Pages

Sunday, June 12, 2016

தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே.

முதலில் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று.

ஒரு நாள் முல்லா நஸ்ருதீனோட அப்பா தன் வீட்டுப்புறக்கடையில் ஒரு லாண்டர்ன் விளக்கு எரிந்துகொண்டு இருப்பதைப் பார்த்தார்.  அது யாராக இருக்கும் என்ற யோசனையில் அங்கு சென்றார்.

அங்கே, முல்லா நஸ்ருதீன் நன்றாக உடுத்திக்கொண்டு, கையில் ஒரு விளக்குடன் எங்கேயோ புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.

"அது என்ன இந்த நேரத்தில் ? இந்த அழகாக டிரஸ் செய்து கொண்டு நாடு இரவில், ஒரு லாண்டர்ன் விளக்கோடு ? என்ன விஷயம் ?"

"அப்பா, நான் என்னுடைய காதலியைப் பார்க்க செல்கிறேன். காட்டு வழியே அல்லவா, இருட்டாக இருக்கும். அதனால் தான் கையில் விளக்கு ." என்று சமாதானம் சொன்னார் நஸ்ருதீன்.

"என்ன நீ இப்படி இருக்கிறாய்" என்று அலுத்துக் கொண்ட அப்பா, " நான் அந்தக் காலத்துலே என் காதலியை அதாவது உன் அம்மாவைப் பார்க்கப்போகும்போதும் காட்டு வழி தான் சென்றேன். இருட்டு தான். ஆனால், கையில் விளக்கு எதுவும் எடுத்துச் செல்லவில்லையே " என்று
நகைத்தார்.

"அது எனக்குத் தெரியும் அப்பா. பார் ! உனக்கு எப்படி கிடைத்திருக்கிறது என்று ?" பதிலளித்தானாம் நஸ்ருதீன்.

************************************************************************
தீவுத்திடல்பு த்தக விழாவுக்கு போன கதை இங்கே. 






இந்த வீடியோ வை முகநூலில் பதிவிட்ட போது  ஸ்ரீராம் அவர்கள் கேட்டு இருந்தார்கள்;
அந்த ஓலா டாக்சிக்கு எத்தனை கொடுத்தீர்கள் ? என்று.

போகும்போது ரூபாய் 128
வரும்போது ரூபாய் 150
***********************************************************************************

நம் நாட்டு ஓவியர்களில் முதல் ஐந்து இடங்களில் முதன்மையாக இருப்பவர் ராஜா ரவி வர்மா அவர்கள்.

இந்த ஓவியரின் பெருமையை நாடறியும் என்று சொன்னாலும் நான் முழுவதும் அறிந்தது எனது வலை நண்பர் திரு மோகன்ஜி  அவர்கள் தனது வலையிலே ராஜா ரவி வர்மா பற்றி விரிவாக, விளக்கமாக, விமரிசையாக,
 எழுதியபின்பு தான் என்று சொன்னால்  மிகையில்லை.

அவர்களது பெயிண்டிங் இந்திய கலாசாரம், இந்தியர்கள் வணங்கும் கடவுளர் பற்றித்தான் என்று சொல்பவர்களுக்காக,

இங்கேயும் பாருங்கள் என்று சொல்லத்தான். 
இப்படியுமா வரைந்து இருக்கிறார் என்று ஆஆஆ ஆச்சரியப்படுவீர்கள்.
க்ளிக் செய்து பார்க்கவும்.

RAVI VARMA PAINTINGS.   மற்ற சில ஓவியர் படங்களும் இடைச்செருகலோ ?

TRADITIONAL
RAVI VARMA PAINTINGS.   எல்லாமே ரா. ரா. வ. ? ?????   இல்லை என்று எல்லாவற்றையும் பார்த்த பின்பு தான் தெரிகிறது.



****************************************************************

பக்கத்தில் யாரும் இல்லாதபோது பார்த்தால் ரசிக்கவும் முடியும்.

****************************************************************************
இன்று ஒரு புதிய வலைத் தளம் சென்றேன். தினமும் ஏதேனும் சில புதிய தளங்களுக்குச் சென்று பார்ப்பது எனது வழக்கம். இதற்கு மொழி எனக்கு ஒரு தடையாக கருதியது இல்லை.

இன்று நான் சென்றது ஒரு உருது /ஹிந்தி கவிதை வலைத் தளம்.

அதில் வருபவர் எல்லோருக்கும் ஒரு போட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்த போட்டியில் பங்கு எடுத்துக்கொள்பவர் ரிஜிஸ்தர் செய்யவேண்டும்.
காசு ஒன்றும் கிடையாது. உண்மையான நபர் தான் என்பதை உறுதி செய்து
கொள்வதற்காக.

பதிவு முடிந்ததும்,
ஒரு தலைப்பு தருகிறார்கள்.
ஐந்து நிமிடத்தில் ஒரு கவிதை எழுத வேண்டுமாம்.

எழுதினேன்.

என் கவிதை இதுவே. (हिन्दि लिपि में)

मैं ने इक ख़्वाब देखा.

रास्ते में जा रहा
कलियाँ तो बहुत मिली
कहानियाँ सुनाई
सुनते सुनते तो देखा
कलियाँ काली हो गयी.
काली रात छा गयी.

सपने के भीतर
वो होटों की मुस्कराहट
वो चहरे की इनायत
वो सफर कोई ज़न्नत की दरवाज़
वो पुकार ज्यों कोयल गाये

ख़्वाब अब नहीं. 
जागूँ है मैं. 
जी तरसता है 
शायद कहता है. 
ख़्वाब की वो चेहरा 
कभी तो आएगा ही. 

इक और दिन इधर 
इंतज़ार में . 

கவிதை எழுதி முடித்தாயிற்று. 
சப்மிட் என்று வருகிறது. க்ளிக் செய்தேன். 
பொறு வைட் என்று சொல்லிற்று. 

ஒரு நிமிடம் சென்றது. 

திக் திக் என்று மனம் அடித்துக்கொண்டது. 
என்ன முடிவு வருமோ என்றது. 

வந்தது. 
ஒரு ரோசாப்பூ 


இந்தக் கவிதையை யாரேனும் தமிழில் சொல்ல இயலுமா ?

நான் அழைப்பது:
+mohan gurumurthy       மோகன்ஜி   வானவில் மனிதன்.

+Raamalakshmi Rajan   திருமதி ராமலக்ஷ்மி  வலைத்தளம் முத்துச்சரம். 

+revathi narasimhan      திருமதி ரேவதி நரசிம்மன்  வலைத்தளம் நாச்சியார். 



மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். 

வருக. வருக. உங்கள் கவிதையைக் காண்போமா !!

ஆங்கில எழுத்துக்களில் என் கவிதை. 

main ne ik kwaab dekha   
kaliyaan tho bahuth mili
kahaaniyaan bhi sunaayee
sunthe sunthe hi rahaa. 
kaliyaan khaali ho gayi. 


voh hoton ki muskuraahat 
voh chehre mein vo inaayath 
voh zindagi koyee zannath ki dharvaaza 
voh pukaar 

kwaab ab nahin 
jaagoon hai main.

kwaab jo dekha thaa 
kal bhi aayegaa uski 
inthzaar mein hoon. 



18 comments:

  1. விளக்குடன் பாவை ஹோல்கர்ன்னு நினைவு. ரவி வர்மா இல்லை!

    ReplyDelete
  2. நஸ்ருதீன் கதை நயம்!..

    ஆனால் -

    விளக்கை எடுத்துக் கொண்டு போனாலும்
    விளங்கிடவா போகின்றது!.. - விதி
    விலகிடவா போகின்றது?..

    ஆகையால், நீதியானது -

    !?.....

    ReplyDelete
    Replies
    1. 50 பர்சென்ட் விதி. மிச்சம் சதி.
      இந்தக் காலம்.

      அந்தக் காலம் எல்லாமே விதி தான்.

      மனைவி அமைவதெல்லாம் என்று கண்ணதாசன் எழுதி விட்டாரே.
      அதற்கு அப்பீல் ஏது ?

      Delete
  3. எப்படியோ மெட்ராஸை ஒரு சுற்று சுற்றி விட்டீர்கள். நீங்களே நினைத்து இருந்தாலும் இது மாதிரி ஊர் சுற்ற போய் இருக்க மாட்டீர்கள். எல்லாம் நன்மைக்கே.

    ReplyDelete
    Replies
    1. தினமும் தி.நகர், மைலாப்பூர், மௌண்ட் ரோடு போய்க்கொண்டு தான் இருக்கிறேன். பொது ஊர்தியில் செல்ல இயலாது. என்னால் எங்கள் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் கூட்டத்தில் பஸ்ஸுக்குள் ஏறுவதே இயலாத காரியம்.

      ஆட்டோவில் பக்கம் என்றால் செல்ல முடியும். அதிக பட்சம் ஒரு 10 கிமி வருவார்கள்.

      சுப்பு தாத்தா.

      Delete
  4. ஒலா ரேட் சரி.. சாதாரண ஆட்டோ பிடித்திருந்தால் எவ்வளவு ஆகியிருக்கும்? என்ன வித்தியாசம்?

    கனவுகளில்தான் எல்லாம் கிடைக்க வேண்டுமா? மோகன்ஜி வந்து எழுதுவார்.

    ReplyDelete
    Replies
    1. எங்க பேட்டைலே இருக்கிற ஆட்டோ காரர் எவரும் 20 .கிமி வரமாட்டார்.
      அப்படி வருவதாக இருந்தாலும் ரூபாய் 400 முதல் 500 கேட்பார்கள்.

      சுப்பு தாத்தா.

      Delete
  5. 'விளக்குடன் பாவை' ஹோல்கரின் ஓவியமே வாசுஜி!
    சு.தா! நல்லாத்தான் போய்வந்தீங்க புக் ஃபேருக்கு!!
    உங்க கவிதையை தமிழ்ப் 'படுத்தி'இருக்கிறேன். நீங்க சொன்னபின் செய்யாமல் இருக்க முடியுமோ?
    கவிதைக்கு மேலும் கோனார் நோட்ஸ் கிடையாது. Just Enjoy

    நான் கண்ட கனவு

    சாலை வழியே என் பயணம்
    வழிநெடுக மொட்டுகளின் சலனம்.
    கதைகள் பலவாய் பகிர்ந்த வண்ணம்.

    கவனமாய்க் கேட்டிருந்தபோதே பார்த்தேன்.
    கவிந்தது மொட்டுகள் மேல் நிழற்கருமை.
    புவிதனைக் கவ்விய இரவின் இருண்மை.
    கனவினூடாங்கே ஒளிரும் புன்னகை
    கன்னியொருத்தி இதழில் கசிவதை.
    முகம்தனை மலர்த்தும் போதையது.
    சொர்க்கமதை நோக்கிய பாதையது.

    தனிக்குயிலின் மெல்லிய அழைப்பு
    கனவினின்றும் தந்ததே விழிப்பு.


    ஏங்கித் தவிக்கும் மனம் சொல்லும்
    கனவில் கண்ட முகம்
    மீண்டும் வரக் கூடும்
    தினம்தினம்
    எதிர்பார்ப்பின் காத்திருப்பில்
    என் காலம் மெல்லச் செல்லும்.



    ReplyDelete
    Replies
    1. ஆஹா..ஆஹா..ஆஹா. ஆஹா.

      ஆஹ் எனும் பெருமூச்சுடன் முடிப்பேனோ !
      ஆஹா எனும் பெருமிதத்துடன் துயில்வேனோ !!

      வாரே வாஹ் என உரத்துச்சொன்னேன்.

      சுப்பு தாத்தா.

      Delete
  6. அருமையான கவிதை! பகிர்வுக்கு நன்றி. மற்றவர்களின் மொழிபெயர்ப்புக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. சாலைப்பயணம்
    மொட்டுக்கள் நடனம்
    கதைகளில் கவனம்

    பார்க்கையில் நிழலாக
    மொட்டுக்கள் கருமையில் கவிழ
    பூமியைக் கவ்விய இருட்டின் கருமை
    ஆழ்ந்த கனவில் ஒளிர்ந்த புன்னகை
    மங்கை முகத்தில் மலர்ந்ததை
    பார்த்தது சொர்க்கத்தின் திறவுகோல்
    ஒற்றைக் குயிலின் அழைப்பு
    கனவு கலைந்த விழிப்பு
    ஏக்கத்தில் தவிக்கும் மனம்
    கனவில் கண்ட முகம்
    மீண்டும் வரும் நாளின்
    எதிர்பார்ப்பில் காத்திருக்கும் என் பயணம்//

    சு.தா. என்னோட அரைக்காசு. படிச்சுட்டுச் சிரிக்காதீங்க! மனதில் தோணினதை எழுதிட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் கவிதாயினி யா !!
      இதுவரை நான் அறிந்திலேன்.

      எவ்வளவு அழகு ! எத்துணை சொல்நயம் !!

      பாராட்டுக்கள். இ னி எழுதுவதெல்லாம் கவிதையிலே
      இருக்கட்டும்
      கவிதை நடையிலே ஒரு பதிவு போடுங்கள்.

      சுப்பு தாத்தா

      Delete
    2. சு.தா. நான் மோகன்ஜி தம்பி மற்றும் அண்ணாவான உங்களைப் போல் எல்லாம் நினைச்சதைக் கவிதையாகக் கொட்டும் திறமை உள்ளவள் இல்லை. இது வெட்டி வெட்டிச் செதுக்கியது! :)

      Delete
    3. வெட்டி வெட்டிச் செதுக்கியது! :)//

      அந்தக் காலத்து காசு மாலை.

      ஒவ்வொன்றா வட்டம் செய்து
      உள் நடுவே உருவும் வைத்து
      செதுக்கிய ஓர் சங்கிலி.
      தங்கச் சங்கிலி.

      சுப்பு தாத்தா.

      Delete
  8. கவிதை வாசிக்கும் அளவுக்கு எனக்கு ஹிந்தி தெரியாது, sir.

    மோகன்ஜி, கீதாம்மா இருவரது அருமையான மொழிபெயர்பின் மூலமாக உங்கள் அழகிய கவிதையைப் புரிந்து கொள்ள முடிந்தது.



    ReplyDelete
  9. சுப்புத்தாத்தா நீங்கள் என்னையும் அழைத்திருக்கிறீர்கள். இப்போதுதான் பார்த்தேன். அழைத்தமைக்கு நன்றி ஆனால் ஹிந்தி படித்திருந்தாலும் அனுபவ அறிவு இல்லாததால் தோடா தோடா மாலும். இலக்கிய அறிவு எல்லாம் கிடையாது. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போம் என்று சில வார்த்தைகளின் அர்த்தத்தை அகராதியில் பார்த்துத் தெரிந்து கொண்டு முயற்சி செய்திருக்கிறேன் இதோ...

    நான் ஒரு கனவு கண்டேன்
    சாலை வழியே பயணித்தேன்
    வழியிலே மொட்டுகளின் வரவேற்பு
    வரவேற்புடன் பகிர்ந்தன கதைகள்
    கதைகளில் தொலைந்த நான் பார்த்தேன்
    பார்த்தேன் மொட்டுக்களின் மீதான கருமை
    கருமை தழுவியது இரவாய்
    இரவின் கனவில்
    அந்த இதழில் மந்தகாசப் புன்னகை
    புன்னகை முகத்தினை ஏந்தியவள்
    பயணித்தாள் சொர்கத்தின் கதவை நோக்கியே..
    ஏகாந்த குயிலின் இனிய கீதம்
    கனவும் கலைந்திட விழிப்பும் வந்திட
    மனமோ ஏங்கித் தவித்திட
    கனவினில் வந்திட்ட அந்த முகம்
    மீண்டும் வந்திடாதோ என்றே
    எதிர்பார்த்தே காத்திருக்கும்
    எனது இப்பாதைப் பயணம்


    மிக்க நன்றி தாத்தா நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹிந்தியை கொஞ்சம் எட்டிப் பார்த்து அசை போட ஒரு வாய்ப்புத் தந்தமைக்கு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, கொஞ்சம் கொஞ்சம் தெரியும்னதுக்கே இப்படின்னா! நிறையத் தெரிஞ்சிருந்தால்! அருமையான கவிதை!

      Delete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!