Pages

Saturday, September 5, 2015

ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா

கோகுலத்திற்கு  நாம் ஒரு நாள்.
விசிட் பண்ணி, கண்ணனுக்கு ஹாப்பி பெர்த் டே சொல்லணும் அப்படின்னு புறப்பட்டேன்.

எங்க புறப்பட்டீக..என்று குறுக்க வந்த தர்ம பத்தினியிடம்

இந்த பாரு, இத்தனை வருசத்துலே வருசா வருசா கிருஷ்ணன் பொம்மையை வச்சு வெண்ணை, பாயசம், வடை , எல்லாம் செஞ்சு நம்மவே சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்.

ஆமாம்.

ஒரு வருஷமாவது அந்த த்வாரகைக்கு சென்று அந்த கருமை நிறக்கண்ணா உனைக் காணாத கண் இல்லையே என்று பாடி அவனுக்கு


ஹாப்பி பர்த்டே டு யூ கண்ணா
சொல்லவேண்டாமோ என்று அவளைப்பார்த்தேன்.

போயிட்டு வாங்க என்று சட் னு உத்தரவு கொடுத்தாள் என்  பத்தினித் தங்கம்.

எல்லாத்தையும் பத்திரமா பாத்துக்க,  அஞ்சு நாள் லே திரும்பி வந்துடறேன். என்று கிளம்பினேன்.
 இந்தாங்க..என்று அழைத்தாள் இவள்.
 என்னது போகிறபோது நடுவிலே எதோ பேசுகிறாளே என்று அவள் முகத்தைக் கவனித்தபோது,
"திரும்பி வரும்போது, துவரம்பருப்பு , இதயம் நல்லெண்ணெய் ......" என்று இழுத்தாள்.
"நான் என்ன குசேலன் மாதிரி யா கிருஷ்ணனை பார்க்கபோறேன். நீ வேணும்னு நினைக்கிறத ஒரு செல் போட்டு அம்பிகா ஸ்டோர்ஸ் லே வாங்கிக்கயே.. டோர் டெலிவெரி இல்லையா.."

"நேத்திக்கு மகா பாரதம் பாத்தீகளா...யமுனை வெள்ளத்திலே ஓடுது. குழ்ந்தை அப்ப தான் புறந்த குழ்ந்தை மேலே மழைத் துளி விழ, ஆதி சேஷன் வந்து குடை மாதிரி வர்றாரே... அதுவும் அந்தக்காலத்துலேந்து டோர் டெலிவர் இருக்குன்னு தெரியுது.."  என்றவள்,

அது சரி, இந்த த்வாரகை, உடுப்பி, குருவாயூர் எல்லாம் ஆன் லைன்லே பார்க்ககூடாதா :"  என்று என்னை முறைக்க,

"அம்மா தாயே .. இந்த தடவை மட்டும் பொறுத்துக்கோ . அஞ்சு நாள், அஞ்சே நாள்லே ஓடி வந்துடறேன்" அப்படின்னு வீட்டை விட்டு ஓடாத குறையா நடந்தேன்.

த்வாரகா சலோ...கிருஷ்ண காந்ஹா கோ தேகோ என்று மனசு ஒரு பக்கம் அடித்துக்கொள்கிறது.

மனசை அந்த மாயக்கண்ணன் பக்கம் திருப்ப, அந்த பாட்டை என் ஐ பாட லே டவுன் லோட் பண்ண துவங்கினால்,

அந்த கோவர்த்தன கிரிதாரி மாயக்கண்ணன் அல்லவா !!
அதனால் தானோ என்னவோ என்னதான் முயன்றும் அவனை இங்கே சிறைப்படுத்த முடியவில்லை.
அவனைப் பார்க்க கேட்க நீங்கள் தான் இங்கே போகவேண்டும்.

உடுப்பி சென்று கிருஷ்ண தர்சனம் செய்யப்போனால் நடுவிலே ஆர்ட் ஆப் லிவிங் நித்ய பிரக்ஞ்சா தடுத்து நிறுத்தி, நான் பாடுவதை நீங்கள் கேட்டு உங்கள் வலையில் போடவேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்.






பங்களூர் சாரி சாரி, பெங்களூரு இப்ப அந்த ஊர் பேரு, அங்கன பஸ் புடிச்சு உடுப்பி போலாம் அப்படின்னு எத்தனை நேரம் தான் காத்துக்கினே இருக்க முடியும் ?

டூரிஸ்ட் பஸ் ஒன்னு, கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெசல் ,குருவாயூர் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பும் என்று கன்னடத்தில் மாட்லாடியத்தை கேட்டேன். சரி, குருவாயூர் தான் போவோமே, என்று கிளம்பினேன்.

தர்சனம் சூப்பர். பாஞ்சஜன்யம் சாப்பாடும் நன்றாக இருந்தது. அங்கே சித்ரா பாட்டு ஒன்னு கேட்டேன் பாருங்க...ஹார்ட்டை சில்லுன்னு செய்யுது.

குருவாயூர் தரிசனம் முடிச்சுட்டு, கோவைக்கு பஸ் புடிச்சு வந்தா ,
அந்த பஸ் லேயும் கண்ணன் பாட்டு தான்.

பக்கத்து சீட் லே ஒரு சின்னஞ்சிறு கண்ணன் தூங்குகிறான் பாருங்க.




அப்ப தான் நினைவுக்கு வருது, ம்யூசிக் அகடமி லே யோ வேறு எங்கனவோ ஸ்ரேயா கோஷால் வந்து பாடப்போறதா ..

அவங்க பாடுவதே இல்லை. அவங்க குரலே கண்ணனின் குழல் .



ரொம்ப டயர்டா போய், வீட்டுக்குள்ளே நுழைஞ்சேன்.
வூட்டுக்காரி சொல்றா:
நீங்க உலகம் முழுக்க சுத்தி பார்க்க போன கண்ணன்
நம்ம மனசுக்குள்ளேயே இருக்கான்.
அவனை நமக்குள்ளே தேடனும்ங்க.
அது தான் கண்ணன் காட்டும் வழி.

அகத்துக்கு எஜமானி சொன்னால் அப்பீல் உண்டோ !!.

எல்லோருக்கும் எங்கள் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

5 comments:

  1. கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    இனிய கிருஷ்ண ஜெயந்தி jதின வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கிருஷ்ணனுக்குத்தான் எவ்வளவு பாடல்கள்! அத்தனையும் இனிமையான பாடல்கள்.

    ReplyDelete
  4. பாடல்களுடன் கோகுலாஷ்டமி பகிர்வு அருமை, sir.

    ReplyDelete
  5. கோகுலாஷ்டமி வாழ்த்துகள் ஐயா. அருமையான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!