இன்னிக்கு டிசம்பர்
ஒண்ணாம் தேதி.
சங்கீதம், கச்சேரி , அப்படின்னு அந்த பிரும்ம கான சபா, நாரதா கான சபா, சங்கீத நாடக சபா, பாரதீய வித்யா பவன் , ம்யூசிக் அகடெமி, என்று
மைலாபூர், தி.நகர் அப்படி எல்லாம் இந்த டிராபிக்லே ஓட முடியுமோ?அலைய முடியுமோ ? எங்கே பார்த்தாலும் மெட்ரோ ரயில் காரங்க பாதி ரோடை மூடி வெச்சு இருக்காங்க .
எங்கேயும் எப்போதும் சங்கீதம் ...
அப்படின்னு இருக்கவேண்டிய டிசம்பர்
எங்கேயும் எப்போதும் ஏர் பொல்ல்யுஷன் ஆக
சென்னை முழுவதுமே இருக்கிறது.
அதனாலே, சுப்பு தாத்தாவே ஒரு தனி சபா நடத்திட்டு இருக்காரு. இப்ப இல்ல , நேத்திக்கு இல்ல, 2001ம் ஆண்டுலேந்து நடக்குது.
அவங்கவங்க டேஸ்டுக்கு தகுந்தபடி இருக்கும்
அப்படின்னு சொன்னாலும்
டிசம்பர் மாதம் மட்டும்,
ப்யூர் காபி மாதிரி,
ப்யூர் கர்னாடிக் .
உங்களுக்கு பிடிச்ச இசை கலைஞர் தினம் அங்கே வந்து
உங்களை அசத்த இருக்கிரார்கள்.
அது என்ன தளம்.
மூவி ராகாஸ்.
அங்கே போவதற்கு முன்னாடி இன்று முத்தாய்ப்பு ஆக,
ஹாரிஸ் ஆகம் பாண்ட். இசை. ராகம். ஆபேரி.
கிளிக்குங்கள். கேளுங்கள். கிளீன் போல்ட் ஆகிவிடுவீர்கள்.