவு தானா திறக்கிறது. உள்ளே போன பின்னே மூடிகொள்கிறது.  அந்தக் காலத்து மாயா பஜார் படம் நினைவுக்கு வந்தது.

ரிசெப்ஷன் ஹாலில் அமர்ந்திருந்த நாட் ஸோ ஓல்டு லேடி எங்களை ஹாய் என்று வரவேற்றாள்.   ஏற்கனவே ஆன் லைனில் ரிசர்வ செய்யப்பட்டு இருந்ததால், ரூம் 213 என்று சொல்லி அதற்கான சாவி , அதுவும் ஒரு க்ரெடிட் கார்டு மாதிரி இருந்தது.  அதை ஸ்வைப் செய்ய கதவு திறந்தது.


ரிசப்ஷன் ஹாலிலேயே காபி, சாக்லேட் மில்க், சாக்லேட் கோகோ,  டீ, என்று பலவிதமான ஐடம்கள். 

எல்லாமே அவங்கவங்க அவங்க்கவளுக்கு தேவைப்படுவது போல தயார் பண்ணிக்கொள்ள வேண்டும்.பக்கத்திலே கப், மூடி, ஸ்பூன், டிஷ்யூ பேப்பர். சானிடைசர் எல்லாம் அடுக்கி அடுக்கி வைத்திருக்கிறார்கள்.  எத்தனை வேணுமானாலும் எடுத்துக்கலாம்.

காபி என்னுடைய பேத்தி நிமிஷமா தயார் பண்ணி கொடுத்தாள். க்ரீம் மில்க், பாட் ப்ரீ மில்க் ,எது வேணும் என்றாள்.

எனக்கு fat free மில்க் போடு, உன்னோட  பாட்டிக்கு கொழுப்பு ஜாஸ்தி. இருந்தாலும் க்ரீம் மில்க் போட்டு சக்கரை 2 தடவை போட்டு கொடு என்றேன். கொடுத்தாள்.கிழவி நன்னா தூங்கணும். அப்படிங்கற கவலை எனக்கு.

ரூமுக்கு வந்தால், அங்கேயும் காபி மேகிங் மெஷின் பக்கத்துலே பால் பாக்கெட், கால்சியம் மில்க், பௌடர், டிகாஷன் அவங்கவளுக்கு வேண்டிய மாதிரி, இருந்தது.     அங்கேயும் இன்னொரு தரம் காபி சாப்பிட்டேன். கையை துடைச்சுக்க

அல்ப்ராக்ஸ் சாப்பிட்டேனா இல்லையா என்று நினைவு இல்லை. இன்னிக்கு மட்டும் இன்னும் ஒன்னு சாப்பிட்டு விடுவோம் என்று அந்த மஞ்ச மாத்திரை முழுங்கினேன்.


காலைல,  நம்மவே நம்ம ரெண்டல் கார் இருக்கே அதை எடுத்துட்டு நயாகரா போலாமா அல்லது ஹோட்டலிலே ஒரு டூரிஸ்ட் பஸ் போகிரது. அதில் போகலாமா என்று மாப்பிள்ளையும் பெண்ணும் டிஸ்கஸ் செய்துகொண்டார்கள். 

எனக்கு தூக்கம் கண்ணை சுயற்றிற்று.  நான் தூங்கி போய்விட்டேன்.

மறு நாள் காலை எழும்பொழுது மணி 7.  நன்றாக விடிந்திருக்கிறது.  இங்கே இப்பொழுது சம்மரில் காலை 5 மணிக்கே உதய சூரியன் உதயமாகிவிடுகிறான் . (ரொம்ப அவசரம் போல . 2014 லே எலக்சன் இல்லையா ??!!!) மாலை இல்லை இரவு 8.30 மணிக்குத் தான் சூரியன் அஸ்தமனம்.

இந்த நயாகரா பால்ஸ் டவுன் லாடிட்யூட் 50க்கு மேலே.
இன்னிக்காவது நல்ல நேரம் பார்த்து வலது காலை எடுத்து பயணத்தை ஆரம்பிக்கணும்.   ஆஹா. இன்னிக்கு சனிக்கிழமை.. காலைலேயே ராகுவோட காலமாச்சே !!!

அப்ப  ராகு காலம் சூரிய உதயத்திலேந்து தான் கணக்கு பண்ணனும். இது தெரியாம, நம்ம நாட்டிலும் எல்லோரும் தி ச வெ பு வி செ ஞா அப்படின்னு  கணக்கு பண்றாக.fixed time ஒரு பார்முலா மட்டுமே. நம்மதான் லாட்டிடுட் லாஞ்சிடுட் எடுத்துண்டு கணக்கு போட்டுக்கணும்.

சூரிய உதயத்திலேந்து ஒரு நாளைக்கு ப்ளேசுக்கு 1 1/2 மணி நேரம் கூட்டிக்கணும். ஸோ, சனிக்கிழமை அப்படிங்கறதாலே , ராகு காலம் உதய நேரம் 5.30 ப்ளஸ் 2 x 1 .30 .அதாவது 8.00 லேந்து 9.30 .  . நாட் 7.30 டு 9.00 .

இன்னிக்கு சனிக்கிழமை, மகா பிரதோஷம் வேற.  பக்கத்துலே பபலோ ஊருக்குத் திரும்பி போய் , சிவன் கோவிலுக்கு சென்று வரலாம் என்றார் மாப்பிள்ளை.

பஸ் 1 மணிக்கு கிளம்புகிறது.அதற்குள்ளே  நம்ம திரும்பி வர முடியாதே என்று வீடோ பவரை உபயோகப்படுத்துவேன் கோவிலுக்கு போவதை நிறுத்திவிடுவாளோ என்று பயமுறுத்தினாள் பேத்தி.

போகலாமா, முடியாதா என்ற சர்ச்சை  மேட்டூர் அணைக்கு தண்ணீர் பிரச்னை மாதிரி தொடர , காரை கிளப்பினார் மாப்பிள்ளை.

எங்கே போறோம் என்று கேட்கிறாள் பேத்தி. அவளுக்கு இந்த கோவில் சமாசாரம் இதெல்லாம் அவ்வளவு இஷ்டம் இல்லை.  வேற ஜோலி ஒண்ணும் இல்லேன்னா கோவிலுக்கு போலாம். இப்ப நயாகரா வந்திருக்கோம். அங்க போயிட்டு வரணும் இல்லையா.

அவ சொல்றதுதான் சரி, என்கிறது இந்தக்கிழம்.  இத்தன நாள் தான் பிரதோஷத்துக்கு கோவிலுக்கு போயாச்சே. ஒரு தடவை போகலேன்னா என்ன ஆயிடும் அப்படின்னு அவ கட்சி.  இவ எப்ப எந்த சைடு இருப்பா அப்படின்னு எப்பவுமே எனக்கு சொல்ல முடியாது.  பா. ம. க.விலே மெம்பரா இருப்பா போல இருக்கு.

மாப்பிள்ளை ஒன்னுமே சொல்லாம வண்டியை ஓட்டிட்டே இருக்கார். அடுத்த
40 நிமிஷத்திலே கோவில் வாசல்லே கார் வந்து நின்னுடுத்து.

நேரம் ரொம்ப ஆயிடுத்து.  நீங்களும் அப்பாவும் மட்டும் போயிட்டு வாங்க, நாங்க காரிலேயே காத்திருக்கோம் என்றாள் பெண்.. ஆமாம் என்கிறது கிழம்.

நானும் மாப்பிள்ளையும் மட்டும் சிவன் கோவிலுக்குள் நுழைந்தோம்.

அமெரிக்க கனடா எல்லையில் இத்தனை ஒரு அற்புதமான சிவன் கோவிலா ?




நாங்கள் சென்ற நேரத்தில் ஒரு நவ க்ருஹ ஹோமம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது.

பிரதோஷம் என்பதால், சிவ பெருமான் பாலிலே குளித்துக்கொண்டு இருந்தார்.

இங்கு பால் இரண்டு வகை. ஒன்னு ஆர்கானிக் இன்னொன்று ரெகுலர். ஒவ்வொன்றிலும் நாலு வகை. அதுக்கு மேலே.  வளரும் புல்லை மட்டும் சாப்பிடும் பசுக்கள் பால் தான் ஆர்கானிக் மில்க்.  ரெகுலர் மில்க் தரும் பசு மாடுகள் ஹார்மோன்ஸ் உள்ளிட்ட உணவுகளையும் சாப்பிடுமாம்.
ஸோ,சிவனுக்கு அபிஷேகம் பண்ர பால் ஆர்கானிக் பாலாகத் தான் இருக்கணும் .இல்லையா.   நம்ம நாட்டிலே அபிஷேகம் ஆவின் பால் தான் எல்லாத்துக்கும். . 

ஏகப்பட்ட பேர் பஞ்ச கச்சம் கட்டி வட நாட்டுப்பேர் அதிகமாக இருந்தார்கள்.  நம்ம தமிழ் ஊர் காராரும் அதிகம் பேர் கண்ணில் பட்டனர்..  நானும் அந்த வட்டத்தில் ஒன்றாக இருக்க அவர்களுடன் அளவளாவ ஆவல் இருக்கத்தான் செய்தது.  இருந்தாலும், அவாவா ஆத்துக்காரி காரில் காளி மாதிரி காத்துக்கொண்டு இருப்பாள் என்ற பயம் இருந்து வந்ததால், சிவனுக்கு பை பை சொல்லிட்டு வெளிலே வந்தோம்.

இருந்தாலும், வந்தோமா, கிளம்பினோமா என்றிருக்கனும் அப்படின்னு ஒரு
அஞ்சே நிமிசத்திலே சிவா சிவா என்று சொல்லிட்டு கன்னத்திலே போட்டுண்டு கிளம்பினோம்.சக்கரை பொங்கல் அவ்வளவு பிரமாதம். இன்னொரு ஸ்பூன் எடுத்து வரக்கூட டயம் இல்லை. எனக்கு வேண்டாம் பேத்திக்கு தருவோம் என்று எடுத்து வந்தேன்.  என்னை தரிசிப்பவா தான் சாப்பிடணும் அப்படின்னு ஒரு 144 இல்லை . அத தெரிஞ்சுண்ட என் பொண்ணு ஒரே வாயிலே அத்தனையும் ஸ்வாஹா .

சனிக்கிழமை ஹனுமார் தரிசனம் என்னைப்பொருத்த வரை ரொம்ப முக்கியம். அதுவும் ஹனுமத் கிருபையால் நடந்தேறியது.  அதுவே போதும். பிரசாதம் எல்லாம் மெட்ராஸ் போன உடனே ஆள்வார்பெட்டை அனுமார் கோவில் லே கிடைக்கும். சக்கரை பொங்கல், புளியோதரை எல்லாமே. அப்படி இல்லே அப்படின்னாலும் பக்கத்திலே வல்லி நரசிம்மன் அம்மா வீடு. தாயார் மாதிரி எப்ப போனாலும் ஒரு வாய் தயிர் சாதம் தராம இருப்பாளா என்ன ?

அசாத்திய சாதக சுவாமின் அசாத்திய தவ கிம் வதா.

முடியாது என்று நினைப்பதெல்லாம் முடித்துக்காண்பிக்கும் அனுமாரே, உன்னால் முடியாது தான் என்ன ? 

நீங்கள் கீழே பார்ப்பது இந்த கோவிலில் ஒரு காட்சி.  இந்த வீடியோ நாங்கள் எடுத்தது அல்ல.

 சிவா பெருமான் கோவில் லே ஒரு காட்சி.
Shiv Mandhir at Buffalo Airport Town, forty miles away from Niagara Falls City.




இந்த வீடியோ பாருங்கள். 2 வது நிமிஷம் துவங்கும்போது ருத்ரம் சமகம் சொல்லி கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடக்கிறது.  ( இதுவும்நாங்கள்  எடுத்த வீடியோ அல்ல. )
அதற்கெல்லாம் டயம் இல்லை.









காரை திருப்பிக்கொண்டு அசாத்திய சாதகனை பார்த்தாச்சு , பிரதோஷத்தின் நாளன்று, சிவ தர்சனம் கிடைத்தாச்சு என்ற திருப்தியில் நயாகரா நகரை நோக்கி விரைந்தோம்.

இரண்டு இடத்தில் நடுவில் டோல் செலுத்தும் இடம்.  கார்கள் இஞ்ச் இஞ்ச் ஆக
நகருகின்றன.  பேத்தி எள்ளும் கொள்ளுமாக வெடிக்கிறாள். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு, ஒன்பது, எட்டு, ஏழு ,ஆறு,......அவள் கௌண்டு டவுன்
டயம் தர மாப்பிள்ளை கிட்டத்தட்ட 80 மெயில் ஸ்பீடு ஓட்டுகிறார்.

எனக்கோ , நேத்திக்கு வானத்திலே பயம், இன்னிக்கு தரைலேயே பயம் அப்படி ஆயிடுத்து.

நின்னா பயம், நடந்தா பயம், ஓடினா பயம்.இன்னும் கொஞ்ச நேரத்திலே கொட்டற நீர் விழ்ச்சிக்கு கீழே இருக்கப்போறோம் அப்படின்னு நினைச்சாலே ஹார்ட் பக் பக்.   பக்கும் பக்கும் மாடப்புறா மாதிரி இல்லாம கொஞ்சம் வேகமா அடிக்கறது.  எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஆஸ்பிரின் மாத்திரை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன்.  இதய வலி வந்தால் என்ன செய்வது அப்படின்னு ஒரு புத்தகம் இருந்தது. அதை மறந்து சென்னையிலே வைத்து விட்டு வந்துவிட்டேன்.  வந்தால் பாத்துக்கலாம்.  அப்படின்னு ஒரு தைரியம்.

பகவான் என்ன நினைச்சிண்டு இருக்கானோ அது தான் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு

சிவ சிவ என்றிருந்தேன்.

ஹோட்டல் ஹாம்டன் இன் லே எங்களுக்காக அந்த பஸ் காத்திருக்கிறது.
நாங்கள் தான் லாஸ்ட் .

டிரைவர் கம் கைட் அழகா நயகார நகரை விவரித்துக்கொண்டே பஸ்ஸை ஓட்டத் துவங்குகிறார்.

போகும் இடமெல்லாம் நயாகரா... ஆனந்த நயாகரா வெள்ளம்.  சில இடங்களில் பொங்குகிறது.  நதியாக. சில இடங்களில்  அருவியாக.

A video from Canada Side: Courtesy: Youtube.




காணக் கண்கோடி வேண்டும்.

இரண்டு தான் இருக்கிறதா ?

மிச்சத்தை நீங்கள் நாளைக்குள் கொண்டு வாருங்கள்.

அந்த அடுத்த பதிவில் நீர் வீழ்ச்சியின் வேகத்தை பார்ப்போம்.

மறக்காது வாருங்கள்.

1 comment:

  1. நான் இந்த பக்கத்திற்கு புதுசு. இதுவரை எங்கேயும் யாருக்கும் பின்னூட்டம் போட்டதில்லை. இந்த பதிவை படித்ததும் பதில் எழுத தோன்றியது. ஒரு பயண அனுபவத்தை இதனை சுவாரசியமாக சொல்லலாம் என்று இப்போ தான் தெரிந்தது. நானும் கூடவே வந்த மாதிரியே இருக்கு.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!