Pages

Thursday, December 11, 2014

கண்ணுடையவன்

படமும் பின் வரும் வாசகங்களும் நான் இன்று படித்தது. 
 
 நன்றி: தமிழ் இந்து நாளிதழ். 


கண்ணுடையவன்

(இன்றைய தமிழ் இந்து பேப்பரில் படித்தது.) 

 

“கடவுள் எங்கும் இருக்கிறாரே?

 எல்லாம் கடவுள்தானே?

 ஊருக்கு நடுவில் ஒரு கோவிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ செம்பையோ நட்டு, அங்கேதான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக?” என்றால், ஜனங்களுக்குள் ஐக்யம் ஏற்படுவதற்காக.

கல்லில் மாத்திரம் தெய்வம் இருக்கிறதென்று நம்பி, நம்மைச் சூழ்ந்த ஜனங்களிடம் தெய்வம் இல்லை என்று நம்பலாமா?

கவனி!

அண்ட பகிரண்டங்கள் எல்லாவற்றையும் உள்ளே இருந்து ஆட்டுவிக்கும் பரஞ்சுடரே நம்மைச் சூழும் அநந்த கோடி ஜீவராசிகளாக நின்று சலிக்கிறது.

இதுதான் வேதத்தின் கடைசியான கருத்து. ‘‘தன்னிடத்தில் உலகத்தையும் உலகத்தினிடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்” என்பது முன்னோர் கொள்கை.

உன்னுடைய ஆத்மாவும் உலகத்தினுடைய ஆத்மாவும் ஒன்று.

 நீ, நான் முதலை, ஆமை, ஈ, கருடன், கழுதை -

 எல்லோரும் ஒரே உயிர். 

அந்த உயிரே தெய்வம். 

ஸ ஏகஹ . தஸ்ய வாசகஹ பிரணவ 

என்னும் ப்ரும்மஸூத்ர வாக்யத்தை எப்படி எனக்குப்புரியும்படி
அந்தக்காலத்துலேயே எழுதிவெச்சுட்டு போயிருக்காரு பாரதி.

வியப்பா இருக்குல்லே !!!

9 comments:

  1. மகாகவியின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து -
    இனிய பதிவினை வழங்கியமைக்கு மகிழ்ச்சி ஐயா!..

    ReplyDelete
  2. அருமை! பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம்
    பாரதியை நினைவு கூர்ந்தமை சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. உங்க பாணியில் அட்டகாசமான பதிவு!

    ReplyDelete
  5. தாத்தா மிகவும் அருமையான பதிவு!

    ReplyDelete
  6. குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    தோழமையுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தாத்தா ...!
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
  8. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete

புது பதிவைப் படித்துவிட்டுப் போறவரே !

உங்க எண்ணத்தைச் சொல்லிவிட்டுப் போங்க !!!