Pages

Sunday, May 8, 2016

அம்மா ! விரைவில் பதில் போடு.



அம்மா !
என் நலம் அறிய இன்னமும் நீ அவாவுடன் தான் இருப்பாய்.
எங்கிருந்தாலும்.
நான்
நலம்.
நீ இருந்த வரையில் உன் நினைவில்லை.
நீ இட்ட அன்னத்தின் சுவையில் நான் திளைத்திருந்தேன்.
நீ பாடிய பாடல்களில் மனம் கவர்ந்திருந்தேன்.
நீ கொண்ட அன்பு வளையத்தில் நான் நானே முதல் என
 மகிழ்ந்திருந்தேன்.

.கண்ணை மூடிய நேரத்திலே நீ சொல்லாது சென்றாய்.
 நின் நினைவிலே இருப்பதா
 நீ பாடிய பாடல்களின் நினைவிலே இருப்பதா ?

  என்றைக்கு சிவ கிருபை வருமோ ?




சங்கீத ஞானமு பக்தி வினா





எப்போ வருவாரோ

Raag : Jonpuri



சரண கமலாலயத்தை...
திருப்புகழ்
sarana kamalaalayathai. Unnikrishnan





சீதா கல்யாணம் வைபோகமே




அன்று பல நாட்களில் எனக்கு  நீ பால்  சாதம் கையில் தருவாய்.
இன்று எனக்கு எல்லாமே பாலையாக இருக்கிறது.

என்று உன்னை அடைவேன் என காத்திருக்கிறேன் .


விரைவில் பதில் போடு.

உன் பதில் கிடைக்கும் வரை
இந்த கோஷ்டி கானத்தில் தான்
இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக
ஆடிக்கொண்டு இருக்கிறேன்.

ஆடும் வரை ஆட்டம். இல்லையா ...

உபசார மூலனு .....




5 comments:

  1. அம்மாவின் நினைவுகளில் மனம் கனக்கின்றது..
    மொழியின்றி மௌனமாகி விட்டது..

    ReplyDelete
  2. அன்னையின் புகழ் சேர்க்கும் அருமையான இசைக்கலவைகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அம்மா பாடுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. எனது அம்மா பாடுவார், வீணை, வயலின் ஹார்மோனியம் வாசிப்பார்.
      அதற்கும் மேலாக பல பக்தி பாடல்களை எழுதியும் இருக்கிறார்.

      எனது அம்மா பற்றி மட்டுமே இன்னொரு வலைத் தளத்தில் எழுதி வந்தேன். அவர் நினைவாக.

      Delete
  4. அருமையான பதிவு, பாடல்கள் பகிர்வு அருமை.
    அம்மாவின் பாடும் திறமை தான் உங்களுக்கு என நினைக்கிறேன். அம்மாவின் பாடல்களை பதிவு செய்து வைக்கவில்லையா?

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!