Pages

Monday, September 10, 2012

நீங்க என்ன சொல்றீக ?

தில்லி தம்பி  நாகராஜ் பதிவுக்குப் போனேன்.  காசிக்குப் போகும் சந்நியாசி உன் குடும்பம் என்னாகும் நீ யோசி என்று நாகேஷ் பாடுவது  நினைவுக்கு வந்தது







காசிக்கு போகணும் அப்படின்னு நினைசிகிட்டு இருந்தது இன்னிக்கு நடந்துட்ட மாதிரி இருக்கு .

        'காசிக்கு போனா  ஒன்னை  விடுங்க அப்படின்னு சொல்வாக
நம்ம எதை விடறது? "  அப்படின்னு என் கிழவியைக் கேட்டேன்.
அவக சொல்றாக
"ஒன்னை விடு அப்படின்னு சொன்னா சனங்க உடனே கத்தரிக்காய் வாழைக்காய்
எதுனாச்சும் விட்டுட்டு வர்றாங்க
ஒன்னை விடு அப்படின்னா அது வாழைக்காய் கத்தரிக்காய் பாகற்காய் இல்லை
அது ஒன்னை விடுவும் இல்லை.
உன்னை விடு.
நான்   நம்மது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு  இருக்கோம் இல்லையா அத விட்டுடு அப்படின்னு சொல்றாக
நான் நமது அப்படின்னு  கிடையாது எல்லாம் அந்த   பிரமன் தான் என்கிற பக்குவம் வரணும்.

இல்லை என்றால் காசிக்கு போய் என்ன பிரயோஜனமும் இல்லை."

நம்ம வூட்டு கிழவி ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னா மாதிரி
கரெக்ட் ஆ  இருக்கும்.

நீங்க என்ன சொல்றீக ?










2 comments:

  1. பாட்டு கேட்டேன் சுப்பு ஜி! நல்லாத்தான் பாட்டு போட்டு இருக்கீங்க..

    மொட்டையோடு இருப்பது அங்குள்ள ஒரு பண்டா. :) எங்களை மொட்டையடிக்க நினைத்தவரை படம் மட்டும் எடுத்துப் போட்டேன்...

    வாழ்த்துகளுக்கு நன்றி சுப்பு ஜி!

    ReplyDelete
  2. பேச்சுத் தமிழில் ‘ஒன்னை” என்பதற்கு “உன்னை” என்று பொருள்படும். நமது ஆட்கள் ”ஒன்னை விடு “ (உன்னை விடு) என்றவுடன் எதையாவது விடுகிறார்கள். உங்களுக்கே உரிய நகைச்சுவை நடையில் ஒரு பதிவு.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!