திருவரங்கத்தில் ரங்கநாத பெருமாள் வையாளி நடனத்தைப் பற்றி இன்று வலைச்சரத்திலே திரு ரிஷபன் அவர்கள் எழுதியிருந்தார் அதன் விவரங்கள் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டிருந்த எனக்கு திருமதி மாதங்கி மாலி அவர்கள் எழுதி இருந்த பின்னூட்டம் ஒரு சுவர்க்க வாசல் மாதிரி இருந்தது.அந்த வலையில் படித்த ஒரு பதிகம் இது.
நம்பெருமாள் குதிரை நடனம் விருப்பன் திரு நாள் எட்டாம் நாள்
"வையாளி நடையும் ஒய்யார கொண்டையும்
மெய்யாகவே சிறுபையனைப் போல
ஒய்யாரமாகவே ஐயன் வருகின்ற
உல்லாச சேவையை என்ன சொல்வேண்டி."
ஆஹா..ஆஹா. என்னதொரு குதிரை வாகன ஆட்டம் !!
பிரமாதம். பிரமாதம்.
திரு ரிஷபனுக்கும் , ஸ்ரீரங்கம் பங்கஜம் வலைப்பகுதியில் இருக்கும் விவரங்களைச் சுட்டிக்காட்டிய திருமதி மாதங்கி மாலிக்கும்
ஆயிரம் தாங்க்ஸ்.
Please Click here to learn more about the Historical Background of this Vaiyali Dance.
ரங்கா ரங்கா