Pages

Monday, May 27, 2013

யாரும் படிக்க வேண்டாம். தயவு செய்து.

அய்யா தெரியாதய்யா ...

ஒரு பத்து நாளைக்கு முன்பு ஒரு மடல் ஈ மடலாக வந்தது.

இண்டி ப்ளாகர் அமைப்பு அதில் எந்தக்காலத்திலோ நான் சேர்ந்திருக்கிறேன் போல் இருக்கிறது  அதில் தமிழ் மட்டும் என்று இல்லாமல் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ப்ளாக் எழுதுபவர்கள் சங்கமம். எனது 14 வலைப் பதிவுகளில் ஒரு பதிவு மூவி ராகாஸ் மட்டும் அதில் இருக்கிறது.

சென்னையில் ஒரு கூட்டம் ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலிலே நடக்கப்போகிறது . ஞாயிறு மதியம் ஒரு மணிக்கு   குறைந்த நபர்களே அனுமதிக்கப்படுவர் என்பதால் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளவும் என்ற தகவல் வேற எனது ஆவலைத் தூண்டி அந்த லின்க்குக்குச் சென்று பார்த்தேன்

ஆமாம். எனது பதிவு அங்கே இருக்கிறது.  அந்த கூட்டத்திற்கு 200 நபர்கள் மட்டுமே இடம் .  எனக்கு முதலிலேயே 163 நபர்கள் பதிவர் ரிஜிஸ்டர் ஆகியிருந்தனர்.

72 வயசாகி விட்டது என்றாலும் ஆசை விடவில்லை
போன வருஷம் தி.நகர்லே இதுபோலே ஒரு கூட்டத்திற்குப் போனது, அங்கு எதிர் பாராத வகையிலே பொன்னாடை கிடைத்தது எல்லாமே நினைவுக்கு வந்தது.

இந்த வெயில்லிலே போய்த்தான் ஆகணுமா என்றாள் வீட்டு எஜமானி.
நான் ஏ . ஸி . பாஸ்ட் ட்ராக் கார்லே தான் போகப்போறேன். என்றேன்

இந்த தடவை எதுனாச்சும் பொன்னாடை மாதிரி கிடைச்சுதுன்னா அது இரண்டாவது பேரனுக்குத்தான் என்றாள் இவள்.

அதெல்லாம் இருக்காதுன்னு நினைக்கிறேன் ஏதோ ஒரு ப்ரப்யூம்  கம்பெனி ஸ்பான்சர் பண்றாங்க.. முழுக்க முழுக்க இது பதிவர் விழாவா இருக்குமா
அப்படின்னு சந்தேகமாத்தான் இருக்கு அப்படின்னேன்

அது எதுவேணா இருந்துட்டு போகட்டும் நீங்க கண்டதெல்லாம்
காணாதது மாதிரி சாப்பிட்டு லபோ லபோ ன்னு என் உயிரை எடுக்காதீக
அடுத்த வாரம் லுப்தான்சா பிளைட்  ஞாபகம் இருக்குல்லே என்றாள்.

இன்னொரு விஷயம் என்றாள்
என்ன என்றேன்
எதையும் பேசுவதற்கு முன்னே பேசித்தான் தீரணுமா என்று யோசித்து பேசுங்க   அது உங்க காலேஜ் இல்ல ..   நீங்க இப்ப ப்ரொபசரும் இல்ல.

மனசில் வாங்கி கொண்டேன்

கரெக்டா ஒரு மணிக்கு ஹையாட் ரெசிடென்சி அடைந்தேன் அப்ப தான்
கூட்டத்திற்கான தயார் நிலைகள் துவங்கிகொண்டு இருந்தன.

சிறிது சிறிதாக மழைத்துளி விழுவது போல பதிவர்கள் வர ஆரம்பித்து சற்று நேரத்தில் ஒரு நூறு பேருக்கு மேல் அங்கு இருந்தனர் எல்லோரும் எங்கே விழா என்ற கேள்வியுடன் இருந்தனர்.

வந்தவர்கள் எல்லோரிலும் இளைய தலைமுறை தான் எழுபது விழுக்காடு மேலே இருந்தது  எல்லோரும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்களில் ஒரு 80 சதவீதம் ஆங்கிலத்தில் பதிவு எழுதுபவர்கள்.  இது சென்னை ப்ளாகர் கூட்டம் என்பதால் இந்தி, தெலுங்கு, உருது மலையாளம் மொழிகளில் எழுதுபவர்களும் வந்து இருந்தனர்.  பொதுவான ஆங்கிலத்தில்
பேசிக்கொண்டு இருந்தனர்.

அவ்வப்போது வரும் கரெண்ட் போல தமிழும் ஒலித்தது

கூட்டம் துவங்கியது  எல்லோரையும் கணினியில் பதிவு செய்யச் சொல்ல, நானும் வரிசையில் நின்று என் இ மெயில் ஐ டி யைப் பதிவுட்ட உடன் என் பெயர் வெள்ளித்திரை பிரம்மாண்டத்தில் வெளிச்சமாக ஆஹா ஆஹா புல்லரித்து \போனேன்.

எல்லோருக்கும் ஆரஞ்சு கோகோ கோலா இளநீர் என்று வித விதமான பானங்கள்.

1.30 மணி அளவில் ....

கூட்டம் துவங்கியது.  மேடை என்று ஒன்றும் இல்லை  காம்பியர்கள் இருவர் ஒரு பிரம்மாண்டமான திரையின் பக்கத்தில் பிரசன்னமானார்கள். அந்த பெரிய ஹாலின் எல்லா பக்கத்திலும் அருகிலும் திரைகள்.  யூனி பாரம் அணிந்த அம்பி பூர் நிறுவனத்தின் அலுவலர்கள் சுறு சுறுப்பாக இயங்கினர்


ஒவ்வொரு மேசையை சுற்றிலும் ஏழு பேர் உட்கார்ந்தோம் ஹால் இப்போது அடைந்து இருந்தது.

ஸ்பான்சர் அம்பி புர் எங்களை வரவேற்றார்  .  அம்பி பூர் வாசனை என்ன
என்பதை அந்த ஹாலிலிருந்தே புரிய முடிந்தது .

அடுத்த நிகழ்வாக வந்திருந்தவர்களில் ராண்டமாக ஒரு முப்பது பேரை கணினி மூலம் தேர்ந்து எடுத்து ஒவ்வொரு பதிவருக்கும் 40 வினாடிகள் தந்து தத்தம்மை அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார்கள்.

அவர்கள் பேசும்போதே மற்றவர்கள் ஆரவாரக்கூச்சல் இட்டதால் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று கேட்க முடியவில்லை

அறிமுகம் முடியும்போது மணி 2 க்குமேல் ஆகி விட்டு இருந்தது.  லஞ்ச் டயம் என்று சொல்லி ஒரு 45 நிமிடம் என்று அறிவித்தனர்

லஞ்ச் என்றால் அது ஒரு கிங்க்ஸ் லஞ்ச் என்று சொல்லவேண்டும்  .  அது போன்ற லஞ்ச் அந்த ஹோட்டலில் ஒரு நபருக்கு ரூபாய் ஆயிரம் சார்ஜ் செய்வதாக சொன்னார்கள் கிட்டத்தட்ட ஒரு 40 ஐடம் இருந்தன. பார்த்தாலே வயிறு நிறைந்துவிடும் போல் இருந்தது. சுவையாகவும் இருந்தது.  

அடுத்த தடவை மேடம் + துளசி கோபால் அவர்கள் திரு கோபால் அவர்களின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட வரும்பொழுது இங்கு தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனசுக்குள் பிரார்த்தித்து கொண்டேன்.   திருவான்மியூர் அனந்த பத்மநாப ஸ்வாமி கிருபையில் கை கூடவேண்டும்

லஞ்ச் நேரத்திலே எனது அந்த கால நெருங்கிய நண்பர் தஞ்சாவூர் மெடிகல் கல்லூரியின் புகழ் பெற்ற இருதய நிபுணர் தஞ்சை மருத்துவ கல்லூரியின்
டீன் ஆக பணியாற்றியவர் டாக்டர் எம். கிருஷ்ணசாமி அவர்கள் பேத்தியை
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .  பிரியா என்றும் பத்ம ப்ரியா அழைக்கப்படும் அவர்கள் தற்பொழுது ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் அவரது தந்தை டாக்டர் மகாதேவன் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர்களது வலை இங்கே

பிரியாவின் தாத்தா டாக்டர் எம்.கிருஷ்ணசாமியுடன் எனது நட்பு குறித்தும் அவரது செல்வாக்கு, புகழ் தஞ்சையிலே எப்படி இருந்தது என்றும் அவரை நான் போரடித்துக்கொண்டு இருந்தேன்

ஐஸ் கிரிம், சாக்லேட் கிரீம், சாக்லேட் கேக், மற்றும் ஏகப்பட்ட பழ வகைகள் என்று நான் ஒருவகையாக அவற்றை மேஞ்சு முடிப்பதற்குள் திரும்பவும் செஷன் துவங்கியது. நேரம் மூன்றுக்கு மேல்

காம்பியர் வந்தார் . திரையில் கலர் கலரான அம்பி பூர் ஏர் ப்ரெஷனர் பற்றிய தகவல்கள் .

அம்பி பூர் வாசனையின் மூல அணுக்கள், அது எப்படி வேலை செய்கிறது, மற்ற வாசனை பர்பியூம் விட இது எப்படி சிறந்தது என்று ஒரு பவர் பாயிண்ட்
பிரசன்டேஷன் செய்தார்கள். அடுத்த 45 நிமிடம்.  விவரித்தவர் மிகவும் அழகாக சொன்னார்.

பிறகு அதில் என்ன சந்தேகம் இருந்தாலும் கேட்கலாம் என்றார்கள். ஒரு பத்து பேர் கேட்க அதில் ஒரு 30 நிமிடம் கழிந்தது . ஒரே ஒருவர் மட்டும் இந்த வாசனை திரவியம் உடல் நலத்திற்கு குந்தகம் விளைவிக்க கூடியதா என்று கேட்டார்  இந்த பர்பியூம் ப்ராக்டர் அண்ட் காம்ப்ளார் நிறுவனத்தார் அவர்கள் புகழ் பெற்ற நிறுவனம். என்று சொல்லி எதோ ஒரு சமாதானம் கிடைத்தது

பொதுவாக எல்லா ஏர் ப்ரெஷனர்ஸ் பற்றிய தகவல்களும், அவற்றில் உள்ள வேதிய பொருட்கள் என்ன என்ன தீமைகள் செய்யலாம் என்றும் இந்த தொடர்பில் உள்ளது.

இந்த ப்ராடக்ட் உள்ள சைக்லொடெக்ச்ரின் பற்றிய தகவல் இங்கே இல்லை  இருப்பினும்   யாரும் படிக்காமல் இருக்கவேண்டாம். தயவு செய்து


.t may be boring to read every chemical, but I’m going to list them all, and by no means would that be all you would find in every airfreshener, some have more and some may have less, but here goes:
Alcohol, hydrogenated caster oil, dialkyl sodium sulfosuccinate, polyarcylate, hydrochloric acid, cyclodextrin, modified polydimethicone, alkanolamine, sodium hydroxide, citric acid, quaternary ammonium chloride, benzisothiazolinone (BIT), methylisothiazolinone (MTI), propylene glycol (alchohol), sorbitan oleate, sodium borate, butane, propane and good old fragrances which could be anything.
I will pick only a handful of chemicals out of the above list to tell you about as they are not all toxic and some have not been sufficiently tested so what do we know?
***************************************************************************
A few ingredients in any Air Freshener.  
  • Butane is a neurotoxin, Benzisothiazolinone (BIT) causes contact dermatitis and has been banned for use in cosmetic products.
  • Methylisothiazolinone (MIT) is a group D carcinogen used in pesticides and a known neurotoxin.
  • Propylene glycol is a petroleum derivative which can cause eye and upper respiratory tract irritation and has been shown to decrease fertility and birth weights in rats.
  • Sorbitan oleate is a potential carcinogen used in pesticides; studies have shown it can cause cell mutations. One of the carriers, acetone is used as an industrial solvent and the vapours should be avoided as studies on animals have shown kidney, liver and nerve damage and increased birth defects for chronic exposure.
  • Quaternary ammonium chloride is an allergen which causes reactions when inhaled and if ingested can cause death.

******************************************************************************
சைக்லொடெக்ச்ரின் பற்றிய தகவல் இங்கே இருக்கிறது 

முக்கியமாக இந்த சைக்லோ டேக்ஸ் ட்ரின் டாக்சிடி ( toxicity of cyclodextrin)
பற்றிய தகவல்கள் இங்கே கிடைக்கின்றன

இதை ஐரோப்பாவில் பொதுவாக அனுமதிப்பதாகவும் செய்தி இருக்கிறது.

***************************************************************************

அதற்குள், அம்பி பூர் பர்ப்யூம் பல வகை புட்டிகள் பல்வேறு நிறங்களில்  எல்லோருக்கும் வழங்கப்பட்டன   அவரவர்கள் அவற்றினை கையில் வாங்கி அதில் இருப்பதை படிக்கும் வேளையில்,

அறிவிப்பாளர் எல்லோருக்கும் இலவச புட்டிகள் கிடைத்தனவா என்று உறுதி செய்து கொண்டார்  . அந்த ரகத்திற்கு ஏற்றவாறு , ஒரே ரகத்தை சார்ந்தவர்கள் ஒரே நிரப்புட்டி கிடைத்தவர்கள் ஒன்று கூடி அமர வேண்டும் என கேட்டுகொண்டார்

ஆகவே, லாவண்டர், ரோஜா, மல்லிகை போன்ற வித வித வாசனைகள் கிடைத்தவர்கள் தனிதனி குழுக்கள் ஆனார்கள்.  எனக்கு டிராகன் ப்ரூட் என்று ஒன்று .  எனக்கு இது ஒரு வாசனையா என்ற கேள்வி இருந்தது .

இப்பொழுது குழுக்களிடம் இருந்து வாலண்டியர்களை அழைத்தார்கள்.
அவர்களுக்கு ஒவ்வொரு வாசனைக்கும் உண்டான சிறப்பு விளக்கப்பட்டது போல் தோன்றியது  அவர்கள் திரும்பவும் தத்தம் குழுக்களுக்கு வந்து அவர்களுக்கு அதன் பெருமைகளை எடுத்து சொன்னார்கள்.

நேரம் 4.30 ஆகிவிட்டது  என்னது ? பதிவாளர்கள்,  பதிவுகள் பற்றி ஒன்றுமே இன்னும் துவக்கபடவில்லையே என்று நினைத்தேன்

5 மணிக்கு கூட்டம் முடிந்துவிடும் என்று சொன்னார்கள்.

பக்கத்தில் உள்ளவரிடம் இதனால் இந்த கூட்டத்தால் பதிவருக்கு என்ன பயன் என்றேன் வெகுளித்தனமாக .

அந்த பாட்டிலை எடுத்து காட்டினார்  கடையில் இதன் விலை ரூ.195 போட்டு இருக்கிறது. பார்த்தீர்களா. ஹம கோ முப்த் மிலா ஹாய் என்றார் .

ஆமாம். வாங்குபவர்களுக்கு என்றேன்.

இந்த பதிவர் கூட்டத்தை ஸ்பான்சர் செய்த அமைப்புக்கு ஒரு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை செலவு இருந்து இருக்கலாம்   ஆனால் ஒரு இருநூறு பேர்கள் வலையில் இந்த பர்ப்யும்மர் பற்றிய தகவல் வரும் சாத்தியங்களும் அவர்கள் அந்த வாசனையால் கவரப்பட்டு அவர்கள் வலை தளங்களும் ஒரு விற்பனை விளம்பர மையமாக விளங்கும் சாத்தியக்கூறும் தெரிந்தது .

நான் அந்த கூட்டத்தில் ஒரு அந்நியனாக உணர்ந்தேன்  உண்மையிலே பதிவர்களுக்கும் இந்த கூட்டத்தில் நடப்பதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
அதிக பட்சம் இது ஒரு சோஷல் இவன்ட். சமூக விழா அதை நடத்துபவர்
தனது பொருளை விளம்பரபடுத்துவது என்பது அவரது உரிமை.  என்னை நானே சமாதனம் செய்துகொண்டேன்.நான் ஏதோ பதிவுலகத்தைப் பற்றியும் பதிவாளர்கள் பொறுப்பு பற்றியும் பேசப்படும் என நினைத்தது எனது அறியாமை . 

ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் , அதாவது ஒரு வலைப்பதிவு மூலம் என்னவெல்லாம் சாதிக்கலாம் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்தவர்கள் இருந்தனர் என்று தான் சொல்லவேண்டும்

கூட்டத்தில் சில பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் ஆட் சென்ஸ் என்னும் விட்ஜெட் வைத்து அதில் பதிவாகும் கிளிக்குகள் தங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கின்றன என்றும் அவர்களுக்குள்  பேசிக்கொண்டும் பெருமை பட்டு கொண்டார்கள்.

ஒரு பதிவு என்று இருந்தால் அதில் ஒரு லாபம் இருக்கணும் இல்லையா என்றார் ஒருவர என்னிடம்.

எந்த ஒரு பிரபல வலைப்பதிவையும் அதே போல இருப்பது போல இன்னொரு வலைப்பதிவு போட்டு அதில் லாபகரமான விளம்பரங்கள் கொடுக்கலாம் ஏகப்பட்டது சம்பாதிக்கலாம் என்று கிசு கிசுத்தார் இன்னொருவர் என்னிடம் .



போதுமடா சாமி என்று கூட்டத்தை விட்டு நழுவினேன் \

நான் வந்த டாக்சி எங்கு இருக்கிறது என தேடினேன். செல் அடித்தேன் ச்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

நடப்போம். என்று சொல்லிக்கொண்டு அண்ணா சாலையின் ஓரமாக நடக்க துவங்கினேன்

மதியம் சாப்பாட்டின் கனம் இப்போது வயிற்றில் இல்லை.
மனசில் தெரிந்தது.

நிற்க 

ஆசை அதிகரிக்க அதிகரிக்க ஆசைப்படும் பொருளின் ஊடே நமக்கு வரும் துன்பங்கள் 
பற்றி நாம் நினைக்கிறோமா ? 

வள்ளுவன் நினைத்து இருக்கிறார் 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன். 




பின் குறிப்பு:

பிரியா என்று இன்னொரு வலைப்பதிவாளர் .  இவர் வலைப்பதிவை அவசியம் 
சென்று பார்க்கவும் . காகமும் மைனாவும்


1 comment:

  1. வியாபாரக் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு நொந்த உங்கள் அங்கதத்தை ரசித்தேன் .
    ஆசையைப் பற்றி வள்ளுவர் சொன்னதையே "Pleasure without conscience" -ஐ “Seven Deadly Sins -ல் ஒன்றாக மஹாத்மா சொல்லி இருக்கார் sir...

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!