அம்மா !
என் நலம் அறிய இன்னமும் நீ அவாவுடன் தான் இருப்பாய்.
எங்கிருந்தாலும்.
நான்
நலம்.
நீ இருந்த வரையில் உன் நினைவில்லை.
நீ இட்ட அன்னத்தின் சுவையில் நான் திளைத்திருந்தேன்.
நீ பாடிய பாடல்களில் மனம் கவர்ந்திருந்தேன்.
நீ கொண்ட அன்பு வளையத்தில் நான் நானே முதல் என
மகிழ்ந்திருந்தேன்.
.கண்ணை மூடிய நேரத்திலே நீ சொல்லாது சென்றாய்.
நின் நினைவிலே இருப்பதா
நீ பாடிய பாடல்களின் நினைவிலே இருப்பதா ?
என்றைக்கு சிவ கிருபை வருமோ ?
எப்போ வருவாரோ
Raag : Jonpuri
சரண கமலாலயத்தை...
திருப்புகழ்
sarana kamalaalayathai. Unnikrishnan
அன்று பல நாட்களில் எனக்கு நீ பால் சாதம் கையில் தருவாய்.
இன்று எனக்கு எல்லாமே பாலையாக இருக்கிறது.
என்று உன்னை அடைவேன் என காத்திருக்கிறேன் .
விரைவில் பதில் போடு.
உன் பதில் கிடைக்கும் வரை
இந்த கோஷ்டி கானத்தில் தான்
இந்தக் கூட்டத்தில் நானும் ஒருவனாக
ஆடிக்கொண்டு இருக்கிறேன்.
ஆடும் வரை ஆட்டம். இல்லையா ...
உபசார மூலனு .....