வெய்யில் கொளுத்துகிறது. தலை நீட்டினால் திட பொருளாக இருக்கும் நாம் ஆவியாகிவிடுவோமோ என்ற அபாயம் இருக்கிறது.
வீட்டிற்குள் இருந்தாலும் என்ன தான் குளிர் சாதனப்பெட்டி இருந்தாலும் ஒரு பத்து டிகிரிக்கு கீழ் வெப்பத்தை அது கீழே கொண்டு வருவதில்லை. ஆகவே வீட்டுக்குள்ளும் குளிர்ச்சி இல்லை.
குளிர்ச்சியாக இருப்பதற்கு என்ன செய்யலாம் \\?
பழைய குப்பை எல்லாத்தையும் எடுத்தேன். போட்டோக்கள் என்னுடையவை எல்லாமே எடுத்தேன்.
பத்து வயதில் ஒன்னு, பதினெட்டு வயதில், முப்பத்தைந்து வயதில்,
நாற்பத்து நாளில், அம்பதில் , அறுபதில் , இப்பொழுது எழுபத்தி இரண்டில் என்று கண்முன்னே விரிந்தன
இதில் கண்ட ஒவ்வொரு போடோக்கு பின்னேயும் ஒரு நிகழ்வு இருந்தது மனக்கண் முன்னே வந்து நின்றது.
அவற்றின் பின்னணியில் என் போட்டோக்களை நானே பார்த்து இதில்
எது நன்றாக அதாவது அழகாக இருக்கிறது ? என்று எடை போட்டேன்.
பார்யாள் வந்தாள் . பார்த்தாள். என்ன செய்கிறீர்கள் இந்த பழைய குப்பையை பார்த்துகொண்டு. ....கேட்டாள்.
ஒண்ணுமில்லே இதிலே எது நன்னா இருக்கு அப்படின்னு பார்த்தேன்
எது நிரந்தரமா இருக்கோ அதுதான் நன்னா இருக்கும் என்றாள்.
அப்ப எதுவுமே நன்னா இல்லையா ? என்றேன்... ஒரு விரக்தியுடன்.
அப்படி சொல்லலே. எது நிரந்தரமோ அதுதான் சத்யம். இருந்துண்டே இருக்கும்.
அது சரிதான். இன்னும் ஒரு ஐம்பது வருஷம் கழிச்சு ஏன் ஒரு இருபது வருசத்துக்கு பின்னாடியே இந்த போட்டோக்களும் இருக்கப்போவதில்லே ..நாமும் இருக்கப்போவதில்லே ... இந்த ஆல்பமும் யார் இவங்க அப்படின்னு நினைக்கற ஸ்டேஜுக்கு வந்துடும் இல்லையா.. ?
அப்ப எதுதான் நன்னா இருக்கும் அப்படின்னு நினைக்கிரே ?
ஒண்ணுதான். Truth is Beauty and Beauty is Truth.
கீட்ஸ் நா சொல்லி இருக்கார்
சத்யம் சிவம் சுந்தரம். அப்படின்னு நம்ம சொல்றோம் இல்லையா...
அப்ப அது யாருன்னு நினைக்கிரே ?
யஸ்ய பிரம்மணி ரமதே சித்தம் ...
நந்ததி நந்ததி நந்தத்யேவ
யாரோட மனசு
அந்த இறைவனிடத்தில்
நிலைத்து நிற்கிறதோ.. ...
அவங்க அழகு. அவங்க மனசும் அழகு.
படம் : நன்றி: திருமதி இராஜ இராஜேஸ்வரி. அவர்களது ஆன்மீக வலை.
No comments:
Post a Comment
புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !
உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!