திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் பற்றி இன்று வலைச்சரத்திலே திரு ரிஷபன் அவர்கள் எழுதியிருந்தார் அதன் விவரங்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு திருமதி மாதங்கி மாலி அவர்கள் எழுதி இருந்த பின்னூட்டம் ஒரு சுவர்க்க வாசல் மாதிரி இருந்தது.அந்த வலையில் படித்த ஒரு பதிகம் இது.
நம்பெருமாள் குதிரை நடனம் விருப்பன் திரு நாள் எட்டாம் நாள்
"வையாளி நடையும் ஒய்யார கொண்டையும்
மெய்யாகவே சிறுபையனைப் போல
ஒய்யாரமாகவே ஐயன் வருகின்ற
உல்லாச சேவையை என்ன சொல்வேண்டி."
ஆஹா..ஆஹா. என்னதொரு குதிரை வாகன ஆட்டம் !!
பிரமாதம். பிரமாதம்.
திரு ரிஷபனுக்கும் , ஸ்ரீரங்கம் பங்கஜம் வலைப்பகுதியில் இருக்கும் விவரங்களைச் சுட்டிக்காட்டிய திருமதி மாதங்கி மாலிக்கும்
ஆயிரம் தாங்க்ஸ்.
Please Click here to learn more about the Historical Background of this Vaiyali Dance.
ரங்கா ரங்கா
இந்த வீடியோவின் ஆரம்பத்தில் தெரிகிற ஒரு அயல்நாட்டு தம்பதி ரெங்கன் மீது காதலாகி ஸ்ரீரங்கத்தில் வந்து தங்கி விட்டவர்கள்.. பெயரையும் கேசவன், ராதா (அப்படித்தான் ஞாபகம்) என்று மாற்றிக் கொண்டு விட்டார்கள்..
ReplyDeleteரிஷபன் ஸார் இங்கே ரீச்சானதுக்கு நன்றி.
Deleteஅப்பறம் அந்த கேசவன் ராதா அவர்களை யாரு எந்த ஊரு
ரங்கனிட்ட அப்படி மயங்கிப்போன விசயம் என்ன்ன்னு
கேட்டு வர என் அந்தக்காலத்து ஃப்ரன்டு இன்னிக்கு அவர்தான்
ஆண்டவன் ஸ்வாமிகள் கிட்டே ஆஸ்தான ஜோசியர் கிட்டே
சொல்லலாம் அப்படின்னு இருக்கேன்.
நீங்க சுஜாதா இருந்த வீதியா , அப்படின்னா அவரோட ஃப்ரண்டு க்ரிக்கெட்
விளையாடின குல்ஜாரை நினைவு இருக்கா ?
திவ்ய தரிஸனம். நன்கு ஸேவித்தோம். பகிர்வுக்கு மிக்க ந்ன்றி.
ReplyDeleteவரவேண்டும். வரவேண்டும்.
Deleteஸேவிச்சாச்சா ...
தங்கள் வருகை எனது பாக்யம்.
ரங்கா !1 இன்னிக்கு பெரியவா எல்லாமே
இன்னிக்கு வர்றாளே !!
உன்னோட கடாக்ஷம் என்பேரிலே விழுந்துடுத்தா !!
ரங்கா.. ரங்கா...
சுப்பு தாத்தா.
Nice!! Vaiyali is by far my most fav thing in Srirangam...
ReplyDeleteBut I am not "Thirumathi"!
Yes Madam. It is nice indeed.
DeleteBut nicer are your postings in your blogs particularly on Music,methods,and madness. I thought it should be music methods and madhubala as I read your posting there.
subbu thatha.
நல்லதோர் பகிர்வு தாத்தா. நானும் கண்டு கொண்டேன் தங்களது உதவியால். ரிஷபன் சார் சொல்லும் தகவல்கள் ஆச்சரியப்படுத்துகிறது.
ReplyDeleteரிஷபன் ஸார் ஒரு ப்ரொஃபஷனல் ரைட்டர்.
Deleteக்ரியேடிவ் , இன்னொவேடிவ் அன்ட் இமேஜினேடிவ் டூ.
யார் யாருக்கு என்னென்ன எப்பப்ப பிடிக்கும் அப்படின்னு
இந்த எழுத்தாளர்களுக்கு நல்லாவே தெரிஞ்சுருக்கும்.
கோவை2தில்லி நீங்க முதல் முதலா வந்திருக்கீங்க..
ரா ரா மா இன்டி டாகா.( in telugu : Welcome to our house)
சுப்பு தாத்தா.