When all the doors are closed, God opens His.
But here,
when all the doors are open, I close mine.
So what ? It is my choice.
எல்லாக் கதவுகளுமே மூடி விட்டன .
என் செய்வேன் எனக் கதறிய காலத்திலே
கடவுள் தன் கதவுகளைத் திறந்தான்
ஆனால் எல்லாக் கதவுகளுமே திறந்திருக்கின்றன
நான் என் கதவுகளை மூடிவிட்டேன்.
அதனால் என்ன ?
அது என்னுடைய முடிவு
எனது இஷ்டம்
P L E A S E C L I C K A B O V E.
!
ஜோஹரி சன்னலின் இரண்டாம் சதுரத்திற்கு செல்லப்போகிறோம்.
உங்க இஷ்டம். தியரி படிக்கணும் அப்படின்னா தொடர்ந்து படிக்கலாம்
இல்ல,
இதை விளக்க ஒரு கேஸ் ஸ்டடி இருக்கு
கதை போல,
அது போதும்
என்றால்
இரண்டாம் பகுதிக்கு நேரடியாகச் செல்க
PART TWO. IS FOR YOU.
AGAIN YOU CAN READ THE STORY FIRST AND COME BACK TO THE THEORY.
OR READ THE THEORY FIRST AND
APPLY THE THEORY IN THE SECOND PART.
கதை படித்துவிட்டு பிறகும் வந்து இந்த தியரி என்ன சொல்கிறது
நான் புரிந்து கொண்டது சரிதானா என்றும் நீங்கள் உங்களையே
சோதித்து பார்த்துகொள்ளலாம்
IT IS YOUR CHOICE.
********************************************************************************
இரண்டாவது சன்னல்
ஆபத்தான கட்டம் என்று சொன்னேன்.
ஏன் எனச் சொல்லட்டுமா ?
|
Why should I listen when I am correct ? |
இருட்டிலே தடுமாறுபவர் எப்படி இருப்பார் ?
அதுவும் தடுமாறுபவர் குருடாக இருந்தால் ?
இதிலே இன்னொரு சிக்கல். நம்பர் 2.
தடுமாறுபவர், தான் சரியான வழிதான் செல்கிறோம் என நினைத்துகொண்டு இருப்பார்.
இன்னொரு சிக்கல். நம்பர் 3.
அவருக்கு சரியான வழி எது என்ன சொல்ல எவரையுமே அவர் அனுமதிப்பது இல்லை
அடுத்ததும் ஒரு சிக்கல் நம்பர் 4.
சரியான வழி இது சொல்லும் எந்த நபர் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை.
கடைசி சிக்கல். நம்பர் 5.
நாளா வட்டத்தில் அவருக்கு வழி என்ன என்று சொல்வதற்கே ஆட்கள் இல்லை
இது சைகாலஜி ஹெச்.ஆர். மாணவர்கள் அறியாத ஒன்றல்ல. Dr.A.Thomas Harris M.D. published his work TRANSACTIONAL ANALYSIS in the year 1972. It offered hope and a scale for millions of people living then to understand their patterns of behaviour while dealing with others in the society.
What follows in the next few lines, is an attempt to convey in simpler terms in a lay man;s language
ஈண்டு இவ்வுலகத்தே நான்கு விதமான மக்கள் மன ரீதியிலே இருக்கின்றனர்
பொதுவாக, அவர்கள் சிந்தனை ஓட்டம் எப்படி இருக்கும்
இராமன் பரதனிடம் பேசுகிறான் என வைத்துகொள்வோம்
பேசும்போது பல விஷயங்கள் பேசுகின்றனர்
முடிவில் ,
இராமன் மனம் எப்படி எல்லாம் சொல்லும் ? நீ என்பது பரதன். .
1. நான் சரி. நீயும் சரி. I am OK . You are also OK.
2. நான் சரி நீ தவறு. . I am OK. You are NOT OK.
3. நான் .தவறு நீ சரி . I am NOT OK. you are OK.
4, நான் தவறு நீயும் தவறு. I am not OK. You are not also OK. .
முதல் நிலையில் ராமனுக்குத் தெரிகிறது. தானும் சரி. பரதனும் சரியே
இருவரும் இணைந்து செயல் எது என்ன நிச்சயித்து அதை எப்படி செய்வது என்ற அடுத்த குறிக்கோளுக்கு சென்று விடுகிறார்கள். பிரச்னை இல்லை.
நான்காவது நிலையிலும் பிரச்னை இருக்காது அதிகமாக .
இவனைக் காது கொடுத்து கேட்ட பின்னே நான் சரி என்று தோன்றவில்லை.
ஆனால், இவன் சொல்வதும் சரியாகப் படவில்லையே .
இராமன் நினைப்பதை பரதன் ஒத்துக்கொள்ளும் நேரத்திலும் பிரச்னை இல்லை.
இருவரும் சேர்ந்து, யாருக்கு இது பற்றி தெரியும், அவரை நாடுவோம் என்று முடிவு எடுப்பார்கள் .
பரதன் ஒத்துக்கொள்ளாத நிலையில் தான் சங்கடம்.embarrassment எனப்பொருள் கொள்க.
பரவாயில்லை. இப்பொழுதைக்கு அவனும் தனக்கு தெரியாது தான் நினைப்பது சரியல்ல எனவே சொல்லுகிறான் எனக்கொள்வோம்
ஆக முதல் நிலையிலும் நான்காவது நிலையிலும்,
ஒரு குழுவாக இயங்கும் நபர்கள் ஒரு வெல்வோம் வெல்வோம் என்ற நிலையிலே இருக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை வின் வின் win win situation
எனக் குறிப்பு இடுகிறோம்.
பிரச்னை இரண்டாவது அல்லது மூன்றாவது நிலைகளில் தான்.
முதலில் இரண்டாம் நிலை.
இராமன் தான் சரி என நினைக்கும்பொழுது, பரதனை தன மன நிலைக்கு எப்படி கொண்டு வருவான் ?
அவனுக்கு என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கின்றன ?
1. பரதனுக்கு திரும்பவும் ஒரு முறை பிரச்னை என்ன என்பதை விவரிப்பது.
பிரச்னையை தீர்ப்பதற்கு பரதன் ஒரு வழி சொல்லி இருந்தால் அதில் என்ன
தவறு இருக்கிறது என்று எடுத்து சொல்வது.
2. பரதனுக்கு இன்னும் சற்று நேரம் அளித்து நன்றாக யோசித்து வா.
என சொல்வது.
3. பரதன் அடுத்த நாளும் அதே நிலையில் இருந்தால்,
நம் இரண்டு நபர்களில் முடிவுக்கு பொறுப்பு எனக்கு அதிகம் இருப்பதால்,
நான் சொல்வதை நீ கேட்டு செயல் படவேண்டும் என ஆணை இடுவது
4. பரதன் தனது ஆணையை ஒத்துக்கொண்டு செயல் படமாட்டான் எனத் தோன்றினால் , உன்னை நான் வற்புறுத்த விரும்பவில்லை. நாம் இந்த செயலில் பிரிவோம் என தெளிவாக சொல்லுதல், பிரிதல்
parting with dignity.
இது போல் நடந்தால் பிரச்னை இல்லை. பரதனுக்கு என்னொரு வேலை கிடைக்கும் . குழுத் தலைவர் அதற்கானவற்றை செய்வர்
இதே கட்டத்தில்
பரதன் வேறு விதமாகவும் செயல் படலாம்.
1.எனக்குத் தெரியும் இவன் தவறு என்று. எனக்கென்ன. ?
முடிவு தப்பாக இருந்தால் நான் பொறுப்பில்லை அதனால் நான் கவலைபடவேண்டாம் பகவான் விட்ட வழி என்று ஒதுங்கலாம். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இராமன் சொன்னபடி செய்யலாம்
2. இவனை ஒரு வழி பண்ணுவதற்கு இது தாண்டா சான்சு. பேசாம ஜால்ரா
அடித்து கடைசிலே நீங்க சொன்னா மாதிரி செஞ்சேன் .நான் என்ன செய்வது
என்று ஜகா வாங்கலாம் . பஞ்சாயத்து கூடினாலும் என்ன ஒன்னும் சொல்லாது.
3. இத்தனை சொல்லியும் கேட்கல்லியே இங்கே நான் பெரியவன் அவனை விட படிச்சவன் அப்படின்னு ஒரு மதிப்பு இல்லையே ?
மனசுக்குள்ளே மத்தாப்பு அல்ல. புழுக்கம். வெளியிலே வேறு விதமாக
நடிக்கிறார் பரதன். இராமனுக்குத் தெரியாமல் காலை வாருகிறார்
கடைசி வரை இராமன் கண்ணிலே தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருப்பதற்கு என்ன உண்டோ அத்தனையும் செய்கிறார்
4. இராமனுக்கு எதிரே போர்க்கொடி உயர்த்தி , தீர்மானிக்கப்பட்ட செயல் துவங்கவே முடியாமல் அதை த்வம்சம் செய்துவிடுகிறார் .
பரதன் இதைத் தவிர இன்னமும் பலவாறு யோசிக்கலாம்.
வாசகர்கள் இதை ஒரு தியரி ஆக படிக்காமல், உங்கள் வாழ்க்கையில் நடந்த அல்லது நீங்கள் பார்த்த ஏதேனும் ஒரு நிகழ்வுடன் இதைப் பொருத்தி பாருங்கள் .
உங்கள் உணர்வுகள் என்ன ?
*******************************************************************************
பின் வருவது. ஒரு உண்மைக்கதை அல்ல. இன்னொருதரம் அல்ல
கதை தான். இதில் வரும் பாத்திரங்களோ அல்லது சம்பவங்களோ எதுவும்
நடந்ததாக நாங்கள் சொல்லவில்லை.
இதை படித்து விட்டு யாருக்கு ஏதும் மன உளைச்சல் வரவேண்டாம். அப்படி வந்தால் சுப்பு தாத்தாவோ நான் என்ன செய்யட்டும் அது உங்க விதி என்று சொல்வதற்கு சான்சு நிறையாவே இருக்கிறது
இது ஒரு
CASE STUDY. THAT's ALL.
***************************************************************************
P A R T T W O
T H E C A S E S T U D Y.
***************************************
முன்னுரை.
ராகவேந்தர் ஒரு செல்வந்தர் பண்பானவர் வேலை அப்படின்னு பார்க்கனும்னு எப்பவுமே அவருக்கு தேவை இருந்தது இல்லை. ஷேர் மார்கட் லே சம்பாதித்தது இன்னமும் அஞ்சு தலை முறைக்கு தூங்கிண்டே இருந்தாலும் காப்பாத்தும்
ஒரு பையன் கிருஷ்ண சந்தர். கிருஷ்ணன் என்று ஸ்கூல் பெயர் கிருஷ் செல்லப்பெயர் .சட்டப் படிப்பு முடித்து விட்டு ஒரு தனியார் கம்பெனியில் இப்பொழுது தான் ஒரு ஆலோசகர் வேலையில் அமர்ந்து இருக்கிறான் .
.இரண்டு பெண்கள் கங்கா யமுனா. கங்கா மருத்துவ கல்லூரியில் இரண்டாம் வருடம். யமுனா பிளஸ் டூ
ராகவேந்தர் தனது மூத்த மகன் கிருஷ்ண சந்தருக்கு திருமணம் செய்ய நினைக்கிறார் . தன் மனைவி லக்ஷ்மி யிடம் சொல்லுகிறார் மனைவியின் முகத்திலும் பிரகாசம்.
அதுக்கென்ன செஞ்சுடுவோங்க. என்கிறாள்.
இந்த வாரமே ஹிந்து பேப்பரில் மேட்ரிமோனியல் பகுதியில் BRIDE WANTED பகுதியில் கொடுத்து விடலாம் என்கிறார்.
மதுரை என எதோ சொல்ல ஆரம்பித்து ..... நாக்கைக் கடித்துக்கொண்டு ....... ஒரே வார்த்தையில் சன்னமா, செய்யுங்க ...
என்று சொல்லிவிட்டு லக்ஷ்மி ....செல்கிறாள்.
ஞாயிறு பேப்பரில் பார்த்து எல்லோருக்கும் உற்சாகம் கங்காவும் யமுனாவும் கிருஷ்ணனை கிண்டலோ கிண்டல் எனக் கிண்டல் அடிக்கிறார்கள்.
நடு நடுவில் ஏண்டா கிருஷ்ணா, மாமா மகளை மறந்து விட்டாயா என்கிறாள் கங்கா. அதிருஷ்டம் பண்ணி இருக்கணும்டீ அதுக்கெல்லாம் என்கிறாள் யமுனா. அங்கு வந்த அப்பாவை பார்த்து விட்டு சும்மா சொன்னேன் அப்பா
என்று சொல்லி தனது அறைக்குச் செல்கிறாள் கங்கா. அப்பா யமுனாவை ஒரு பார்வை பார்க்கிறார். யமுனாவோ அம்மா அம்மா எனக் குரல் கொடுத்துக்கொண்டே நழுவுகிறாள்.
எல்லோருமே அந்த ஹிந்து பேப்பரை அந்த AD ஐ திருப்பி திருப்பி படித்துக் கொண்டு இருக்க, அதில் அந்த அளவுக்கு லக்ஷ்மிக்கு கவனம் இல்லை என்பதை ராகவேந்தர் கவனிக்கிறார்.
மாலை 4 மணி இருக்கும். வாசலிலே கார் வந்து நிற்கிறது.
மதுரையில் இருந்து லக்ஷ்மியின் அண்ணன் நாராயணன் வருகிறார் அவர் கூடவே அவரது தர்மபத்னி சாரதா. நாராயணன் எதோ ஒரு கம்பெனியிலே
இப்ப ஒரு ப்ராஞ்ச் ஹெட். சின்ன கம்பெனி தான் அந்தக் காலத்துலே சேர்ந்தது . பெஞ்சு தேச்சு தேச்சு இந்த லெவெலுக்கு வந்து இருக்கார்
சாரதா ஒரு ஸ்கூல் லே டீச்சரா இருந்தாள். இப்ப அசிஸ்டென்ட் ஹெச் எம்மாம்.
என்னது திடீர் என்று விஜயம்!!
ராகவேந்தர் கேட்கவில்லை. நினைத்து கொண்டார்
வாங்க அண்ணா, வாங்க மன்னி என்று வாய் நிறைய அழைத்தாள் லக்ஷ்மி.
எங்கே அண்ணா சாவித்திரி என மெதுவாகத்தான் லக்ஷ்மி வினவினாள் .
பதில் சொன்ன சாரதா , "அவளுக்கு இன்றைக்கு ஹாஸ்பிடல் லே அவள் தான் டுடீ டாக்டராம். நான் வரவில்லை என்று சொல்லி விட்டாள்" என்றபோது, :ஆமாம் ஆமாம், வேலையை போட்டுட்டு வரவா முடியும்" என்றாள் லக்ஷ்மி.
திடீர்னு என்ன ஐக்கியம் அப்படின்னு நினைத்துகொண்டார் ராகவேந்தர்
அடுத்த மூன்று மணி நேரம் அவர்கள் தங்கள் இரு வீட்டு க்ஷேம லாபங்களை பகிர்ந்து கொள்வதிலும் சமையல் அறையில் இருந்து வந்த சுடச்சுட போண்டவிலும் ஆர்டர் பண்ணி வந்து இருந்த பிஸ்ஸாவை சாப்பிடுவதிலும் கழித்தனர் .
அப்பப்ப ராகவேந்தர்க்கு செல் அடிச்சுண்டே இருக்கு. எந்த ஷேர் விக்கலாம் வாங்கலாம் அப்படின்னு ஏகப்பட்ட பேருக்கு இவர் அட்வைஸ்.
ஷேர் மார்கெட் என்னானே நாராயணனுக்கு புரியாத விஷயம் நமக்கென்ன மாப்பிள்ளை நன்னா சொத்து சேர்த்தாச்சு. அதுதானே இன்னிக்கு எல்லாவற்றையும் விட முக்கியம்
ஒரு நல்ல சமாசாரம் இன்னிக்கு ஹிந்து பேப்பர்லே பார்த்தேன் அதான் வந்தேன் என்று ஆரம்பித்தார் நாராயணன் ராகவேந்தர் புரிந்து கொண்டார். அவர் லக்ஷ்மியை பார்க்கும்போது அவளோ நாராயணிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள் அதானே இன்னுமா நீ பார்க்கவில்லை , அதுபற்றி பேச்சே எடுக்கலையே என்று இருந்தேன்
ஆமாம். லக்ஷ்மி, கிணத்து தண்ணி எங்கே போயிடும் என்று தான் இத்தனை நாள் நாங்க இருந்தோம் இன்னிக்கு பேப்பர்லே பார்த்தபின்னே உடனடியாக
சொல்லணும் ஒரு நல்ல முடிவா இருக்கணும் அப்படின்னு புறப்பட்டு வந்துட்டோம் என்றார் நாராயணன்.
கங்கா கிருஷ்ணனை எங்கே இவன் எனத் தேடினாள்.
என்ன நடக்கும் என்ற ஒரு டென்சனில் இருப்பதாக அவன் கண்கள் சொல்வதாக இருந்தது பக்கத்தில் போய் ஆல் த பெஸ்ட் என்று கிசு கிசுத்தாள்.
எனக்கும் உறவு விட்டுப்போகக்கூடாது அப்படித்தான் தோன்றது.
இவர் என்ன சொல்வார் அப்படின்னு தெரியல்லையே
என்றாள் லக்ஷ்மி.
நீ சொன்னால் இங்கே அப்பீலே கிடையாது லக்ஷ்மி,
எனக்குத் தெரியாதா என்ன. . ? இது நாராயணன்.
மீனாச்சி ராஜ்ஜியம் சொக்கனுக்கும் புரிந்த விஷயம்.
ராகவேந்தர் ஏதும் பேசவில்லை.
ஆனால், சாரதாவோ இந்த பேச்சில் ஒரு உற்சாகம் இல்லை என்பது போல முகத்தை வைத்து கொண்டு இருந்தா:ள்
இப்போது கங்காவும் இல்லை. யமுனாவும் இல்லை.
கொஞ்ச நேரம் யாருமே பேசவில்லை.
ஒண்ணுமே யாரும் சொல்லாமல் இருந்தால் என்ன எப்படி ? என்று திரும்பவும்
துவங்கினார் நாராயணன்.
ராகவேந்தர் லக்ஷ்மியைப் பார்த்தார் .
இந்தப்பக்கம்,
சாரதா பக்கம் திரும்பி பார்த்தபோது அவள் அங்கு கிடந்த குமுதத்தை புரட்டிக்கொண்டு இருந்தாள்.
திடீர்னு முழிச் சுண்டது போல, சாரதா ஒரு வார்த்தை ஒரு லட்சம் போல நடுவிலே.சொன்னாள்.
அவள் மேலே படிக்கணும் இந்த பீல்டுலெ இன்னும் நெறையா தெரிஞ்சுக்கணும். கொள்ளை ஆசை. அதுலேயே குறியா இருக்கா.
சாவித்திரி இஸ் ஆல்வேஸ் போகச்ஸ்ட்
என்று சொல்லும்போது ராகவேந்தர் கிருஷ்ணனைப் பார்த்தார் .
அதை கவனிக்க நாராயணன் தவறவில்லை. சாவித்திரி அளவுக்கு கிருஷ் ஒரு அகடெமிக் இன்டளிஜன்ட் இல்லைன்னு தெரிந்ததுதான்
அவருக்கு கிருஷ் அந்த அளவுக்கு போகலைன்னு ஒரு குறை இருக்காதா ..
அதனாலே என்ன....கிருஷ் என்னோட தங்கை பையனாச்சே .. சூர்யா மாதிரி ஒரு அப்பியரன்சு சட்ட படிப்பு
அது போதாதா என்ன.
நாராயணன் மனசுலே என்ன ஓடறது அவர் மனசிலே என்ன நினைக்கிறார் அது ராகவேந்தருக்குப் புரியாமல் இல்லை
எல்லாமே கிராண்டா செஞ்சுடுவோம். . நாராயணன்
எனக்கு தெரியாதா என்றாள் லக்ஷ்மி.
அடுத்து, என்ன செய்வது எப்படி திருமணத்தை கிராண்டா செய்வது என்பது பற்றி த்தான் இருவருமே முனைந்து பேசுவது போல சாரதாவும் நினைத்தாள் . அ ப்பப்ப லேட் ஆகிவிட்டது என்று கணவரிடம் நச்சரித்து கொண்டும் இருந்தாள் .
இருங்கோ ... சாவித்ரிக்கு ஒரு போன் செய்துவிட்டு வருகிறேன்
என்று செல்லை எடுத்துகொண்டு அந்தப்பக்கம் சாரதா.
ஒரு அரை மணி நேரம் ஏதோ பேச்சில் கழிந்தது.
ராகவேந்தர் இன்னமும் மௌனத்திலே தான் இருந்தார்
சரி சரி. நான் சொல்லிட்டேன் எனக்கும் லக்ஷ்மிக்கும் இதில் பூர்ண திருப்தி. சம்மதம். நீங்க இதுக்கு ஓகே சொல்லிட்டா நான் மண்டபம் புக் பண்ணுவேன் இந்த காலத்துலே பையன் ஒரு நிமிஷத்துலே புக் ஆயிடறான். மண்டபம் கிடைக்க குதிரை கொம்பாகி விடுகிறது.
என்று சொன்ன நாராயணன்
எங்கே இவள் ..சாரதா எனக் கூப்பிட்டார்
நான் இங்கே இருக்கிறேன் என்று வாசலில் கார் பக்கத்தில் இருந்து குரல் கொடுத்தாள் சாரதா.
சாவித்திரி உடன் செல்லிலே பேசிண்டு இருந்தேன்
உங்களை டிஸ்டர்ப் பண்ண விரும்ப வில்லை
என்றாள் சாரதா.
சரி நீங்க உள்ள வாங்க
அப்படின்னு லக்ஷ்மி சாரதாவை உள்ளே இருந்தபடியே அழைத்தாள்.
சாரதா உ ள்ளே வரும்போது, "
இன்னமும் சாவித்திரி கிட்டே இது பத்தி பேசவே இல்லை. அதையும் உங்க கிட்டே சொல்லணும் இல்லையா
என்று சன்ன குரலில் சொன்னது ராகவேந்தர் செவியில் விழாமல் இல்லை.
கங்காவும் யமுனாவும் மாமா மாமிக்கு டா டா சொன்னார்கள்.
அடுத்த இரண்டு நாட்கள். அமைதியாக கழிந்தன
மூன்றாவது நாள்.
வந்தவர்களுக்கு பதில்சொன்னாத்தானே அவர்கள் அடுத்த ஸ்டெப்புக்கு போக முடியும் ...
லக்ஷ்மி.
அவர்கள் முதலில் தன் பொண்ணு கிட்டேயே பேசல்லயே ....
ராகவேந்தர்.
அவ என்ன சொல்லப்போறா. கரும்பு கசக்குமா என்ன..நாளைக்கே அவளுக்கு
ஒரு கிளினிக் வைக்கணும்னா இருபதோ முப்பதோ நம்ப தான் கொடுக்கணும். அது அவளுக்கே நன்னாத் தெரியும் சமத்து பொண் அவள்.
ராகவேந்தர் இப்போதைக்கு இப்படியே இருப்போம். அவருக்கு சாரதாவோ அல்லது சாவித்ரியோ ஒரு ப்ரேக் போட்டால் நல்லது என்று நினைப்பு
தன் பையனைப் பற்றி லக்ஷ்மி நன்றாகவே புரிந்து வைத்து இருந்தாள்.
நல்ல பையன். அவன் படிப்புக்கு இந்த உத்தியோகம் போதும் நமக்கு எதுக்கு வேலை எல்லாம் ? கிருஷ் ரொம்ப எ துக்குமே அலட்டிக்க மாட்டான்..
வந்ததை வரவில் வைக்கும் மன நிலை. எதுவும் பெரிசா கிடைக்கல்லேன்னா பெரிசா வருத்தமும் படமாட்டான். சுக வாசி.
காதல், கீதல் இதெல்லாம் ஊஹும் சரிப்பட்டு வராது. சாவித்திரி எப்படியும் கிடைப்பாள் என்று மனசுக்குள்ளே ஒரு எண்ணம் இருக்கலாம்.
நீ என்னடா சொல்றே.. அப்படின்னு அப்பாக்கு நேரே கேட்டாள் லக்ஷ்மி.
உன் கையிலே தாம்மா இருக்கு என்றான் கிருஷ்.
லக்ஷ்மி அர்த்தத்தோட ராகவேந்தரை பார்த்தார்
என்னிக்குமே கிருஷ் அம்மா கோண்டு.
புதுசா பாத்து அந்த குடும்பம் சரியா இருக்கான்னு விசாரிச்சு பின்னே எதுனாச்சும் நடந்து வருத்தப்பட இல்லாம தெரிஞ்சவர்களே நல்லது இல்லையா. என்றாள் லக்ஷ்மி.
அம்மா சொன்னா ரைட்டாத்தான் இருக்கும் என்றார்கள் கங்காவும் யமுனாவும். கிருஷ் ஒரு ரஜினி புன்னகை பூத்தான்.
அப்பா ஜாஸ்தி பேசமாட்டார் என்று அவனுக்குத் தெரியும். சாவித்திரி நன்றாகத்தான் இருக்காள். அழகுக்கு என்ன குறைச்சல். டாக்டர் வேற.
இங்க வந்து நம்மோட இருக்க முடியும்னா நன்னா இருக்கும் இல்லைன்னா
என்ன செய்யறது அதை அப்பறம் யோசிச்சுக்கலாம். இப்படிதான் அவன்
மனசு நினைத்தது. .
என்னோட மருமகள் ஒரு டாக்டராக்கும் அப்படின்னு லக்ஷ்மி ஆல்ரெடி ஒரு மனசுலே வந்து விட்டாள்.
ஏதாவது நடந்து சாவித்திரி, "என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க இப்போதைக்கு நான் படிச்சு முடிச்சப்பறம் பார்த்துக்கலாம் "என்று சொல்வாள் என்று ராகவேந்தர் நினைத்தது நீர்த்துப்போனது.
சாவித்ரிக்கு மனசுக்குள்ளே கல்யாணம் வேண்டாம் அப்படின்னு இல்லை. அத்தை மகன் புடிக்காமயும் இல்ல. அது ஒருபக்கம் . இன்னொரு பக்கம். கிளினிக் வைக்கணும்னா அவர்கள் உதவி இல்லை அப்படின்னா ஒண்ணுமே முடியாது.
அப்பா கிட்டே அந்த அளவுக்கு பணம் கிடையாது. படிப்புக்கு வாங்கின லோனே இன்னும் அடைஞ்ச பாடில்ல . இப்போதைக்கு அவள் நாட்டம் எல்லாமே எம்.டி. படிப்பு. அதற்கான முழு மூச்சில் முயற்சி. ஒரு இன்டர் நேஷனல் லெவலுக்கு ஒரு ரிசர்ச் செய்யணும். அது யு. ஈஸ். யுனிவர்சிடி லே செய்யணும்.
அதுதான் லைப்லே முதல் குறிக்கோள்.
அப்பா சொன்னார் இல்ல காதோட கிசுத்தார்
ஒரு நிச்சயம் பண்ணி வெச்சுப்போமே உன்னோட எம்.டி. படிப்பு முடிஞ்சப்பறம் கல்யாணம் அப்படின்னு கூட சொல்லிக்கலாமே
சாவித்ரிக்கு அப்படி நடக்காது என்று தெரியும் ஆனா திருமணம் லேட்டோ உடனடியோ அதை அவ்வளவு ஒர்ரி பண்ணிக்கவில்லை அப்பாவுக்கு குறுக்கே நிற்கவும் விருப்பம் இல்லை.
இங்க, ராகவேந்தர் லக்ஷ்மியிடம் ஒரு நாள் சொன்னார். இவர்கள் இரண்டு பேரோட ஜாதகத்தை நம்ம வீட்டு ஜோசியர் கிட்டே காட்டினேன்.
கோவிச்சு காதீங்க.. இது இரண்டு ஜாதகமும் பொருந்தாது
அப்படின்னு சொல்றாரே ..
என்னை கேட்காம நீங்க எப்பவுமே இப்படி ஒரு வேலைய செஞ்சுடுவீங்க அப்படின்னு நான் நன்னாவே எதிர்பார்த்தேன் . டான்னு பதில் லக்ஷ்மி .
அஷ்ட சஷ்டகம் . ஆறும் எட்டும் ஆக இருக்காம். கிருஷ்ணனுக்கு மகரம்
சாவித்திரி சிம்மம். இந்த அஷ்ட சஷ்டகம் ரொம்ப படுத்தும் அப்படின்னு ,....
ஜோஸ்யர் அப்படித்தான் சொல்லுவார். இன்னும் ஒரு அம்பது கூட கொடுத்தீங்க அப்படின்னா இதைப்போல உசத்தி ஜாதகம் கிடையாது அப்படின்னு சொல்லுவா.
மாமன் மகள், அத்தை புள்ளை இவர்களுக்கு பொருத்தம் பார்க்கணும் அப்படின்னு எந்த மடையன் ஜோசியன் எந்த புத்தகத்தில் பார்த்து சொன்னான்?
நம்ம ஜோசியர் தான். கங்காவை மெடிகல் காலேஜிலே சேக்கலாமா வேண்டாமா அப்படின்னு அவர் கிட்டே தானே நீ கன்சல்ட் பண்ணினே
அது கங்காவுக்கு. இது கிருஷ்ணன் சமாசாரம்.
எனக்கு ஒண்ணுமில்லே என்ன நாளைக்கு ஒன்னும் சொல்லகூடாது.
அன்னிக்கே சொல்லலையே. அப்படின்னு ....
நான் வாயை தொறந்தா சொல்லுங்க..
ஒரு தினுசா தன்னோட உண்மைக் கவலை என்ன அப்படின்னு வாயைத் திறந்தார் ராக வேந்தர் :
"அவ படிப்பு படிப்பு அப்படின்னு அதுலேயே இருக்கா. மேல் நாட்டுக்கு போனாலும் போயிடுவா. இவனுக்கு... இவன் படிப்புக்கு ...அங்கே என்ன கிடைக்கும் ? அதெல்லாம் யோசித்தாயா ? "
வாய் ஏனோ சொற்களை உதிர்க்கவில்லை. கேட்டு பிரயோசனம் இல்லை.
ராகவேந்தர் தன் வாயைத் திறக்கவேண்டாம் என்று முடிவு செய்து கொண்டார். ஷேர் மார்கெட் ஓபன் ஆகிவிட்டது. அதில் கவனம் போனது.
அங்கும் சாரதாவுக்கும் இந்த சம்பந்தம் அத்தனை உற்சாகம் இல்லை. இருந்தாலும் கணவனுக்கு குறுக்கே நிக்கரதையும் அவள் விரும்ப வில்லை.
ஈஸ்வரன் எப்படி போட்டு இருக்கானோ அப்படித்தானே நடக்கும் என்று
மாமியாரிடம் சொன்னாள். நல்லது நடக்கும்போது நாமும் கூடத்தாண்டி இருக்கணும் அதுதான் நம்ம சம்ப்ரதாயம் என்றாள் மாமியார்.
இப்படி அப்படி இரண்டு மாசம் கடந்தது. சித்திரை வந்தது. நாராயணன் வந்தார் இந்த தடவை வெத்திலை பாக்கு பழம் புஷ்பம் எல்லாம் வாங்கிண்டு வந்தார்.
சுப யோக சுப தினம் ஒண்ணு தாங்கோ
நீங்க தானே இந்த வீட்டு ஜோசியர்.
அப்படின்னு ராகவேந்தர் வீட்டு ஜோசியர்கிட்டே கேட்டார் நாராயணன்.
பேஷா..அதுக்காதானே நான் இருக்கேன் டான்னு மணி அடிச்சா மாதிரி பதில் சொன்னார் ஜோசியர்
அடுத்த மாசமே சர்வ முகூர்த்த நாள் ஒண்ணு இருக்கு. என்று ஜோசியர் சொல்ல ஆரம்பித்ததை , கட் பண்ணி,
மே 1 ந்தேதி சத்திரம் புக் பண்ணியாச்சே என்றார் நாராயணன்.
எப்படி கரெக்டா அதே தேதி வரது. எல்லாம் ஈஸ்வர சங்கல்பம்
என்றார் வாத்தியார்
திருமணம் இனிதே நடந்தது.
திருமணம் முடிஞ்ச கையோட மதுரையிலே ரிசப்ஷன்
கிருஷ் அங்கேயே தங்கி விட்டான் போல இருந்தது.
அப்பறம் இங்க லா கம்பெனிலே உனக்கு இனிமே லீவு இல்லை. வா என்று கண்டித்த பின் தான் வந்தான்.
என்னடா என்ன விஷயம் என்றாள் அம்மா.
கம்பெனி கம்பெல் பண்றது அம்மா. எனக்கு இமீடியட்டா வேற ஜாபும் கிடைக்காது சாவித்ரிக்கும் எம்.டி. படிக்க டெல்லி மெடிகல் காலேஜ் ல இடம் கிடைச்சு இருக்கு.
அப்ப அங்க போயிடுவாளே என்றாள் முதல் தரம் கவலையோடு லக்ஷ்மி.
ஆமா படிப்பு முடிஞ்சு வரதுக்கு இரண்டு வருஷம் ஆகிவிடுமாம். ரெசிடென்சியல் ஸ்டடி . தனியாத்தான் இருக்கணும்
இருந்தாலும் சாவித்திரி ரொம்ப ஸ்மார்ட் அம்மா.
படிச்சப்பறம் இங்கே வந்துடுவாள் அப்படின்னு நினைக்கிறேன்
ஐ பீல் வெரி ப்ரௌடு ஆப் ஹர் .
லக்கி டூ என்று சொன்னாள் கங்கா.
அவன் லக்கியா இல்லையா என்று அடுத்த இரண்டு வருஷங்கள் சொன்னது போல இருந்தது.
எம்.டி. முடிச்சபின் சாவித்திரி இன்னமும் ஒரு இரண்டு வருஷம் ஒரு சிறப்பு specialisation கோர்ஸ் படிக்கவேண்டும் என்று தில்லியிலே இருந்து விட்டாள். படித்துக்கொண்டே வேலையும் பார்க்கும்படியான பொசிஷன் கிடைச்சிருக்காம்.
அப்பப்ப கிருஷ் டல்லாக இருந்தான் சாவித்திரி கிட்டே இருந்து போன் வந்ததா? என்று கேட்டு கொண்டு இருந்தான். Dr.Savithri M.D. DNB பத்து நாளைக்கு ஒரு தரம் ஞாயிற்றுக் கிழமை கிருஷ்க்கு செல்லில் ஒரு பத்து நிமிஷம் பேசுவாள். அதற்குள் யாராவது கிளைன்ட் வந்துவிடுவார்கள் அவளுக்கு. சீ யூ லேடர் என்று முடித்து விடுவாள்.
. ரொம்ப லக்கி டாக்டர் என்று சாவித்திரி யை எல்லாரும் சொல்கிறார்களாம். இன்னும் அடுத்த வருஷத்திலே அமெரிக்க போவதற்கும் அங்கே ஒரு ரிசர்ச் டீமிலே சேருவதற்கும் வாய்ப்பு இருக்கிறதாம்.
சாரதா லக்ஷ்மிக்கு அடுத்தது என்ன என குறிப்பு கொடுத்தாள்.
இந்த காலம் அந்த காலம் மாதிரியா, அடுப்பு சமையல், குழ்ந்தை, பிரசவம்,அப்படின்னு அடுக்கட்டுக்கா, வருசத்துக்கு ஒண்ணா இந்த காலத்து பொண்ணுங்க, மேல மேல உசரனும்னு பாக்கராக இல்லையா. என்றாள் ஒரு நாளைக்கு சாரதா லக்ஷ்மியிடம் .
அடுத்த தடவை லக்ஷ்மி பேசின பொழுது சாரதா வீட்டு வேலைக்காரி , அம்மா பிசியாக இருக்காங்க அவங்களே போன் செய்வாங்க என்றாள்.
ஒரு நாளைக்கு என்னோட மருமவள் அமெரிக்கா வுக்கு பிரிட்டிஷ் ஏர் லைன்ஸுலெ போறா நானும் க்ருஷ்ஷும் போயிட்டு வந்துடறோம்
அய்யாவை கொஞ்சம் கவனிச்சுக்கங்க என்று வீட்டு வேலைக்காரர்களிடம்
லக்ஷ்மி சொல்லிக்கொண்டு டில்லி போய்விட்டு வந்தாள். .
நாலு மாதம் கழித்து ஒரு நாள் மதுரையில் இருந்து டெட் நைட்டிலே ஒரு செல். வந்தது.
திடீர் என்று ஒரு நாள் நாராயணன் ஜிம்முக்கு போனவர் அப்படியே ஐ.சி.யுவுக்கு போனார் மாசிவ் ஹார்ட் அட்டாக் ஆம்.
ராகவேந்தரும் லக்ஷ்மியும் பிளைட்டிலே மதுரைக்கு போயிட்டு பத்து நாள் கழிச்சுட்டு தான் திரும்பி வந்தார்கள். சாவித்ரி டூ பிசி . ஐ ஆம் சாரி மாம் என்று செல்லினதாக சாரதா சொன்னாள்.
அப்பப்ப சாவித்திரி க்ருஷ்ஷோட பேசற மாதிரித் தான் இருந்தது.
இன்னும் அஞ்சு வருசத்திலே கண்டிப்பா நான் வந்துடுவேன் எங்கே நான் போயிடுவேன் , பொறுமையா உங்க புள்ளைய இருக்கசொல்லுங்க என்று லக்ஷ்மியிடம் சொன்னாளாம்
.கிருஷ் பொறுமை சாலி
என்னோட மருமகள் சாவித்திரி என்றைக்கு இந்தியா வருவாள்.
வருவாளா இல்லையா ?
ஜோசியரிடம் லக்ஷ்மி கேட்டாள்.
சனி பெயர்ச்சி இப்ப இன்னும் ஒரே வருசத்திலே நடக்கபோறது அது முடிஞ்சப்பறம் ஒரு சான்சு இருக்கு என்றார்
அதே ஜோசியர். எதுக்கும் தஞ்சாவூர் பக்கத்திலே ஒரு கோவில் சொன்னார்.
அங்கே விட்டுப்போன தம்பதியரை ஒன்னு சேர்த்து வைக்கும் ஹோமம் பண்ணுவாங்களாம். ஒரு லட்சம் ஆகும். இருந்தாலும் முயற்சி செய்யறது
தப்பே கிடையாது என்றும் சொன்னார்.
அந்த நாளுக்கு லக்ஷ்மி ராகவேந்தர் காத்து கொண்டு இருந்தார்கள்.
அப்பப்ப கிருஷ் என்னவோ ஒரு பதட்டத்தில் இருப்பதாக லக்ஷ்மிக்கு பட்டது. என்ன அப்படின்னு கேட்கவில்லை.
கிருஷ் பொறுமை சாலி என்று எல்லோரும் நினைச்சது தவறோ என்று
ஒரு நிகழ்வு.
இங்கே கிருஷ்ண சந்தர் வேலை பார்க்கும் கம்பெனியில் ஒரு நாளைக்கு சல சலப்பு. யாரோ கூப்பிடுவதாக அப்பா ராகவேந்தர் அந்த லா கம்பெனிக்கு சென்றார்
இது மாதிரி நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை.
திஸ் இஸ் பார் யு டு சால்வ் .
ஐ கான்ட் பி பேசிங் தீஸ் ப்ராப்ளம்ஸ்.
என்றார் கம்பெனி சி.இ.ஓ .
ஒரு பெண் அங்கே கிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள். அந்த பெண்ணுக்கு அந்த பக்கம் ஒரு மராத்தி மாதிரி இருந்தது. அப்பா அம்மா போல் இருந்தது. .
என்னடா.. என்றார் ராகவேந்தர்.
ஷீலா ரொம்ப நல்லவ அப்பா. ஹிந்திக்காரா .. நம்ம பாஷை தெரியாது. அவ்வளவு தான்.
அதுலே நமக்கு என்னடா ..சம்பந்தம்....
உங்களுக்கு இல்லே ஆனா அவனுக்கும் அவளுக்கும் பத்து மாசம் சம்பந்தம் இப்ப மூணு மாசத்திலே இருக்கு.
விஷயம் தெரிஞ்சு ஷீலாவோட பேரன்ட்ஸ் வந்து இருக்காங்க
என்றார் சி. ஈ. ஓ.
ஹம் லோக் கிருஷ்ண கே ஸாத் பூனே ஜாதே ஹைன் கல்.
ஆப்கோ பி டிக்கட் புக் கர் தியா மைனே.
ஷாதி ஹமாரி மந்திர் மெய்ன்.
ஷீலா அப்பாதான் இந்தியிலே சொன்னார்.
ராகவேந்தர் விக்கித்துப்போனார்.
ஹி இஸ் ஆல்ரெடி மாரீட். என்றார்.
ஐ ஜஸ்ட் டோன்ட் பாதர். என்றாள் ஷீலா.
லக்ஷ்மி லக்ஷ்மி ....அவர் மனசு கூவியது.
அதற்குள் தொண்டை அடைத்தது போல் இருந்தது.
யாரோ அப்பலோவுக்கு போன் செய்தார்கள்.
*****************************************************************
தொடரும்
ஜோஹரி ஜன்னல் இரண்டாம் சதுரம் தொடரும்.
சாய்ஸ் அப்படின்னு எதுவுமே இல்லடா.. கண்ணா.
லைப்லே எல்லாமே சான்சு தாண்டா.
References:
Johari region 2 is what is known about a person by others in the group, but is unknown by the person him/her self. By seeking or soliciting feedback from others, the aim should be to reduce this area and thereby to increase the open area (see the Johari Window diagram below), ie, to increase self-awareness. This blind area is not an effective or productive space for individuals or groups. This blind area could also be referred to as ignorance about oneself, or issues in which one is deluded. A blind area could also include issues that others are deliberately withholding from a person. We all know how difficult it is to work well when kept in the dark. No-one works well when subject to 'mushroom management'. People who are 'thick-skinned' tend to have a large 'blind area'.